WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
எகிப்து
எகிப்தின் ஜனாதிபதி வேட்புத் தன்மையை எல்பரடேய் கைவிடுகிறார்
By Johannes Stern and Alex Lantier
17 January 2012
use
this version to print | Send
feedback
எகிப்தில் உள்ள தாராளவாத முதலாளித்துவத்தின்
முன்னணிப் பிரதிநிதியாக இருக்கும் முகம்மது எல்பர்டேய் தான்
ஜனாதிபதி வேட்பாளராக நிற்கும் திட்டத்தைக் கைவிடுவதாக
அறிவித்தார்.
சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவர்
ஆளும் இராணுவ ஆட்சிக்குழு
“ஓர்
உண்மையான ஜனநாயக முறையை”நிறுவுவதில்
தோற்றுவிட்டது என்றார். இதன்பின் அவர் தன்னுடைய ஆலோசனையைக்
கேட்கவில்லை என்பதற்காக இராணுவத்தை கடிந்து கொண்டு, ஒரு
புயலின் மத்தியில் தன் கப்பலைக் காப்பாற்றும் முயற்சியில்
ஈடுபட்டுள்ள பிடிவாதமான தலைமை மாலுமியுடன் ஒப்பிட்டார்.
“அவர்
தலைமையில் கப்பல் அலைகளால் மொத்துண்டு நிற்கிறது. [....] நாம்
அவருக்கு அனைத்துவகை உதவியையும் அளிக்க முன்வருகிறோம், ஆனால்
புரட்சி ஏதும் நடக்கவில்லை, ஆட்சி ஏதும் சரியவில்லை என்பது
போல் பழைய ஆட்சி கொண்டிருந்த முறையையே வலியுறுத்துகிறார்”
என்று
அவர் கூறினார். தன் அறிக்கையில் எல்பரடேய்,
“என்னுடைய
முடிவு அரங்கத்தைவிட்டு நான் அகல்கிறேன் என்ற பொருளைக்
கொடுக்காது, ஆனால் இந்நாட்டிற்கு அதிகாரத்தில் இருந்து வெளியே,
தளைகளில் இருந்து விடுபட்டு, இன்னும் திறைமையாகப் பணிபுரிவேன்
என்றுதான் பொருள்”
என்று சேர்த்துக் கொண்டார்.
இராணுவ ஆட்சியால் புறக்கணிக்கப்பட்ட ஆலோசகர்
என்று தன்னை எல்பரடேய் விவரித்துக் கொண்டுள்ளது ஒன்றுதான்
அவருடைய உரையில் அரசியலளவில் நேர்மையானதாக இருக்கலாம்.
இராணுவத்தின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக புரட்சியின்
தொடக்கத்தில் ஓராண்டிற்கு முன் இருந்த இவர் இப்பொழுது கடந்த
ஆண்டு தான் ஆட்சிக்குழுவிற்குக் கொடுத்த ஆதரவை மறைக்கப்
பார்க்கிறார். இராணுவ ஆட்சிக்கு பரந்த எகிப்திய
முதலாளித்துவம், குட்டி முதலாளித்துவ
“இடது”
ஆகியவை கொடுக்கும் ஆதரவை மூடிமறைக்கும்
முயற்சியின் ஒரு பகுதி ஆகும்; இதையொட்டி அவர்கள் தொழிலாள
வர்க்கத்தின் போராட்டங்களை இராணுவ சர்வாதிகாரத்தை ஜனநாயக
சீர்திருத்தங்களை மேற்கொள்ள கொடுக்கும் பயனற்ற
முன்னோக்கின்பின் திசைதிருப்புவதை மீண்டும் செய்யலாம் .
சமூக அதிருப்தி எகிப்தியப் புரட்சியின் ஓராண்டு
நிறைவுதினமான ஜனவரி 25ம் தேதிக்கு முன்பு வெடித்து எழலாம் என்ற
ஆழ்ந்த அச்சங்கள் எகிப்தின் ஆளும் வர்க்கத்தினுள் உள்ளது.
