World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US, Israel coordinate strategy against Iran

ஈரானுக்கு எதிரான மூலோபாயத்தை அமெரிக்கா, இஸ்ரேல் ஒருங்கிணைக்கின்றன

By Peter Symonds 
20 January 2012
Back to screen version

அமெரிக்க முப்படைகளின் தலைவர் ஜெனரல் மார்ட்டின் டெம்ப்சே நேற்று உயர்மட்ட இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களுடன் ஈரான் பற்றிப் பேச இஸ்ரேலுக்கு வந்தார். ஒபாமா நிர்வாகம் தெஹ்ரானுடனான தன் மோதலை விரிவாக்குகையில், டெம்ப்சே வருகையின் வெளிப்படையான நோக்கம் இருநாடுகளும் ஈரானுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதுதான்.

ஈரானுக்கு எதிரான  வருவிருக்கும் இராணுவத் தாக்குதலின் வாயப்பைக் குறித்து இருதரப்பினரும் வேண்டுமென்றே அதிகம் பேசவில்லை. இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக் இஸ்ரேலிய வானொலியின் புதன்கிழமை அன்று ஈரானின் அணுச்சக்தி நிலையங்கள் மீதான எத்தகைய தாக்குதலும் மிகத் தொலைவில் இல்லை என்று கூறினார். அத்தகைய தாக்குதல் குறித்து இஸ்ரேல் முன்னறவிப்புக் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது என்று கேட்கப்பட்டதற்கு அவர் இராணுவ நடவடிக்கை குறித்து எந்தப் பேச்சுக்களும் நடைபெறவில்லை, இப்பிரச்சினையை ஏதோ நாளை ஏற்பட்டுவிடும் என்பது போல் நாம் கையாளவேண்டும் என நான் விரும்பவில்லை. என்றார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் திங்களன்று அவற்றின் மிகப் பெரிய கூட்டுப் போர்ப் பயிற்சியான Austere Challenge 12 என்பது இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுவதற்கு ஒத்திவகைக்கப்படும் என்று அறிவித்துள்ளன. இக்கூட்டுப்பயிற்சி, ஆயிரக்கணக்கான அமெரிக்க, இஸ்ரேலிய படையினரை உள்ளடக்கிருப்பதுடன், இஸ்ரேலின் ஏவுகணை-எதிர்ப்பு முறைகளை பரிசோதிக்கும். கூறப்படாத காரணம் அமெரிக்க அல்லது இஸ்ரேலியத் தாக்குதல் நடக்கும் பட்சத்தில் ஈரானியரின் பதிலடி எப்படி இருக்கக்கூடும் என்பது பற்றியாகும்.

இந்த தாமதம் செய்தி ஊடகத்தில் அமெரிக்கா பாரசீக வளைகுடாவில் அழுத்தங்களை குறைப்பதற்கும், இஸ்ரேல் ஒருதலைப்பட்ச தாக்குதலை ஈரான் மீது நடத்தாமல் உறுதி செய்வதற்குமான சான்று என்று பரந்த அளவில் விளக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய வெளிநாட்டு மந்திரி அவிக்டோர் லீபர்மான் ஒத்திப் போடப்பட்டுள்ளதற்கு காரணிகள் இராஜதந்திர, பிராந்திய காரணங்கள், அழுத்தங்கள் மற்றும் உறுதியற்ற நிலை என்று கூறியுள்ளார்.

எவரும் இந்த அறிக்கைகளை அப்படியே பெறுமதியானவை என ஏற்றுக்கொள்ளக்கூடாது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அமெரிக்கா ஈரானுடனான அழுத்தங்களுக்கு எரியூட்டி வருகிறது. ஜனாதிபதி பாரக் ஒபாமா, ஈரானின் மத்திய வங்கியுடன் வணிகத் தொடர்பு கொண்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களைத் தண்டிக்கும் வகையில் வடிவைமைக்கப்பட்டுள்ள ஒரு நடவடிக்கையை சட்டமாக மாற்றுவதில் கையெழுத்திட்டுள்ளார். இதனால் ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகள் பெரும் பாதிப்பிற்கு உட்படும். ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு மந்திரிகளும் திங்களன்று ஈரானிய எண்ணெய் வாங்குவதை தடை செய்வதற்கான முழு விவரங்களுக்கும் இறுதி வடிவம் கொடுக்கக் கூடுகின்றனர்.

