சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

The Egyptian Revolution, the Muslim Brotherhood and the apologetics of the Revolutionary Socialists

எகிப்திய புரட்சியும், முஸ்லீம் சகோதரத்துவமும், புரட்சிகர சோசலிஸ்டுகளின் காரணவிளக்கங்களும்

By Jean Shaoul
5 January 2012

use this version to print | Send feedback

Part 1 

ஹோஸ்னி முபாரக் வீழ்ச்சியடைந்து ஒன்பது மாதங்களுக்குப் பின்னர், எகிப்திய நாடாளுமன்ற தேர்தல்களின் முதலிரண்டு சுற்றுகளில் இஸ்லாமிய கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்றுள்ளன.

ஈரான் மற்றும் துருக்கிக்கு அடுத்ததாக மத்திய கிழக்கின் ஏனைய பகுதிகளை விட தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளை அதிகமாக கொண்டிருக்கும் எகிப்து, அப்பிராந்தியத்தில் மிகவும் முக்கியமான மற்றும் ஆளுமைமிக்க நாடாக உள்ளது. முபாரக்கை பதவியிலிருந்து கீழிறக்கிய எகிப்திய மக்களின் பலமான போராட்டம், இவ்விதத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், அதன் பிராந்திய கூட்டாளிகளுக்கும் ஒரு பெரும் அடியாக இருந்தது.    

இருந்தபோதினும், எகிப்தில் ஒரு சர்வாதிகாரம் நிலவுகிறது. அதன்கீழ் தொழிலாளர்கள், வறிய கூலிகளையும் அரசியல் ஒடுக்குமுறையையும் முகங்கொடுத்துள்ளனர். “அரேபிய வசந்தத்தை" தொடக்கிவிட்ட அந்த போராட்டம், முதலாவதாக ஆளும் இராணுவ ஆட்சிக்குழுவை பாதுகாப்பதில் திட்டமிட்டு இயங்கிவந்த இஸ்லாமிய கட்சிகளின் ஒரு கூட்டணிக்குள் தஞ்சம் அடைய செய்யப்பட்டதன் மூலமாகவும், இரண்டாவதாக இராணுவ ஆட்சிக்குழுவை தூக்கியெறிய தொழிலாள வர்க்கத்தால் எடுக்கப்பட்ட எவ்வித அரசியல் போராட்டமும் பெயரளவிலான "ஜனநாயக" மற்றும் இடது கட்சிகளால் தடுக்கப்பட்டதாலும் ஆளும் வர்க்கத்தால் தமக்கு சாதகமாக்கப்பட்டும், மாற்றப்பட்டும்விட்டது.  

விரல்விட்டு எண்ணக்கூடிய பில்லினியர்கள், இராணுவம், பன்னாட்டு வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள், தொடர்ந்து எகிப்து மீது கொண்டிருக்கும் ஆதிக்கத்தை சட்டபூர்வமாக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்ட அந்த தேர்தல்கள், ஒரு மோசடியாகும். அவை, பெப்ரவரியில் முபாரக்கைக் கவிழ்த்துப்போட்ட, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் புரட்சிகர எழுச்சியால் ஓரங்கட்டப்பட்ட கட்சிகளிடமே உத்தியோகபூர்வமாக அதிகாரத்தை ஒப்படைக்கும். இந்த கட்சிகள் புரட்சியின் அடிப்படை கோரிக்கையான சமூக சமத்துவம், சிறந்த வாழ்க்கை நிலைமைகள், மற்றும் அரசியல் சுதந்திரம் ஆகியவற்றிற்கு விரோதமாக உள்ளன.  

