செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
General strike over fuel hike paralyzes Nigeria
எரிபொருள் விலை உயர்வு தொடர்பான பொது
வேலைநிறுத்தம் நைஜீரியாவை முடக்குகிறது
By Bill Van Auken
10 January 2012
அரசாங்கம் எரிபொருளுக்கான உதவித் தொகைகளை
நிறுத்தியதால், பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் ஒரே நாளில்
இரண்டு மடங்கு அதிகமானதை அடுத்து, திங்களன்று
பல்லாயிரக்கணக்கான நைஜீரியர்கள் ஒரு காலவரையறையற்ற, நாடு
தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்காக தெருக்களுக்கு வந்து
ஆர்ப்பரித்தனர்.
திங்கள் மாலையையொட்டி நிராயுதபாணிகளான
ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொள்ள பாதுகாப்புப் படையினர் நிஜ
தோட்டாக்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகள், தடியடிப் பிரயோகம்
ஆகியவற்றைப் பயன்படுத்திய அளவில், குறைந்தப்பட்சம் மூன்று
எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமுற்றனர் என்ற
தகவல்கள் வந்துள்ளன.
நாட்டின் இரு முக்கிய தொழிற்சங்கக்
கூட்டமைப்புக்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கையில்,
வேலைநிறுத்த இயக்கம் நாடுதழுவிய எதிர்ப்பு அலை போல
ஆரம்பித்தது; இது நைஜீரியாவை ஆக்கிரமிப்போம் என்ற பெயரைக்
கொண்டு அமெரிக்காவிலும் மற்ற இடங்களிலும் பொருளாதாரப்
பாதிப்புக்கள், சமூக சமத்துவமின்மைக்கு எதிராக வெடித்துள்ள
எதிர்ப்பு இயக்கங்களுடன் அடையாளம் கொண்டுள்ளது.
நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜோனதன் புத்தாண்டு
தினத்தன்று எரிபொருளுக்கான உதவித்தொகைகளை நிறுத்துவது குறித்து
அறிவித்தார்; இது உடனடியாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை
1.70 டாலர்கள் காலனுக்கு ($0.45 லிட்டருக்கு) என்பதில் இருந்து
3.50 டாலர்கள் ($0.94) அல்லது இன்னமும் அதிகம் என்று
உயர்த்திவிட்டது.
லாகோஸில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட
ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரத்தின்
Gani
Fewehinni
பூங்காவில் குழுமினர்.
“துரதிருஷ்ட
ஜோனதன்”
என்ற
கோஷங்களை பாடியும், முழக்கியும் எதிர்ப்பாளர்கள் பெரும்பாலும்
கைகளால் எழுதப்பட்டிருந்த அறிவிப்பு அட்டைகளைச் சுமந்தனர்;
இவற்றில்
“உதவித்
தொகை அகற்றப்படல் பெரும் பொருளாதார மோசடி”,
“நைஜீரியா
ஒன்றும் கால்நடைப்பண்ணை அல்ல”,
“ஏழைகளுக்கு
உணவு இல்லை, செல்வந்தர்களைத்தான் உண்ண வேண்டும்”
என்ற கோஷங்கள் அவற்றில் இருந்தன. ஒரு பிரபல
சுவரொட்டி ஜோனதனை கொம்புகளையும் நச்சுப் பற்களையும் கொண்ட ஒரு
பேய் போல் பெட்ரோல் நிரப்பும் இடத்தில் இருப்பதுபோல்
சித்தரித்தது. ஏராளமான இளைஞர்கள் உருட்டுக் கட்டைகளையும் மரக்
கிளைத் தண்டுகளையும் அசைத்த வண்ணம் அணிவகுத்துச் சென்றனர்.
வேலைநிறுத்தம் பள்ளிகள், அரசாங்க அலுவலகங்கள்,
வணிகங்கள், வங்கிகள், பொதுப் போக்குவரத்துக்கள் ஆகியவற்றை மூடி
லாகோஸ் மற்றும் பிற முக்கிய நகரங்களின் தெருக்களை வெறிச்சோடச்
செய்தது. ஆர்ப்பாட்டக்காரர்களும், அதிக ஆயுதம் தாங்கிய
பொலிசாரும் மட்டுமே தெருக்களில் இருந்தனர்.
அரசியல் தலைநகரான அபுஜாவில், மறியல்காரர்கள்
விமான நிலையத்தை மூடி அனைத்து எல்லா விமானப் பயணங்களையும்
நிறுத்தினர். கண்ணீர்ப்புகைக் குண்டைப் பயன்படுத்தி நகரத்தின்
ஈகிள் சதுக்கத்தை ஆக்கிரமித்திருந்த இளைஞர்களை பொலிசார்
விரட்டினர் என்று பிபிசி கூறியுள்ளது.
