WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
French “social summit” prepares attack on social security
பிரெஞ்சு "சமூக
உச்சிமாநாடு" சமூகப் பாதுகாப்பின் மீதான தாக்குதலுக்கு தயாரிப்பு நடத்துகிறது
By Francis Dubois
19 January 2012
டிசம்பர் 31ம் திகதி, பிரெஞ்சு ஜனாதிபதி
நிக்கோலா சார்க்கோசி தன்னுடைய 2012 புத்தாண்டு வாழ்த்துக்களை
நாட்டிற்கு அளிக்கும் வாய்ப்பை புதிய விற்பனை வரியை,
“சமூக
VAT
(மதிப்புக் கூட்டப்பட்ட வரி அல்லது விற்பனைவரி)
அறிமுகப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொண்டார். இதையொட்டி,
சமூகப் பாதுகாப்பு முறைக்கு முதலாளிகள் கொடுக்க வேண்டிய
பங்களிப்புப் பணம், நிதி ஆகியவற்றை இது தீவிரமாகக்
குறைப்பதுடன் (ஒரு புள்ளி விவரம் 5.4 சதவிகிதம்) என்று
கூறுகிறது: அதற்குப்பதிலாக
VAT
விற்பனை வரியில் சமமான அதிகரிப்பும் ஏற்படும்.
இது சமூகநலச் செலவுகளின் சுமையை தொழிலாளர்களின்
முதுகுகளில் ஏற்றுவதுடன், அவ்வகையில் பெரும் அதிருப்தியையும்
ஏற்படுத்தும்.
இதுதான் நேற்று அரசாங்கம், வணிகப் பிரதிநிதிகள்
மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளுக்கு இடையே நடந்த ‘சமூக
உச்சிமாநாடு ‘பேச்சுக்களில் பரிசீலனைக்குரிய முக்கிய
நடவடிக்கையாயிற்று. தன் செல்வாக்கற்ற தன்மையினால் இது
உச்சிமாநாட்டில் முறையாக ஒப்புக்கொள்ளப்படவில்லை; ஆனால்
சார்க்கோசி மாத இறுதிக்குள் இது பற்றிய அறிவிப்பைத் தான்
வெளியிடுவதாகக் கூறினார்.
ஆனால் உச்சிமாநாடு
“குறுகிய
மணிநேர வேலைகளுக்கு”
(“பகுதியான
வேலையின்மை”)
தொழிலாளர்களை வற்பறுத்தும் நிறுவனங்களின் தகைமை மீது உள்ள
வரம்புகளை அகற்றுவதாக உடன்பாட்டை அறிவித்துள்ளது. வேலை
ஆய்வாளர்கள் தொழிலாளர்களை குறுகிய மணிநேர வேலையில் இருத்தும்
வேண்டுகோளை மறுப்பதற்கு 20ல் இருந்து 10 நாட்களுக்குள் முடிக்க
வேண்டும் என்பதை உச்சிமாநாடு ஒப்புக் கொண்டது; இந்த நேரத்
தாமதம்
“ஒரு
முக்கிய அல்லது திடீரென நிறுவனத்தின் செயல் சரிந்தால்’
முற்றிலும் அகற்றப்படலாம்.
இத்தகைய உடன்பாடுகள் இந்த உச்சிமாநாடுகளிலுள்ள
ஆழ்ந்த தொழிலாள வர்க்க விரோதத் தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக்
காட்டுகிறது.
அரசாங்கம் இழிந்த வகையில்
“சமூக
VAT”
ஐ,
“வேலைகளைத்
தோற்றுவித்தல்”,
“பிரான்ஸில்
நிறுவனங்களைத் தக்க வைத்துக் கொள்ளுதல்”
என்னும் வழிவகைகளிற்காக அறிமுகப்படுத்திதயுள்ளது. இதைத் தவிர,
அது
“கடல்
கடந்த நடவடிக்கைகளுக்கு-எதிர்ப்பு”
என்பதற்கும் அழைப்பு விடுத்துள்ளது என
அழைக்கப்பட்டாலும், உண்மையில் இது ஊதியங்களை பெரும் முறையில்
தாக்குவதற்கும், தொழிலாளர்களின் சமூக உரிமைகளை நேரடியாகத்
தாக்கும் நடவடிக்கைதான்.