முதல் சுற்றில் வெறும் 50 சதவீதத்திற்கு சற்று கூடுதலாகவும், இரண்டாவது சுற்றில் 42 சதவீதமும் என குறைவாக பதிவான வாக்குகளில், முஸ்லீம் சகோதரத்துவத்தின் சுதந்திரம்-நீதி கட்சி (Freedom and Justice Party – FJP) மொத்த வாக்குகளில் சுமார் 40 சதவீதமும், சலாபிஸ்டுகளின் அல்-நௌர் (Salafists’ Al-Nour) 24 சதவீதமும், எகிப்திய தாராளவாத குழு மற்றும் அல் வாஃப்டு (Al Wafd) கட்சிகள் 14 மற்றும் 11 சதவீத வாக்குகளும் பெற்றன. மத்தியதட்டு தீவிர-இடது மற்றும் இளைஞர் கட்சிகளான புரட்சி தொடர்கின்றது (Revolution Continues) குழு வெறும் நான்கு சதவீதத்தைப் பெற்றது.  

ஒரு நாடாளுமன்ற அரசியலமைப்பில், ஐந்தில் நான்கு பங்கு பிரதிநிதிகளை நியமிக்கும் அதிகாரத்தையும், புதிய அரசியலமைப்பின் எவ்வித பிரிவையும் தடுக்கும் வீட்டோ அதிகாரத்தையும் தன்னிடத்தே வைத்துக்கொண்டு, ஆளும் ஆயுதப்படைகளின் அதியுயர்குழு (SCAF), அதுவே எகிப்தின் அரசியல் வாழ்வைக் கட்டுப்படுத்தும் என்பதை உறுதிப்படுத்தியது. அது (SCAF), வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை முறியடிக்கவும், கடந்த ஒன்பது மாதங்களில் இராணுவ தீர்பாயங்களில் உள்ள 12,000த்திற்கும் அதிகமானவர்களைக் கைது செய்யவும் மற்றும் கைது செய்யும் முயற்சிக்காகவும், முபாரக்கின்கீழ் கொண்டு வரப்பட்டிருந்த ஒடுக்குமுறை மற்றும் சித்திரவதையின் முழு கருவிகளையும் பொருத்தமான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளது.   

ஆயுதப்படைகளின் அதியுயர்குழுவின் 2011 அரசியலமைப்பு பிரகடனத்தின்படி, சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அல்லது நிராகரிக்கும், மாநில மற்றும் பொது வரவு-செலவு கணக்கிற்கான பொதுக்கொள்கையை வெளியிடும், மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கும், நாடாளுமன்ற அவைக்கூட்டத்தைக் கூட்டுவதற்கான மற்றும் கலைப்பதற்கான மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவதற்கான மற்றும் எகிப்திய அரசை வெளிநாடுகளில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான அதிகாரத்தை இராணுவ ஆட்சிக்குழுவே வைத்திருக்கும்

நாடாளுமன்றத்தில் தற்போது செல்வாக்கு பெற்ற கட்சியாக விளங்கும் முஸ்லீம் சகோதரத்துவத்துடன் இராணுவ ஆட்சிக்குழு ஒரு வேலைக் கூட்டுறவை உருவாக்க விரும்புகிறது. முஸ்லீம் சகோதரத்துவத்தின் தலைவர் முஹம்மது பாதெ (Mohammed Badie) மிகவும் தீவிர சலாபிஸ்ட் அல்-நௌர் கட்சியைவிட ஒரு மிதமான கட்சியாக காட்டி, தளபதிகளைத் சமாதானம் செய்தார். அவர் பின்வரும் அறிவிப்போடு இராணுவ ஆட்சிக்குழுவுடன் இணைந்து வேலை செய்ய உறுதியளித்துள்ளார்: “நாம் இராணுவ குழுவுடன் மட்டுமல்ல, எகிப்தின் அனைத்து பிரிவுகளுடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும், இல்லையென்றால் ஒரு முடிவு கிடைக்காது. நாடாளுமன்றம், அரசாங்கம், மற்றும் ஆளும் இராணுவ குழு என மூன்று சக்திகளுக்கும் இடையில் அங்கே இணக்கம் இருக்கும்,” என்றார்.