லாகோஸில் எதிர்ப்பாளர்கள் ஒரு முக்கிய
நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து, குப்பைகளுக்குத் தீவைத்து
டயர்களையும் எரித்தனர். ஆனால், நகரத்தின் ஒக்பா
புறநகர்ப்பகுதியில் பொலிசார் ஆர்ப்பாட்டம் நடத்திய இளைஞர்கள்
மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் இறந்து போனார்,
பலர் காயமுற்றனர். கோபமடைந்த இளைஞர்கள் கொல்லப்பட்ட
ஆர்ப்பாட்டக்காரரின் சடலத்தை சக்கர கை வண்டியில் வைத்து நகர்
முழுவதும் வலம் வந்து, பழிவாங்குவதாகவும் உறுதிமொழி கூறினர்.
மிக மோசமான அடக்குமுறை வடக்கு நகரான கானோவில்
நிகழ்ந்தது; அங்கு இருவர் கொல்லப்பட்டனர் என்று அரசாங்கம்
தகவல் கொடுத்துள்ளது; ஆனால் பகுதி வாழ்மக்கள் குறைந்தபட்சம்
மூன்று பேர் இறந்துவிட்டனர் என்று கூறியுள்ளனர். மாநில அரசாங்க
இல்லத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து
பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உள்ளூர் செஞ்சிலுவைச்
சங்கம் குறைந்தப்பட்சம் 30 பேர் காயமுற்றனர், அவர்களில்
பெரும்பாலானவர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால்
துன்புற்றனர் என்று தகவல் கொடுத்துள்ளது.
திங்கள் இரவு மாநில அரசாங்கம் அந்திப்பொழுதில்
இருந்து காலை வரை கானோவில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது;
இது மாநிலத்தின் பெயரையே கொண்ட தலைநகராகும்.
கானோ இன்னும் மற்ற நகரங்களில்,
ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கத்தைய ஆதரவுடைய சர்வாதிகாரங்கள்
துனிசியாவிலும், எகிப்திலும் இருந்தவற்றை வீழ்த்திய எழுச்சிகளை
நினைவில் கொண்டு எதிர்ப்புப் பகுதிகளை
“தஹ்ரிர்
சதுக்கம்”
என்று குறிப்பிட்டனர்.
இந்த வேலைநிறுத்தம் சனிக்கிழமையன்று ஜனாதிபதி
ஜோனதன் தொலைக்காட்சி உரை ஒன்றில் விடுத்த முறையீட்டை மீறி
வந்துள்ளது; அந்த உரையில் அவர் மக்கள் சீற்றத்தைத்
திசைதிருப்பும் வகையில் தனக்கும் உயர்மட்ட அரசாங்க
அதிகாரிகளுக்கும் 25 சதவிகிதம் ஊதியக் குறைப்புக்களை
அறிவித்திருந்தார்.
“பொருளாதாரத்தை
பாதுகாக்க கடின விருப்பத் தேர்வுகள் தேவை, நாடு என்னும்
முறையில் நாம் கூட்டாகத் தப்பிப் பிழைக்க கடின விருப்பத்
தேர்வுகள் தேவை”
என்றார் அவர்.
ஆனால் இத்தகைய
“கடின
விருப்பத் தேர்வுகள்”
நைஜீரியாவில் செல்வம் மிக்க உயரடுக்கு, ஊழல்
மிகுந்த அரசியல்வாதிகள் மீது கடின நிலையைச் சுமத்தவில்லை; அதே
நேரத்தில் அவைகள் வறிய உழைக்கும் மக்கள், ஏழைகள் மீது
பட்டினியையும் அவல நிலையையும் கொடுக்கின்றன. எரிபொருள்
விலையுயர்வு உணவுப் பொருட்களின் விலைகள், போக்குவரத்துச்
செலவுகள், பள்ளிக் கட்டணங்கள் மற்றும் பல அடிப்படைத் தேவைகளின்
விலைகளை உயர்த்திவிட்டது; அதுவும் 160 மில்லியன் மக்களைக்
கொண்டுள்ள நாட்டின் பெரும்பாலானவர்கள் நாள் ஒன்றிற்கு 2
டொலர்கள் அல்லது அதற்கும் குறைவான பணத்தில் வாழும் நிலையில்,
நாட்டின் வேலைத் தொகுப்பில் பாதி பேருக்கும் மேல் வேலை இல்லை
என்ற நிலையில். மின்துறையில் முக்கிய ஆதாரமாக இருக்கும்
எரிபொருள் அத்துறையைச் சீர்குலையச் செய்துவிட்டது; பலரும்
பெட்ரோலியப் பொருட்களால் இயக்கப்படும் மின்சார
இயந்திரத்தைத்தான் நம்பியுள்ளனர்.
