WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
உலக பொருளாதாரம்
IMF warning on global downturn
உலக வளர்ச்சிச் சரிவு குறித்து சர்வதேச நாணய நிதியம்
எச்சரிக்கின்றது
By Nick Beams
25 January 2012
உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால்
உலகப் பொருளாதார வளர்ச்சியின்
நலிந்ததன்மை
பற்றியும் யூரோப்பகுதி நெருக்கடியினால் விளைக்கூடிய பெருகிய
நிதிய அபாயங்கள் பற்றிய எச்சரிப்புடன் இணைந்து தன்னுடைய
கருத்துக்களையும் சர்வதேச நாணய நிதியம் சேர்த்துள்ளது.
2012ம் ஆண்டிற்கு உலக வளர்ச்சி குறித்த தன்
முன்கணிப்பை 3.3% என்று அது செப்டம்பரில் கணித்திருந்ததைவிட
0.7 சதவிகிதம் என்று குறைத்து, ஐரோப்பாவில் முழுமையான மந்தநிலை
வரும் என்று எச்சரித்தபின், சர்வதேச நாணய நிதியம்
“யூரோப்
பகுதியில் ஆழ்ந்த நலிவுகள் மற்றும் பிற இடங்களில்
ஸ்திரமற்றதன்மை ஆகியவற்றால்”
உலக மீட்பு அச்சுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
2011ம் ஆண்டு நான்காம் காலாண்டில் உலக வளர்ச்சி
“ஐரோப்பிய
நெருக்கடி ஒரு மிக ஆபத்தான புதிய கட்டத்தை அடைகையில்”
சரியத் தொடங்கிவிட்டது என்றும் அது
கூறியுள்ளது.
முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் எதிர்பார்த்த
வளர்ச்சியை விடக் கூடுதல் வளர்ச்சி உள்ளது என்றாலும், இத்தகைய
வளர்ச்சிகள் கணிசமான உந்துவிசையை தொடர்ந்து கொண்டிருக்கும் என
எதிர்பார்க்க முடியாது.
“எழுச்சி
பெறும் சந்தைகள்”
உலகப் பொருளாதாரத்தின் புதிய விரிவாக்கத்திற்கு
ஒரு அடித்தளத்தை கொடுக்கும் என்று பலமுறை கூறப்பட்ட
கருத்துக்களை ஒட்டி சர்வதேச நாணய நிதியம் இப்பகுதிகளைப்
பற்றிக் கூறியுள்ள கருத்துக்களும் குறிப்பாக
முக்கியத்துவமானவை.
இந்தநாடுகளில் வளர்ச்சி
“எதிர்பார்த்த
கணிப்புக்களை விடக் குறைந்த தன்மையைக் கொண்டுள்ளது.”
இது அரசாங்கச் செலவுகளை இறுக்கிப்பிடித்தல் மற்றும்
“அதன்
அடித்தளத்தில் இருக்கும் வலுவற்ற வளர்ச்சி”
ஆகியவற்றின் கூட்டு விளைவுகளை சரியச்
செய்துள்ளது.
“கீழ்நோக்கிய
அபாயங்கள் தீவிரமாக உயர்ந்துவிட்டன”
என்று எச்சரிக்கும் அறிக்கை பெரும்பாலான கணிசமான அபாயங்கள்
“யூரோப்பகுதியில்
இறைமை பெற்றுள்ள அரசாங்கங்களுக்கும் வங்கிகளின்
அழுத்தங்களுக்கும் இடையே மாறாக செயலாற்றுகின்ற பின்னூட்டு
இணைப்புகளில்
இருக்கும் பிளவுகள் தீவிரமடைந்ததில்”
இருந்து வந்துள்ளன என்றும் கூறுகிறது. இது மிக அதிகம்
கடன்பட்டுள்ள அரசாங்கங்களின் பத்திரங்களில் உயரும்
வட்டிவிகிதங்களைக் குறிக்கிறது—அது
பெரிய வங்கிகள் வைத்திருக்கும் இப்பத்திரங்களின் மதிப்புச்
சரிவதற்கு வழிவகுத்துள்ளது, வங்கிகளின் நிதிநிலைமையை
வலுவிழக்கச் செய்துள்ளது, இதையொட்டி இன்னும் அரசாங்கப் பிணை
எடுப்புக்களுக்கான தேவையை அதிகரித்துவிட்டது.
ஆனால், இந்த இடர்கள் ஐரோப்பாவுடனுடன்
நின்றுவிடவில்லை.
“எழுச்சி
பெறும் நாடுகளில்”
இருக்கும் நிலைமை குறித்தும் சர்வதேச நாணய நிதியம் கவனத்தை
ஈர்த்துள்ளது. அவை
“ஏற்றமிகு
கடன் வசதி, சொத்துக்களின் விலை உயர்வை அனுபவித்துள்ளன என்பதோடு
உயரும் நிதிய ஆபத்துக்களையும் அனுபவிக்கின்றன.”
