WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
ஒபாமாவின் புதிய போர்க் கோட்பாடு சீனாவில் விவாதத்திற்கு
தூபமிடுகிறது
By John Chan
13 January 2012
use this version to print | Send
feedback
சீனாவின் மீது ஒரு புதிய மூலோபாய
முக்கியத்துவத்தை
காட்டுதல் என்ற ஜனாதிபதி
பாரக் ஒபாமாவின் கடந்த வார அறிவிப்பு, ஏற்கனவே வாஷிங்டனின்
மோதும் நிலைப்பாடு, இராணுவ மோதல் என்னும் அச்சுறுத்தலை எப்படி
எதிர்கொள்வது என்று சீன ஆளும் வட்டங்களிடையே உள்ள விவாதத்தை
தீவிரப்படுத்தியுள்ளது.
“அமெரிக்க
உலகத் தலைமையை நீடித்து வைத்துக்கொள்ளுதல்: 21ம் நூற்றாண்டுப்
பாதுகாப்பு முன்னுரிமை”
என்னும் பென்டகனின் ஆவணம் அமெரிக்க இராணுவப்
படைகளின் உலகளாவிய, முக்கிய மறுசார்பை, குறிப்பாக ஆசிய-பசிபிக்
பகுதியில், பிரதிபலிக்கிறது. சீனாவில் இராணுவ விரிவாக்கம்
“அதன்
மூலோபாய நோக்கங்களின் கூடுதலான தெளிவுடன் இணைந்து இருக்க
வேண்டும். அப்பொழுதுதான் பிராந்தியத்தில் மோதல் ஏற்படுவதைத்
தடுக்க முடியும்”
என்று அது வலியுறுத்தியிருந்தது.
உண்மையில், சீனா அமெரிக்காவின்
அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளது. ஜப்பான், தென் கொரியா,
ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ்
ஆகியவற்றுடன் உடன்படிக்கைகளை ஒபாமாவின் வலுப்படுத்தும்
முயற்சிகள் மற்றும் இந்தியா, இந்தோனிசியா மற்றும் வியட்நாம்
ஆகியவற்றுடன் புதிய கூட்டுக்களை கட்டமைக்கும் நிலை
(அமெரிக்கத்
தலைமையிலான ஆப்கானிய ஆக்கிரமிப்பு சீனாவின் மேற்குப் புறத்தில்
நடைபெறுவதைப் பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை)
ஆகியவை மூலம் பெய்ஜிங் ஒவ்வொரு முனையிலும்
சூழப்பட்டுள்ளது.
சீனா அதன் இராணுவச் செலவினங்களை கடந்த
தசாப்தத்தில் 200% உயர்த்தியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் சீனாவின் இராணுவத்தை அமெரிக்க இராணுவம் எவ்வித
மதிப்பீட்டின்படியும் ஒப்பீட்டளவில் சிறிதாக்கியுள்ளது. இராணுவ
செலவினங்கள் (6 மடங்கு அதிகம்) முதல் அதன் அணுசக்திக்
ஆயுதக்கிடங்கு வரை (35 முறை அதிகமானது). இதைத்தவிர ஒவ்வொரு
துறையிலும் பரந்த தொழில்நுட்ப மேன்மையையும் தக்க வைத்துக்
கொண்டுள்ளது.
பென்டகன் ஆவணத்திற்கு சீனாவின் ஆரம்ப
உத்தியோகபூர்வ பிரதிபலிப்பு மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தது.
அரசாங்கத்திற்கு சொந்தமான ஜின்ஹுயா செய்தி நிறுவனம் அமெரிக்கா
“தன்
கைகளை முறுக்கிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்”
என்று அழைப்பு விடுத்தது. அதே நேரத்தில்
“ஒரு
நேரிய மனப்பாங்குடனும் பனிப்போர் வகையிலான ஒரேயொரு வெற்றியாளன்
தான் இருக்கலாம் என்பதை மனத்தில் இருந்தும் அகற்றிவிட்டால்,
புதிய அமெரிக்க மூலோபாயம் பிராந்திய உறுதிப்பாட்டிற்கும்
செழிப்பிற்கும் உதவும், சீனாவிற்கும் சிறப்பு ஏற்படுத்தும்;
ஒரு அமைதியான சூழல் இருந்தால்தான் சீனா அதன் பொருளாதார
வளர்ச்சியை தொடரமுடியும்”
என்று அது கூறியுள்ளது.