“சமூக
VAT”
திட்டம் இரு மட்டங்களில் செயற்படுகிறது: பொதுவாகச் சமூகப்
பாதுகாப்பிற்கு முதலாளிகள் கட்டாயமாகச் செலுத்த வேண்டிய
நிதியைக் குறைப்பதுடன், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்
மீதும் திறமையுடன் வரிகளை விதிக்கிறது. முதலாளிகளின் அமைப்பான
Medef
நடத்திய ஆய்வு ஒன்று, பைனான்சியல் டைம்ஸில் மேற்கோளிடப்பட்டது,
“ஊதியங்களில்
சமூகப் பாதுகாப்பிற்காகக் கொடுக்க வேண்டிய பணத்தின் குறைப்பு
30 மில்லியன் யூரோக்கள் என்பது
VAT
ல் 22 சதவிகிதத்தை உறுதியாக அதிகரிக்கும் என்பதோடு, மற்ற
வரிகள் மீதும் துணை அதிகரிப்பு குறைந்த தன்மையில்
மேற்கொள்ளப்படும் என்னும் நிலையைத்தான் தருகிறது. இந்த ஆய்வு
70 மில்லியன் யூரோக்கள் குறைப்பு என்பது சமூக அளிப்புக்களை
ஜேர்மனியிலுள்ள நிலைமையுடன் சமமாக இருப்பதற்கு தேவைப்படும்
என்று காட்டுகிறது. இதையொட்டி
VAT
ல் 25 சதவிகிதம் தீவிர உயர்வு ஏற்படும், ஐரோப்பாவில்
அங்கீகரிக்கப்பட்ட மிக அதிக அளவு இதுதான்.”
சமூக
VAT
என்பது ஒரு பாதுகாப்புவாதத்தை ஒட்டிய நடவடிக்கை ஆகும்;
பிரெஞ்சு நிறுவனங்களின்
இலாப விகிதத்தை அதிகரித்து அவற்றின் போட்டித் தன்மையை
வெளிநாட்டுப் போட்டியாளர்களுக்கு எதிராக முன்னேற்றுவிக்கும்
வடிவமைப்பை கொண்டது. உலகில் பிரெஞ்சுப் பொருட்களின்
போட்டித்தன்மை இழப்பதை எதிர்கொள்ளும் முறையில் முதலாளித்துவம்
கடுமையான, பொதுக் குறைப்பை தொழிலாளர் மணிநேரம்
மீதான செலவினங்களில் சுமத்த விரும்புகிறது.
வோல் ஸ்ட்ரீட்
ஜேர்னல்
ஜனவரி 3ம் திகதி எழுதியது:
“சீனாவின்
தொழிலாளர்கள் மீதான செலவுகள் நிலைப்பாட்டை பிரான்ஸ்
அணுகமுடியாததால் சமூக
VAT
என்பது யூரோப் பகுதி அண்டை நாடுகளின் நிலைமை மீது பிரான்ஸ்
போட்டித்தன்மை உடைய தாக்குதல் கொண்டுள்ளது என
ஒப்பிடத்தக்கது... இந்த நடவடிக்கை நாணய மதிப்புக் குறைவிற்கு
ஒப்பானது ஆகும்; ஏனெனில் இது திறமையுடன் இறக்குமதி
செய்யப்படும் பொருட்கள் மீதான விலையை அதிகரிப்பதுடன்,
ஏற்றுமதிப் பொருட்களின் விலைகளையும் குறைக்கும்.”
சமூகப் பாதுகாப்பிற்கான நிதியளிப்பதை
முதலாளிகளிடம் இருந்து
VAT
ற்கு மாற்றிய வகையில், முதலாளித்துவமானது
உழைக்கும் மக்கள்,
வேலையில்லாதவர்கள், ஓய்வு பெற்ற தொழிலாளிகள் இச்செலவை
மேற்கொள்ளுமாறு தயாரிப்புக்களை நடத்துகிறது. இரண்டாம் உலகப்
போரின் முடிவில் இருந்து சமூகச் செலவுகள் கூட்டாக முதலாளிகள்
மற்றும் தொழிலாளர்களால் நிதியளிக்கப்பட்டு வந்தது. மிகச்
சாதாரண வருமானம் உடைய தொழிலாளர்கள் வாங்கும் பொருட்கள் மீது
வரிவிதிக்கும்
VAT
அந்த வருமானங்களில் சமமான மற்றும் கூடுதலான
குறைப்புக்களைத்தான் அடையாளம்காட்டுகிறது.
இத்தகைய குறைந்த ஊதியங்கள், வேலைப்பாதுகாப்பு
அற்ற நிலைமையில் நுகர்வு வரிகள் மூலம் அரசாங்க நிதியைப்
பெருக்குவது பெரும் சமூகநலச் செலவுக் குறைப்புக்களுக்கு
வழிவகுக்கும்—எல்லாவற்றிற்கும்
மேலாக, சுகாதாரப் பராமரிப்பு, ஓய்வூதியக் காப்பீடு மற்றும்
வயதான காலத்தில் நம்பியுள்ள காப்பீடு ஆகியவற்றில்.