“இது
தேவையை அதிகமாக்கியுள்ளது, இந்நாடுகளின் வளர்ச்சிவிகிதப்
போக்குகளை கூடுதலாக மதிப்பீடு செய்ய வழிவகுத்திருக்கலாம்”
என்று அறிக்கை கூறுகிறது.
“நிலச்
சொத்தின் இயக்கநெறி மற்றும் கடன் கொடுக்கும் சந்தைகளின் குலைவு
....பொருளாதாரச் செயற்பாடுகளின்
மீதான தாக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.”
பெயரைக் குறிப்பிடாமல், இந்த விளக்கம் சீனப்
பொருளாதாரத்திற்கு நன்கு பொருந்துகிறது. சீனாவின் மிக அதிக
அளவில் கடன்பட்ட நிலச்சொத்து மற்றும் கட்டுமானச் சந்தை
சரிவுற்றால் ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கம் பற்றி பெருகிய
கவலைகள் உள்ளன. இந்த இரண்டு பிரிவுகளும்தான் 2008ம் ஆண்டில்
உலக
நிதிய
நெருக்கடி தொடங்கியதில் இருந்து அந்நாட்டின் தொடர்ந்த வளர்ச்சி
விகிதத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன.
தற்போதைய நிலைமையைச் சுருக்கிக் கூறும் அறிக்கை
கூறுவதாவது:
“தற்போதைய
சூழ்நிலை—உறுதியற்ற
நிதிய முறைகள், உயர்ந்த பொதுப் பற்றாக்குறைகள், கடன்கள்
மற்றும் பூஜ்யத்துடன் கட்டுண்டிருக்கும் வட்டி விகிதங்கள்
ஆகியவை—எப்பொழுதும்
சுயமாக நீடிக்கும் நம்பிக்கையற்ற தன்மைக்கு விளைநிலத்தை
கொடுப்பதுடன், எதிர்மறை அதிர்ச்சி பரப்பப்படுவதற்கும் தளத்தைக்
கொடுக்கிறது—யூரோப்பகுதியிலுள்ள
நெருக்கடி இந்நிலையில் மோசமாகிக் கொண்டிருப்பது மிக முக்கியமான
குறிப்பைக் கொண்டுள்ளது.”
சர்வதேச நாணய நிதியம் அறிக்கை
வெளியிடப்படுவதற்கு முன் நிதியத்தின் நிர்வாக இயக்குனர்
கிறிஸ்டின் லகார்ட் திங்களன்று பேர்லினில் ஓர் உரையற்றினார்.
குறைவான வளர்ச்சிக் கணிப்புக்களை சுட்டிக் காட்டிய அவர், இவை
“ஆக்கபூர்வ
கொள்கைப் பாதையை”
முன்கருத்தாகக் கொண்டுள்ளன என்றும் அத்தகைய
பாதை ஒன்றும் உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
வேறுவிதமாகக் கூறினால், ஐரோப்பிய அரசாங்கங்கள் யூரோப்பகுதியின்
நிதிய நெருக்கடியை ஐரோப்பிய அரசாங்கங்கள் தீர்க்க முடியும்
என்ற உண்மைநிலையற்ற முன்கருத்தை அடிப்படையாகக் கொண்டு
கணிப்புக்கள் வந்துள்ளன.
பல வழிகளிலும் உறுதியற்ற தன்மைதான் தேவையை
நிறுத்தி வைத்துள்ளது, கடன் கொடுப்பதற்கான விருப்பத்தை
நிறுத்தி வைத்துள்ளது என்று லகார்ட் கூறினார். 2012ம் ஆண்டு
“குணமடையச்
செய்யும் ஆண்டாக இருக்க வேண்டும்”
என்றார் அவர்.
“இல்லாவிடின்,
நாம் மிக எளிதில்
‘ஒரு
1930 கணத்திற்கு”
சரிந்து விடுவோம். அக்கணத்தில் நம்பிக்கையும் ஒத்துழைப்பும்
முறிந்து நாடுகள் தம்மை மட்டும் பார்க்க திரும்பியுள்ளன.
அக்கணம், இறுதியில், கீழ்நோக்குச் சரிவிற்கு வழிவகை செய்யும்,
அது உலகைச் சூழ்ந்து கொள்ளலாம்.”
அத்தகைய கணம் செயலற்ற தன்மை, தனித்திருக்கும்
தன்மை மற்றும் வளைந்து கொடுக்காத சிந்தனைப் போக்கு ஆகியவற்றின்
மூலம் தூண்டப்படலாம் என்று லகார்ட் எச்சரித்தார். அவருடைய
கருத்துக்கள் ஜேர்மனிய அரசாங்கத்தையும் நிதிய அதிகாரிகளையும்
இலக்கு கொண்டன என்பது தெளிவு. பேர்லினிடம் இருந்து எதிர்ப்பை
மீறி, சர்வதேச நாணய நிதியம் இன்னும் கூடுதலான முறையில்
கூடுதலான பணப்புழக்கம்
தேவை, ஐரோப்பிய மத்திய வங்கி நெருக்கடியில் இன்னும் தீவிரமாகச்
செயல்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது. அவருடைய
கருத்துக்கள் அதையொட்டி வெளிவந்தாலும், அவற்றின் சாரத்தை
மறுப்பதற்கு இல்லை; ஏனெனில் ஐரோப்பிய நிதிய முறை ஒரு
கத்திமுனையில்தான் நடந்து வருகிறது.
