சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

South Africa’s ANC at 100: A balance sheet of bourgeois nationalism

தென் ஆபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் 100 ஆண்டுகள் முதலாளித்துவ தேசியவாதம் பற்றிய ஓர் மதிப்பீடு

Bill Van Auken
11 January 2012
Back to screen version

தென் ஆபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் தன்மை, தலைவிதி மற்றும் அதேபோன்ற பிற முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களின் தன்மை குறித்தும் ஓர் மதிப்பீடு செய்வதற்கான உகந்த நேரம் ஆகும்.

1912ல் நிறுவப்பட்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இத்தகைய இயக்கங்களில் பழமையானவற்றுள் ஒன்றாகும். இது தனது உத்வேகத்தை இதைவிடப் பழமையான இந்திய தேசிய காங்கிரஸிடம் இருந்து பெற்றிருந்தது. தென் ஆபிரிக்காவில் இனப்பாகுபாடு காட்டிய ஆட்சியின் இறுதிக்காலத்தில் நடந்த பேச்சுக்களில் இது முக்கிய பங்கைக் கொண்டிருந்ததுடன், கடந்த 18 ஆண்டுகளாக நாட்டின் ஆளும் கட்சியாகவும் உள்ளது.

இந்த 100வது ஆண்டுவிழா, தென் ஆபிரிக்காவில் இருந்த மிருகத்தனமான இனப்பாகுபாட்டிற்கு எதிரான நீண்டகால வரலாற்றுப் போராட்டத்தில் இருந்து புதிய நம்பகத்தன்மையைப் பெறும் முயற்சியாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸினால் பயன்படுத்தப்படுகிறது. அப்போராட்டத்தில் பலரும் கொல்லப்பட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர்; நாட்டின் நகர்ப்புறங்களில் இருந்த கறுப்பு தொழிலாளர்களும் இளைஞர்களும் பலமான ஆயுதம்தரித்த பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக பெரும் வீரத்தனமாகப் போராடியிருந்தனர்.

ஆனால் முதலாளித்துவத் தேசியவாதிகள் அல்லது தேசிய விடுதலை இயக்கங்கள் என்று ஒவ்வொரு நாட்டிலும் அவை பதவிக்கு வந்தபின் நடந்தது போல், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைமையும், போராட்டத்திற்குள் நுழைந்த வெகுஜனங்களின் விருப்புகளை உணர்ந்து கொள்வதற்கு முற்றிலும் மாறாக, அவர்களுடைய தியாகங்களை ஏகாதிபத்திய, தேசிய முதலாளித்துவ அடக்குமுறையாளர்களின் வரிசையில் தங்கள் இடத்தை உறுதி செய்துகொள்ளத்தான் பயன்படுத்தியது. முன்னர் விடுதலைக்காக போராடிய பலரை பல மில்லியன் மதிப்புடைய வணிகர்களாக மாற்றிவிட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் 100 ஆண்டுகளுக்குமுன் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட சிறுநகரான ப்ளாம்பான்டீனில் கூட்டத்தில் ஆற்றிய 90 நிமிட பொருத்தமற்ற உரையில், தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் ஜுமா ஆபிரிக்க தேசிய காங்கிரசின் வரலாறு குறித்து நீண்டு பேசினார். அதே நேரத்தில் நாட்டின் பெரும்பலான மக்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் கடுமையான ஒடுக்குமுறைமிக்க நிலைமைகளை மாற்றுவதற்கான உறுதியான திட்டங்களை எதையும் முன்வைக்கவில்லை.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் கிட்டத்தட்ட இரு தசாப்த ஆட்சிக்காலத்தில் இந்தகைய நிலைமைகள் மோசமடைந்துதான் போய்விட்டன. இனப் பாகுபாடு முடிந்துவிட்டது என்றாலும், செல்வந்தர்களின் உயரடுக்கிற்கும் தொழிலாளர் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இடையே உள்ள பிளவு வளர்ந்துதான் போயிருக்கிறது. Gini இன் அளவீட்டின் படி மதிப்பிடப்படும் சமூக சமத்துவமின்மை உலகில் நமீபியாவைத் தவிர வேறு எந்து நாட்டிலும் இல்லாத அளவிற்கு தென்னாபிரிக்காவில் மோசமாக உள்ளது. முற்றிலும் 70% மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 25% இற்கு அண்ணளவானது என கூறப்படுகையில், மிக உண்மையான மதிப்பீடுகள் அதை 40%க்கு அருகேதான் இருத்துகின்றன.

