WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
Obama backs regime change in Syria amid calls for
intervention
குறுக்கீடுகளுக்கான அழைப்புக்களுக்கு நடுவில் ஒபாமா சிரியாவில்
ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு தருகிறார்
By Bill Van Auken
19 January 2012
மத்திய கிழக்கு நாட்டில்
தலையீடுகள்
தேவை என்ற அழைப்புக்கள் தொடர்ந்து பெருகும்நிலையில்,
சிரியாவில் ஆட்சிமாற்றம் தேவை என்பதற்கு செவ்வாய் அன்று
ஜனாதிபதி ஒபாமா தன் ஆதரவை வெளிப்படுத்தினார்.
வெள்ளை மாளிகையில் ஜோர்டானின் மன்னர்
அப்துல்லாவுடன் நடத்திய பேச்சுக்களுக்குப் பின், சிரிய
அரசாங்கத்தின் நடவடிக்கைகள்
“ஏற்கமுடியாதவை”
என்று அறிவித்த ஒபாமா, ஜனாதிபதி பஷர் அல்-அசாத்
பதவியை விட்டு விலக வேண்டும் என்னும் அமெரிக்கக் கோரிக்கையை
வலியுறுத்தினார்.
“அந்நாட்டில்
ஏற்கவியலாத
அளவிலான
வன்முறைத் தரங்களை நாம் தொடர்ந்து காண்கிறோம், எனவே நாம்
ஜோர்டானுடன் நெருக்கமாக ஆலோசித்து தற்போதைய சிரிய ஆட்சி
கீழிறங்குவதை ஊக்குவிக்கும் வகையிலான சர்வதேச_அழுத்தம் மற்றும்
சூழலைத் தோற்றுவிப்போம்.”
என்று ஒபாமா கூறினார்.
அசாத் அகற்றப்பட வேண்டும் என்று கோரிய முதல்
அரபு நாடுகளில் ஜோர்டானிய முடியரசும் இருப்பது குறித்து ஒபாமா
பாராட்டினார். லிபியாவில் அமெரிக்க-நேட்டோத் தலையீட்டில்
இருந்ததைப் போல், வாஷிங்டன் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு
ஆதரவாக இருக்கும் பல சர்வாதிகார ஆட்சிகளை,
சிரிய ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கம் உடைய
மேற்கத்தைய தலையீட்டிற்கு மறைப்புத் தருவதற்கு தனக்கு ஆதரவாகத்
திரட்ட முயல்கிறது.
இத்தகைய ஆட்சிகளில் முதன்மையானது கட்டார்
ஆகும். கடந்த வார இறுதியில்
CBS
செய்தி நிகழ்வான
“60
நிமிஷங்கள்”
என்னும் பேட்டி நிகழ்வில், கட்டாரின் ஆளும்
எமிரான ஷேக் ஹமத் பின் கலிலா அல் தனி தன்னுடைய ஆதரவைப் பிற
அரபு நாடுகளில் இருந்து அடக்குமுறையை நிறுத்துவதற்கு எனக்
கூறப்படும் தலையீட்டுக்கு வரும் துருப்புக்களுக்கு
அறிவித்தார்.
“கொலையை
நிறுத்தும் நிலைமைக்காக, சில துருப்புக்கள் கொலையை நிறுத்தச்
செல்ல வேண்டும்”
என்று ஷேக் ஹமத் அரபு நாடுகளைத் தவிர வெளியில்
இருந்து ஒரு இராணுவத் தலையீட்டிற்கு ஆதரவாக இருக்கிறாரா என
பேட்டியாளர் கேட்ட ஒரு வினாவிற்கு விடையிறுத்தார். இந்த
அறிக்கை சிரிய ஆட்சியில் இருந்து ஒரு சீற்றமான கடிந்துரையைப்
பெற்து; சிரிய மண்ணில் வெளிநாட்டுத் துருப்புக்கள் எதையும்
அனுமதிக்கும் உடன்பாடு பற்றிய பேச்சுக்கும் இடமில்லை என்றும்
அதில் கூறப்பட்டுள்ளது.