சமூகப்பாதுகாப்பு முறை முழுவதுமே குறைமதிப்பிற்கு
உட்படுத்தப்படுகிறது.
இந்நடவடிக்கைக்கான முதலாளித்துவ
“இடது”
கட்சிகளின்
எதிர்வினையானது
தொழிலாளர்கள் அவற்றிடமிருந்து தாங்கள் உதவி பெற
எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதைத்தான் காட்டுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சோசலிஸ்ட் கட்சி இதுவரை
சுமத்தப்பட்டுள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைகளைவிட அதிகமாக
தளமாகக் கொள்ள விரும்பி அரைமனத்துடன் இந்நடவடிக்கையைக்
குறைகூறியுள்ளது.
சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான
பிரான்சுவா ஹோலண்ட்
“இது
ஒரு மோசமான வரி, பொருளாதார வளர்ச்சியைத் தண்டிக்கும்”
என்று கூறினார். ஹோலண்ட் அல்லது
PS
ன் அரசியல் நம்பிக்கைகளை எந்த விதத்திலும்
ஒத்திருக்காத இந்த இழிந்த குறைகூறல், சார்க்கோசிக்கு எதிரான
எளிய தேர்தல் கணக்கீடுகளினால் ஆணையிடப்படுகிறது.
PS
ஒரு
“சமூக
VAT”
ற்கு எதிராக இல்லை. உண்மையில் தற்பொழுது ஹோலண்டின் ஜனாதிபதிப்
பிரச்சாரத்தில் பொது உறவிற்குப் பொறுப்பாக இருக்கும் ஒரு
முக்கிய
PS
அதிகாரி, கடந்த ஆண்டு
PS
துவக்கத் தேர்தல்களின்போது,
“தீர்வு
சமூக
VAT
தான்”
என்று அறிவித்தார்.
PS
கட்சியே இறக்குமதிகள் மீது ஒரு
“சுற்றுச்
சூழல்”வரியைச்
சுமத்தும் திட்டத்தை முன்வைத்துள்ளது.
பொதுத்தொழிலாளர் கூட்டமைப்பு
தொழிற்சங்கம் (CGT)
தன்னுடைய பங்கிற்கு சமூக
VAT
இற்கு
கடுமையான எதிர்ப்புடையதாகக் காட்டி வருகிறது.
CGT
யின் பொதுச் செயலாளர் பேர்னார்ட் தீபோ சமூக
VAT
திட்டம்
“புதிய
ஆண்டின் மிகப் பெரிய நம்பிக்கையூட்டும் தந்திரம் ஆகும்”
என்று அறிவித்துள்ளார்.
இத்தகைய அறிவிப்புக்களுக்கு ஒரே காரணம்
பிரெஞ்சு முதலாளிகளின் போட்டித்தன்மையை வலியுறுத்துவதற்கு
அரசாங்கத்துடன் வழிவகைகளின் உண்மையான நோக்கம் குறித்துப்
பேசுவதை மறைத்தல் என்பதுதான்.
CGT
பரந்த வகையில் சமூக வெட்டுக்களுக்குப் பேச்சுக்கள்
நடத்தியிருப்பதால், குறிப்பாக 2010 ஓய்வூதியக் குறைப்பை, அதே
நேரத்தில் முதலாளிகளுடன் பன்முக தொழிலாளர்-விரோத
நடவடிக்கைகளைப் பற்றிய புரிந்துணர்தலை அடைவதற்கு தயாரிப்பைக்
கொண்டிருப்பதால் அத்தகைய அறிவிப்புக்கள் நம்பகத்தன்மை உடையவை
அல்ல.
மற்ற தொழிற்சங்க அதிகாரத்துவங்களைப் போல்
தானும் முதலாளிகளின்
“சமூகப்
பங்காளி”
என்னும் முறையில் வருவாய்களை இழக்கக்கூடும் என்று
CGT
அஞ்சுகிறது. அதையொட்டி சமூகநலச் செலவுகளுக்கு
வணிகம் நிதியளிப்பு குறித்துக் கண்காணிக்கிறது என்றும் ஓரளவு
இருப்பதால், அது தன்னுடைய நலன்களைக் காக்காவிட்டால், தற்போதைய
சமூகச் செலவுகளின் பேச்சுக்களில் முற்றிலும் அதிகாரத்துவ
நலன்களைக் காக்காவிட்டால் வருவாய் இழப்புக்கள் ஏற்படும் என்பதை
அறிந்துள்ளது. |