இத்தகைய நடவடிக்கைகள் பொருளாதார போர்ச் செயல்கள் என்றுதான் கருதப்பட முடியும். முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்புக் குழுவின் அதிகாரி காரி சிக் ராய்ட்டர்ஸிடம் கூறினார்: எப்பொழுதும் அதிகமாகும் பொருளாதாரத் தடைகள் என்னும் இந்த வழிவகையில், நாம் பொருளாதாரத் தடைகள் உண்மையான போர் என்று மாறிவிடும் கட்டத்திற்கு வந்துவிட்டோம். ஈரானிடம் இருந்து கிட்டத்தட்ட எல்லா எண்ணெய் இறக்குமதிகளையும் வெட்டிவிடும் நோக்கத்தில் பொருளாதாரத் தடைகள் அவற்றின் நோக்கத்தில் வெற்றிபெற்றால், அது ஈரானின் எண்ணெய் துறைமுகங்கள் முற்றுகைக்கு உட்படுத்தப்படுவதற்கு சமமாகும், அது ஒரு போர்ச்செயல் ஆகும்.

அப்படிப்பட்ட நிலையில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் தடைக்கு உட்படுத்தப் போவதாக அச்சுறுத்தியுள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா அத்தகைய செயற்பாடு ஒரு சிவப்புக் கோடாகிவிடும் என்று அறிவித்துள்ளதுவேறுவிதமாகக் கூறினால், அமெரிக்கா ஈரானைத் தாக்குவதின் மூலம் அதை எதிர்கொள்ளும். புதன் அன்று முக்கிய மூலோபாய நீர்ப்பாதை பற்றி கேட்கப்பட்டதற்கு அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா அமெரிக்கா ஒன்றும் சிறப்பு நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை என்றும் ஜலசந்தியை மூடும் எத்தகைய ஈரானிய முயற்சியையும் சந்திப்பதற்கு முற்றிலும் தயாராக உள்ளது என்றும் எச்சரிக்கையுடன் விளக்கினார்.

உண்மையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பென்டகன் பாரசீக வளைகுடாவிற்கு அருகே விமானந்தாங்கி தாக்குதல் பிரிவை ஒன்றில் இருந்து இரண்டாக அதிகரித்துள்ளது. இதனால் ஈரானுக்கு எதிராகப் பேரழிவு தரக்கூடிய வான்வழி, கடல்வழிப் போரை நடத்தும் அதன் திறனை உயர்த்தியுள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான்மீது தாக்குதலுக்கான நேரம் குறித்துத் தந்திரோபாய வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் இரு நாடுகளும் பலமுறை அனைத்து விருப்பத் தேர்வுகளும் மேசையின்மீது உள்ளன என்று கூறியுள்ளன. இராணுவ நடவடிக்கை குறித்த ஒரு தெளிவான குறிப்பில், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதர் டேனியல் ஷாபிரோ, வியாழன் அன்று வாஷிங்டன் ஒரு மாற்றீட்டு விருப்பத்தேர்வுத் தொகுப்பைத் தயாரித்துள்ளது என்றும் அவற்றுள் ஒன்றை பொருளாதாரத் தடைகள் தோற்றால், இஸ்ரேலுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் என்றார்.

இஸ்ரேலிய அரசியல் மற்றும் இராணுவ ஆளும்தட்டு ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றன. இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி மைக்கேல் ஹெர்ஜோக் பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார்: இஸ்ரேலில் சிலர் இந்த ஆண்டு ஈரான் மீது பெரிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று வாதிடுகின்றனர். ஈரான் அதன்  அணு சக்தித் திட்டத்தைத் தாக்குதலில் இருந்துபாதுகாக்க வேண்டும் என்று செயல்படுகிறது, இது இஸ்ரேலில் அதிக அவகாசம் செயல்படுவதற்கு இல்லை என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் பலமுறையும் தான் அணு சக்திகளை தயாரிக்கும் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலும் அமெரிக்காவும் பலவகை அணுசக்தித் திட்டங்கள் சமதான நோக்க வழிவகைகளுக்கு என்று இருப்பது ஓர் அணுக்குண்டு தயாரிக்க தொடர்புபடுத்தப்படும் திறனைக் கொண்டுள்ளது, எனவே நெறியற்றது என்று அவற்றைக் கருதுகின்றன. இஸ்ரேல் குறிப்பாக ஓர் இரண்டாம், அதிக பாதுகாப்புடைய யுரேனிய செறிவுபடுத்தும் ஆலை ஈரானிய குவோம் நகரத்திற்கு அருகே தொடக்கப்பட்டது குறித்து கவலை கொண்டுள்ளது. இது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் திறனைக் கொண்டிருக்கக்கூடும்.

