WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
ஐரோப்பிய ஒன்றியம் ஈரான் மீது எண்ணெய்
வர்த்தகத் தடைகளைச் சுமத்துகிறது
By Peter Symonds
24 January 2012
use this version to print | Send
feedback
ஐரோப்பிய ஒன்றியத்தின்
(EU)
வெளியுறவு மந்திரிகள் நேற்று பிரஸ்ஸல்ஸில்
கூடி, ஈரான்மீது தொலை விளைவு தரக்கூடியப் பொருளாதாரத் தடைகளை
விதித்தனர்; ஜூலை மாதம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்
ஈரானிய எண்ணெய் இறக்குமதிகளும் இதில் அடங்கும். இந்தத் தடை
பேர்சியன் வளைகுடாவை இராணுவத்தன நடவடிக்கைகளில் ஆழ்த்தக்கூடிய
ஆபத்தைக் கொண்ட ஒரு பொருளாதாரப் போர் நடவடிக்கை ஆகும்.
EU
பொருளாதாரத் தடைகள் மிக விரிவானவை ஆகும்;
ஈரானின் எண்ணெய்த் தொழிலின் ஒவ்வொரு கூறுபாட்டையும் தாக்கும்
திறன் கொண்டது. 27 உறுப்பு நாடுகளும் ஈரானுடன் எந்தப் புதிய
எண்ணெய் ஒப்பந்தங்களையும் கையெழுத்திடுவதை உடனே
நிறுத்துவதுடன், இருக்கும் ஒப்பந்தங்களை ஜூலை 1 முதல்
முடிவிற்குக் கொண்டுவந்துவிடும். இத்தடை கச்சா எண்ணெய்,
பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் பெட்ரோ கெமிகல் பொருட்கள்
ஆகியவற்றைக் கொண்டிருப்பதுடன், ஈரானின் எரிசக்தித்துறையில்
எத்தகைய கருவிகள், தொழில்நுட்பம் ஏற்றுமதி செய்யப்படுவதையும்,
புதிய முதலீடுகள் செய்வதையும் உள்ளடக்கியுள்ளது.
EU
ஆனது ஈரானின் மத்திய வங்கியையும் இலக்கு
கொண்டுள்ளது; ஐரோப்பாவிலுள்ள அதன் பெரும்பாலான சொத்துக்களையும்
முடக்கிவிட்டது. இப்பொழுது இன்னும் முறையான வணிகம் என்று
கருதப்படும் சிலவற்றை அனுமதிக்கும் வகையில் சில குறைந்த
விதிவிலக்குகள் உள்ளன. ஐரோப்பிய நடவடிக்கைகள் ஜனாதிபதி ஒபாமா
டிசம்பர் 31 அன்று கையெழுத்திட்ட சட்டத்திலுள்ள வெளிநாட்டு
நிறுவனங்கள் உட்பட எந்த நிறுவனமும் ஈரானின் மத்திய வங்கியுடன்
தொடர்புகள் கொண்டால் அபராதம் அளிக்கப்படும் என்று
கூறியிருப்பதுடன் இணைந்து வருகின்றன. அமெரிக்க நடவடிக்கை
அனைத்து ஈரானிய எண்ணெய்களையும் சர்வதேச அளவில் தடுத்து விட
முற்படுகிறது; இதையொட்டி அந்நாட்டின் பொருளாதாரம்
முடக்கப்படும்.
கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் கிட்டத்தட்ட
ஈரானின் ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெயில் கால் பகுதியை
வாங்கியது. பல தெற்கு ஐரோப்பிய நாடுகள்—குறிப்பாகக்
கிரேக்கம்—ஈரானிடம்
இருந்து வரும் எண்ணெய் இறக்குமதிகளைப் பெரிதும் நம்பியுள்ளன,
முழுத் தடை சுமத்தப்படுவதை எதிர்க்கின்றன. ஆனால் மே 1ம் தேதி
பொருளாதாரத் தடைகளில் இருந்து பாதகமான பொருளாதாரப் பாதிப்பு
இருந்தால் பரிசீலனை இருக்கும் என்ற தெளிவற்ற உறுதிமொழியையொட்டி
அந்நாடுகளும் வரிசையில் சேர்க்கப்பட்டுவிட்டன.
செயல்படுத்தப்பட்டால், இத்தடை ஈரானியப்
பொருளாதாரத்தின் மீது கடுமையான பாதிப்பைக் கொண்டிருக்கும்;
அதுவோ எண்ணெய் ஏற்றுமதிகள் மீது கணிசமாக நம்பியுள்ளது. ஈரானின்
நாணயம் வெள்ளிக்கிழமையில் இருந்து அமெரிக்க டாலருக்கு எதிராக
14 சதவிகிதம் சரிந்து, நாட்டிற்குள் மிக அதிக பணவீக்கத்தை
இன்னும் அதிகரித்துள்ளது.