சீனப் பாதுகாப்பு அமைச்சரகத்தின் செய்தித்
தொடர்பாளர் ஜெங் யான்ஷெங் இன்னும் குறைகூறும் முறையில்
திங்களன்று
“இந்த
ஆவணத்தில் அமெரிக்கா சீனாவிற்கு எதிராக எழுப்பியுள்ள
குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை”
என்று அறிவித்தார்.
“சீனா
மற்றும் சீன இராணுவத்துடன் அமெரிக்க ஒரு புறநிலை, பகுத்தறிவு
நிலைப்பாட்டுடன் நடந்து கொள்ளும், அதன் சொற்களிலும்
செயற்களிலும் கவனத்துடன் இருக்கும் என்றும், இரு நாடுகள்,
அவற்றின் இராணுவங்களுக்கு இடையே உள்ள உறவுகளுக்கு வளர்ச்சி
தரும் வகையில் பயன் கொடுக்கும்”
என்றும் தான் நம்புவதாகக் கூறினார்.
People’s Liberation Daily
ல் எழுதிய மேஜர் ஜெனரல் லுவோ யுவான் அமெரிக்கா சீனாவை இலக்கு
வைக்கிறது என்று அப்பட்டமாக எச்சரித்தார்.
“நம்
கண்களைக் கொண்டு சுற்றிலும் இருப்பவற்றைப் பார்த்தால்,
அமெரிக்கா ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஐந்து முக்கிய இராணுவ
கூட்டுக்களை ஊக்கப்படுத்தியிருப்பதையும், அதனை ஐந்து முக்கிய
இராணுவத் தளங்களின் நிலையை திருத்தியமைத்துள்ளதையும் காணலாம்.
அதே நேரத்தில் சீனாவைச் சுற்றி உள்ள இராணுவத் தளங்களில்
கூடுதல் நுழைவு உரிமைகளையும் நாடுகிறது. இவை சீனாவிற்கு எதிராக
இயக்கப்படவில்லை என்பதை எவர் நம்ப முடியும்?”
என்று அவர் கேட்டார்.
கடந்த ஆண்டு லிபியாவில் நேட்டோ தலையீட்டை
அடுத்து அந்நாட்டில் சீன முதலீடுகளுக்குப் பில்லியன் கணக்கான
டாலர்கள் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து வெளிவந்த பெய்ஜிங்கின்
வெவ்வேறு எதிர்கொள்ளும் முறைகள் பற்றிய விவாதங்கள் இப்பொழுது
தீவிரமாகியுள்ளன. ஒரு முகாம் தற்போதைய எச்சரிக்கையுடன் கூடிய
கொள்கையான அமெரிக்காவுடன் மோதல் என்பதைத் தவிர்க்க வேணடும்
என்று வாதிடுகிறது. இரண்டாவது முகாம் உலகம் முழுவதும்
அதிகரித்துவரும் சீனாவின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை
தீவிரமாக பாதுகாக்கும் கொள்கையை நோக்கி திரும்ப வேண்டும்
என்கின்றது.
அதிக பரபரப்பு இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும்
என்ற அணுகுமுறை உடையவர்கள் சீனா ஒன்றும் அமெரிக்காவிற்குச்
சவால் விடும் நிலையில் இல்லை என்று வாதிடுகின்றனர். அவர்களுடைய
கவலைகள் சீனப்பொருளாதாரத்தின் பாதிக்கப்படும் தன்மையைப்
பிரதிபலிக்கிறது. அதுவோ மிக அதிகமாக முன்னேற்றம் அடைந்துள்ள
மேலை நாடுகளைத்தான் முதலீடு, தொழில்நுட்பம் மற்றும்
சந்தைகளுக்கு நம்பியுள்ளது. வாஷிங்டனுடன் வெளிப்படையாக மோதல்
ஏதும் ஏற்பட்டால் அது அதிகமாக பாதிக்கப்பட்டுவிடும்.