எகிப்திய மக்களில் 40%க்கும்மேற்பட்டவர்கள் இன்னும்
நாளொன்றிற்கு $2 க்கும் குறைவான பணத்தில் வாழ்கின்றனர்;
ஊதியங்கள் இப்பிராந்தியத்திலேயே மிகக் குறைவானவற்றுள் ஒன்றாக
உள்ளது. எகிப்தின்
CI
Capital
ன்
நிர்வாகக் குழுவின் உறுப்பினர் கரிம் ஹெலால் கருத்துப்படி
வேலையின்மை
“ஒரு
குறித்த நேரத்தில் வெடிக்கும் குண்டுபோல் உள்ளது”.
தொழிலாளர்களின் சமூக மற்றும் அரசியல் தேவைகளை
எகிப்தின் முழு அரசியல் நடைமுறையில் இருந்து—எல்பரடேய்
மற்றும் அவருடைய குட்டிமுதலாளித்துவ
“இடது”
நட்புக்கள் உட்பட—பிளவுகள்
வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஆட்சிக்குழுவின் மேற்பார்வையில்
நடக்கும் தேர்தல்கள் குறித்து வெகுஜன அதிருப்தி உள்ளது;
இத்தேர்தல் ஆட்சிக்குழுவுடன் மிக நெருக்கமாக உள்ள முஸ்லிம்
பிரதர்ஹுட் தலைமையிலான ஒரு வலதுசாரி அரசாங்கத்தை
ஏற்படுத்தக்கூடும். மிகக் குறைந்த அளவில் வாக்குப்பதிவுகள்
நடந்த நிலையில், சுதந்திர மற்றும் நீதிக் கட்சி என்னும்
முஸ்லிம் பிரதர்ஹுட்டின் அரசியல் பிரிவு கிட்டத்தட்ட மொத்த
வாக்குகளில் பாராளுமன்றத் தேர்தல்களில் 40%ஐப் பெற்றுள்ளது.
வெறுக்கப்படும் இராணுவ ஆட்சிக்குழுவிற்கு முட்டுக் கொடுக்க
முயலப்போவதாக சுதந்திர, நீதிக் கட்சி அடையாளம் காட்டியுள்ளது;
அதன் குற்றங்களுக்கு ஒரு மொத்த பொதுமன்னிப்பையும்
கொடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது. தனியார் உடைமையான எகிப்திய
நாளேடு அல் தஹ்ரிர் கருத்துப்படி, சுதந்திர,
நீதிக்கட்சியின் துணைத் தலைவர் எசம் அல் எரியன் சமீபத்தில்
“வரவிருக்கும்
தேர்தலில் முந்தைவற்றைக் காட்டிலும் கூடுதலான வகையில் சிறப்பு
நிலையை அனுபவிப்பதற்கு இராணுவத்திற்கு உரிமை உண்டு”
என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட
மக்கள் அதிகாரத்திடம் அதிகார மாற்றம் என்பது
“அரசியல்
அரங்கில் இருந்து ஆட்சிக்குழு மறைந்துவிடும் விளைவை
ஏற்படுத்தக்கூடாது.”
என்றும் கூறினார்.
எல்பரடேயும் இளைஞர் குழுக்களில் அவருடைய
ஆதரவாளர்களும், எகிப்திய
“இடதும்”
இன்னும் நயமான கருவி எகிப்திய முதலாளித்துவ அரசாங்கம்
அகற்றப்படுவதைத் தடுக்கத் தேவை என்று கோரியுள்ளனர். பல முறை
அவர் இராணுவ ஆட்சிக்குழுவைச் சந்தித்து
“தேசியப்
பாதுகாப்பு அரசாங்கத்திற்கு”
பகிரங்க அழைப்புக்களை இளைஞர் குழுக்கள் மற்றும் குட்டி
முதலாளித்துவ
“இடது
சக்திகளின் ஆதரவுடன் விடுத்துள்ளார். இதில் புரட்சிகர
சோசலிஸ்ட்டுக்களின் தலைவரான கமால் கலீலும் அடங்குவார்.
