WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரான்ஸ் AAA தரத்தை இழந்தபின் சோசலிஸ்ட் கட்சி சிக்கன நடவடிக்கைகளுக்கு
உறுதிமொழி கொடுக்கிறது
By Anthony Torres and Antoine Lerougetel
18 January 2012
use this version to print | Send
feedback
2012 ஆண்டு பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களில்
சோசலிஸ்ட் கட்சியின்
(PS)
வேட்பாளரான பிரான்சுவா ஹோலந்த், பிரான்ஸின் தரத்தை
Standard & Poor’s
AAAல்
இருந்து
AA+
என்று கீழிறக்கியதை எதிர்கொள்ளும் வகையில் அவருடைய ஆதரவை
இன்னும் சமூகச் செலவுக் குறைப்புக்களுக்குக் கொடுப்பதற்கு
அடையாளம் காட்டும் வகையில் எதிர்கொண்டார்.
Le Monde
இனால்
நிதிமந்திரி
François Baroin
இன்
“இது
சிக்கனத்திட்டம் ஏதும் இராது”
என்ற உறுதிமொழி குறித்துப் பேட்டி காணப்பட்டபோது, ஹோலந்த்
விடையிறுத்தார்:
“இதை
யார் நம்பமுடியும்? அதுவும் பொருளாதார வளர்ச்சி அறிவிக்கப்பட்ட
ஒரு சதவிகிதம் என்பதற்குப் பதிலாக அரைச் சதவிகிதம்தான் என்று
இருக்கும்போது; நாம் எப்படி ஆண்டு முடிவிற்குள் நம்
பற்றாக்குறை பற்றிய இலக்கை அடைவது? இது மிகவும் முக்கியம்,
ஏனெனில் நம் கடனுக்காக ஏற்படும் செலவுகள்
AAA
தரத்தை இழப்பதால் அதிகமாகிவிடும் நிலையில்?’’
இத்தகைய கீழிறக்கம்
கன்சர்வேடிவ் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் தற்போதைய ஐந்து
ஆண்டு பதவிக்காலம்
“தோற்றுவிட்டதால்”
ஏற்பட்டுள்ளது என்று கண்டித்த அவர், தான்
தேர்ந்தெடுக்கப்பட்டால், தன்னுடைய ஜனாதிபதிக் காலத்தை
“மாற்றி,
நல்ல ஆரோக்கியமான பொதுநிதிகளை மீட்கவும், நல்ல தொழில்துறைக்
கொள்கைகளை மீட்கவும்”
நோக்கம் கொண்ட கொள்கைகளுடன் தொடங்க இருப்பதாக
அவர் அறிவித்தார்.
ஹோலந்த் மற்றும் அவருடைய
ஆதரவாளர்கள் பிரெஞ்சு முதலாளித்துவத்தில் கொண்டிருக்கும்
திட்டம் முற்றிலும் பிற்போக்குத்தனம் ஆகும். பெரு
முதலாளித்துவத்தினரின் சொத்துக்களை பறிப்பதில் ஈடுபாடற்ற
எந்தக் கொள்கையும், இப்பொழுது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில்
நடைபெறும் சமுகநலச் செலவுகளில் பேரழிவு தரும் வெட்டுக்களை
சுமத்துவதின்மூலம்தான் பொதுநிதிகளை மீட்க முடியும்.
“தொழில்துறைக்
கொள்கையைப்”
பொறுத்தவரை, ஒரு சீரான தொழில்துறையைக்
கட்டமைப்பது என்பதற்கு சர்வதேச அளவில் நிதியப்
பிரபுத்துவத்தின் இலாபங்களை சமூகம் பறித்துக் கொள்ள வேண்டும்;
இல்லாவிட்டால் தொழிலாளர்களுடைய ஊதியங்களில் ஆழ்ந்த வெட்டுக்கள்
ஏற்படுத்தப்படும். இந்த ஊதியப் பிரிவைத்தான் சோசலிஸ்ட் கட்சி
தாக்க விரும்புகிறது.
கிரேக்கத்தில் ஜோர்ஜ்
பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயக அரசாங்கமும், ஸ்பெயினில் லூயி
ஜாபடெரோவின் சமூக ஜனநாயக அரசாங்கமும் கடந்த ஆண்டு சரிந்தன;
இதற்குக் காரணம் அவற்றின் மிருகத்தன சிக்கனக் கொள்கைகள்
அவற்றைப் பெரிதும் இகழ்விற்கு உட்படுத்தன. ஹோலந்த்
தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரின் கொள்கைகளும் எந்த
மாற்றத்தையும் கொண்டிருக்காது.