China Newsweek
ல் ஜனவரி 3ம் திகதி வெளியிட்ட கட்டுரை ஒன்றில், உயர்கல்வியளர்
ஜேங் யங்நியான் சீனாவிற்கும் அமெரிக்கா, அதன் நட்பு
நாடுகளுக்கும் இடையே
“ஒரு
புதிய பனிப்போர்”
குறித்து எச்சரித்தார், குறிப்பாக வட கொரியா பற்றி. அத்தகைய
மோதல்
“சீனாவிற்குப்
பெரும் பாதகத்தை ஏற்படுத்தும்”,
ஏனெனில் சீனா அமெரிக்காவிற்கு ஈடாகாது. அமெரிக்காவின் சர்வதேச
மேலாதிக்கம்
“அரசியல்,
பொருளாதாரம், இராணுவம் எனப் படர்ந்து பன்முகமானது, ஆனால்
சீனாவுடையது இன்னமும் முக்கியமாக பொருளாதாரத் தன்மை
உடையதுதான்.”
என்றார்.
ஒரு புதிய பனிப்போரை சீனா சமாளித்துவிடும் என்ற
வகையில் குறிப்புக் காட்டிய ஜெங் விளக்கினார்:
“கிழக்கு
ஆசியா இரு முகாம்களாக பிரிந்தால், சீனா அதன் இடத்தை கிழக்கில்
இழக்கும்போது, மேற்கே அது விரிவாக்க முற்பட வேண்டும். இத்தகைய
போக்கு சாத்தியமானது என்பதுடன், ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.
அதாவது அரபு நாடுகளுடன் அதன் உறவுகளை வளர்த்துக் கொள்ளுதல்
என்பது.”
ஆனால் சீனாவிற்குச் சிறந்த விருப்பத் தேர்வு அமெரிக்காவுடன்
ஒத்துழைப்பதுதான், அதுதான்
“மேலை
ஆதிக்கம் உடைய சர்வதேச சமூகத்துடன் இணைந்துகொள்ளுவதற்கான
பாதையை”
சீனா தேர்ந்தெடுத்துள்ளதுடன் இயைந்து நிற்கும்.
அதுவும் 1970களில் இருந்து அமெரிக்காவுடன் நல்லுறவுகளைக்
கொள்ளத் தொடங்கியதில் இருந்து உள்ள நிலைப்பாட்டில்.
பெய்ஜிங்கின் தற்போதைய கொள்கையான
“அமைதியான
எழுச்சி”
என்பது பற்றிய விமர்சனங்கள், அமெரிக்கா ஏற்கனவே
சீன முதலீடுகளின் மீது கொண்டுள்ள ஆக்கிரமிப்புத்தன்மை, கவனமாக
இயக்கப்படும் இராஜதந்திர செல்வாக்கு ஆகியவற்றின் பாதிப்பைச்
சுட்டிக் காட்டுகிறது. அமெரிக்கா லிபிய ஆட்சியை அகற்றுவதற்கு
ஆதரவு கொடுத்தது என்பது மட்டுமின்றி இப்பொழுது ஈரானையும்
அச்சறுத்துகிறது. ஈரான் ஒரு முக்கிய எண்ணெய் அளிக்கும் நாடு
என்ற முறையில் சீனா நம்பியுள்ளது. தென் கிழக்கு ஆசியாவில்,
ஒபாமா நிர்வாகம் பிலிப்பைன்ஸையும் வியட்நாமையும் அவற்றின்
உரிமைகளை தென் சீனக் கடலில் சீனாவிற்கு எதிராக உறுதிப்படுத்த
ஊக்கம் கொடுக்கிறது. மேலும் பிராந்திய அமைப்புக்களில் சீனாவின்
செல்வாக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.