தடையற்ற சந்தைச் சீர்திருத்தங்கள் என்று கூறப்படுபவை உயர்மட்டத்தில் இருப்பவர்கள்,  பழைய வெள்ளையின ஆளும் உயரடுக்கு மற்றும் புதிய ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைமைத் தட்டு மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆகியவை பெரும் செல்வத்தைச் சேகரித்துவிட்டதைத்தான் உறுதிபடுத்தியுள்ளன. தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பொதுச் செயலருமான சிரில் ராமபோசா (இப்பொழுது கிட்டத்தட்ட $275 மில்லியன் சொத்து உடையவர்) போன்றவர்கள்தான் கறுப்பின பொருளாதாரத் தன்மேம்பாடு பெறுதல் என்று ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பதவிக்குவந்தபின் தொடங்கிய கொள்கையில் முக்கிய ஆதாயம் பெற்றவர்களாயினர்.

ஆபிரிக்க வரலாற்றாளர Achille Mbembe மிகப் பொருத்தமாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸை ஊழல், பேராசை, அதிகாரத்திற்காக மிருகத்தன உட்பூசல்கள், கொள்ளைமுறை உணர்வுகள், புத்திஜீவித வெறுமை என்னும் ஆபத்தான கூட்டு ஆகியவற்றால் நிறைந்துள்ள ஒரு கட்சி என்று விவரித்துள்ளார்.

ஆபிரிக்க தேசிய காங்கிரசின் புகழ்வாய்ந்த சட்டவிரோத காலகட்டம், ஆயுதப் போராட்டம் ஆகியவற்றின் மீதான நூற்றாண்டு விழாவின் கவனம் ஆளும் கட்சிக்கு இன்றைய இகழ்வான உண்மையில் இருந்து ஒரு விருப்பான கவனத்தை திருப்பும் தன்மையை கொடுக்கலாம். இந்த இழிசரிவின் விதைகள் இயக்கத்தின் ஆரம்பத்திலேயே இருந்ததுடன் மற்றும் அடையாளம் காணப்படக்கூடியவையாகவும் இருந்தன.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெள்ளையரின் காலனித்துவ வெற்றி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அதன் முன்னாள் எதிரிகள் போயர்களுடன்  கறுப்பர் பெரும்பான்மையை அவர்கள் நாட்டில் சுரண்டவும் அடக்கவும் ஒரு பொது அரங்கில் இணைந்த நிலைக்கு எதிரான நீடித்த பழங்குடிப் போராட்டங்களின் தோல்விப் பின்னணியில் தோன்றியது. இது தன்னை அவாவுற்ற கறுப்பின மத்தியதர வகுப்பின் பிரதிநிதியாக காட்டிக்கொண்டது. ஏகாதிபத்தியத்தின் தோல்வியை நாடாமல் அதன் ஆதரவான தன்மையையே நாடியது. தன்னை வெள்ளையின ஆளும் வர்க்கத்திற்கும் பரந்துபட்ட கறுப்புத் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையாளராக காட்டிக்கொண்டது.

1956ம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நோக்கங்களைச் சுருக்கிக் கூறுகையில், அது பதவிக்கு வந்தால் சோசலிசத்தை அறிமுகப்படுத்தாது, மாறாக, இந்நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக ஐரோப்பியரல்லாத முதலாளித்துவத்தால் தங்கள் பெயரிலும், உரிமைகளிலும் ஆலைகளையும் தொழிற்சாலைகளை வைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பெறுவதுடன், வணிகம், தனியார் நிறுவனங்கள் இதற்கு முன்பு ஒருபோதும் இல்லாத முறையில் செழிக்கும் என்று நெல்சன் மண்டேலா உறுதியளித்தார். இத்தகைய நோக்கு  பரந்துபட்ட கறுப்பின தொழிலாளர்களின் இழப்பில் அதன் முழு நிறைவை பெற்றுவிட்டது.