ஆனால், எல் பர்டேயின் தலைமையில் ஒரு
“தேசியப்
பாதுகாப்பு அரசாங்கத்திற்கு”
எதிராகத் தளபதிகள் முடிவெடுத்தனர். மாறாக
அவர்கள் பிரதம மந்திரி எசம் ஷரப்பிற்குப் பதிலாக கமால்
கன்ஜௌரியை (இருவருமே முபாரக்கின்கீழ் முன்னாள் மந்திரிகளாக
இருந்தவர்கள்) நியமித்து பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக
நடந்த எதிர்ப்புக்களை நசுக்கினர். கிட்டத்தட்ட 60
எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள்
காயமுற்றனர்.
தற்போதைக்கு, அமெரிக்க ஏகாதிபத்தியம்—ஒவ்வொரு
ஆண்டும் $1பில்லியனுக்கும் மேல் எகிப்திய இராணுவத்திற்கு
நிதியளிப்பது—எல்பர்டேயின்
அரசியல் பணிகள் தேவை எனக் கருதும் எனத் தோன்றவில்லை. மாறாக அது
இஸ்லாமியவாதிகளுடன் நெருக்கமான உறவுகளைக் கட்டமைத்துக் கொண்டு
வருகிறது.
கடந்த வாரம் அமெரிக்க வெளிவிவகார துணைச்
செயலர், வில்லியம் பர்ன்ஸ், சுதந்திர, நீதிக்கட்சியின் தலைவரான
முகம்மது மோர்சியை அக்கட்சியின் கெய்ரோ தலைமையகத்தில்
சந்தித்தார். சுதந்திர, நீதிக்கட்சி
“அமெரிக்க-எகிப்திய
உறவுகளின் முக்கியத்துவத்தை நம்புவதாக”
மோர்சி
கூறினார். பர்ன்ஸின் வருகையை வரவேற்று,
“அரபு
வசந்தத்தின் விழைவுகளுடன் இணக்கமான முறையில் அமெரிக்கா அதன்
கொள்கைகளைப் பரிசீலனை செய்யவேண்டும்”
என்று கேட்டுக் கொண்டார்.
வெளிவிவகாரச் செயலகத்தின் செய்தித்தொடர்பாளர்
விக்டோரியா நூலந்த் பர்ன்ஸ்-மோர்சி பேச்சுக்களைப் பாராட்டி
கெய்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் சலாபிஸ்ட் (தீவிர
வலதுசாரி இஸ்லாமியர்கள்) அல் நௌர் கட்சியுடன் பேச்சுக்கள்
நடத்துகின்றனர் என்பதை உறுதி செய்தார்.
கடந்த ஆண்டில் அமெரிக்கா இஸ்லாமியர்களுடன்
கொண்டிருந்த உறவு உறுதியாக வலுப்பெற்றது; அதுவோ அமெரிக்காவின்
பிராந்திய நலன்களை தொழிலாள வர்க்கப் போராட்டங்களுக்கு எதிராகக்
காப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. லிபியாவில் நடந்த
ஏகாதிபத்தியப் போரில் இஸ்லாமியவாதிகள் முக்கிய பங்கைக்
கொண்டிருந்தனர்; அதே போல் கடந்த்த ஆண்டு அங்கு ஒரு மேற்கத்திய
சார்பு ஆட்சியை நிறுவுவதிலும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர்.
சிரியத் தேசியக் குழுவிலும் பிரதர்ஹுட் தீவிரமாக உள்ளது; அது
இப்பொழுது ஈரானிய ஆதரவு கொண்ட சிரிய ஆட்சியை அமெரிக்கா மற்றும்
அதன் மத்தியக் கிழக்கு ஆட்சிகளின் உதவியுடன் உறுதியற்றதாக ஆக்க
முயல்கிறது.
