சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

As Europe tips into recession, France and Germany call for more austerity

ஐரோப்பா மந்தநிலையில் மூழ்குகையில், பிரான்ஸும் ஜேர்மனியும் இன்னும் அதிகமான சிக்கன நடவடிக்கைகளைக் கோருகின்றன

By Stefan Steinberg
12 January 2012

use this version to print | Send feedback

கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களுக்குப் பின் சற்று இடைவெளியைத் தொடர்ந்து, புதிய ஆண்டு ஐரோப்பிய தலைவர்களிடையே பரபரப்பான தொடர்ச்சியான பேச்சுக்களுடன் தொடங்கியது. கடந்த வெள்ளியன்று இத்தாலியில் புதிதாகப் பதவியில் இருத்தப்பட்டுள்ள தொழில்நுட்பவாத அரசாங்கத்தின் தலைவரான மரியோ மொன்டி பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியைச் சந்தித்தார். திங்களன்று சார்க்கோசி ஜேர்மனிய சான்ஸ்லரான அங்கேலா மேர்க்கெலைச் சந்தித்தார்; புதனன்று சார்க்கோசி மொன்டியுடனான பேச்சுக்களை நடத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவரான கிறிஸ்டின் லகார்ட் அவருடைய தனிப் பேச்சுக்களை மேர்க்கெலுடனும் சார்க்கோசியுடனும் நடத்தினார். இக்கூட்டங்களுக்காகக் கூறப்பட்ட நோக்கம் இம்மாத இறுதியில் கூடவிருக்கும் மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கான ஒரு கூட்டு மூலோபாயம் ஆகும். உண்மையில், ஐரோப்பியத் தலைவர்களும் லகார்டும் இக்கூட்டங்களை ஐரோப்பாவில் பெரிதும் ஆழ்ந்துவரும் நெருக்கடியை எப்படி முகங்கொடுப்பது என்பது பற்றி விவாதிக்கப் பயன்படுத்தினர். கூட்டங்களின் இறுதி முடிவு கிரேக்கத்திற்கு எதிராக புதிய அச்சுறுத்தல்களை வெளியிடுதல் மற்றும் ஐரோப்பா முழுவதும் இன்னும் சிக்கன நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்னும் மந்திரத்தை மறுபடியும் வலியுறுத்துவதற்குத்தான்.

திங்கள் கூட்டத்தைத் தொடர்ந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஜேர்மனியின் சான்ஸ்லர் கிரேக்கம் தொடர்பான தன் கருத்துக்களை வெளியிட்டார். ஐரோப்பிய ஒன்றியமும், சர்வதேச நாணய நிதியும் உறுதியளித்திருந்த இரண்டாம் உதவிப் பொதியான 130 பில்லியன் யூரோக்களை கிரேக்க அரசாங்கம் சமீபத்திய சுற்றான வாழ்க்கைத்தரங்கள் மற்றும் வேலைகள் மீதான தீய தாக்குதல் என்று அவை கோரியிருந்தவற்றை செயல்படுத்தாவிட்டால் அந்நாட்டிற்கு அளிக்கப்பட மாட்டாது என்று அச்சுறுத்தினார்.

கடந்த ஆண்டு ஒரு ஐரோப்பிய உச்சிமாநாட்டில் கிரேக்கத்திற்கான கடன் இறுதி வடிவம் பெற்றது; அதில் நிதிய அமைப்புக்கள் குறைந்தப்பட்சம் கிரேக்கப் பத்திரங்களில் 50 சதவிகிதமாவது தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. கிரேக்கக் கடன்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் இப்பொழுது வங்கிகள் மற்றும் முதலீட்டு நிதிகள் இன்னும் நல்ல உடன்பாட்டைக் காண்பதற்கான கடுமையான அழுத்தம் கொடுத்திருப்பதை அடுத்து முடங்கியுள்ளன.

ஆனால் திங்கள்கிழமைன்று மேர்க்கெலும் சார்க்கோசியும் கிரேக்கப் பொருளாதாரத்தை பிணைப் பணத்தின் மூலம் நிறுத்த முற்படும் முதலீட்டாளர்கள் குறித்து ஏதும் கூறவில்லை. மாறாக, கிரேக்கம் இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்னும் மேர்க்கெலின் அழைப்பு சார்க்கோசியின் ஒப்புதலைப் பெற்றது; அவர் ஐரோப்பிய நெருக்கடியின் தீவிரத்தைப் பற்றித்தான் பேசினார். யூரோப்பகுதியில் நிலைமை மிக அழுத்தமாக உள்ளது.... யூரோப் பகுதியின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு எனக்கூறலாம் என்று அவர் வலியுறுத்தினார்.