பிரெஞ்சு நிதிய
வட்டங்கள் அரசாங்கம் செலவைக் குறைத்து, சமூகநலத் திட்டங்களைத்
தகர்க்காமல் இருப்பதில் தங்கள் பொறுமையின்மையைச் சுட்டிக்
காட்டியுள்ளன. நிதியச் சந்தைகளின் அதிகாரத்தின் தலைவரான
Jean-Pierre Jouyet,
சோசலிஸ்ட் கட்சிக்கும் வலதுசாரி வட்டங்கள் என்று பிரான்சுவா
பேய்ரூவையும் சூழ்ந்துள்ள அரசியல் உடன்பாட்டிற்கு ஆதரவு
கொடுப்பவர்,
“தேர்தல்
பிரச்சாரமும் கவனத்தில் எடுக்கப்படும். இன்று செய்யவேண்டியது
பொது நிதிகளின் ஆரோக்கியத்தை மீட்பது, இது அவசரக்கால
நடவடிக்கைகள் மூலமே முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்”
என்றார்.
இதன் பொருள் தொழிலாளர்களின் சமூக நிலைமைகள்
20ம் நூற்றாண்டின் முதல் அரையாண்டிற்குப் பின் காணப்படாத
அளவிற்குக் குறைக்கப்பட வேண்டும் என்பதுதான்.
இதுதான் உண்மையில்
தொழிற்சங்கங்கள், முதலாளிகள் மற்றும் சார்க்கோசி அரசாங்கம்
ஆகியவற்றிற்கு இடையே
“சமூக
உச்சிமாநாடு”
என்று அழைக்கப்பட்டதின் நோக்கம் ஆகும் பிரெஞ்சு ஜனநாயகத்
தொழிலாளர் கூட்டமைப்பின்
(CFDT)
எஜமானரான பிரான்சுவா செரேக் தன்னுடைய ஒப்புதலை ஒரு
“சமூக
VAT
ற்கு—விற்பனை
வரியை அதிகப்படுத்தி, அதையொட்டி முதலாளிகள் சமூக அளிப்புக்கள்
கொடுப்பது தவிர்க்கப்படும்—மற்றும்
“வேலை
அளிப்பதில் போட்டித்தன்மை”
உடன்பாடுகளைக் கொண்டுவருவதற்கு அளித்துள்ளார்.
“இப்பிரச்சினைகளைப்
பரிசீலிக்க நாங்கள் தயார், ஆனால் அவசரப்பட்டோ,
தொழிலாளர்களுக்குப் பாதகமான நடவடிக்கைகள் எடுப்பதின் மூலமோ
அல்ல”
என்று அவர் கூறினார்.
சிரேக்யின் கருத்துக்கள்
தவிர்ப்புத் தன்மை உடையவை. உச்சிமாநாட்டிலிருந்து முதலாளிகள்
அமைப்புக்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைச் செய்தி ஊடகங்கள்
தெளிவாக்கியுள்ளன.
“வேலைகளில்
போட்டித்தன்மை உடன்பாடுகள் என்பது நிறுவனங்கள் புதிய தொழில்பணி
நேரங்கள் அல்லது ஊதியக் குறைப்புக்களைக் குறித்து பேச்சுக்கள்
நடத்தலாம் என்ற பொருளைத்தரும்.”
தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரான்சுவா ஹோலந்தின்
கொள்கைகள் சார்க்கோசி தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் பேசியபின்
நடத்திய கொள்கைகளின் தொடர்ச்சியாகத்தான் இருக்கும். இது
“இப்பொழுதே
மாற்றம்”
என்னும் தலைப்பில் ஹோலந்த் எழுதியுள்ள ஒரு
கருத்துக் கட்டுரையில் தெளிவாகிறது; அது டிசம்பர் 3, 2011ல்
அன்றாட நாளேடான லிபரேஷனில் வெளியிடப்பட்டது.
நிதிய உயரடுக்குகள்
விரும்பும் வெட்டுக்களைச் சுமத்தத் தான்தான் சிறந்தவர் என்று
அளித்துக் கொள்ளும் முயற்சிதான் இது—அதாவது
இன்னும் ஆழ்ந்த சமூகநலக் குறைப்புக்கள் திட்டம்.
ஒரு நீண்ட காலத்திற்கு
நெருக்கடிக்கான விலையை தொழிலாள வர்க்கம் கொடுக்க வேண்டும் என்ற
இலக்கை பிரான்சுவா கொண்டுள்ளார்.
“நம்
பொது நிதிகளை மீட்டல், நம் உற்பத்தித்துறையை மீட்டல் என்பதற்கு
நீண்ட காலமாகும். நம் இறைமையை மீண்டும் வெற்றிகொண்டு அடைதல்
என்பதற்குக் கணிசமான தியாகங்கள் தேவையாகும்.”
எனவே தொழிலாள வர்க்கம் வளர்ச்சிக்கு நிதியளிக்க ஊதிய, சமூகநலச்
செலவுக் குறைப்புக்களை ஒப்புக் கொள்ள வேண்டும், இல்லாவிடின்
மிக அதிக வேலையின்மை விகிதம் ஏற்படும்.”வேலையின்மை
மிக உயர்ந்து இருப்பதற்குக் காரணம் வளர்ச்சி அதன் மிகக்
குறைந்த அளவில் இருப்பதால்தான்.”