ஆபிரிக்க துணை சகாரப் பகுதியில் இரண்டாவது
பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நைஜீரியா 1970களில் இருந்து
முற்றிலும் அதன் வெளிநாட்டு நாணய இருப்பை ஈட்டுவதற்கு
பெட்ரோலிய ஏற்றுமதிக்களைத்தான் முற்றிலும் நம்பியுள்ளது. ஆளும்
உயரடுக்கு நாட்டின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிப்பதின் மூலம்
தன்னை செல்வக்கொழிப்பு உடையதாக ஆக்கிக் கொண்டுள்ளது; அதே
நேரத்தில் அடிப்படை உள்கட்டுமானம் சிதைவுறவும் மக்களை மிக வறிய
நிலையில் தள்ளுவதற்கும் அனுமதித்துள்ளது.
ஜோனதனும் அவருடைய நிதி, பொருளாதார மந்திரியும்
முன்னாள் உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் எல்கோசி
ஒகோன்ஜோ-ஐவியலாவும் நாட்டின் பொருளாதாரத்தை நவீன முறையில்
சீர்திருத்துவதற்கு எரிபொருள் மீதான உதவித்தொகை அகற்றப்படுதல்
தேவை என்று கூறுகின்றனர்.
கடந்த மாதம் சர்வதேச நாணய நிதிய இயக்குனரான
கிறிஸ்டின் லகார்ட் நைஜீரியாவிற்கு வருகை புரிந்தார்; அங்கு
அவர் ஜோனதன்
“தடையற்ற
சந்தை”
சீர்திருத்தங்களுக்குக் காட்டும் உறுதிப்பாட்டைப் பாரட்டினார்.
“பொருளாதாரத்தை
மாற்றுவதற்கு அவர் விரைந்து செயல்படும் ஆற்றல், தன்மை...
ஆகியவற்றைக் குறித்து நான் மிகவும் உவப்படைந்துள்ளேன்”
என்றார் அவர். இது ஐயத்திற்கு இடமின்றி
எரிபொருள் உதவித்தொகையை அகற்றும் திட்டமிட்ட அதிர்ச்சி
நடவடிக்கையைத்தான் குறிக்கிறது.
நாள் ஒன்றிற்கு 2 மில்லியன் பீப்பாய்களுக்கும்
மேலான கச்சா எண்ணெயை நைஜீரியா உற்பத்தி செய்கையில், அதன்
புறக்கணிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலைகள்
நாட்டின் உள்நாட்டு எரிபொருள் தேவைகளுக்கு ஒரு சிறிய
விகிதத்தைத்தான் அளிக்க முடிகிறது. இதன் விளைவாக எரிபொருள்
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது; அரசாங்கம்
சர்வதேச எரிசக்தி நிறுவனங்கள் கோரும் கடந்த உலகச் சந்தை
விலைகளுக்கும் அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கும் இடையே இருந்த
வேறுபாட்டை ஈடு செய்ய, 8 பில்லியன் டொலர்கள் ஒதுக்கியதாகத்
தெரிகிறது.
ஜோனதனும் அவருடைய ஆதரவாளர்களும் பில்லியன்
கணக்கை எரிபொருள் விலைகளுக்கு உதவிநிதி அளிப்பதற்குப் பதிலாக
இப்பணம் நாட்டின் உள்கட்டுமானங்களை முன்னேற்றுவதற்குச்
செலவழிக்கப்படலாம் என்று வாதிடுகின்றனர்; அதே நேரத்தில்
எண்ணெய்த் துறையில் கட்டுப்பாடுகள் அகற்றப்படுவது நாட்டின்
சுத்திகரிப்புத் தொழில்பிரிவை நவீனப்படுத்த வெளிநாட்டு
முதலீட்டை ஈர்க்க முடியும்.
உதவிநிதியளிப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பதில்
இவருடைய முயற்சி ஒன்றும் முதல் தடவையானது அல்ல. முந்தைய
அரசாங்கங்களாலும் இது பலமுறை முயற்சி செய்யப்பட்டது: ஆனால்
பெரும் வெகுஜன எதிர்ப்பைத்தான் சந்தித்தது. நைஜீரியாவை
1990களில் ஆட்சி செய்த தளபதி சனி அபச்சாவின் சர்வாதிகார
ஆட்சிகூட மக்கள் எதிர்ப்பையடுத்து உதவித்தொகையை அகற்றும்
முயற்சியில் இருந்து பின்வாங்க நேர்ந்தது.