சார்க்கோசி-மேர்க்கெல் பேச்சுக்கள் நடந்த அன்றே, ஜேர்மனி அரசாங்கப் பத்திரங்களை விற்று, -0.01 சதவிகித வட்டி விகிதம் கொடுக்கத் தயாராக இருக்கும் வாங்குபவர்களை ஈர்க்க முடிந்தது. அரசாங்கப் பத்திரங்களை வங்கிகள் ஒரு எதிர்மறை வட்டிவிகிதத்தில் வாங்குவது என்பது வங்கி முறைக்குள் இருக்கும் மிகத்தீவிரப் பாதுகாப்பற்ற தன்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. தங்கள் வரவுப் புத்தகங்களில் junk கடன் பற்றிய பயங்களால், ஒருவருக்கு ஒருவர் கடன் கொடுப்பதைக் காட்டிலும், வங்கிகள் இழப்பில் ஐரோப்பாவிலேயே உறுதியான பொருளாதாரம் எனக் கருதப்படும் நாட்டிலிருந்து பத்திரங்களை நஷ்டத்தில் வாங்குவதை விரும்புகின்றன. எதிர்முறை வட்டிவிகிதத்தில் கடைசியாக கடன் வாங்கப்பட்டது லெஹ்மன் பிரதர்ஸ் சரிவைத் தொடர்ந்து நிதியச் சந்தைகள் கரைப்பின் விளிம்பில் இருந்தபோது அமெரிக்கப் பத்திரங்களை வாங்கியபோதுதான்.

ஜேர்மனியில் வங்கிகள் நம்பிக்கை வாக்கைக் கொடுத்திருப்பது, ஐரோப்பா முழுவதும் 2012 ல் மந்தநிலை வளருகிறது என்று புதிய புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டியதை மீறியும் வந்துள்ளது; ஜேர்மனியப் பொருளாதாரம் 2011 கடைசிக் காலாண்டில் கணிசமான பொருளாதாரக் கீழ்நோக்கைக் கண்டது.

ஐரோப்பியக் கடன் நெருக்கடியின் ஆரம்பத்தில் இருந்தே, கிரேக்கம் ஐரோப்பிய சங்கிலித்தொடரில் மிக நலிந்த பிணைப்பு என்றுதான் அடையாளம் காணப்பட்டிருந்தது. ஐரோப்பா முழுவதும் சர்வதேச நிதிய உயரடுக்கு சுமத்த முற்படும் சமூக எதிர்ப்புரட்சியைச் செயல்படுத்துவதற்கான சோதனைக்களமாகத்தான் பயன்படுத்தப்பட்டது. ஏற்கனவே புத்தாண்டின் தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்படாத கிரேக்கத் தொழில்நுட்பவாதப் பிரதம மந்திரி, லூகாஸ் பாப்படெமோஸ் தன்னுடைய ஐரோப்பிய சக தலைவர்களின் கருத்தை எதிரொலித்து, தன் நாட்டு மக்கள் புதிய தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று அழைப்புவிடுத்தார். அவருடைய அமைச்சரவை நாட்டிற்கு அடுத்த வாரத் தொடக்கத்தில் IMF பிரதிநிதிகள் குழு வருவதற்கு முன் புதிய சமூக வெட்டுக்களை அவசர அவசரமாகச் செயல்படுத்தும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.

யூரோஸ்டாட் கொடுத்துள்ள புதிய அறிக்கை ஒன்று, கிரேக்கத்தில் இப்பொழுதுள்ள சமூக நெருக்கடியைக் காட்டுகிறது; இந்நெருக்கடியோ தொடர்ந்த நான்காம் ஆண்டு மந்தநிலையில் நுழைகிறது. 2010ம் ஆண்டில் வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் குறித்து HELLENIC Statistical Authority (Elstast) உடைய கருத்துப்படி கிரேக்க மக்களில் 27.7 சதவிகிதம் பேர்கள் இப்பொழுது வறுமைக் கோட்டிற்குக்கீழே வாழ்கிறனர் அல்லது சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது என்ற குறிப்பைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில், பல்கேரியா, ருமேனியா, லாட்வியா, லிதுவேனியா, ஹங்கேரி மற்றும் போலந்து ஆகியவைதான் இதைவிட அதிக வறுமை விகிதங்களைக் கொண்டுள்ளன.

ஐரோப்பாவில் மிகச் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக கிரேக்கம் உள்ளது என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. செல்வம் கொழிக்கும் 20 சதவிகிதத்தினர் மக்களில் மிக வறிய ஐந்தில் ஒரு பங்கினரைக் காட்டிலும் 5.6 மடங்கு அதிக வருமானத்தை அனுபவிக்கின்றனர்.

ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு இன்னும் வேதனை கொடுக்க வேண்டும் என்ற அழைப்பைத்தவிர, பிரெஞ்சு மற்றும் ஜேர்மனியத் தலைவர்கள் யூரோப் பகுதிக்குள் நடைபெறும் நிதிய நடவடிக்கைகள் மீதான வரி அறிமுகம் பற்றியும் தங்கள் திங்கள் பேச்சுக்களில் ஆதரவைத் தெரிவித்தனர்.

