WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
SOPA, PIPA
மற்றும்
இணைய
சுதந்திரம்
Andre Damon
19 January 2012
use this version to print | Send
feedback
அமெரிக்க
நாடாளுமன்றத்தில்
தற்போது
ஆலோசித்து
வரப்படுகின்ற
இணையத்
தணிக்கை
குறித்த
இரண்டு
மசோதாக்களுக்கு
எதிராக
மில்லியன்கணக்கான
மக்கள்
புதனன்று
இணையத்தில்
தமது
கையொப்பங்களைப்
பதிவு
செய்தனர்.
ஆயிரக்கணக்கான
வலைத்தளங்கள்
விடுத்திருந்த
அழைப்பின்
பேரில்
இந்த
புகாரளிப்புகள்
நடந்தன.
இவற்றில்
விக்கிபீடியா
மற்றும்
ரெடிட்
உள்ளிட்ட
சில
வலைத்தளங்கள்
எதிர்ப்பை
வெளிப்படுத்தும்
முகமாக
ஒருநாள்
வலைத்தளங்களை மூடிவிட்டன.
இந்த
எதிர்ப்புகளும்
புகார்களும்
அமெரிக்க
பிரதிநிதிகள்
சபையில்
ஆலோசனைக்கு
வைக்கப்பட்டிருக்கும்
இணையவழித்
திருட்டை தடுக்கும்
சட்டம்
(SOPA)
மற்றும்
செனட்டில்
முன்வைக்கப்பட்டிருக்கும்
அதன்
சக
சட்டமான
ஐபி
பாதுகாப்பு
சட்டம்
(Preventing Real Online Threats to
Economic Creativity and Theft of Intellectual Property Act-
PIPA)
ஆகியவற்றை
இலக்கு
வைத்து
நடத்தப்பட்டன.
இந்தச்
சட்ட
நடவடிக்கைகளின்
உடனடி
இலக்காக
அறிவுசார்
சொத்துச்
சட்டங்களை
மீறுபவர்கள்
இருப்பார்கள்.
இச்சட்டங்கள்
திரைப்பட
மற்றும்
இசைத்தட்டு
தயாரிப்பாளர்களால்
பெருத்த
ஆதரவளிக்கப்படுகின்றன.
ஆயினும்
இணையத்தைக்
கட்டுப்படுத்துவதற்கு
அமெரிக்க
அரசாங்கத்திற்கு
இருக்கும்
அதிகாரத்தை
கணிசமாக
விரிவுபடுத்துவதற்கான
ஒரு
போலி
சட்டப்பூர்வமான
மற்றும்
தொழில்நுட்ப
இயங்குபொறியை
உருவாக்குவதற்கு
அமெரிக்க
ஆளும்
வர்க்கம்
கொண்டிருக்கும்
விருப்பம்
தான்
இந்தச்
சட்டங்களுக்குப்
பின்னாலிருக்கும்
மிக
அடிப்படையான
உந்துசக்தியாக
இருக்கிறது.
அவை
அமல்படுத்தப்பட்டால்
இறுதியாய்
என்ன
வடிவம்
எடுக்கலாம்
என்பது
இன்னும்
தீர்மானம்
பெறவில்லை
என்கிற
அதேவேளையில்,
ஒட்டுமொத்த
களப்பெயர்களுக்கும்
(domain)
அணுகலை
நிறுத்தி
விடத்தக்க
ஒரு
நீதிமன்ற
ஆணையைக்
கோரும்
அதிகாரத்தை
SOPA
மற்றும்
PIPA
அமெரிக்க
சட்டமா
அதிபருக்கு வழங்கும்.
பிரச்சினைக்குள்ளாகி
இருக்கும்
வலைத்தளத்திற்குச்
செல்லும்
இணைப்புகளை
நீக்குவதற்கு
தேடல்
பொறிகளும்
மற்ற
பிற
வலைத்தளங்களும்
கோரப்படும்,
அத்துடன்
பேபால்-PayPal-
போன்ற
நிறுவனங்கள்
நிதிவளங்களையும் துண்டிக்கும்.
இவ்வாறாக,
குறி
வைக்கப்பட்ட
வலைத்தளங்களுக்கு
இறுதியில்
மேல்முறையீட்டுக்கான
அடித்தளமே
அற்றுப்
போகும்,
அதாவது
எந்த
பொருத்தமான
விசாரணை
இன்றி
அவற்றுக்கு
அடிப்படை
பேச்சுரிமைகள்
என்பது
மறுக்கப்படும்.