கட்டாரி எமிரின் அறிக்கையினால் தான்
“வியப்படைந்துள்ளதாக”
அறிவித்த சிரிய வெளியுறவு அமைச்சரகம் தன் நாடு
“கட்டார்
அதிகாரிகளின் அறிக்கைகளை, அரபுத் துருப்புக்களை அனுப்புதல்....
அதையொட்டி மேலைத் தலையீட்டிற்கு வழிவகுத்தல் என்பது
குறித்தவற்றை, நிராகரிக்கிறது எனக் கூறியுள்ளது.
அமெரிக்க-நேட்டோ லிபியாவில் ஆட்சி
மாற்றத்திற்காக நடத்திய போரில் கட்டார் ஒரு முக்கிய பங்கைக்
கொண்டிருந்தது; முதலில்
“ஒரு
பறக்கக் கூடாது பகுதி”
நிறுவுதல் என்னும் போலிக் காரணம் காட்டி
வெளிநாட்டுத் தலையீட்டிற்கு அரபு லீக் இயற்றிய தீர்மானத்திற்கு
முக்கிய ஆதரவை அது கொடுத்தது. அதன் பின் லிபியாவில்
எழுச்சியாளர்கள் எனக் கூறப்பட்டவர்களுக்கு பயற்சியும்,
ஆயுதங்களையும் அளிப்பதில் முக்கிய பங்கைக் கொண்டது; அதே
நேரத்தில் கேர்னல் முயம்மர் கடாபியை அகற்ற முற்பட்ட
சக்திகளுக்கு தலைமை தாங்கவும், அவற்றின் தரை நடவடிக்கைகளை
நேட்டோ குண்டுவீச்சுத் தாக்குதல்களுடன் ஒருங்கிணைக்கவும்
ஏராளமான கட்டாரித் துருப்புக்கள் அந்நாட்டிற்கு அனுப்பி
வைத்தது.
டமாஸ்கஸுடன் கட்டார் முன்பு நெருக்கமான
உறவுகளைக் கொண்டிருந்தாலும், எண்ணெய் வளமுடைய வளைகுடா நாட்டின்
முடியாட்சி நெருக்கமாக அதன் கொள்கைகளை வாஷிங்டனுடையதுடன்
பிணைத்த நிலையில், அதன் தூதரை கடந்த கோடை காலத்தில்
அங்கிருந்து திரும்பப் பெற்று சிரிய அரசாங்கத்தின் மிகக்
கடுமையான குறைகூறுவோரில் ஒன்றாயிற்று.
புதன் அன்று சிரிய அரசாங்க செய்தி ஊடகம்
கட்டாரி ஆட்சி லிபியத் தலையீட்டில் அது கொண்ட பங்கை மீண்டும்
செலுத்த முற்படுகிறது, இதையொட்டி அசாத் அரசாங்கத்தை வீழ்த்த
முயலும் எழுச்சியாளர்களுக்கு ஆயுதங்களையும் பயிற்சியையும்
அளிக்கிறது என்று குற்றம் சாட்டியது. திஷ்ரின் நாளேடு
கட்டார்
“நெருக்கடியின்
தொடக்கத்தில் இருந்தே ஒருஎதிர்மறைப் பங்கைக்கொண்டுள்ளது, இதில்
ஆயுதமேந்திய குழுக்களுக்கு நிதியளிப்பதும் அடங்கும்”
என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்தமாதம் அமெரிக்கன் கன்சர்வேடிவ்
ஒருமுன்னாள்
CIA
முகவர் பிலிப் கிரால்டி எழுதிய ஒரு கட்டுரையை
வெளியிட்டுள்ளது; அதில் சிரியாவிற்குள் ஒரு ஆயுதமேந்திய பூசலை
ஏற்படுத்த, அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும்
தொடங்கியுள்ள செயற்பாடு குறித்து விரிவான விவரங்கள்
அளிக்கப்பட்டுள்ளன.
“பெயர்
எழுதப்படாத நேட்டோ போர் விமானங்கள் சிரிய எல்லைக்கு அருகே
இஸ்கண்டெரம் அருகே உள்ள துருக்கிய இராணுவத் தளங்களுக்கு வந்து
முன்னாள் முயம்மர் கடாபியின் ஆயுதக் கிடங்குகளில் இருந்து
ஆயுதங்களையும், லிபியாவில் இருந்து தன்னார்வ துருப்புக்களையும்
விட்டுச் செல்லுகின்றன”
என்று கிரால்டி எழுதினார்.