நிதியச் செய்தி ஊடகத்தில், ஹோலந்தின் பிரச்சார
மேலாளர், பியர் மோஸ்கோவிச்சி ஒரு வருங்கால சோசலிச
அரசாங்கத்தின் விருப்பங்கள் குறித்து மிகத் தெளிவாக இருந்தார்.
பைனான்சியல் டைம்ஸ் க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் அவர்
செய்தியாளர் ஹக் காமெஜியிடம் கூறினார்:
“கடினமான
வலது மற்றும் மிருதுவான இடது என்பதில் காலம் முடிந்துவிட்டது.
நாங்கள் பொறுப்புடனும் நம்பகத்தன்மையுடனும் இருப்போம். என்ன
இடர்கள் வந்தாலும், நாங்கள் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை,
கடன் ஆகியவற்றைக் குறைப்போம். நாங்கள் அதிகம்
செலவழிக்கமாட்டோம்.”
எனவே சோசலிஸ்ட் கட்சி
கிரேக்கத்தில்
PASOK
செய்ததைப் போலவும், ஸ்பெயினில் ஸ்பானிச
சோசலிஸ்ட் கட்சி செய்ததைப் போலவும் சிக்கன நடவடிக்கைகளைச்
சுமத்தத் தயாராக உள்ளது. இவற்றுள் மிகப் பெரிய ஊதிய
வெட்டுக்கள், எதிர்ப்பிற்கு தொழிலாளர் வர்க்கத்தை அடக்குவது
ஆகியவையும் அடங்கும். இரு இடங்களிலும், அரசாங்கங்கள்
இராணுவத்தைக் கொண்டு லாரி டிரைவர்கள் கிரேக்கத்திலும், விமானக்
கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஸ்பெயினிலும் ஈடுபட்ட
வேலைநிறுத்தங்களை முறிக்கப் பயன்படுத்தின.
இத்தகைய
பிற்போக்குத்தனக் கொள்கைகளுக்கு சிறிது
“இடது”
வண்ணம் கொடுக்க ஹோலந்தால் முடிகிறது என்றால், அதற்குக் காரணம்
அவர் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி(NPA),
பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி(PCF),
இடது கட்சி(PG)
ஆகியவற்றை
அவருடைய தொழிலாளர் வர்க்க எதிர்ப்புத் திட்டத்திற்கு வரக்கூடிய
வெகுஜன எதிர்ப்பை நோக்குநிலை மாற்றி, நெரிப்பதற்கு நம்பலாம்.
இவ்வகையில் ஹோலந்து ஒரு சிறு அடையாளத்தை இக்கட்சிகளுக்குக்
கொடுக்கிறார்.
“இறுதியாக,
சுற்றுச்சூழல் ஆர்வலர் போன்ற அனைத்து இடது வேட்பாளர்களையும்
நான் ஆழ்ந்து மதிக்கிறேன்....என்னுடைய பணி அரசியல்
அதிகாரத்தில் மாற்றத்தை உருவாக்குவதும், மாற்றத்திற்கு
வசதியளிப்பதும் ஆகும்.”
இவர் அத்தகைய
தந்திரோபாயங்களைக் கையாண்டு அழுத்தம் கொடுக்கலாம்; ஏனெனில்
அவர் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, மற்றும் சோசலிஸ்ட்
கட்சியின் பிற துணைக்கோள் கட்சிகள் இடதில் இருந்து சோசலிஸ்ட்
கட்சியைக் குறைகூறா என்று உறுதியாக உணர்கிறார். இவ்வகையில்,
சார்க்கோசியின்
“சமூக
VAT
”
பற்றிய ஜனவரி 4ம் திகதி அறிக்கையில், புதிய முதலாளித்துவ
எதிர்ப்புக் கட்சி வேட்பாளர் பிலிப் புட்ரூ உறுதியளித்தார்:
“அனைத்து
சமூக [தொழிற்சங்க], அரசியல் சக்திகளும் விரைவில் கூடி,
உடனடியாக சார்க்கோசியின் ஜனாதிபதித் தன்மையில் இருந்து
வெளிப்பட்டுள்ள இந்தக் கூடுதல் தாக்குதலைத் தடுக்கவும், நல்ல
பதில் கொடுக்கவும் முடிவெடுக்க வேண்டும்.”
இவ்வகையில் சோசலிஸ்ட்
கட்சி,
“இடது”
கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம்
ஆகியவற்றிற்கு கொடுக்கப்படும் முறையீடு சோசலிஸ்ட் கட்சியில்
இருந்து சுதந்திரம் பெற்றதாக புதிய முதலாளித்துவ எதிர்ப்புக்
கட்சி கூறுவது முற்றிலும் கட்டுக்கதை என்பதைத்தான்
காட்டுகிறது.
பிரெஞ்சு ஜனாதிபதித்
தேர்தல் முற்றிலும் முதலாளித்துவத்தால் ஆணையிடப்படும் ஒரு
வழிவகை ஆகும்; இதில் தொழிலாளர்கள் வாக்குரிமையை இழக்கின்றனர்,
ஜனநாயக மரபிலான விழைவுகள் முறையாக நெரிக்கப்படுகின்றன. |