கூகுள்,
ஃபேஸ்புக்
மற்றும்
ட்விட்டர்
போன்ற
பல
மில்லியன்
டாலர்
தொழில்நுட்ப
பெருநிறுவனங்கள்
உள்ளிட
கணிசமான
பெருநிறுவன
நலன்கள்
இச்சட்டங்களின்
நடப்பு
வடிவத்திற்கு
எதிராக
அணிதிரண்டுள்ளன.
”இந்த
மசோதாக்களின்
அறிவிக்கப்பட்ட
இலக்குகளுக்கு,
அதாவது
‘போக்கிலித்தனமான’
வலைத்தளங்களை
எதிர்கொள்வதற்கான
கூடுதல்
செயலாக்கக்
கருவிகளை
வழங்குவதற்கு”
தங்களது
ஆதரவை
பெருநிறுவனங்களில்
பலவும்
நாடாளுமன்றத்திற்கு
எழுதிய
கடிதத்தில்
வலியுறுத்தியுள்ளன.
ஆயினும்,
”உள்ள
வடிவத்தில்
இந்த
மசோதாக்கள்
சட்டத்திற்கு
இணங்கிச்
செயல்படும்
அமெரிக்க
இணைய
மற்றும்
தொழில்நுட்ப
நிறுவனங்களை
வலைத்தளங்களைக்
கண்காணிப்பதை
அவசியமாக்குகிற
புதிய
நிச்சயமற்ற
பொறுப்புகளுக்கும்,
தனியார்
உரிமை
வழக்குகளுக்கும்,
மற்றும்
தொழில்நுட்ப
உத்தரவுகளுக்கும்
இலக்காக்கும்”
என்று
அவை
மேலும்
தெரிவித்தன.
ஏராளமான
செனட்டர்கள்,
பிரதானமாக
குடியரசுக்
கட்சியினர்,
மசோதாவுக்கான
தங்களது
முந்தையை
ஆதரவு
நிலைப்பாட்டில்
இருந்து
புதனன்று
பகிரங்கமாக
பின்வாங்கியதின்
மூலம்
இந்த
நடவடிக்கைகளுக்கு தமது பிரதிபலிப்பை காட்டினர்.
மசோதாவின்
பெருநிறுவன
விமர்சகர்களில்
சிலரைச்
சமாதானப்படுத்தும்
வேலைகளை
முயலும்
பொருட்டு,
ஜனவரி
24
அன்று
செனட்டில்
நடத்தப்படவிருந்த
வாக்கெடுப்பு
தள்ளிப்
போடப்படலாம்.
SOPA
மற்றும்
PIPA
வரைவு
செய்தமை
முழுக்க
இருகட்சி
விவகாரமாகவே
இருந்து
வந்திருக்கிறது.
ஜனநாயகக்
கட்சியின்
கட்டுப்பாட்டில்
இருக்கும்
செனட்டில்,
ஜனநாயகக்
கட்சி
செனட்டரான
பாட்ரிக்
லீஹியால்
PIPA
அறிமுகம்
செய்யப்பட்டது.
இந்த
விவகாரம்
தொடர்பான
வாக்கெடுப்பை
தாமதப்படுத்துவதற்கு
எதிராக
செனட்
பெரும்பான்மைத்
தலைவரான
ஹாரி
ரெய்டு
பரப்புரை
செய்திருக்கிறார்.
ஒபாமா
நிர்வாகம்,
தனது
பங்கிற்கு,
ஒருபக்கம்
இணைய
சுதந்திரத்திற்கான
ஆதரவாளராகத்
தன்னைக்
காட்டிக்
கொண்டே,
SOPA
மற்றும்
PIPA
சட்டங்களின்
அடிப்படை
ஷரத்துகளுக்கான
தனது
உறுதிப்பாட்டை
இந்த
வாரத்தில்
மீண்டும்
உறுதிப்படுத்தியது.
“அமெரிக்க
எல்லைகளைக்
கடந்து
நடக்கும்
இணையவழித்
திருட்டை
எதிர்த்துப்
போராட
புதிய
சட்டக்
கருவிகளை
வழக்குதாரர்களுக்கும்
உரிமை
படைத்தவர்களுக்கும்
வழங்கக்
கூடிய
வலிமையான
சட்டத்தை
இந்த
ஆண்டில்
நிறைவேற்றுவதற்கு”
அது
உறுதிபூண்டது.