“இந்த
வரலாற்று மாற்றத்தின்”
(நியூ யோர்க் டைம்ஸ் விவரித்துள்ளபடி) நோக்கம் புரட்சிகரப்
போராட்டங்களை அடக்கி, பெருகும் சமூகப் பூசல்களை சுன்னி
இஸ்லாமிய முகாம் என்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழுள்ள
முகாமிற்கும் வாஷிங்டன் களிப்பற்ற நிலையில் காணும்
ஆட்சிகளுக்கும் இடையே திசைதிருப்பப் பார்க்கிறது—குறிப்பாக
ஈரானுக்கு எதிராக. ஒவ்வொரு கட்டத்திலும் இப்பொறுப்பற்ற
மூலோபாயம் ஒரு பெரிய பிராந்தியப் போர் ஏற்படும் இடரை
முன்வைக்கிறது.
எல்பர்டேயின் முடிவு அமெரிக்க ஏகாதிபத்தியம்
அல்லது எகிப்திய இராணுவ ஆட்சிக்குழுவின் பிற்போக்குத்
திட்டங்களுக்கு எந்த வகை கொள்கைரீதியான எதிர்ப்பையும்
பிரதிபலிக்கவில்லை. எகிப்தில் நிதிய மூலதனம் தொழிலாள
வர்க்கத்தின் மீது நடத்தும் தாக்குதல்களுக்கு அவர் கொடுக்கும்
ஆதரவில் இருந்து இது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஜனவரித்
ஆரம்பத்தில் இராணுவ ஆட்சி பொதுச்செலவுகளை 14.3
EGP
($2.36
பில்லியன்) வெட்டும் ஆணையைப் பிறப்பித்தது. நிதி மந்திரி
மொம்தாஸ் அல்-செயித்தின் கருத்துப்படி மிகப் பெரிய வெட்டுக்கள்
ஊதியங்களை (4பில்லியன்
EGP)
அளவிற்குத் தாக்கும்; அரசாங்கம் வாங்குவதையும்
சேவைகளையும்கூடத் தாக்கும்.
ஜனவரி 16, திங்களன்று, சர்வதேச நாணய
நிதியத்தில் இருந்து ஒரு தூதுக்குழு கெய்ரோவை ஒரு $3.2
பில்லியன் கடன் கொடுப்பதற்கான விவாதங்களுக்காக வந்து
சேர்ந்தது. இந்தப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு
இஸ்லாமியவாதிகளின் முழு ஆதரவு உள்ளது. அன்றாட நாளேடான அல்
மஸ்ரி அல் யௌம் கன்ஜௌரி மோர்சியையும், சுதந்திர, நீதிக்
கட்சியின் துணைத்தலைவர் சாத் அல்-கடட்னியையும்
IMF
கடன் பற்றி விவாதக்க சந்தித்தார் என்று
எழுதியுள்ளது.
எல்பரடேயின் ஆதரவாளர்களும் இதேபோன்ற சிக்கன
நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கின்றனர். டிசம்பர் 15ம் திகதி
அவர் கன்ஜௌரியிடம் ஒரு
“ஊக்கத்
திட்டத்தை”
அளித்தார்; இது
“முதலீடுகளை
ஈர்த்தல், உற்பத்தியை பெருக்குதல், வேலை வாய்ப்புக்களை
அளித்தல்”
ஆகியவற்றிற்கும் உதவும் நோக்கத்தைக் கொண்டது.
அவருடைய திட்டம் ஊதியக் குறைப்புக்களுக்கும், அரபு மற்றும்
சர்வதேச அமைப்புக்களில் இருந்து உதவிக்கும் அழைப்பு விடுத்தது.
