World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Ten NATO troops killed in Afghanistan

ஆப்கானிஸ்தானில் பத்து நேட்டோ துருப்பினர்கள் கொல்லப்பட்டனர்

By Alex Lantier 
21 January 2012
Back to screen version

ஆப்கானிஸ்தானில் இரு தனித்தனி நிகழ்வுகளில் குறைந்பட்சம் 10 நேட்டோ படையினர்களாவது கொல்லப்பட்டுள்ளனர்; ஆறு அமெரிக்க மரைன்களைச் சுமந்து சென்ற ஒரு போக்குவரத்து ஹெலிகாப்டர் வியாழக்கிழமை ஹெல்மாண்டில் தரையில் மோதியபோதும், காபிசா மாநிலத்தில் க்வாம் பயிற்சித்தளத்தில் வெள்ளிக்கிழமையன்று ஆப்கானிய இராணுவச் சிப்பாய் ஒருவர் நான்கு பிரெஞ்சு படையினர்களை கொன்றதும் இந்நிகழ்வுகளாகும். 15 பிரெஞ்சு படையினர்கள் தாக்குதலில் காயமுற்றனர், எட்டுப் பேர் மிக ஆபத்தான நிலைமையில் உள்ளனர்.

ஹெலிகாப்டர் தரையில் மோதியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்; ஆனால் எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கக்கூடும் என்பதை மறுத்தார்இந்த ஹெலிகாப்டர் CH53 Super Stallion போக்குவரத்து ஹெலிகாப்டர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் தாலிபன் செய்தித் தொடர்பாளர் காரி யூசிப் அஹ்மதி CNN இடம் கூறினார்: ஒரு CH-47 சினூக், ஜுபாரி காரெஸ் பகுதியில், மூசா காலாவிற்கும் ஜமீன் தாவருக்கும் இடையே தெற்கு ஹெல்மாண்ட் மாநிலத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது; அதில் பயணித்திருந்த பல வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இது மிக மோசமான விபத்து ஆகும்; அப்பொழுது தாலிபன் படைகள் ஓர் அமெரிக்க ஹெலிகாப்டரை ராக்கெட் செலுத்தி எறிகுண்டுமூலம் தாக்கினர். எட்டு ஆப்கானிய, முப்பது அமெரிக்கத் துருப்புக்கள் என உள்ளே இருந்தவர்கள் கொல்லப்பட்டனர், அதில் 17 கடற்படை சீல் சிறப்புப் படையினரும் இருந்தனர்.

க்வாம் பயிற்சித் தளத்தின் மீது நடந்த தாக்குதல் குறித்து, பிரெஞ்சுப் பாதுகாப்பு மந்திரி Gérard Longuet கூறினார்: தளத்திற்குள் பயிற்சி நடந்து கொண்டிருக்கையில், ஒரு துப்பாக்கியேந்திய சிப்பாய் எங்கள் படையினர்கள் நான்கு பேரை ஒப்புக் கொள்ள முடியாத நிலைமைகளில் சுட்டுப் படுகொலை செய்தார். பிரெஞ்சு படையினர்களிடம் ஆயுதமில்லை; உண்மையான படுகொலையை ஓர் ஆப்கானிய சிப்பாய் செய்துள்ளார். அவர் ஒரு ஊடுருவியுள்ள தாலிபனா அல்லது தானே இந்த முடிவை எடுத்தாரா, எந்தக் காரணங்களுக்காக என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது.

பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஆப்கானிஸ்தானிலிருந்து பிரெஞ்சுப் படைகள் முன்கூட்டியே திரும்பப் பெறுவதை தான் பரிசீலிக்கக் கூடும் என்றார்தற்பொழுது பிரான்ஸ் திரும்பப் பெறுவது 2013 முடிவில் என்று உள்ளது. ஆப்கானியத் துருப்புக்களுக்கு பிரெஞ்சு பயிற்சி அளிப்பதையும் சார்க்கோசி தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.

சோசலிஸ்ட் கட்சியின் 2012 ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரான பிரான்சுவா ஹோலண்ட் பிரெஞ்சுப் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறும் நோக்கத்தை, குறைந்தப்பட்சம் 2012 முடிவிற்குள் என்பதை அறிவித்தார். ஆனால் 2001ல் நேட்டோ தாக்குதல் ஆப்கானிஸ்தான் மீது நடைபெற்றபோது ஹோலண்டின் கட்சிதான் அரசாங்கத்தில் இருந்தது, போரில் பிரெஞ்சு பங்கு பெறுவதற்கு அது ஆதரவையும் கொடுத்திருந்தது.