உடனடி
விளைவு
என்னவாக
இருந்தாலும்,
அமெரிக்க
ஆளும்
வர்க்கம்
இந்த
பகிரங்கமான தகவல்
பரிவர்த்தனைகளையும்
இணையவழி
தகவல்
பரவலையும்
ஒரு
பாரிய
அச்சுறுத்தலாய்க்
காண்கிறது. அத்துடன்
இணையத்தின்
மீது
மிகப்பெரும்
கட்டுப்பாட்டை
ஸ்தாபிப்பதைச்
செலுத்துவதற்கு
அது
ஆழமான
உறுதிப்பாடு
கொண்டுள்ளது.
பதிப்புரிமைச்
சட்டங்களை
மீறுவதாக
சந்தேகப்படுபவர்களுக்கு
சேவைகளை
முனைந்து
துண்டிக்கிற
இணையத்தளங்களை நிர்வகிக்கும்-
web hosting-
நிறுவனங்கள்,
நிதிப்
பரிவர்த்தனை
சேவையளிப்பு
நிறுவனங்கள்,
மற்றும்
பிற
பெருநிறுவனங்களுக்கு
சட்டப்பூர்வ
பாதுகாப்பை
வழங்குவது
இந்த
மசோதாக்களின்
மிக
முக்கியமான
கூறுகளில்
ஒன்றாய்
இருக்கிறது.
சென்ற
வருடத்தில்
விக்கிலீக்ஸ்
அமெரிக்க
அரசாங்கத்தின்
குற்றவியல்
தன்மையை
ஆவணப்படுத்தும்
வகையில்
அரசாங்க
இரகசிய
ஆவணங்களை
வெளியிட்ட
பிறகு,
அந்த
அமைப்புக்கு
எதிராகத்
தொடுக்கப்பட்ட
பரப்புரையின்
எழுத்துவடிவத்தையே
இது
சாரத்தில்
அடக்கியிருக்கிறது.
ஒபாமா
நிர்வாகத்தின்
நெருக்குதலின்
கீழ்,
அமேசன்
-Amazon
-மற்றும்
பேபால்
-Paypal-
ஆகியவை
அந்த
தகவல்
வெளியிடும் நிறுவனத்திற்கு
தமது
சேவைகளைத்
தானாக
துண்டித்துக்
கொண்டன.
அதன்
நிறுவனர்
ஜூலியன்
அசாஞ்சே
மீது
விசாரணை,
பிராட்லி
மேனிங்
மீது
இராணுவ
விசாரணை
உட்பட
விக்கிலீக்ஸ்க்கு
எதிரான
அரசாங்கத்தின்
முழுமூச்சான
பிரச்சாரத்தின்
பகுதியாக
அது
அமைந்திருந்தது.
SOPA
மற்றும்
PIPA
சட்டங்களுக்கு
அநேக
தொழில்நுட்ப
நிறுவனங்கள்
காட்டும்
எதிர்ப்பில்
இருக்கும்
கோட்பாடற்ற
தன்மையை
அடிக்கோடிடுவதாகவே,
அமேசன்
மற்றும்
பேபால்
நிறுவனங்கள்
இச்சட்டத்தில்
திருத்தங்கள்
கோரும்
அழைப்புகளில்
கையெழுத்திட்டுள்ளன.
சென்ற
வருடத்தில்,
வெகுஜன
எதிர்ப்புகளைத்
தூண்டி
விடுவதில்
இணையம்
பயன்படுவதை
இல்லாதொழிப்பதை
நோக்கமாகக்
கொண்டு
பல
மாநிலங்கள்
பல
நடவடிக்கைகளில்
இறங்கக்
காண
முடிந்தது.
ஜனவரி
மாதத்தில்,
எகிப்தில்
ஹோஸ்னி
முபாரக்கின்
அமெரிக்க
ஆதரவு
பெற்ற
ஆட்சி
அது
அதிகாரத்தில்
இருந்து
வீழ்வதற்கு
சற்றுகாலம்
முன்னதாக,
இணையத்திற்கான
அத்தனை
அணுகலையும்
மூடிவிடுகிற
ஒரு
முன்னெதிர்பார்த்திராத
நடவடிக்கையை
எடுத்தது.