ஒரு $1 டிரில்லியன் பிணை எடுப்பு நிதிக்கு
லகார்ட் ஆதரவு திரட்டுகிறார். இந்த
“தீச்சுவர்”
இல்லாவிடின் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள்
“தவிர்க்க
முடியாமல் திவாலாகமால் இருக்கும் நிலைப்பாடு நெருக்கடியில்
அசாதாரண நிதியச் செலவுகளை ஒட்டி தள்ளப்படும்”,
அதையொட்டி உலக நிதிய முறையின் உறுதிப்பாட்டிற்கு
“பேரழிவு
தரும் தாக்கங்கள் ஏற்படும்”
என்றார் அவர்.
ஜேர்மனி நெருக்கடியைச் சமாளிப்பதில் இன்னும்
பெரிய பொறுப்பை எடுக்க வேண்டும் எனத் தோன்றும் அழைப்பு
வகையில், லகார்ட் யூரோப் பகுதிக்கு
“
ஒருவகை நிதிய இடர் பகிர்ந்துகொள்ளப்படுதல் தேவை. அதுதான் ஒரு
நாட்டில் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவு முழு
யூரோப்பகுதியிலும் நிதிய நெருக்கடி மற்றும் அதிகச் செலவுகள்
கொடுக்கும் நிதிபெறுதல் என்ற வளர்ச்சியை ஏற்படுத்தாமல்
இருப்பதற்கான பொது ஆதரவை அனுமதிக்கும்.”
கூடுதலாக நிதியளிக்கப்பட வேண்டும் என்ற
கருத்திற்கு எதிர்ப்பாளர்களைச் சாடிய வகையில், லகார்ட்
“நிதியக்
கொள்கையை ஊதாரித்தனம் மற்றும் பொறுப்பற்ற தன்மைக்கு இடையே
அறநெறி விளையாட்டுப் போல் காணும் கவலையளிக்கும் போக்கு”
குறித்தும் சுட்டிக்காட்டினார்.
அதன் நவீனப்படுத்தப்பட்ட அறிக்கையை சர்வதேச
நாணய நிதியம் வெளியிடுகையில், ஜப்பானில் இருந்து வந்த செய்தி
முக்கிய தொழில்துறை வளர்ச்சியுற்ற நாடுகளில் தொடர்ந்து
கீழ்நோக்கிய போக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டியது. 1980ம்
ஆண்டில் இருந்து முதல் தடவையாக ஜப்பான் அதன் வணிகப்பிரிவு
பற்றாக்குறையை அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது;
இது யூரோப் பகுதி நெருக்கடி, யென்னின் உயரும் மதிப்பு மற்றும்
இயற்கைப் பேரிடர்கள் ஆகியவற்றால் விளைந்துள்ளது—கடந்த
ஆண்டின் நில அதிர்ச்சி மற்றும் தாய்லாந்தின் வெள்ளங்கள் ஆகியவை
போல்.
பெரும்பாலான முன்கணிப்பவர்கள் ஜப்பான் விரைவில்
மேலதிக வருமானம் உள்ள நிலைமைக்குத் திரும்பும் என்று
நம்புகின்றனர். ஆனால் மற்றவர்கள் சமீபத்திய புள்ளிவிவரங்கள்
உலகப் பொருளாதாரம் தொடர்ந்து தேக்க நிலையில் இருப்பதின்
போக்கின் தொடக்கமாக இருக்கும் என்றும் நினைக்கின்றனர்.
The Bank of Japan
தொடுவானத்தில் எந்தப் பெரிய முன்னேற்றமும் வரும் என்று
கருதவில்லை. நேற்று ஒரு அறிக்கையில் நிதியச் சந்தைகளில்
“கனமான
உளைச்சல்கள்”
உள்ளன என்று எச்சரித்தது. இந்த வங்கி ஜப்பானின்
உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி மார்ச் முடியும் ஆண்டில்
முன்பு கணித்திருந்த 0.3 வளர்ச்சி என்பதற்குப் பதிலாக, 0.4
சதவிகிதம் சுருங்கும் என்று எதிர்பார்க்கிறது. குறிப்பாக
வணிகச் சமச்சீர் நிலை கீழ்நோக்கில் தொடர்ந்தால் இது இன்னும்
கீழ்நோக்குமுறையில் திருத்தப்படலாம். |