ஈரான் மீது எந்த இஸ்ரேலிய விமானத் தாக்குதலும் மிகத் தொலைவில் உள்ளது என்று பாதுகாப்பு மந்திரி பாரக், பிரதம மந்திர பென்ஜமின் நேடன்யாகுவுடன் இந்த வாரம் பகிரங்கமாகக் கூறினாலும், கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேலிய மந்திரிசபை கூட்டத்தில் மிக அண்மையில் இஸ்ரேலுக்கு எதிரான வான்வழித் தாக்குதல் வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்தவிவாதம் தெஹ்ரானுடன் ஒரு நிரந்தரப் போர் என்பதைக் குறித்துப் பெரும் எச்சரிக்கை உணர்வடைந்த உளவுத்துறை மற்றும் இராணுவ நடைமுறையின் சில பிரிவுகளால் செய்தி ஊடகத்திற்குக் கசியவிடப்பட்டது. (பார்க்க: “Israeli leaders press for attack on Iran”)

இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதலுக்காக தயாரிக்கிறது என்பதற்கான தெளிவான அடையாளம் ஏற்கனவே அந்நாட்டிற்குள் நடத்தப்படும் மறைமுகமான போர்மூலம் வெளிப்படுகிறது. ஈரானிய அணுச்சக்தி விஞ்ஞானி முஸ்தபா அஹ்மதி ரோஷான் ஜனவரி 11ம் தேதி படுகொலை செய்யப்பட்டது, அமெரிக்க ஒற்று நிறுவனங்களுக்குத் தெரிந்து, ஒருவேளை அவற்றின் தீவிர பங்கைக் கொண்டிருக்கும் மொசாட்டின் தொடர்ச்சியான கொலைகள் நாசச் செயல்கள் ஆகியவற்றின் சமீபத்திய நிகழ்வு ஆகும். அத்தகைய தாக்குதல்கள் ஈரானின் அணு சக்தி திட்டத்தில் சிறு பாதிப்பைத்தான் ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அடிப்படையில் ஈரானை பதிலடி கொடுக்க ஆத்திரமூட்டும்வகையில் வடிவமைக்கப்பட்டவை.

WSWS இடம் சமீபத்தில் பேசிய அரிஜோனா பல்கலைக்கழக வரலாற்றாளர் டேவிட் கிப்ஸ் தெரிவித்த கருத்து: அமெரிக்க உயரடுக்கு ஒரு நீண்டக்கால வன்முறைக் கும்பலைப் போல் சட்டத்திற்குப் புறம்பான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இது இயற்கையிலேயே அமெரிக்கா இச்சமீபத்திய படுகொலையின் பின் உள்ளதா என்ற வினாக்களை எழுப்பியுள்ளது. இதன் முக்கிய விளைவு ஈரானுடனான இராணுவ மோதல் வாய்ப்பை அதிகரிப்பது ஆகும்; இது இஸ்ரேல் அல்லது அமெரிக்காவால் ஏற்படுத்தப்படலாம். இந்தப் படுகொலையை இஸ்ரேலியர்கள் செய்திருந்தால், அவர்களாகக் கூட இருக்கலாம்; ஏனெனில் அதைத்தான் துல்லியமாக அவர்கள் செய்யும் நோக்கம் உடையவர்கள் அழுத்தங்களை அதிகரிக்க, ஈரானுக்கு எதிராக ஒருவேளை இராணுவத் தாக்குதலுக்கு வழிவகை செய்யும் முறையில்.

ஜெனரல் டெம்ப்சே உயர்மட்ட இஸ்ரேலிய இராணுவ மற்றும் அரசியல் உறுப்பினர்களிடம் கொண்டிருந்த விவாதங்கள், ஒரு பாதுகாக்கப்படும் இரகசியமாகத்தான் இருக்கும் என்பது இயல்பே. ஆனால் அமெரிக்காவோ இஸ்ரேலோ பெரும்தன்மையான  நோக்கங்களை கொண்டுள்ளன என்ற நினைப்பு கடைசியாகத்தான் கொள்ளப்பட முடியும். அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு இராணுவப் பயிற்சிகள் ஒத்திப்போடப்பட்டது அழுத்தங்களைக் குறைப்பதற்கு என்று விளக்குபவர்களுக்கு முற்றிலும் மாறாக, இஸ்ரேலிய செய்தித்தாள் Ma’arivபாதுகாப்புத்துறை ஆதாரங்களை மேற்கோளிட்டு இத்தாமதம் பரந்த நடைமுறை கருத்துக்களினால் ஏற்பட்டுள்ளது. இதில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கனத்த பணிகளுக்குத் தயாரிக்கப்பட வேண்டியதும் அடங்கும். என்று தெரிவித்துள்ளது.

இக்கட்டுரை ஒன்றும் முழுச்சான்று இல்லை என்றாலும், மிக வெளிப்படையான கனத்த பணி என்பது ஈரான் மீதான ஒரு இஸ்ரேலியத் தாக்குதல் ஆகும்.