சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US prepares for war against China

சீனாவிற்கு எதிரான போருக்கு அமெரிக்கா தயாராகின்றது

Peter Symonds
12 January 2012

use this version to print | Send feedback

அமெரிக்க உலகத் தலைமையை நீட்டித்து வைத்துக்கொள்ளுதல்: 21ம் நூற்றாண்டுப் பாதுகாப்பில் முன்னுரிமை என்று கடந்த வாரம் வெளியிடப்பட்ட பென்டகனின் புதிய மூலோபாய வழிகாட்டி, அமெரிக்க போர்த் திட்டத்தில் சீனாவை உறுதியாக மையத்தில் நிறுத்துகிறது. ஜனாதிபதி ஒபாமா பதவியேற்றதில் இருந்து மத்திய கிழக்கில் இருந்து ஆசியாவிற்கு அமெரிக்க வெளியுறவு, இராணுவக் கொள்கை மாற்றப்பட்டுள்ளதை இது முறைப்படுத்துகிறது.

அமெரிக்கப் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்கள் மேற்கு பசிபிக் மற்றும் கிழக்கு ஆசியாவில் இருந்து இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வரை பரவியுள்ள நிகழ்வுகளுடன் தவிர்க்க முடியாமல் பிணைந்துள்ளது என்று ஆவணம் அறிவிக்கிறது. இது நாம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நம் சீரமைப்பு முறையை சீர்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை அடையாளம் காட்டுகிறது என்றும் அது குறிப்பிட்டுள்ளது. மேலும் அமெரிக்க இராணுவ உடன்பாடுகள், பங்காளித்தனங்கள் ஆகியவற்றின் வலைப்பின்னல்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா ஒரு பிராந்திய  பொருளாதார நங்கூரம் எனவும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் என்னும் பரந்த பகுதியில் பாதுகாப்பை வழங்கக்கூடியது. என்றும் தெரிவிக்கிறது.

அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் ஒரே நாடு சீனாதான் என்றும், அது பிராந்தியத்தில் மோதல்களைத் தவிர்ப்பதற்கு அதன் மூலோபாய நோக்கங்களை இன்னும் அதிகமாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, அதன் நட்புநாடுகளுடன் இணைந்து உலகத்தின் பொதுப்போக்குவரத்து பாதைகளை அணுகும் உரிமையைப் பாதுகாக்கும் என்றும் ஆவணம் அறிவிக்கிறது. சுதந்திரமான கடல்பயணம் என்னும் தலைப்புரையில் அமெரிக்கா ஏற்கனவே தென் சீனக் கடலில் சீனாவின் கடற்பயண உரிமைகளை இந்த மூலோபாய நீர்நிலைகளில் சவால் விடும் வகையில் பெரிதும் பதட்டங்களை அதிகரித்துள்ளது.

ஆசியாவில் பென்டகனின் இராணுவச் சார்புமாற்றம், ஆசியா மற்றும் சர்வதேச அளவில் பெருகிவரும் சீனப் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கை ஆக்கிரோஷமான முறையில் அமெரிக்க இராஜதந்திர வழித்தாக்குதல் மூலம் வெட்டுவதற்கான முயற்சிகளுடன் இணைந்து வந்துள்ளது. சக்திவாய்ந்த அமெரிக்க அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கை இயற்றும் பிரிவுகள் 2008ம் ஆண்டு ஜனாதிபதிப் பதவிக்கு ஒபாமாவை ஆதரித்த காரணம் சீனா தனது நிலையில் ஏற்றம் கொண்டுள்ளது, அமெரிக்காவோ ஈராக், ஆப்கானிய போர்கள் என்று புஷ் நிர்வாகம் நடத்தியதால் சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளது என்ற ஆழ்ந்த கவலையினால்தான்.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க மறுசார்பு என்ற தலைப்பில், வெளியுறவுக் குழுவின் தலைவரான ரிச்சர்ட் ஹாஸ் எழுதிய கட்டுரையில் இந்த உணர்வுகள் ஒலிக்கப்பெற்றன. அமெரிக்கா மத்திய கிழக்கில் அதிகமாக ஈடுபட்டுள்ளது .... கிழக்கு ஆசியா அல்லது பசிபிக் குறித்து அது போதுமான கவனத்தைக் கொடுக்கவில்லை; அப்பகுதியில்தான் இருபத்தியோராம் நூற்றாண்டின் வரலாற்றின் பெரும்பகுதி எழுதப்படும் என்று அவர் எச்சரித்தார். ஒபாமாவின்கீழ் ஆசியா மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதை வரவேற்ற அவர் இப்பிராந்தியத்தின் பொருளாதார முக்கியத்துவத்தை மிகைப்படுத்துவது கடினம் என்று அறிவித்து, சீனா அதன் பெருகிவரும் பலத்தை அழுத்தம் தருவதற்குப் பயன்படுத்த முயலாமல் இருக்க அமெரிக்க உறுதிப்படுத்த வேண்டும். என்றும் சேர்த்துக் கொண்டார்.