அதேமாதத்தில்
துனிசிய
அரசாங்கம்
ஃபேஸ்புக்
மற்றும்
பிற
சமூக
வலைப்பின்னல்
வலைத்தளங்களை
முடக்குவதற்கு
நடவடிக்கைகள்
மேற்கொண்டது.
அமெரிக்க
அரசாங்கமும்,
தன்
பங்கிற்கு,
மக்களின்
மீது
வேவுபார்க்க
இணையத்தை
முழுமூச்சாய்ப்
பயன்படுத்தியது.
இணைய
சுதந்திரத்திற்கான
அச்சுறுத்தல்
என்பது,
சமூக
எதிர்ப்பின்
வெடிப்பிற்கு
அமெரிக்க
ஆளும்
வர்க்கத்தின்
பதிலிறுப்பாக
அமைந்திருக்கின்ற,
அமெரிக்காவில்
ஜனநாயக
உரிமைகளின்
மீதான
ஒரு
பரந்த
தாக்குதல்
என்பதின்
பகுதியே.
சென்ற
ஆண்டின்
இறுதியில்
தேசியப்
பாதுகாப்பு
அதிகாரஅங்கீகாரச்
சட்டத்தில்
(NDAA)
ஒபாமா
நிர்வாகம்
கையெழுத்திட்டதில்
இது
உச்சமடைந்திருந்தது.
இச்சட்டம்
அமெரிக்ககுடிமக்களாய்
இருந்தாலும்
சரி
அல்லது
குடிமக்களில்லாதவர்களாய்
இருந்தாலும்
சரி
அவர்களை
எந்த
விதக்
குற்றச்சாட்டுகளோ
அல்லது
விசாரணைகளோ
இல்லாமல்
காலவரையின்றி
இராணுவக்
கைதில்
வைத்திருப்பதற்கு
உத்தியோகப்பூர்வமாய்
ஒப்புதலளிக்கிறது.
புதனன்று
ஒருநாளைக்கு
வேலைநிறுத்தம்
மேற்கொண்ட
விக்கிபீடியா
மற்றும்
பிற
தளங்கள்
இந்த
மசோதாக்களை
எதிர்ப்பதற்கு
தத்தமது
நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு
கடிதங்கள்
அனுப்புமாறு
வாசகர்களை
வலியுறுத்தின.
ஆனாலும்,
ஒட்டுமொத்தமாய்
ஜனநாயக
உரிமைகள்
விடயத்தில்
போலவே,
இணைய
சுதந்திரமும்,
இரண்டு
கட்சிகளுக்கோ
அல்லது
அவற்றைக்
கட்டுப்படுத்தும்
பெருநிறுவனங்களுக்கோ
விண்ணப்பிப்பதன்
மூலமாக
பாதுகாக்கப்பட
முடியாது.
அது
தொழிலாள
வர்க்கத்தின்
சுயாதீனமான
அரசியல்
அணிதிரட்டலில்
தங்கியிருக்கிறது.
விக்கிலீக்ஸ்
மீதான
தாக்குதல்களும்,
SOPA
மற்றும்
PIPA
குறித்தான
விவாதமும்
அமெரிக்க
அரசாங்கத்துடன்
நெருங்கி
வேலைசெய்யும்
ஒரு
சிறு
எண்ணிக்கையிலான
பெருநிறுவனங்கள்
இன்று
இணைய
நடவடிக்கையின்
பெரும்
பகுதியின்
மீது
செலுத்தி
வருகின்ற
மேலாதிக்கமான
மற்றும்
அதிகரித்து
வரும்
பாத்திரத்தையே
வெளிச்சம்
போட்டிருக்கிறது.
இந்த
காரணமே
இணைய
சுதந்திரத்திற்கு
தீவிரமான
அபாயத்தை
முன்நிறுத்திக்
காட்டுகிறது.
இணையத்தின்
ஜீவாதாரமான
சமூக
உள்கட்டமைப்பு
முக்கிய
பெருநிறுவனங்களின்
கரங்களில்
விட்டுவிடப்பட
முடியாது.
இந்த
ஆதாரவளங்கள்,
தனியார்
இலாபத்திற்காய்
இல்லாமல்
சமூகத்
தேவைகளின்
நலன்களுக்காய்
இயங்கும்
வகையில்
ஜனநாயகக்
கட்டுப்பாட்டின்
கீழ்
பொதுவுடமையாக்கப்பட வேண்டும்.
|