WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The Bain Capital debate
பெயின் மூலதன விவாதம்
Barry Grey
18 January 2012
குடியரசுக் கட்சி துவக்கப் பிரச்சாரத்தில்
பெயின் மூலதனம்
(Bain Capital)
என்னும் தனியார் முதலீட்டு நிறுவனத்தின்
முன்னாள் தலைவராக இருந்த ஜனாதிபதி வேட்பாளர் மிட் ரொம்னியின்
விடயம் பற்றிய விவாதம் வெடித்துள்ள ஒரு வாரத்திற்குள், செய்தி
ஊடகம் அனைத்தும் இணைந்த முறையில் அதற்கு முற்றுப்புள்ளி
வைப்பதில் ஒன்றிணைந்த முயற்சியைக் காட்டியுள்ளன. குடியரசுக்
கட்சியின் முன்னணி வேட்பாளர் 1984 முதல் 1999 வரை பெயினின்
தலைவர் என்னும் முறையில் $250 மில்லியன் சொத்துக்களைச்
சேர்த்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ரொம்னியின் போட்டியாளர்கள் முன்னாள் மன்ற
அவைத்தலைவர் நியுட் கிங்ரிச் மற்றும் டெக்சாஸ் மாநில ரிக்
பெர்ரியும்
“கழுகு
முதலாளித்துவக்காரர்”
என்று ரொம்னியை வசைபாடுவதில் இருந்து
பின்வாங்கிவிட்டது போல் தோன்றுகிறது. ரொம்னியையும், அவ்வாறான
முதலீட்டு நிறுவனங்கள் நிதியளிப்பதனூடாக வேறு தொழில்துறையைப்
வாங்குவதைப் பாதுகாக்கின்றனர். .
முக்கிய நிதிய நலன்கள் குற்றச் சாட்டுக்கள்
குறித்துத் தங்கள் பிரச்சாரங்களை வலுப்படுத்துவதற்காக கிங்ரிச்
மற்றும் பெரி ஒருபரந்த விவாதத்தைப் புதுப்பிக்கும் முயற்சியை
விரும்பவில்லை—அதாவது
பெயின் போன்ற முதலீட்டு நிறுவனங்கள்தான் வேலைகளை அழித்துத்
தொழிலாளர்களை அவர்கள் ஊதியங்கள், ஓய்வூதியங்கள், சுகாதார
நலன்களை அழிப்பதின் மூலம் செல்வம் ஈட்டின என்று கூறுவதை. வோல்
ஸ்ட்ரீட் சரியான முறையில் அத்தகைய விவாதம் முதலாளித்துவ
முறைக்கு எதிரான பெருகும் மக்கள் விரோத உணர்வை
வலுப்படுத்தத்தான் செய்யும் என்று அஞ்சுகிறது.
கடந்த வாரம் ஒரு தலையங்கத்தில் ரொம்னியை
ஆதரிப்பதற்கு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் களத்தில் குதித்து
, போகிறபோக்கில் அத்தலையங்கம் பெயின் பொறுப்புக் கொண்டிருந்த
நிறுவனங்களில் 22% எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு திவால்தன்மையை
அறிவித்தன அல்லது மூடப்பட்டுவிட்டன என்பதை ஒப்புக் கொண்டது.
நியூ யோர்க் டைம்ஸ்
ஞாயிறன்று ஒரு முற்றிலும் இழிந்த தலையங்கத்தில் சமூகச்
சமத்துவமின்மைக்கு விரோதி என்று காட்டிக் கொண்டு
செல்வந்தர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள பிளவு
அதிகமாகியிருப்பதற்கு குடியரசுக் கட்சியனரின் கொள்கைகளைத்தான்
குறைகூறி ஜனநாயகக் கட்சி மற்றும் ஒபாமா அடிப்படையில் அதே
கொள்கைகளைத்தான் தொடர்கின்றன என்ற உண்மையைப்
புறக்கணித்துள்ளது. அதே நேரத்தில், செய்தித்தாள் முதலாளித்துவ
முறைக்கு ஆதரவு தருவதற்குப் பெரும் முயற்சியைக் கொண்ட வகையில்,
“திரு.
ரொம்னியின் வணிக நடவடிக்கைகளைக் குறைகூறுபவர்கள் இப்பொழுது
தடையற்ற சந்தை முறையை விசாரணைக்குட்படுத்துதல் என்னும்
அபத்தமான குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர். எவரும்
முதலாளித்துவ முறைக்கு முடிவு கட்ட விரும்பவில்லை....”