ஆரம்பத்தில் 2008/09 உலக நிதிய நெருக்கடிக்கு நடுவே, ஒபாமா நிர்வாகம் உலகிலேயே மிக அதிகமாக அமெரிக்க அரசாங்க பத்திரங்களை வைத்திருக்கும் சீனாவுடன் சுமுகமாகச் செல்லும் கட்டாயத்திற்கு உட்பட்டது. ஆனால் விரைவில் அமெரிக்கா அனைத்து முனைகளிலும் தாக்குதலுக்கு மாறியது. அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹில்லரி கிளின்டன் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் (ASEAN) உச்சிமாநாட்டில் அமெரிக்கா தென்கிழக்கு ஆசியாவிற்கு மீண்டும் வந்துவிட்டது என அறிவித்தார்.

ASEAN உடைய அடுத்த ஆண்டுக் கூட்டத்தில், கிளின்டன் வேண்டுமேன்றே சீனாவுடனான அழுத்தங்களை எரியூட்டும் வகையில் அமெரிக்கா தென் சீனக்கடலில் ஒரு தேசிய நலனைக் கொண்டுள்ளது என்றும் ASEAN அங்கத்துவ நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையே உள்ள மோதல்களில் மத்தியஸ்தம் செய்யத்தயார் என்றும் அறிவித்தார். இதற்கு முகங்கொடுக்கையில், சீன வெளியுறவு மந்திரி இத்தைகைய கருத்துக்கள் கிட்டத்தட்ட சீனா மீதான தாக்குதலுக்கு ஒப்பாகும் என்றார். அமெரிக்காவால் ஊக்குவிக்கப்பட்ட நிலையில், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகள் தொடர்ச்சியான மோதல்களை தூண்டும் வகையில் தங்கள் உரிமைகளை தென்சீனக் கடலில் ஆத்திரமூட்டலுடன் முன்வைத்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க இந்திய-பசிபிக் பகுதி முழுவதும் அதன் இராணுவக் கூட்டுக்களை, குறிப்பாக ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் உறுதியாக வலுப்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸிற்கு அமெரிக்கா போர்க்கப்பல்களைக் கொடுத்தது, வியட்நாமுடன் கூட்டுப் பயிற்சிகளை நடத்தியது, சிங்கப்பூரில் புதிய கடலோரப் பகுதிப் போர்க்கப்பல்களைத் தளமிறக்கியது, தைவானுக்கு மிகப் பெரிய புதிய ஆயுதங்கள் தொகையை விற்பனை செய்தது மற்றும் இந்தோனிசியாவின் இழிந்த கோபாசஸ் விஷேட படைகளுடன் அமெரிக்க கூட்டுழைப்பிற்கு இருந்த தடையை நீக்கியது. கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி ஒபாமா ஆஸ்திரேலியாவிற்குப் பயணித்து, வடபுறம இருக்கும் டார்வின் நகரில் 2,500 மரைன்கள் நிறுத்தப்படுவர் என்றும் மிகப் பரந்த முறையில் ஆஸ்திரேலிய கடற்படை, விமானத் தளங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

அமெரிக்க இராணுவ மூலோபாயத்தின் மையத்தானம் தென்கிழக்கு ஆசியா முழுவதும் முக்கிய சந்திப்பகுதிகளின் கடற்படை மேலாதிக்கம் கொள்வது ஆகும். குறிப்பாக மலாக்கா ஜலசந்தியில் இதன் வழியேதான் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் சீனா இறக்குமதி செய்யும் முக்கிய எரிசக்தி மற்றும் மூலப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு தடையற்ற கடல்பயணச் சுதந்திரம் இந்த நீர்வழிகள் மூலம் என்பது அமெரிக்க கடற்படைக்கு சீனாவை முற்றுகையிடும் திறனைக் கொடுத்தல் என்பதுடன் சீனப் பொருளாதாரத்தை மண்டியிடச் செய்தல் என்பதும் ஆகும். 2006ம் ஆண்டு அதன் நான்காண்டுகளுக்கான பாதுகாப்பு மறு ஆய்வில் பென்டகன் அட்லான்டிக்கில் இருந்து நகர்தல் என்பது குறித்து முன்னிழல் காட்டியது. அதையொட்டி குறைந்தப்பட்சம் 6 விமானந்தாங்கி போர்க்கப்பல்களும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களில் 60% மும் பசிபிக்கிற்கு ஒதுக்கப்பட்டன.