“இஸ்கெண்டெரம்
சுதந்திர சிரிய இராணுவத்தின்
(Free
Syrian Army)
தலைமையிடமாகவும், சிரியத் தேசியக் குழுவின்
(Syrian
National Council)
ஆயுதப் பிரிவின் இடமாகவும் உள்ளது. பிரெஞ்சு மற்றும்
பிரித்தானிய சிறப்புப்படைகளின் பயிற்சியாளர்களும் தரையில்
நிலைகொண்டு சிரிய எழுச்சியாளர்களுக்கு உதவுகின்றனர்; அதே
நேரத்தில்
CIA
மற்றும் அமெரிக்க சிறப்புச் செயற்பாடுகள் பிரிவு தொடர்புத்துறை
கருவிகளையும், உளவுத்தகவல்களையும் எழுச்சியாளர் இலக்குகளுக்கு
உதவ அளித்து, போராளிகள்,
சிரிய இராணுவத்தின் செறிவு உள்ள இடங்களை தவிர்க்கவும்
உதவுகின்றனர்.”
இச்செயற்பாடுகளை துருக்கி வழிநடத்துவது போல்
தோன்றுகிறது; சிரிய எழுச்சியாளர்களுக்கு எல்லை அருகே
பயிற்சிக்காக ஒரு தளம் அமைத்துக் கொடுத்திருப்பதுடன், நேட்டோ
நட்பு நாடுகளுடன் சிரியப் பகுதி மீது ஒரு பறக்கக்கூடாத பகுதியை
சுமத்துவதற்கு விவாதித்துவருகிறது.
தனக்கு தகவல் பெறுவதற்கு பெரிதும் சிரிய
எதிர்த்தரப்பு ஆதாரங்களை நம்பியுள்ள ஐ.நா. கருத்துப்படி,
கிட்டத்தட்ட 5,000 சிரியர்கள் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு
முன்பு தொடங்கிய அசாத் அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன
ஆர்ப்பாட்டங்களில் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய அரசாங்கம் அதன்
பாதுகாப்பு படையினரில் 2,000 பேர் ஆயுதமேந்திய குழுக்களுடன்
போரிட்டதில் இறந்து விட்டனர் என்று கூறியுள்ளது.
பெருகிய முறையில் ஓர் உள்நாட்டுப் போரின்
குறிப்பிட்ட இயல்புகளை இந்நெருக்கடி காட்டுவது போல்
தோன்றுகிறது: நாட்டின் சுன்னி பெரும்பான்மை மக்களின்
கூறுபாடுகள் சிலவற்றை அசாத்தின் ஆலவைட்
ஷியா
பிரிவின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டுள்ள
ஆட்சிக்கும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக மோதச்
செய்தல் என்னும் வகையில். பல குருதி கொட்டிய மோதல்கள் நடந்த
மத்திய நகரமான ஹோம்ஸில் பல கொலைகளும் பயங்கரவாதமும் அருகருகே
வசிக்கும் மக்களை குறுகிய இனப்பற்றுத் தன்மையில் பிரித்தாளப்
பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்காவிற்குள் செய்தி ஊடகம் மற்றும்
அரசியல்நடைமுறையின் சிந்தனைக் குழுக்களிடையே ஓர் இராணுவத்
தலையீடு
தேவை என்ற விவாதங்கள் சீராக முரசு கொட்டுகின்றன.
“சிரியாவில்
தலையீடு செய்வது குறித்துச் சிந்திக்க வேண்டிய நேரம்
வந்துவிட்டது”
என்ற தலைப்பில் அட்லான்டிக் ஜனவரி 17ம் திகதி வெளியிட்ட
கட்டுரை ஒரு முன்மாதிரியாகும். இதன்ஆசிரியர்
வெளியுறவுக்குழுவின் மத்திய கிழக்கு ஆய்வுகள் பிரிவில் மூத்த
ஆய்வாளராக இருக்கும் ஸ்டீவன் ஏ. குக், தலையீட்டிற்கு
“மனித
உரிமைகள்”,
“பாதுகாக்கும்
பொறுப்பு”
ஆகியவற்றை முன்வைத்து வாதிடுவதுடன் சிரியாவில்
என்ன செய்யப்படலாம் என்பதற்கு லிபியாவை ஓர் உதாரணமாகக்
காட்டுகிறார்.