நேட்டோ அதிகாரிகள் ஆப்கானிஸ்தானில் நேட்டோ ஆக்கிரமிப்புப் படைகள் சர்வதேசப் பாதுகாப்பு உதவிப் படையினர் (ISAF) மற்றும் ஆப்கானிய கைப்பாவை ஆட்சியின் இராணுவத்திற்கும் இடையேயுள்ள அழுத்தங்களை அபத்தமாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயன்றனர். நேட்டோவின் தலைமைச் செயலாளர் ஆண்டர்ஸ் போக் ரஸ்மூசன் இது ஒரு வருந்தத்தக்க தினம் என்று கூறினார்: பின்னர் குவாம் தளத்தில் நடந்த நிகழ்வு போன்றவை தனிமைப்படுத்தப்பட்ட தன்மை உடையவை என்றார்.

ISAF செய்தித் தொடர்பாளர் லெப்னினென்ட் கேர்னல் ஜிம்மி கம்மிங்ஸ் கூறினார்: ஒவ்வொரு நாளும் நாங்கள் ஆப்கானிப் படையினருக்கு பயிற்சி அளிக்கிறோம், அவர்களுடன் பங்கு கொள்கிறோம், ஆனால் எங்கள் உறவுகளில் எத்தகைய பிரச்சினைகளோ, கவலைகளோ இருந்ததில்லை.

உண்மையில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு இருக்கும் ஆழ்ந்த மக்கள் எதிர்ப்பு நேட்டோவிற்கும் அதன் ஆப்கானிய கைப்பாவைகளுக்கும் இடையே உள்ள உறவுகளில் பன்முக முறிவின் மூலம் பிரதிபலிப்பாகிறது. ஆப்கானிய படைகள் உண்மையில் நேட்டோ படையினர்களை தாக்கிய பல நிகழ்வுகளுக்கு அப்பால் இது செல்கிறது. அமெரிக்காவானது பாக்கிஸ்தானிய இராணுவப் புறச்சாவடி ஒன்றைத் தாக்கியதற்குப் பின் ஏற்பட்ட வெகுஜனச் சீற்றத்தை அடுத்து பாக்கிஸ்தான் கடந்த நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானிற்கு பாக்கிஸ்தான் மூலம் வரும் நேட்டோ பொருள் விநியோகப் பாதைகளை மூடியது; அதற்குப் பின்னர் சமீபத்திய தாக்குதல் நேட்டோவின் மத்திய ஆசியாவில் உள்ளூர் பதிலி வலையமைப்புகள் வன்முறைத் தகர்ப்பு என்னும் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது.

நேட்டோ-ஆப்கானிய இராணுவ உறவுகளை விபரிக்கையில், ஓர் ஆப்கானிய இராணுவக் கேர்னல் நேற்று நியூ யோர்க் டைம்ஸிடம் வெறுப்புணர்வு விரைவாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்றார். ஆப்கானிய துருப்புக்கள் திருடர்கள், பொய்யர்கள் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமைகள், என அமெரிக்கத் துருப்புக்கள் இழிவான சொற்களை பயன்படுத்தும் நயமற்ற, திமிர்பிடித்த மிரட்டுபவர்கள் என்றும் அவர் கூறினார். நேட்டோவிற்கும் ஆப்கானியத் துருப்புக்களுக்கும் இடையே உள்ள அழுத்தங்கள் மிக வருங்காலத்தின் இரு இராணுவங்களிலும் உள்ள அடிமட்ட படையினர்களிடையே பெரிய பிரச்சினையாக மாறலாம் என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

மே 2011 ஆண்டு, அமெரிக்க இராணுவ அறிக்கை ஒன்று, நம்பிக்கை குறித்த நெருக்கடியும் கலாச்சார இயைபு இல்லாமையும் என்ற தலைப்பில் 613 ஆப்கானியத் துருப்பினர், 30 மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் 215 அமெரிக்க படையினர்கள் மீது நடுத்தப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை வெளியிடுவதற்கு பத்து மாதங்களுக்கு முன்பு ஆப்கானியத் துருப்புக்கள் நேட்டோத் துருப்பினரைச் சுட்டு 39 பேர் இறந்த 15 நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளது. இது அதே காலத்தில் ஆப்கானிஸ்தானில் சிறு அளவிலான குண்டுத் தாக்குதல்களில் மடிந்த நேட்டோத் துருப்புக்களில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