பொருளாதார துறையில் ஒபாமா நிர்வாகம் பலமுறையும் சீனா அதன் யுவான் டாலருக்கு எதிராக மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. இந்தச் செயற்பாடு சீன ஏற்றுமதித் தொழில்களின் கணிசமான பிரிவுகளை அழித்துவிடக்கூடும். APEC எனப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார உச்சிமாநாடு நவம்பரில் நடந்தபோது, ஒபாமா ஒரு புதி வணிக முகாமை அறிவித்தார். அட்லான்டிக் இடையிலான கூட்டுழைப்பு —Trans-Pacific Partnership—அமெரிக்காவின் வணிக விதிகளை பெய்ஜிங் ஏற்க வேண்டும் என்ற கட்டாயத்தைக் கொடுப்பது ஆகும். அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளும் வேண்டுமென்ற பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன. லிபியா மீதான நேட்டோப் போர் மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்கள் ஆகியவை சீனாவின் முதலீடுகள் மற்றும் எரிசக்தி விநியோகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டன.

இந்த சீனாவுடனான அமெரிக்க மோதலுக்கு உந்துதல் சக்தி ஒப்புமையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரச் சரிவு ஆகும். அமெரிக்கா ஒரு மூலோபாயத் திறன் கொண்ட போட்டி நாட்டின் எழுச்சியைத் தடுக்க உறுதி கொண்டுள்ளது. பென்டகனின் சமீபத்திய மூலோபாய வழிகாட்டி தற்போதைய சர்வதேச ஒழுங்கு விதிமுறைகளின் அடித்தளத்தில் தக்க வைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுகிறது. ஆனால் இது அமெரிக்க மேலாதிக்கத்திற்கு உட்பட்ட உலக ஒழுங்கு தொடர்தல் என்னும் பொருளைத் தரும். அதில் பசிபிக் பெருங்கடல் ஒரு நூற்றாண்டு காலமாக ஒரு அமெரிக்க ஏரி என்று கருதப்பட்டது. சீனாவோ அமெரிக்க இராணுவக் கூட்டுக்களின் வலைப்பின்னலால் சூழப்பட்டுள்ளது. பெய்ஜிங்கின் பொருளாதார, மூலோபாய நலன்கள் வாஷிங்டனுடையதற்கு தாழ்த்தப்படும்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே மையம் கொள்ளும் பேரழிவு தரும் உலக மோதல் என்னும் நிலை கொடுக்கும் ஆபத்திற்கு உலகம் சென்றுகொண்டிருக்கிறது. இந்த ஆபத்து தனிப்பட்ட அரசியல் தலைவர்களின் அகநிலையான நோக்கங்களில் இருந்து வரவில்லை மாறாக ஆழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடி எரியூட்டும் பூகோள-அரசியல் போட்டியானால் வருகிறது. அமெரிக்கா பொறுப்பற்ற முறையில் அதன் இராணுவத்தை பயன்படுத்தி அதன் போட்டி நாடுகளைக் குழிபறிப்பிற்கு உட்படுத்தி பொருளாதாரச் சரிவின் சுமையை ஏற்கக் கட்டாயப்படுத்துகிறது. இதையொட்டி சீனாவுடனான மோதல் என்பது தவிர்க்க முடியாதது ஆகும். பிந்தைய நாடோ  தான் மூலப்பொருட்கள் மற்றும் எதிசக்தி விநியோகங்களை உலகம் முழுவதும் பெறவேண்டிய நிலையினால் தற்போதைய சர்வதேச ஒழுங்கை குழப்பத்திற்குள்ளாக்குகின்றது. பல ஆபத்துக்களைக் கொடுக்கும் இடங்களான வட கொரியா தைவான், தென்சீனக் கடல் மூன்று மட்டும் குறிப்பிடப்படுகிறது போரைத் தூண்டிவிடக்கூடும்.

ஒரு புதிய உலக யுத்தத்தை தடுத்து நிறுத்தக்கூடிய சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம்தான். அது இந்த யுத்தத்திற்கான காரணமான முதலாளித்துவ அமைப்பு முறையையும் மற்றும் உலகம் காலாவதியான போட்டி அரசுகளாக பிளவுபட்டிருப்பதையும் இல்லாதொழித்து, ஒரு திட்டமிட்ட உலக சோசலிச பொருளாதாரத்தை நிறுவுவதன் மூலம்தான் சாத்தியமாகும். இதுதான் உலக ட்ரொஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் முன்னோக்காகும்.