லிபியாவில் மனித உரிமைகள் அமெரிக்க-நேட்டோ
போர் என்று ஆபிரிக்க கண்டத்தில் மிகப் பெரிய எண்ணெய்
இருப்புக்களின் கட்டுப்பாட்டைப் பற்றும்நோக்கத்திற்குப்
போலிக்காரணமாக உதவியதைப் போலவே, சிரியாவில் தலையீடும் அதன்
பொது நியாயப்படுத்துதல்களுக்கும் உண்மையான பூகோள மூலோபாய
நோக்கங்களுக்கும் உதவும் என்று குக் தெளிவாக்கியுள்ளார்.
“அசாத்தின்
குற்றங்களை நிறுத்துவதற்கான குறுக்கீடோ அல்லது அரசியல் உறுதியோ
இல்லை என்றால், உலகம் மீண்டும் பெரும் வெகுஜனக்கொலையை ஓரத்தில்
இருந்து பார்ப்பதற்கு விடையிறுக்க வேண்டும்”
என்று குக் எழுதுகிறார்.
“அசாத்தை
வீழ்த்துவது நீண்டகால அமெரிக்க இலக்கான ஈரானைத்
தனிமைப்படுத்துதல் என்பதை முன்னேற்றுவிக்கும் என்ற வாய்ப்பு
புறக்கணிக்கப்பட முடியாதது. டமாஸ்கஸின் அசாத்திற்கு பிறகு
வரும் எந்த அரசாங்கமும் ஈரானை ஆதரவிற்கு எதிர்நோக்காது எனலாம்,
மாறாக அது துருக்கி மற்றும் சௌதி அரேபியாவைத்தான்
எதிர்நோக்கும். அது வாஷங்டனுக்கும் மற்ற நாடுகளுக்கும் அரபு
உலகில் ஈரானின் செல்வாக்கைக் குறைக்க விரும்புவற்றிற்கு நிகர
இலாபம் ஆகும்.”
தனியார் உளவுத்துறை அமைப்பு ஸ்ட்ராட்போர்
இதேபோல் கூறியுள்ளது; இந்த வாரம்
“அசாத்
ஆட்சி—அல்லது
அசாத் இல்லாத சிரிய ஆட்சி—தப்பிக்க
வேண்டும் என்றால், ஈரான் சிரியாவில் மகத்தான செல்வாக்கை
அனுபவிப்பதுடன், லெபனானில் ஹெஸ்போல்லாவுடனும் கொண்டிருக்க
வேண்டும். ஈராக்கில் தற்பொழுதுள்ள போக்கு மற்றும் சிரியாவில்
அல்வைட் ஆட்சி தப்பித்தல் என்பது ஈரானியச் செல்வாக்கு மண்டலம்
ஒன்று மேற்கு ஆப்கானிஸ்தானத்தில் இருந்து மத்தியதரைக்கடல் வரை
தோற்றுவிக்கும். இது பிராந்தியத்தின் வல்லமைச் சமநிலையில்
அடிப்படை மாற்றத்தைப் பிரதிபலிக்கும்; அத்துடன் அரபு
தீபகற்பத்தில் ஈரானின் உறவுகளையும் மறுவரையறைக்கு
உட்படுத்தும். இது ஈரானின் நலன்களுக்கு உகந்தவை என்பது
வெளிப்படை. ஆனால் இது அமெரிக்காவில் நலன்களுக்கு உகந்தவை அல்ல.”
பேர்சிய வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவில்
எண்ணெய் வளமுடைய பிராந்தியங்களில் தன் மேலாதிக்கத்தை
நிறுவுவதற்கு ஒரு தடை என்று ஈரானைக் காணும் அமெரிக்கா, அத்தகைய
தன் பரந்த முயற்சியில் ஒரு பகுதியாக அதற்கு எதிரான
போர்த்தயாரிப்பின் ஒரு பகுதியாகத்தான் சிரிய ஆட்சி
மாற்றத்திற்கு முயல்கிறது. ஆனால் ரஷ்யாவும் சீனாவும், ஈரான்
மற்றும் சிரியாவில் பரந்த நலன்களைக் கொண்ட நிலையில் எத்தகைய
இராணுவக் குறுக்கீட்டையும் எதிர்க்கின்றன.