பிரெஞ்சு வெளியுறவு மந்திரி அலன் யூப்பே,
“சீர்ப்படுத்த
முடியாத விளைவுகளை கொடுக்கக்கூடிய இராணுவரீதியான தீர்வைத்
தவிர்ப்பதற்கு, நாங்கள் ஒரு படி கீழிறங்கி பொருளாதாரத் தடைகள்
என்ற பாதையில் செல்கிறோம்”
என்று
அறிவித்தார்.
“நாம்
முன்வைக்கும் உரையாடலை ஏற்குமாறு”
தெஹ்ரானுக்கு அழைப்பு விடுகிறோம் என்றார் அவர். இந்தக்
கருத்துக்களிலுள்ள இழிந்த தன்மை பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா
சார்க்கோசியின் கருத்துக்களில் அடிக்கோடிட்டுக்
காட்டப்படுகிறது; கடந்த வெள்ளியன்று அவர் இராணுவ மோதலைத்
தவிர்ப்பதற்கு
“நேரம்
முடிந்து கொண்டிருக்கிறது”
என்று எச்சரித்தார்.
அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே ஈரான்
அணுவாயுதங்களைத் தயாரிக்கிறது என்னும் ஆதாரமற்ற கூற்றுக்களின்
அடிப்படையில் அதன்மீது ஒருதலைப்பட்ச தாக்குதலின்
தயாரிப்புக்களை பலமுறை தெளிவாக்கியுள்ளன. ஈரானிய ஆட்சி தான்
ஓர் அணுவாயுதத்தைத் தயாரிக்கும் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை
என்பதை பலமுறை வலியுறுத்தியுள்ளது. ஈரானிய வெளியுறவுத்துறை
செய்தித் தொடர்பாளர் ரமின் மெஹ்மன்பர்ஸ்ட்
EU
பொருளாதாரத் தடைகளை
“நியாயமற்றவை”,
“தோல்வியில்தான்
முடியும்”
என்று முத்திரையிட்டார்.
EU
பேச்சுக்களுக்கு முன்வந்துள்ளது என்றாலும் அவை ஓர் இறுதி
எச்சரிக்கை கொடுப்பதின் தன்மையைக் கொண்டுள்ளன.
EU
வெளியுறவுக் கொள்கையின் தலைவர் காத்திரின் ஆஷ்டன் முந்தைய
பேச்சுக்களுக்கு பின்
“நாங்கள்
மேசை மீது வைத்துள்ள விருப்புரிமைகள் அனைத்தையும்
கருத்திற்கொள்ள வேண்டும் அல்லது அதன் கருத்துக்களுடன்
முன்வரவேண்டும்”.
வேறுவிதமாகக் கூறினால், ஈரான் பேச்சுக்களைத் தொடங்குமுன்
கணிசமான சலுகைகளை அளிக்க வேண்டும்.
மேலும் ஈரானிய ஆட்சி லிபியாவில் அமெரிக்க
மற்றும் ஐரோப்பிய ஏமாற்றுத்தனத்தை பார்த்துள்ளது—இது
சமரசம் செய்துகொள்வதற்கு வலுவான தடையைத்தான் காட்டுகிறது.
வாஷிங்டன் லிபியத் தலைவர் முயம்மர் கடாபியுடன் 2003ல் சமரசத்
தூதராக உறவை மேற்கொண்டு, 2011ல் நேட்டோ தலைமையிலான
படையெடுப்பின் மூலம் முயம்மர் கடாபியின் ஆட்சியை அகற்றும்
போர்தான் இறுதி விளைவாக இருந்தது. அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய
நட்புநாடுகளும் பேச்சுக்கள் மூலம் அளிக்கும் எத்தகைய
உத்தரவாதங்களும் பயனற்றவை.
ஈரானை அரக்கத்தனமாக சித்தரிக்கும் முயற்சியின்
ஒரு பகுதியாக அமெரிக்க செய்தி ஊடகம் பாராளுமன்ற உறுப்பினர்
மகம்மத் கோசரியின் கருத்துக்களை உயர்த்திக் காட்டியுள்ளது;
அவர் ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை
“ஈரானிய
எண்ணெய் விற்பனைக்கு தடை ஏதும் ஏற்பட்டால்”
மூடிவிடப்போவதாக எச்சரித்திருந்தார். உலகில் வணிகத்திற்காக
செல்லும் அனைத்து எண்ணெய் தொகுப்பில் ஐந்தில் ஒரு பங்கு
கடக்கும், இந்த மூலோபாய நீர்ப்பாதையை மூடும் எந்த முயற்சியும்
ஒரு
“சிவப்புக்
கோடு”
இராணுவ மோதலை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா
அறிவித்துள்ளது.