ஐரோப்பிய உறுப்பு நாடுகள் 27லும் நிதிய நடவடிக்கைகளான குறைந்த அளவு 0.1 வரிவிதிப்பு என்ற திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முன்வைக்கப்பட்டது. மார்ச் மாத ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு வங்கிகளுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை நிரூபிக்கும் வகையில் சார்க்கோசி ஒரு வாரம் முன்பு பிரான்ஸ் அத்தகைய தன் வரியையும் செயல்படுத்தும் என்ற கேலிக்கூத்தான கருத்தைத் தெரிவித்தார். ஜேர்மனிய அரசாங்கம் ஐரோப்பா முழுவதும் அத்தகைய வரிவிதிப்பைச் செயல்படுத்தினால் தானும் அத்தகைய வரிக்கு ஆதரவு கொடுக்கத் தயார் என்று எப்பொழுதுமே வாதிட்டுவந்துள்ளது. ஆனால் திங்களன்று நடந்த அவர்களுடைய கூட்டுப் பேச்சுக்களில், மேர்க்கெல் சார்க்கோசியின் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்து, யூரோப்பகுதிக்குள் நிதிய நடைமுறைகளுக்கு வரி சுமத்துவது குறித்துத் தன் தயார் நிலையை அறிவித்தார்.

வங்கிகளுக்கு எதிராக மேர்க்கெலும் சார்க்கோசியும் நிமிர்ந்து நிற்பது போல் காட்டிக் கொள்வது தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இப்பிரச்சினையில் ஜேர்மனிய சான்ஸ்லர் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பது பாரிசிலுள்ள அவருடைய கன்சர்வேட்டிவ் சக ஜனாதிபதிக்கு தேர்தல் நேரத்தில் கொடுக்கும் ஆதரவு ஆகும். அதே நேரத்தில் ஜேர்மனிய அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் முற்றிலும் ஒருதலைப்பட்ச, வங்கியாளர்கள் சார்புடைய கொள்கைகளில் இருந்து கவனத்தை திருப்பவும் முயல்வதாகும். இந்நடவடிக்கைக்கு தொழில்நுட்பவாதி-வங்கியாளர் மோன்டி (முன்னாள் கோல்ட்மன் சாஷ்ஸைச் சேர்ந்தவர்) கொடுக்கும் ஆதரவிற்கு நம்பகத்தன்மை ஏதும் அளிக்கப்படக்கூடாது.

இத்தலைவர்கள் அனைவருமே அத்தகைய வரிவிதிப்பை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் முற்றிலும் தொலைதூரத்தில் உள்ளன என்பதை நன்கு அறிவர். ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய உறுப்பு நாடுகளான கிரேட் பிரட்டன், ஸ்வீடன், டென்மார்க் (தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தின் சூழற்சி முறையில்     ஆறு மாத காலத்திற்குத் தலைமையைத் தாங்கும்) மற்றும் மால்ட்டா ஆகியவை அத்தகைய வரிவிதிப்பை எதிர்க்கின்றன; அதேபோல்தான் மேர்க்கெலின் கூட்டாட்சி ஆளும் கூட்டணிப் பங்காளிக் கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சியும் எதிர்க்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் அத்தகைய வரிவிதிப்பு செயல்படுத்தப்பட்டாலும், வங்கிகள் மீது அதன் விளைவு மிகக் குறைவாகத்தான் இருக்கும். அத்தகைய வரி (முதலில் 2014ல் அறிமுகப்படுத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது) கிட்டத்தட்ட 37 பில்லியன் யூரோக்களை ஆண்டு ஒன்றிற்கு வருமானங்கள் மூலம் கொடுக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தால் மதிப்பிடப்பட்டிருந்தது. இது ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மானுவல் பாரோசோ ஐரோப்பிய நாடுகள் வங்கிகளுக்கு 2008ல் இருந்து கொடுத்திருந்த நிதியான 4.5 டிரில்லியன் யூரோக்களுடன் ஒப்பிடத்தகுந்ததாகும்.

பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலியத் தலைவர்கள் ஐரோப்பாவில் இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பொது முன்னணியில் இருந்தாலும், ஜேர்மனியில் மொன்டி கூறிய சில கருத்துக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் உண்மையான பிளவுகளைச் சுட்டிக்காட்டுகிறது; குறிப்பாக ஐரோப்பிய வங்கிகளுக்குத் தன் நிதிய உறுதிகளை உயர்த்தாவிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான மக்கள் பதிலடி வரும் என்ற அச்சங்கள் உள்ளன.

Suddeutche Zeitung  இல் மொன்டி சிக்கன நடவடிக்கைகளை ஏற்பதில் பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்தில் இருக்கும் பக்குவத்தைப் பாராட்டினார்.  ஆனால் Die Welt க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், மொன்டி எச்சரித்தார்: இத்தாலிய மக்கள் தங்கள் சேமிப்புக்கள், சீர்திருத்தங்களில் இருந்து விரைவில் கண்ணுக்குத் தெரியும் வெற்றியைக் காணாவிட்டால், ஐரோப்பா முழுவதும் எதிர்ப்புக்கள் ஜேர்மனிக்கு எதிராக இருக்கும்ஏனெனில் இதுதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் உந்துச் சக்தியாக கருதப்படுகிறது; அதேபோல் ஐரோப்பிய மத்திய வங்கிற்கு எதிராகவும் உள்ளது.