அனைத்திற்கும் மேலாக, தளபதிகளுக்கு இடையில் ஓர் உடன்பாட்டை எட்ட, சகோதரத்துவம் இராணுவத்தின் சிறப்பு பாத்திரத்தைப் பாதுகாக்க விரும்புவதற்கான அறிகுறிகளும் அங்கே காணப்படுகின்றன. எகிப்திய தனியார் நாளிதழான Al-Tahrir செய்தியின்படி, FJPஇன் துணைத்தலைவர் எஸ்ஸாம் அல்-எரியன், “இராணுவம் முந்தைய அரசியலமைப்பில் கொண்டிருந்ததையும் விட, வரவிருக்கும் அரசியலமைப்பில் ஒரு சிறப்பு இடத்தைக் கொண்டிருக்கும் உரிமையைப் பெற்றுள்ளதாக" குறிப்பிட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிர்வாகத்திடம் அதிகாரத்தை மாற்றுவதென்பது, "அரசியல் காட்சியிலிருந்து இராணுவக்குழுவை வெளியேற்றுவதில் முடியக்கூடாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.  

1928இல் ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லீம் சகோதரத்துவம், எகிப்திய முதலாளித்துவத்தின் ஒரு சக்திவாய்ந்த பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முக்கிய முதலாளித்துவ கட்சியான வாஃப் கட்சியின் பிரிவினை தேசியவாதத்திற்கு மாற்றாகவும், அனைத்திற்கும் மேலாக ரஷ்ய புரட்சிக்குப் பிந்தைய கம்யூனிசத்தின் எழுச்சிக்கு எதிரான ஓர் ஆயுதமாகவும், மேற்கத்திய செல்வாக்கிற்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணாகவும், சுன்னி-அடித்தளத்திலான இஸ்லாமியத்தை வடிவமைக்கும் கருத்தை சகோதரத்துவத்தின் ஸ்தாபகரான ஹன்னா அல்-பன்னா அபிவிருத்தி செய்தார். ஷாரியா சட்டத்தின் அடிப்படையில் ஓர் இஸ்லாமிய அரசிற்கு அழைப்புவிடுத்த அவர், வர்க்க போராட்டத்திற்கு எதிர்பலமாக, தொழில்வழங்குனர்கள் மற்றும் நில உரிமையாளர்களின் தரப்பிலிருந்து கூட்டுழைப்புவாதம் (corporatism) மற்றும் குடும்பத்திற்கு வெளியே அதிகாரத்தை செலுத்துதல் (paternalism) ஆகியவற்றை வலியுறுத்தினார்

தேசிய போராட்டத்திற்குள் சோசலிச மற்றும் கம்யூனிச இடதின் (இவர்களில் பலர் யூதர்களாவர்) செல்வாக்கு அதிகரித்து வருவதை எதிர்கொள்ளவும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி வைக்கவும் சகோதரத்துவத்தினர் மத வகுப்புவாதம் மற்றும் யூத-எதிர்ப்புவாதத்தைப் பயன்படுத்தினர். இது குறிப்பாக பல்வேறு இனங்கள் நிரம்பிய அலெக்சாண்டிரியாவில் மிகவும் வெளிப்படையாக இருந்தது. அங்கே அது, தொழிலாளர்கள் மற்றும் சமய சார்பற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தி மதிப்பிழந்துபோன துணை-இராணுவ குழுக்களின் ஒரு வலையமைப்பை உருவாக்கியது.

ஒரு பிற்போக்குதனமான சமூக வேலைத்திட்டத்தோடு முஸ்லீம் சகோதரத்துவம், தேசியவாத மற்றும் மதவாதத்தை இணைத்து கொண்டது. பெண்களுக்கும் கல்வியூட்டப்பட வேண்டும், வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென்பது இருந்தபோதினும், அவர்கள் ஆண்களிலிருந்து தனியாக பிரித்து வைத்திருக்கப்பட வேண்டும் என்றது. சமூக மற்றும் பொருளாதார வாழ்வின் மையமாக மதம் இருக்க வேண்டுமென்றது. இந்த அடிப்படையில், சகோதரத்துவம் பள்ளிகள், சிகிச்சை மையங்கள், ஆலைகள் மற்றும் மசூதிகளின் ஒரு வலையமைப்பை நிறுவியது.