பேர்சிய வளைகுடா அருகே பென்டகன் அதன்
விமானத்தளப் போர்க்கப்பல்கள் தொகுப்பை இருமடங்காக
ஆக்கியுள்ளது. ஞாயிறன்று
EU
கூட்டத்திற்கு முன், விமானத் தளமுடைய போர்க் கப்பலான
USS
Abraham Lincoln
பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள் புடைசூழ
ஹோர்முஸ் ஜலசந்தி வழியே பேர்சிய வளைகுடாவிற்குச் சென்றது. இது
ஒரு
“வாடிக்கையான”
பயணம் என்ற கூற்றுக்கள் வெளிவந்தபோதிலும், இது
ஈரானை அச்சுறுத்தும் நோக்கத்தைத்தான் கொண்டிருந்தது என்பது
வெளிப்படை.
தெஹ்ரான் மீது அழுத்தங்களை பன்முகமாக அமெரிக்கா
தீவிரமாக்கிக் கொண்டுவருகிறது. திங்களன்று ஒபாமா நிர்வாகம்
ஈரானின் மூன்றாவது பெரிய வங்கியான
Bank Tejarat
க்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளை
அறிவித்தது. சர்வதேச நிதிய முறையுடன் எஞ்சியுள்ள நாட்டின் சில
தொடர்புகளில் ஒன்றை இது மூடிவிடுகிறது.
அரசாங்கங்கள், வங்கிகள், பெருநிறுவனங்கள்
ஆகியவற்றின்மீது அழுத்தங்களை அதிகரிக்கும் நோக்கம் கொண்ட உலகப்
பிரச்சாரத்தில் மூத்த அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இம்மாதம் முன்னதாக, அமெரிக்க நிதி மந்திரி டிம் கீத்னர்
ஜப்பானுக்கும், சீனாவிற்கும் பயணித்து, எண்ணெய் இறக்குமதிகள்
(ஈரானிடம் இருந்து) வெட்டப்படவில்லை என்றால் அவை அபராதங்களை
எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தார். இக்கருத்தை
வலியுறுத்தும் வகையில், வெள்ளை மாளிகை ஒரு சீன எண்ணெய் வணிக
நிறுவனமான
Zhuhai Zhenrong
ஐ ஈரானுடன் வணிகம் நடத்தியதற்கு அபராதங்களைச்
சுமத்தியுள்ளது.
சீனா, ரஷ்யா இரண்டுமே அமெரிக்காவும்
EU
வும்
ஒருதலைப்பட்சமாகப் பொருளாதாரத் தடைகள் சுமத்தபட்டதை
எதிர்த்துள்ளன; ஈரானுடன் வணிகம் நடத்தும் தங்கள் உரிமையையும்
வலியுறுத்தின. அமெரிக்கா
Zhuhai Zhenrong
மீது
சுமத்திய அபராதம்
“நியாயமற்றது”,
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஈரான் அணுசக்தித்திட்டம் குறித்த
தீர்மானங்களுடன் இயைந்து இருக்கவில்லை என்று பெய்ஜிங்
அறிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சரகம் நேற்று ஓர்
அறிக்கையை வெளியிட்டு
EU
பொருளாதாரத் தடைகள் குறித்து
“வருத்தமும்
ஆபத்து எச்சரிக்கையும்”
என்று
அவற்றை விவரித்ததுடன்
“ஈரானிய
பொருளாதாரத்தின் முழுப் பிரிவையும் நெரிக்கும் முயற்சி”
என்றும் விளக்கியுள்ளது.
ஈரானின் அணுச்சக்தித் திட்டங்களைப் போலிக்
காரணமாகப் பயன்படுத்தி, அமெரிக்கா ஈரானுடனான அதன் மோதல்களை
விரிவாக்கிக் கொண்டிருக்கிறது. ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளை
அமெரிக்கா ஆக்கிரமித்தது போலவே, வாஷிங்டன் எரிசக்தி வளமுடைய
மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் தன் ஐரோப்பிய, ஆசியப்
போட்டி நாடுகளின் இழப்பில் தன் மேலாதிக்கத்தை மீண்டும்
வலியுறுத்த முற்பட்டுள்ளது. இதிலுள்ள ஆபத்து ஒபாமா
நிர்வாகத்தின் ஈரானுக்கு எதிரான பொறுப்பற்ற செயல்கள்
அப்பிராந்தியம் முழுவதையும் சூழ்ந்து கொள்ளுவதுடன் சர்வதேச
அளவில் பரவும் அச்சுறுத்தலையும் கொண்டுள்ளது. |