1960 களில் தொடங்கி ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஸ்ராலினிச தென் ஆபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து, புரட்சி, வர்க்கப்போராட்டம் என்ற வார்த்தைஜாலங்களைத்தான் பயன்படுத்தியது. ஆனால் ஒரு எழுச்சியுறவிரும்பிய கறுப்பின முதலாளித்துவத்திற்கு செல்வக்கொழிப்பிற்காக அதிகாரம் அளித்தல் என்னும் மண்டேலாவின் முன்னோக்கு அதன் அடிப்படைத் திட்டமாக இருந்தது. சோவேடா இன்னும் பிற கறுப்பர் சிறுநகரங்களில் ஏற்பட்ட எழுச்சிகள் நாட்டை ஆளமுடியாமல் செய்தபோது, வெள்ளையரின் ஆளும் உயரடுக்கு, ஆங்கில-அமெரிக்க பெருநிறுவனத்தால் வழிநடத்தப்பட்டு இனப் பாகுபாட்டிற்கு அமைதியான முறையில் முற்றுப்புள்ளி வகைக்கும் முறையாக அதிகாரத்தை மாற்றுவதற்கும் பேச்சுக்களைத் தொடக்கியது. இது கீழிருந்துஎழும் புரட்சிகர சவாலை அடக்குவதையும் தங்கள் செல்வம், சொத்துக்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கத்தையும் கொண்டிருந்தது. மண்டேலா மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் முறையாக அத்திட்டத்திற்கு உதவினர்.

1935ம் ஆண்டு, தென்னாபிரிக்காவில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு லியோன் ட்ரொஸ்கி எழுதிய கடிதம் ஒன்றில், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தன்னுடைய சொந்த கோரிக்கைகளைக்கூட அடையமுடியாத நிலைக்கு அதன் மேம்போக்குத்தன, சமரசமாகச்செல்லும் கொள்கைதான் காரணம் என்று எச்சரித்தார்.

இந்த எச்சரிக்கை முன்கூட்டியே நிரூபணம் ஆயிற்று. ஆபிரிக்க தேசிய காங்கிரசின் போக்கு ஆசியா, ஆபிரிக்கா, இலத்தின் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்த பிற முதலாளித்துவத் தேசிய, தேசியவிடுதலை இயக்கங்களான இந்தியக் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாலஸ்தீனிய விடுதலை அமைப்பில் இருந்து சான்டிநிஸ்டாக்களை போன்று ட்ரொட்ஸ்கி தன்னுடைய நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் முன்வைத்த அடிப்படை முன்னோக்கில் மிகச் சரியென நிரூபித்துள்ளது.

ட்ரொட்ஸ்கியின் முன்னோக்கு ஒடுக்கப்பட்ட நாடுகளில் முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்துடன் கட்டுண்டு, தொழிலாள வர்க்கத்தின்மீதும் அச்சம் கொண்டநிலையில், ஜனநாயகத்திற்கான போராட்டத்தை நடாத்தி ஏகாதிபத்திய ஆதிக்கத்தை முடிவுகட்ட இயல்பாகவே தகமையற்றன என்பதை உறுதியாக நிறுவியுள்ளது. அத்தகைய பணிகள் தொழிலாள வர்க்கம் ஒன்றினால்தான் சாதிக்கப்பட முடியும். அது  ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைமை தாங்கி, அதிகாரத்தைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு சர்வதேச தொழிலாளர்களின் சோசலிசப் போராட்டத்தின் ஒரு பகுதியாகச் செல்லும், அது முதலாளித்துவத்தை ஒரு உலகளாவிய முறையில் முற்றுப்புள்ளி வைக்கும்.

உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியால் உந்துதல் பெற்றுள்ள தென் ஆபிரிக்க வர்க்கப் போராட்டத்தின் மறு எழுச்சிக்கான பெருகிய அடையாளங்களுக்கு நடுவே ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. தென் ஆபிரிக்க தொழிலாளர்கள் தவிர்க்க முடியாமல் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அரசாங்கத்துடனும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் பல மில்லியன் உடைய முதலாளித்துவத்தினர் மற்றும் சர்வதேச வங்கிகள் பெருநிறுவனங்களுடன் மோதலுக்கு வரும். போராட்டத்தை உண்மையான ஜனநாயகம், சமத்துவம் மற்றும் சோசலிசத்திற்காக ஒரு சர்வதேச, சோசலிச முன்னோக்குத் தளத்தைக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் புதிய தலைமை ஒன்றுதான் இப்பொழுது தேவைப்படுகிறது. இதன் பொருள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவினை தென் ஆபிரிக்காவில் கட்டியமைப்பதாகும்.