எல் பர்டேயின் வலதுசாரிக் கொள்கைகள் இளைஞர்
கூட்டணிகளையும் குட்டி முதலாளித்துவ
“இடது”
கட்சிகளையும் அவருடைய சமீபத்திய தந்திரோபாயங்களை பாராட்டுவதை
தடுக்கவில்லை. ஐயத்திற்கு உரிய எல்காஜாலி ஹர்ப், 25 ஜனவரி
இளைஞர் கூட்டணியின் செய்தித்தொடர்பாளரும், ஜனநாயக முன்னணிக்
கட்சியின் உறுப்பினர்,
“அவர்
திரும்பிச் செல்லவில்லை, அதையொட்டி அவருக்குப் பின் ஒரு
வெற்றிடத்தையும் விடவில்லை. பணிகளின் வேர்களுக்கு அவர்
திரும்புகிறார், அது இளைஞர்களை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு
ஒன்றுபடுத்த உதவும்”
என்றார்.
இத்தகைய முன்முயற்சிகள் இராணுவம் ஏற்பாடு
செய்து நடத்தும்
“தேர்தல்களுக்கு”
ஆதரவளிக்கும்; இதைத்தான் எல்பரடேய் குறைகூறுவதாகக்
கூறப்படுகிறது. பல இளைஞர்கள் குழுக்கள், தாராளவாதக் கட்சிகள்,
மற்றும் குட்டி முதலாளித்துவ
“இடது
சக்திகள் ஆகியவை, ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம் மற்றும் கேபயாவும்,
“ஜனவரி
25, 2012ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மன்றத்திற்கு
அதிகாரத்தை ஒப்படைத்தல்”
என்ற
தலைப்பில் ஒரு முன்முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அவர்கள்
இத்தகைய கோரிக்கை
“புரட்சி
முற்றுப்பெறுகிறது”
எனக் கருதப்படலாம் என்று தவறாக காட்ட
முற்படுகின்றனர்.
போலி
“இடது”
RS
மீண்டும் ஒரு ஏமாற்றுத்தனப் பங்கைக் கொண்டுள்ள வகையில்,
இத்தகைய முன்முயற்சிகள் முன்னேற்றகரமானவை எனக் கூறுகிறது.
முன்முயற்சிக்கு முக்கிய ஆதரவு கொடுக்கப்பட வேண்டும் என்ற
அறிக்கையை அவர்கள் வெளியிட்டனர். அதே நேரத்தில்
“புரட்சி
முன்முயற்சிகளுக்கான தேடுதலுடன் நின்றுவிடவில்லை”
என்றும் அவர்கள் கூறினர்; மேலும்
“மக்கள்
இன்னும் ஆட்சியை அகற்ற விரும்புகின்றனர், அதையொட்டி வாழ்வு,
உரிமைகள், சமூக நீதி மற்றும் மனித கௌரவம் ஆகியவை”
அடையப்படமுடியும். என்றும் தெரிவித்துள்ளனர்.
RS, Kefaya, ElBaradei என்பவற்றின்
அரசியலை இணைக்கும் பிணைப்பு,
இராணுவ ஆட்சியை அகற்றுவதற்கான மற்றும்
தொழிலாளர்களின் அரசை எகிப்து மற்றும் சர்வதேச அளவில்
நிறுவுவதற்கு முற்படும் ஒரு தொழிலாள வர்க்க சுயாதீனப்
போராட்டத்தின்பால் கொண்டுள்ள விரோதப் போக்கு ஆகும். இறுதிப்
பகுப்பாய்வில், அவர்களுடைய முன்முயற்சிகள், எல்பரடேய்
அரசியலில் கொண்டுள்ள தன்னை இராணுவத்திடம் இருந்து
தள்ளிவைத்துக்கொள்ளும் நேர்மையற்ற முறைகளைப் போலவே, எகிப்தில்
தொழிலாள வர்க்கத்திற்கும் நிதிய மூலதனத்திற்கும் இடையே கடந்த
ஆண்டு நடந்த கடுமையான போராட்டத்தின் அனுபவங்களால் ஏற்கனவே
மறுக்கப்பட்டுவிட்ட அரசியல் போலித் தோற்றங்களை வளர்ப்பதுதான். |