இத்தகையவொரு வேலைதிட்டத்தையும், மூலங்களையும் கொண்டிருக்கும் ஒரு கட்சி, இன்று எகிப்து முகங்கொடுத்துவரும் ஆழ்ந்த சமூக பிரச்சினைகளைத் தீர்க்க இலாயக்கற்று உள்ளது. இஸ்லாமிஸ்டுகள், அவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு வார்த்தைஜாலங்களுக்கு இடையில், உண்மையில் ஒபாமா நிர்வாகத்தால் சமாதானப்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்கள் மத்தியக்கிழக்கில்  மிக சமீபத்தில் லிபியாவில் நடந்த நேட்டோ யுத்தத்திலும், சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு யுத்தத்திலும் அவற்றிற்கு அப்பாலும் அமெரிக்க வெளியுறவு கொள்கையின் ஒரு முக்கிய கருவியாக ஆகியுள்ளனர். தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதிலும் வகுப்புவாதத்தைத் தூண்டிவிடுவதிலும் வாஷிங்டனின் பார்வையில்  அவர்களின் பாத்திரத்திற்கு வெகுமதி கிடைக்கின்றது.

தகாமு (Tagammu) மற்றும் கராமா (Karama) போன்ற பெயரளவிற்கான இடது கட்சிகள், தகாமுவிற்குள் பெரிதும் ஒருங்கிணைந்துள்ள எகிப்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு ஸ்ராலினிச குழுக்கள், மற்றும் அனைத்திற்கும் மேலாக புரட்சிகர சோசலிஸ்டுகள் (RS) ஆகியவர்களிடமிருந்து முஸ்லீம் சகோதரத்துவம் பெற்ற ஆதரவே, முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின்னர் எகிப்தில் ஏற்பட்ட அதன் தேர்தல் எழுச்சியின் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) உட்பட சர்வதேச சோசலிச போக்குகளின் (International Socialist Tendency) கட்சிகளுடன் சர்வதேசரீதியிலும், அமெரிக்காவின் சர்வதேச சோசலிச அமைப்புடன் (International Socialist Organization - ISO) உத்தியோகபூர்வமற்ற விதத்திலும் புரட்சிகர சோசலிஸ்டுகள் இணைந்துள்ளனர். ஒரு "ஐக்கிய முன்னணி" என்ற பெயரில் தொழிலாள வர்க்கத்தை இஸ்லாமியவாதிகளுக்கும், முதலாளித்துவத்தின் “ஜனநாயகவாதிகள்" மற்றும் ஏனைய பிரிவுகளுக்கும் அடிபணிய வைப்பதில், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் ஒரு பிரயோகம் என்றும் கூட வர்ணித்து, சகோதரத்துவத்திற்கு ஒரு போலி ட்ரொட்ஸ்கிச ஆசீர்வாதத்தை வழங்குவதில் அவர்களின் குறிப்பிட்ட பாத்திரம் இருந்துள்ளது.       

எதார்த்தத்தில், 1950 இல் சர்வதேச சோசலிஸ்டுகள் உடைத்துக்கொண்ட ட்ரொட்ஸ்கியின் அந்த நான்காம் அகிலத்தால் வரலாற்றுரீதியில் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளை நிராகரிப்பதே புரட்சிகர சோசலிஸ்டுகள் செய்யும் அனைத்துமாகும்.