உழைக்கும் மக்கிளில் பெரும்பாலானவர்கள் உதவித்
தொகைகளிலிருந்து திசைதிருப்பப்படும் பணம் உள்கட்டுமானங்களை
முன்னேற்றுவிக்கவோ, தங்கள் வாழ்க்கையைச் சிறக்கச் செய்யவோ
செலவழிக்கப்பட மாட்டாது என்றுதான் நம்புகின்றனர். மாறாக
நைஜீரியத் தொழிலாளர்கள் தங்கள் கசப்பான அனுபவத்திலிருந்து
உதவித்தொகை வெட்டில் இருந்து சேமிக்கப்படும் பில்லியன் கணக்கான
டாலர்கள் நாட்டின் ஊழல் மிகுந்த ஆளும் தன்னலக்குழு, அதன்
சர்வதேச வணிகக் கூட்டாளிகளின் வெளிநாட்டு வங்கிக்
கணக்குகளுக்குத்தான் உட்செலுத்தப்படும் என்று உணர்கின்றனர்.
அமெரிக்க வெளிவிவகாரச் செயலகம் கடந்த ஆண்டு 500
இறப்புக்களை விளைவாக்கிய போகோ ஹரம் என்னும் ஒரு இஸ்லாமியவாதக்
குழு நாட்டின் வடக்கே ஏற்படுத்திய வன்முறையை கண்டிக்க பொது
வேலைநிறுத்த நாளை பயன்படுத்தியது. இதில் கிறிஸ்மஸ் தினக்
குண்டுத் தாக்குதல்கள் ஒரு கத்தோலிக்கத் திருச்சபையின் மீது
நடத்தப்பட்டது, இன்னும் பிற இலக்குகள் மீது நடைபெற்றவையும்
அடங்கியுள்ளன; இவற்றில் 49 பேர் உயிரிழந்தனர்.
“மேற்கத்தையக்
கல்வி புனிதத்தை இழிவுபடுத்துவது”
என்று
அதன் பெயருடைய பொருளைக் கொண்ட இந்த அமைப்பு ஒரு அடிப்படைவாத
குறும் மதப் பற்றைக் கொண்டது; நாட்டின் வடக்கே, நைஜீரியாவின்
மிக வறிய பகுதியிலுள்ள அதிகமான முஸ்லிம் மக்களுடைய ஆழ்ந்த
குறைகளைத் தளமாகக் கொண்டு வளர்ந்துள்ளது. ஆனால் வாஷிங்டன் இதை
அல் கெய்டாவுடன் பிணைக்க முற்பட்டது; அதையொட்டி எண்ணெய்
வளமுடைய நாட்டில் அமெரிக்கத் தலையீட்டை மேற்கொள்ள
விரும்புகிறது. ஏற்கனவே பென்டகன் நைஜீரியத் துருப்புக்களுக்கு
பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியைக் கொடுத்து ஆயுதங்களையும்
“ஆலோசகர்களையும்”
கொடுத்துள்ளது.
குறுங்குழு வாத பிளவுகளை முடுக்கிவிடும்
முயற்சிகளையும் மீறி—ஒரு
மில்லியன் உயிர்களுக்கு மேலானவற்றைப் பறித்த 1960களின்
உள்நோடுப் போர்க்காலத்தைவிட மோசமான அச்சுறுத்தலுக்கு நைஜீரியா
முகங்கொடுக்கிறது என்னும் ஜோனதனின் எச்சரிக்கைகளையும் மீறி,
பொது வேலைநிறுத்தமும் அதற்கு முந்தைய எதிர்ப்புக்களும் மற்ற
இடங்களைப் போல், நைஜீரியாவிலும் சமூக, வர்க்கப் பிரச்சினைகள்
குறுநலவாதம் குறித்த அக்கறைகளை விட அதிக கனம் பெற்றுள்ளன
என்பதைத்தான் நிரூபிக்கின்றன. முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும்
நாடு முழுவதும் ஒன்றாக இணைந்து ஆர்ப்பாட்டங்களையும்,
வேலைநிறுத்தங்களையும் நடத்தியுள்ளனர்; வடக்கே முஸ்லிம்
இளைஞர்கள் ஞாயிறன்று கிறிஸ்துவ திருச்சபைகளுக்குப் பாதுகாப்பு
கொடுப்பதற்கு முன்வருகின்றனர்; அதே நேரத்தில் கிறிஸ்துவ
இளைஞர்கள் உள்ளூர் மசூதிகளில் அதே பணியைச் செய்கின்றனர். |