டைம்ஸின் கருத்துப்படி பெயின் மூலதனம் போன்ற
நிறுவனங்களின் செயற்பாடுகளை முதலாளித்துவ முறை முழுவதற்கும்
பிணைப்பது என்பது மொத்தத்தில்
“அபத்தமாகும்”.
உண்மையா?
கடந்த மூன்று தசாப்தங்களில் தனியார் பங்கு
மற்றும் தனியார் முதலீட்டு நிதியத் தொழில்களின் வியத்தகு
வளர்ச்சி அமெரிக்க முதலாளித்துவம் ஒட்டுண்ணித்தனம் மற்றும்
அப்பட்டமான குற்ற நடவடிக்கைகளில் இறங்கிச் செயல்படுவதின்
வெளிப்பாடுதான்.
1980கள் இணைத்துக்கொள்ளல், புதிய நிறுவனங்களை
வாங்குதல் மற்றும்“நிதியளிப்பதன்
மூலமாக வாங்குதல்”
என்பதின் எழுச்சி ஆகியவற்றைக் கண்டன. பெயின்,
கார்லைல் குழு மற்றும் பிளாக்ஸ்டோன் ஆகியவை கடன்வாங்கப்படும்
பணத்தைக் கொண்டு பல நேரமும் தங்கள் விற்க விரும்பாத
நிறுவனங்களை கூட வாங்குவதில் சிறப்புத் தேர்ச்சியைக் கண்டன.
இலக்கு வகைக்கப்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களை அடைமானத்திற்கு
ஈடாகப் பயன்படுத்தி, புதிதான வாங்கிய நிறுவனங்களின் கணக்குப்
புத்தகங்களில் கடனை ஏற்றின. வாங்கப்பட்ட நிறுவனங்களிடம் மிக
அதிக கட்டணத்தை வசூலிப்பது வாடிக்கையாயிற்று. இது தனியார்
பங்கு நிதி மேலாளர்களின் பைகளுக்கு நேரடியாகச் சென்றது.
இதன்பின் அவை நிறுவனங்களை துண்டுதுண்டாக்கி
அவற்றை மீண்டும் ஒரு இலாபத்திற்காக விற்றன அல்லது அவை
நட்டத்தில்போக அனுமதித்தன. எப்படியும் பெயின் மற்றும் அதேபோன்ற
நிறுவனங்கள் பொதுவாகக் கணிசமாக இலாபங்களைப் பெற்றன. அவற்றின்
வாடிக்கை நிறுவனங்களான காப்பீட்டு நிறுவனங்கள், ஓய்வூதிய
நிதிகள், அறக்கட்டளைகள் மற்றும் வங்கிகள் தங்கள் முதலீட்டுகள்
மூலம் கணிசமான இலாபத்தை பெற்றன.
இவ்வகையில்தான் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின்
செல்வத்தைப் பெருக்கும் கருவி இருந்தது. தொழில்துறை மற்றும்
உற்பத்திச் சக்திகளின் விரிவாக்கத்தின் மூலமல்லாது அவற்றை
அழிப்பதின் மூலம். பெயின் மூலதனம் போன்ற நிறுவனங்களின்
செயல்கள் உற்பத்தி முறையில் இருந்து மிக ஒட்டுண்ணித்தனம் என்று
நிதிய ஊக வடிவங்களுக்கு மாறின. அவைதான் ஆளும் வர்க்கம்
சுய-செல்வக்கொழிப்பு பெற்றதற்கு முக்கிய காரணம் ஆகும்.
இந்த நடவடிக்கைகள் சமூகத்திற்கு விளைவுகளை
ஏற்படுத்தாது விடவில்லை.
“பங்குதாரர்
மதிப்பைத் தோற்றுவித்தல்”,
“திறமைக்கும்”
“போட்டித்தன்மைக்கும்”
வெகுமதி அளித்தல் என்பவை இத்தகைய
நிதியநடவடிக்கைகளின் சமூக அழிவுத்தன்மையை நியாயப்படுத்தவும்
மூடிமறைக்கவும் பயன்படுத்த போலிப் புகழ்ச் சொற்கள் ஆகும்.