எகிப்திய மக்கள், தேசிய முதலாளித்துவத்தின் எந்தவொரு பிரிவின் தரப்பிலும் சாய்ந்து, அவர்களின் அடிப்படை தேவைகளான ஏகாதிபத்திய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை, ஜனநாயக உரிமைகள், வேலைகள் மற்றும் சமூக சமத்துவம் என எதையுமே எட்ட முடியாது என்பதையே நிரந்தர புரட்சியின் கோட்பாடு எடுத்துக்காட்டுகிறது. ஏகாதிபத்திய சகாப்தத்தில், அடிப்படை ஜனநாயகத்தை அடைவது மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளில் தேசிய கடமைகளை, அதாவது முதலாளித்துவ எழுச்சி ஏற்பட்ட பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளோடு தொடர்புபட்ட கடமைகளை முன்னெடுப்பதென்பது தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கையிலெடுப்பதை முன்னிறுத்துகிறது. இது, தேசிய மற்றும் சர்வதேச பொருளாதாரத்தின் அனைத்து ஆதாரங்களையும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர, உலக சோசலிச புரட்சி போராட்டத்தின் ஒரு பாகமாக மட்டுமே அடையப்பட முடியும்.

சர்வதேச சோசலிச போக்குகளும் (IST) மற்றும் அதன் RS இன் துணைகளும் நீண்டகாலத்திற்கு முன்னரே, ஏகாதிபத்தியத்திடமிருந்து தேசிய முதலாளித்துவத்தால் சுதந்திரத்தைப் பெற முடியும் என்றும், அதனால் முதலாளித்துவ சொத்துடைமை உறவுகள் மற்றும் முதலாளித்துவ அரசு நெறிமுறையின் அடிப்படையில் ஒரு நிலையான மற்றும் அத்தியாவசியமான சுயாதீன பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியுமென்றும் வலியுறுத்தி, இந்த முன்னோக்கை கைவிட்டுவிட்டன. அதற்குமாறாக, அடுத்த தசாப்தங்களில் சோசலிசத்திற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் நிராகரித்து, மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயக சீர்திருத்தங்களை எட்ட முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டணிகளை வலியுறுத்தும் IST வரலாற்றுரீதியில் ஸ்ராலினிசத்தோடு இணைந்த ஒரு முன்னோக்கை முன்னெடுக்கிறது.

குறிப்பாக புரட்சிகர சோசலிஸ்டுகள் (RS) எதை புகழ்ந்து பாராட்டுகிறதோ, சகோதரத்துவத்தின் அந்த "சீர்திருத்த" இளைஞர் படை என்றழைக்கப்படுவதுடன் அது மிக நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. சகோதரத்துவத்தின் தொழிலாள வர்க்கத்துடனான விரோதம் மற்றும் முதலாளித்துவத்திற்கான ஆதரவு இருக்கின்ற போதினும், அவர்களை ஊக்கப்படுத்துவதில் புரட்சிகர சோசலிஸ்டுகள் அவர்களின் சகோதரத்துவ அமைப்பான பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கட்சியின் –SWP- அடியைப் பின்பற்றியுள்ளனர்.   

செப்டம்பர் 2000இல் அல் அக்சா மசூதி சுற்றுச்சுவருக்குள் ஏரியல் ஷெரோனின் ஆத்திரமூட்டும் அணிவகுப்பைத் தொடர்ந்து எழுந்த பாலஸ்தீன எழுச்சிக்கு அது அளித்த ஆதரவையும், ஈராக்கின் மீது நடத்தப்பட்ட அமெரிக்காவின் வான்வழி தாக்குதல்களுக்கான அதன் எதிர்ப்பையும் பயன்படுத்தி, 1990களின் பின்பகுதியிலிருந்து, சோசலிச தொழிலாளர் கட்சி அந்த குழுவுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது. கிரிஸ் ஹார்மென்னால் The Prophet and the Proletariatஇல் வலியுறுத்தப்பட்ட, “சிலநேரம் இஸ்லாமிஸ்டுகளுடன் வேண்டுமானால் இணைந்திருப்போம், ஆனால் ஒருபோதும் அரசுடன் இணைந்திருக்க மாட்டோம்" என்ற முழக்கத்தோடு சோசலிச தொழிலாளர் கட்சி இந்த கூட்டணியை நியாயப்படுத்தியது.