ஆப்கானிய மற்றும் அமெரிக்கத் துருப்புக்களுக்கும் இடையே உயிராபத்து கொடுக்கும் மோதல்கள் மிக அபூர்வம் அல்லது தனிமைப்பட்டவை என்று இல்லை என்பது தெளிவு; இவை விரைவில் ஒழுங்குமுறையில் பெருகும் கொலை செய்யும் அச்சுறுத்தலைப் பிரதிபலிக்கின்றன (இதன் அளவு தற்கால இராணுவ வரலாற்றில் நட்பு அமைப்புக்களுக்கு இடையே ஏற்பட்டிருப்பதில் முன்னோடியில்லாத  வகையில் இருக்கும்) என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. உத்தியோகபூர்வ கூற்றுக்களான ஆப்கானிய படைகளுக்கும் ISAF படைகளுக்கும் இடையே நடக்கும் கொலை நிகழ்வுகள் தனிமைப்பட்டவை, மிக அபூர்வமானவை என்பதை கபடமானவை, இல்லாவிடின் ஆழ்ந்த அறிவார்ந்த நேர்மையற்ற தன்மை எனலாம் என்று விளக்குகிறது.

அமெரிக்கத் துருப்புக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடுகையில், பிற ஆப்கானிய துருப்பினர் அவர்களைக் கைப்பற்ற அபூர்வமாகத்தான் உதவுகின்றர் என்பது குறித்த அமெரிக்கக் கவலைகளையும் அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.

அறிக்கையின் பொருளுரை, ஆப்கானிய மற்றும் அமெரிக்க படையினர்களின் ஒருவரைப் பற்றி ஒருவர் கொடுக்கும் புகார்களை விவாதிப்பது, நேட்டோவின் ஆப்கானிய ஆக்கிரமிப்பு குறித்து அதன் இழிந்த நிலையைச் சித்தரிக்கிறது. ஆப்கானிய படையினர்களின் புகார்கள் அடிப்படையில் அமெரிக்கப் படைகளின் ஆப்கானியக் குடிமக்களைக் காட்டுமிராண்டித்தனமாக நடத்துவது குறித்தும், குடிமக்கள் முன்பு அமெரிக்கத் துருப்புக்கள் இவர்களைத் தாழ்ந்தவர்கள் போல் நடத்துவது குறித்து ஏற்படும் சங்கடங்களையும் பிரதிபலிக்கிறது.

அமெரிக்கத் துருப்புக்கள் குறித்த கீழ்க்கண்ட ஆப்கானியப் புகார்களை அறிக்கை மேற்கோளிட்டுள்ளது: அமெரிக்க வாகன வரிசைகள் மற்ற போக்குவரத்து வாகனங்கள் அவற்றைக் கடக்க அனுமதிப்பதில்லை, பொறுப்பற்ற முறையில் அமெரிக்க துப்பாக்கிச் சூடுகளை நடத்தி குடிமக்கள் இறப்பை ஏற்படுத்துகின்றனர், தவறான உளவுத்துறை அதிகாரங்களை அப்படியே நம்பிப் பயன்படுத்துதல், இரவு நேரத்தாக்குதல்கள்/வீடுகள் சோதனைகள், அவற்றின்போது பெண்கள் அந்தரங்கங்களை மீறுதல், அவர்களுடைய சாலைத் தடுப்புக்கள், பகிரங்கமாக ஆப்கானிய பாதுகாப்புப் படையினரை சோதனையிடல்/ஆயுதங்களைக் களைதல் ஆகியவற்றை முந்தையவர் தளங்களில் நுழையும்போது வாடிக்கையாகச் செய்தல், அமெரிக்கத் துருப்புக்கள் கடந்த காலத்தில் குடிமக்களைப் படுகொலை செய்தவை என.

அறிக்கையின்படி, இத்தகைய நடவடிக்கைகள் பல நேரமும் நேட்டோ மற்றும் ஆப்கானியத் துருப்புக்களுக்கும் இடையே மோதல்களை ஏற்படுத்துகின்றன, அதில் ஆப்கானியத் துருப்புக்கள் சுடுவதாக அச்சறுத்தலும் அடங்கும். அமெரிக்க படையினர்கள் பொதுவாக ஆப்கானியத் துருப்புக்களால் வெறுக்கப்படுகின்றனர் என்பதையும் அறிக்கை கண்டுள்ளது.