“பொருளாதார
நெருக்கடி மற்றும் வரலாறு திரும்புதல்”
என்பதில்
டேவிட் நோர்த் எழுதியது போல்,
“1980களின்
இணைத்தல் மற்றும் நிறுவனங்களை ஒன்றாக சேர்க்கும் அலைக்கு
அமெரிக்காவில் தொழிலாளர் வர்க்கத்தின் சமூக நிலைமை மீதான
மாபெரும் தாக்குதல் இல்லாமல் வெற்றி
கிடைத்திருக்காது....198களில் நிதியளிக்கப்பட்டதனூடாக
வாங்கப்படும் நிறுவனங்களால் ஏற்படும் பெரும் கடன்களைக்
கொடுப்பதற்குத் தொழிலாளர்களைத் தீவிரமாகச் சுரண்டுதல்
தேவைப்பட்டது. இது தொழிற்சங்கத்தை முறித்தல், ஊதியவெட்டுக்கள்,
நலன்களைக் குறைத்தல், கடுமையான பணிவிதிகளை அதிகமாக்குதல்,
நூறாயிரக்கணக்கான வேலைகளை நேரடியாக அகற்றுதல் ஆகியவற்றின்மூலம்
நடத்தப்பட்டது.”
தேசிய வருமானத்தைச் சூறையாட வசதி கொடுத்த
கொள்கைகளான கட்டுப்பாடுகள் அகற்றப்படுதல்,
பெருநிறுவனங்களுக்கும் செல்வந்தர்களுக்கும் வரிக்
குறைப்புக்கள் ஆகியவை ஜனநாயகக் கட்சியின் கிளின்டன்
நிர்வாகத்தின் கீழ் விரிவாக்கப்பட்டன. அவை எஞ்சியிருந்த
வங்கிச் சீர்திருத்தங்கள் என்று பெருமந்த நிலைக்காலத்தில்
இருந்து தொடர்ந்ததை அகற்றிவிட்டன. புதிய நூற்றாண்டில் முதலில்
புஷ்ஷின் கீழும் இப்பொழுது ஒபாமாவின்கீழும் இந்த நிகழ்போக்கு
விரிவடைந்துள்ளது,.
2008ம் ஆண்டு வோல் ஸ்ட்ரீட் சரிவு டிரில்லியன்
கணக்கான பொது நிதியை வங்கிகளுக்கு உட்செலுத்தும் வகையில்
பயன்படுத்தப்பட்டு, தொழிலாளர் வர்க்கத்தின் சமூக
நிலைமைகளையும், வாழ்க்கைத் தரங்களையும் தீவிரமாகத் தாக்கியது.
நெருக்கடியைத் தூண்டிவிட்ட பொறுப்பற்ற ஊக வணிகம் நடத்திய நிதிய
ஒட்டுண்ணிகள் இன்னும் பேரழிவைப் பயன்படுத்தித் தங்கள் செல்வக்
கொழிப்பை அதிகரித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். கடந்த வாரம்
பெயின் மூலதன விவாதங்களுக்கு இடையே கார்லைல் குழு தான் அதன்
மூன்று நிறுவனர்களுக்கு மொத்தத்தில் கடந்த ஆண்டு $400
மில்லியனை கொடுத்ததாகத் தகவல் கொடுத்துள்ளது.
உயரடுக்கிற்காகச் செல்வத்தைத் தோற்றுவிக்கும்
வழிவகை, உற்பத்தி முறை மற்றும் உண்மையான மதிப்பைத்
தோற்றுவிப்பதில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது, ஆளும்
வர்க்கத்தின் சமூகக் கூறுபாடுகளையே மாற்றிவிட்டது. இது இன்னும்
மிருகத்தனமாகவும், வன்முறையில் ஈடுபடுவதாகவும், பேராசை
மிகுந்ததாகவும் மாறிவிட்டது. இது ஓர் அமெரிக்க முறை என்று
இல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் போக்காக மாறிவிட்டது.
வோல் ஸ்ட்ரிட்டின் தலைமையில் தொழிலாளர்
வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீது நடத்தப்படும் இடைவிடாத்
தாக்குதலுக்கு ஒரே பதில் முழு முதலாளித்துவ முறையையும்
எதிர்த்துத் தொழிலாளர் வர்க்கம் ஒரு சுயாதீன இயக்கத்தை
அபிவிருத்திசெய்வதுதான். அது புரட்சிகர சோசலிசத்
வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராட வேண்டும். |