ஆப்கானிஸ்தானிலும் பின்னர் ஈராக்கிலும் நடத்தப்பட்ட அமெரிக்க தலைமையிலான யுத்தங்களுக்கு எதிராக 2001இல் எழுந்த யுத்த-எதிர்ப்பு போராட்டங்கள், எகிப்தில் மட்டுமல்ல சர்வதேச அளவில் இஸ்லாமிஸ்டுகளுடன் உறவுகளைப் பிணைத்துக்கொள்ளவும், குறிப்பாக மத்திய கிழக்கின் அரசியலின் முக்கிய போக்கிற்குள் சோசலிச தொழிலாளர் கட்சியை உறுதியாக கொண்டு வரவும் அதற்கு அரசியல் வாய்ப்பை அளித்தது. இந்த நிகழ்முறையில், சோசலிச தொழிலாளர் கட்சியின் கணிசமான நிதிகளைத் திரட்டவும் வாய்ப்பு ஏற்பட்டது.

சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி, பிரிட்டனின் முஸ்லீம் கூட்டமைப்பு, பிரிட்டனின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி, அணுஆயுத ஒழிப்பு பிரச்சார அமைப்பு மற்றும் இன்னும் பல சிறிய போலி-இடது கட்சிகளால் ஏற்படுத்தப்பட்ட யுத்தத்தை நிறுத்து -Stop the War- (STWC) கூட்டணி, 2002இல் இருந்து 2008 வரையில் ஆண்டுதோறும் கெய்ரோவில் நடத்தப்பட்ட எகிப்திய யுத்த-எதிர்ப்பு மாநாடுகளில் பங்கெடுத்தது.

சகோதரத்துவத்தினரும், ஏனைய இஸ்லாமிய கட்சிகளும் மேலோங்கிய அரசியல் போக்குகளாக இருந்தன. Respect கூட்டணியில் யுத்த-எதிர்ப்பு தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் கலோவே உடன் ஓர் அரசியல் கூட்டணியை உருவாக்கிக் கொண்ட சோசலிச தொழிலாளர் கட்சி பல்வேறு முஸ்லீம் வியாபாரிகளிடமிருந்து நிதி பெறுவதற்கு அவருக்கு உதவியது. அதற்கு கைமாறாக, சோசலிச தொழிலாளர் கட்சியும் புரட்சிகர சோசலிஸ்டுகளை போன்ற அதனோடு இணைப்புபெற்ற அமைப்புகளும் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் காசாவில் ஹமாஸின் பாத்திரத்தையும், லெபனானில் ஹெஸ்பொல்லாவின் பாத்திரத்தையும் விமர்சனமின்றி புகழ்ந்துரைத்தன. ஆனால் எகிப்து, லெபனான், ஈராக் மற்றும் சிரியாவில் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த தூண்டிவிட்ட இஸ்லாமியவாதிகளின் பிரிவினைவாத சச்சரவுகள் குறித்து வாய் திறக்கவில்லை.      

சோசலிச தொழிலாளர் கட்சியினதும் மற்றும் யுத்தத்தை நிறுத்து கூட்டணியின் (STWC) நிகழ்ச்சிநிரல் மத்தியகிழக்கில் முற்றிலுமாக முதலாளித்துவ நலன்களின் தரப்பில் இருந்தது. அவை யுத்த எதிர்ப்பு போராட்டத்தை, அமெரிக்க இராணுவத்தை அடக்கி வைப்பதற்கான ஒரு வாகனமாக ஐக்கிய நாடுகளை மீட்டுயிர்பிக்க விரும்பிய ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவளிப்பதற்குப் பின்னால், இழுத்துவர விரும்பினர்.