அமெரிக்கத் துருப்புக்கள் தேவையின்றி பண்ணை விலங்குகளைக் கொல்கின்றனர், பொது இடங்களில் (ஆப்கானியக் குடிநீர் அளிக்கும் இடங்கள், பெண்கள் முன்னிலையில்) சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல், ஆப்கானியக் குடிமக்கள் முன்பு ஆப்கானிய படையினர்களை அவமானப்படுத்துதல், பல நேரமும் ஆப்கானிய படையினர்களை தாயைப் புணர்பவர்கள் என்று குறித்தல் ஆகியவை குறித்தும் ஆப்கானிய படையினர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

ஆப்கானிய துருப்புக்கள் குறித்த நேட்டோ படையினரின் புகார்கள் ஆப்கானிய துருப்பினரிடையே போருக்குப் பரந்த எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது; அதே போல் ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சியின் ஆழ்ந்த குற்றம் சார்ந்ததன்மைக்கும் பரந்த எதிர்ப்பு உள்ளது.

ஆப்கானிய படையினர்கள் செய்தியாளர்களிடம் அல்லது நேட்டோ துருப்பினரிடமே தாலிபன் வெற்றி பெறும் என்பது தெளிவானால் தாங்கள் கட்சி மாறிவிடுவோம் என்று வெளிப்படையாகவே கூறுகின்றனர் என அமெரிக்க படையினர்கள் புகார் கொடுத்துள்ளனர். ஆப்கானிய கைப்பாவை அரசாங்கத்தால் அதிக அளிப்புக்களைப் பெறாத ஆப்கானிய துருப்பினர் பல நேரமும் அமெரிக்கப் பொருட்களை எடுத்துக் கொள்கின்றனர் என்றும் புகார் உள்ளது.

தாலிபனுக்கு எதிராக நேட்டோவுடன் ஒத்துழைக்கும் ஆப்கானிய தலைவர்கள் பெரும்பாலும் 1980களில் சோவியத் ஆதரவு கொண்ட அரசாங்கத்திற்கு எதிராக அமைக்கப்பட்ட அமெரிக்க ஆதரவு கொண்ட போர்ப் பிரபுக்கள் அடுக்கிலிருந்து வருபவர்கள். இவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைக்கும் நிதியில் இருந்து பணம் கொடுக்கப்படுகிறது. நேட்டோ ஆக்கிரமித்துள்ள ஆப்கானிஸ்தான் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உலகிற்கு அபின் வழங்குவதில் முக்கியமாக இருக்கும் பகுதியாகும். அமெரிக்கத் துருப்புக்கள் ஆப்கானிய படையினர்களின் பரந்த போதை அடிமைத்தனம் குறித்துப் புகார் கூறியுள்ளனர்; இந்த ஆய்வு ஆப்கானியத் துருப்புக்களில் 74 சதவிகிதத்தினர் ஹசிஷிற்கு அடிமைப்பட்டுள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளது; இதைவிடச் சற்று குறைந்த சதவிகிதத்தினர் ஹெரோயினுக்கு அடிமைப்பட்டுள்ளனர்.

அமெரிக்க படையினர்கள் இப்பிரச்சினையை எழுப்பவில்லை என்றாலும், அறிக்கை கனேடியத் துருப்புக்கள் கலாச்சார வழக்கமான பச்சாபாசி [சிறுவர்களை பாலியல் அடிமைகள் என போர்ப்பிரபுக்களுக்கு விற்றல்], மற்றும் சிறுவர்களை பாலியல் பலாத்காரம், தவறான பாலியல் உறவு கொள்ளுதல் ஆகியவற்றை குறித்த புகார்களையும் குறிப்பிட்டுள்ளது. ஆப்கானிய குடிமக்கள் ஆப்கானிய படையினர்களைவிட எழுச்சியாளர்களை விரும்புவதற்கு ஒரு காரணம் ஆப்கானிய  படையினர்கள் சோதனைச் சாவடிகளில் சிறுவர்களைப் பற்றியிழுத்து அவர்களைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவதாகும் என்று அறிக்கை சேர்த்துக் கொண்டுள்ளது.

நேட்டோ ஆக்கிரமிப்பாளர்கள் நிறுவியுள்ள ஆப்கானிய அரசாங்க நிறுவனங்கள் முறையாக அமைக்கப்பட்டுள்ள குற்றம் இழைக்கும் கும்பல்களில் இருந்து அதிக வேறுபாட்டைக் கொண்டிருக்கவில்லை ..... பொறுப்பேற்றல் என்பது கேள்விப்படாத ஒன்றாக உள்ளது.