ரஷ்யாவில் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்
புதன் அன்று, தேவையானால் சிரியாவில் வன்முறைக்கு ஆதரவு தரும்
ஐ.நா.பாதுகாப்புக்குழு தீர்மானத்தை தடுப்பதற்கு தன்
தடுப்பதிகார உரிமையை பயன்படுத்தும் என்றார். சீனா ரஷ்ய
நிலைப்பாட்டிற்கு ஆதரவைக் காட்டியுள்ளது.
சீனா ரஷ்யா இரண்டுமே லிபியாவில் பறக்கக்கூடாது
பகுதி சுமத்தப்படுவதற்கு அங்கீகாரம் கொடுத்த தீர்மானத்தின்
வாக்கெடுப்பில் பங்கு பெறவில்லை; அத்தகைய தீர்மானம் அமெரிக்க
நேட்டோ போருக்கு ஒரு சட்டபூர்வ அத்தி இலை மறைப்பை அளித்தது.
போருக்குப்பின், இருநாடுகளும் லிபியாவில் தங்கள் நலன்கள்
குறித்துக் கணிசமான இழப்புக்களை அடைந்துள்ளன; அதே நேரத்தில்
அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் முக்கிய நலன்களைப்
பெற்றுள்ளன.
இந்த மாதம் முன்னதாக ரஷ்யா ஒரு சிறிய
விமானத்தளம் கொண்ட போர்க்கப்பல் குழு ஒன்றை சிரியத் துறைமுகமான
டார்ட்டஸிற்கு அனுப்பியது; இரு நாடுகளுக்கும் இடையே உள்ள
“நட்பின்”அடையாளம்
இது என்று மாஸ்கோ விளக்கியது. ரஷ்ய அதிகாரிகள் ரஷ்யக் கப்பல்
ஒன்று சிரியாவிற்கு ஆயுதங்கள் வழங்கியது குறித்த அமெரிக்கப்
புகார்களையும் உதறித்தள்ளினர். மேலும் மாஸ்கோவின்
நடவடிக்கைகள், அமெரிக்க மற்றும் மேலை ஐரோப்பியப் பொருளாதாரத்
தடைகளுக்குக் குறுக்கே நின்றாலும், எந்தச் சர்வதேச
உடன்பாடுகளையும் மீறவில்லை என்றும் அவர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில் அரபு லீக் இந்த வார இறுதியில்
சிரியாவில் தன் கண்காணிப்புக் குழுவின் பணியை விவாதிக்கக் கூட
இருக்கிறது. அதன் நியமன காலம் இந்த வாரம் முடிவடைகிறது.
நேரடி வெளிநாட்டுத் தலையீட்டிற்கு வழிவகுப்பதற்காக பணி
கலைக்கப்படவேண்டும் என்று அழைப்புவிடுபவற்றில் கட்டார்
முன்னணியில் உள்ளது.
மேற்கத்தைய ஆதரவுடைய
சுதந்திர
சிரிய இராணுவம் அரபு லீக்கிடம்,
குழு
“தன்
பணியில் தோல்வி அடைந்துவிட்டதால்”
அதன் கண்காணிப்பாளர்களை திரும்பப் பெறுமாறு கேட்டுக்
கொண்டுள்ளது. குழுவின் தலைவர் கர்னலப் ரியட் அல்-அசத்
ராய்ட்டர்ஸிடம் அரபு லீக்
“இப்பிரச்சினையை
ஐ.நா.பாதுகாப்புக் குழுவிற்கு விட்டு விடுமாறும், அனைத்து
சர்வதேச சமூகமும் தலையிடவேண்டும், ஏனெனில் அவை இக்கட்டத்தில்
சிரியர்களை நம் அரபு சகோதரர்களைவிட காக்கும் திறனுடையவை”
என்று கூறியுள்ளார். |