கெய்ரோ யுத்த-எதிர்ப்பு மாநாடுகள், இஸ்லாமியர்கள் அதிகம் பங்கு பெற்றிருந்த சமூக விவாதக்கள இயக்க (Social Forum movement) மாநாடுகளை ஒட்டி நடத்தப்பட்டன. சோசலிச தொழிலாளர் கட்சி, புரட்சிகர சோசலிஸ்டுகள் மற்றும் அவைபோன்ற ஏனைய குழுக்களின் பங்களிப்பானது, இஸ்லாமியர்களின் முதலாளித்துவ சார்பிற்கும், தொழிலாள வர்க்க எதிர்ப்புகளுக்கும் அரசியல் முகமூடியை அளித்தது.  

நவம்பர் 2005இல் சகோதரத்துவம் மற்றும் FSU ஆகியவற்றுடன் கூட்டுப் போராட்டங்களை ஒழுங்கமைக்க, புரட்சிகர சோசலிஸ்டுகள் 2005 ஜூனில் மாற்றத்திற்கான தேசிய கூட்டணியை (National Alliance for Change) ஏற்படுத்தியது. “FSU செயல்படும் இடங்களில், சகோதரத்துவத்தினர் மற்றும் தீவிர இடதுகளுக்கு இடையில் மற்றுமொரு பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருந்ததாக" அது ஊக்குவித்தது

மிகவும் நடைமுறைவாத மற்றும் தாராளவாத இளைஞர்களின் பிரசன்னத்தால், சகோதரத்துவத்தின் ஆக்கமைவும் குணாம்சமும் மாறிவிட்டிருந்ததாக கூறி இந்த நல்லிணக்கத்தை புரட்சிகர சோசலிஸ்டுகள் நியாயப்படுத்தியது.

எதார்த்தத்தில் முதலாளித்துவத்தின் ஒரு பிரிவாக விளங்கும் இத்தகைய "சீர்திருத்த" அடுக்குகள், மிகவும் பகிரங்கமாய் மதவாத அடையாளங்களையும், சித்தாந்தங்களையும் வாஷிங்டன் மற்றும் சர்வதேச நிதியியல் மேற்தட்டுக்களுடனான நெருங்கிய உறவுகளுக்கு ஒரு தடையாக காண்கின்றன. அவை துருக்கிய பிரதம மந்திரி ரெசிப் தாயிப் எர்டோகானின் நீதி மற்றும் முன்னேற்ற கட்சியை (Justice and Development Party – AKP) அவற்றின் முன்மாதிரியாக முன்னெடுக்கின்றன. அவை துருக்கியில் நிலவும் படுமோசமான சமூக நிலைமைகளையும், பெருவணிக மேற்தட்டின் தரப்பிற்கு AKP தலைமை தாங்குவதையும், துருக்கி மற்றும் ஈராக்கில் குர்திஷ் மக்களின் மீதான அதன் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலையும், பத்திரிகையாளர்கள், மனித உரிமை காரியாளர்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களை அது கைது செய்தமையையும், முற்றிலும் புறக்கணிக்கின்றன.  

2006இல் தாராளவாத மற்றும் இஸ்லாமிய சக்திகளின் மற்றொரு கூட்டணியை ஒன்று கூட்டியமைக்காக, அமெரிக்காவிலுள்ள சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) புரட்சிகர சோசலிஸ்டுகளின் பாத்திரத்தை, பின்வருமாறு கூறி, ஊக்கப்படுத்தியது: “சகோதரத்துவம் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு கருவியென்றும், அது வெறுமனே நவ-தாராளவாதத்தின் ஒரு கூட்டணி என்றும், அடிப்படையில் இன்னும் இதுபோன்ற நிலைப்பாடுகளையும் கொண்டிருக்கும் சில பழைய மார்க்சிச அடுக்குகளின் குறுங்குழுவாத அணுகுமுறையை இடது எடுத்திருந்தால், இந்த கூட்டணியைத் தக்கவைப்பது முற்றிலும் சிரமமாக ஆகியிருக்குமென்று கூற வேண்டியுள்ளது. அவற்றைக் கடந்துவருவதில் புரட்சிகர சோசலிஸ்டுகள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது.” [அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது]  

தொடரும்