பீக்கிங் பல்கலைக்கழகத்தில் சீன மூலோபாய
ஆய்வுகளில் ஆராய்ச்சியாளராக இருக்கும் டை ஜு கடந்த வாரம்
Global Times
ல்
சீனா ஒரு
“கோடு
போடவேண்டும்”
என்று வாதிட்டுள்ளார். முந்தைய சீனத் தலைவர் டெங் ஜியோபிங் இன்
நிலைப்பாடான நாடு
“ஒரு
பணிந்த நிலைப்பாட்டைக்”
கொண்டிருக்க வேண்டும், சீனா பொருளாதார
வளர்ச்சியில் கவனத்தை காட்ட வேண்டும், சர்வதேசக் குழுக்கள்
எவற்றிலும் சேர்வதையோ, கூட்டுக்கள் அமைப்பதையோ தவிர்க்க
வேண்டும் என்பதற்கு எதிராக வாதிட்டுள்ளார்.
அவருடைய 2009 புத்தகமான
C-shaped Encirclement (C-வடிவச்
சுற்றிவளைத்தல்)
என்பதில் அமெரிக்கா ஆசிய பசிபிக்கில் சீனாவைக்
கட்டுப்படுத்த முற்படுவதாக எச்சரித்த வகையில் டை நன்கு
அறியப்பட்டவர். இப்பொழுது அவர் அமெரிக்காவுடனான
சமாதானப்படுத்துதல் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
என அழைப்புவிடுத்து, 1,000 ஆண்டுகளுக்கு முன் சாங்
மன்னராட்சியின் வரலாற்றுப் படிப்பினைகளை எனக் கூறப்படுபவற்றைச்
சுட்டிக்காட்டியுள்ளார். அது இராணுவ அச்சுறுத்தலை ஒன்றை
அலைந்திரியும் வடக்கு அரசுகளிடம் இருந்து எதிர்கொண்டு, அவற்றை
எதிர்க்கும் வகையில் சலுகைகளைக் கொடுத்து இராணுவத்
தயாரிப்புக்களை நிறுத்தியபோது, அழிவைத்தான் சந்தித்தது.
குளோபல் டைம்ஸ்
கட்டுரையில் டை அமெரிக்க
“உலகத்தை
வெற்றிபெறுவதற்கு ஒரு தெளிவான சாலை வரைபடத்தையும், கால
அட்டவணையையும் கொண்டுள்ளது”
என்று அவர் கூறியுள்ளார். அத்தகைய வெற்றி
ஆப்கானிஸ்தான், ஈரான், பாக்கிஸ்தான் இவற்றில் இருந்து படர்ந்து
இறுதியில் சீனாவையும் ரஷ்யாவையும் எதிர்க்கும் இலக்கைக்
கொண்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ரஷ்ய ஈடுபாடு
கொள்ளக்கூடிய ஈரானுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்
பெருகியுள்ள நிலையை எதிர்கொள்கையில், சீனா அதற்கேற்பத்
தயாரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று வாதிட்டுள்ளார்.
சீன ஆளும் உயரடுக்கிற்கு அதிக
சூழ்ச்சித்திட்டங்களுக்கு அதிக இடமில்லை என்ற உண்மையைத்தான்
உயர்த்திக் காட்டுகிறது. அமெரிக்காவுடன்
“ஒத்துழைப்பு”
என்பது வாஷிங்டனுடைய பொருளாதாரக் கோரிக்கைகள், யுவான்
மறுமதிப்பீடு போன்றவற்றிற்கு சலுகை அளிக்கப்பட
வேண்டும்
என்ற பொருளைத் தரும். இது சீனத் தொழில்துறைப் பிரிவுகளை
திவாலாக்கி, பரந்த சமூக அமைதியின்மையை ஏற்படுத்திவிடும்.
சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் ஆக்கிரோஷ
நிலைப்பாடு விட்டுக்கொடுத்து செல்லும் கொள்கைக்கு
முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என்பவர்களுடைய நிலைப்பாட்டை
வலுப்படுத்தியுள்ளது. இதனால் போர் ஆபத்து என்பது
அதிகரிக்கின்றது. |