சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US presses for Arab League finding against Syria

சிரியாவிற்கு எதிராக அரபு லீக் முடிவுகள் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது

By Jean Shaoul
9 January 2012

use this version to print | Send feedback

சிரியாவிற்குச் சென்றிருந்த நோக்கர்களின் பணியை விவாதிக்க ஞாயிறன்று கெய்ரோவில் கூடிய அரபு லீக், அரசாங்கம் மற்றும் எதிர்த்தரப்பினரை உடனடியாக அனைத்து வன்முறைச் செயல்களையும் நிறுத்துமாறும் பிரதிநிதி குழு தடையற்ற முறையில் செல்ல அனுமதிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது. சிரிய அரசாங்கம் மற்றும் எதிர்த்தரப்பினர் என இருதரப்பினராலும் தொந்திரவிற்கு உட்படுத்தப்படும் குழுவின் கண்காணிப்பாளர்கள் கடந்த மாதம் சிரியாவில் ஒப்புக் கொள்ளப்பட்ட நெறிகளின்படி பணியைத் தொடங்குவர் என்று லீக் அறிவித்துள்ளது.

ஒபாமா நிர்வாகம் மற்றும் சிரியத் தேசியக் குழு மற்றும் சுதந்திர சிரிய இராணுவம் ஆகிய வாஷிங்டனின் ஆதரவிற்கு உட்பட்டவற்றால் பணி அதிக செயல் திறனற்று உள்ளது என்றும் லீக் இதை, ஐ.நா.விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற பெருகிய குறைகூறல்களின் பின்னணியில் இக்கூட்டம் நடைபெற்றது.

சிரியாவில் பெருகும் வன்முறைச் செயல்களுக்கு இடையேயும் இது நடைபெற்றது; அங்கு ஒரு தற்கொலைத் தாக்குதல் நடத்துபவர் சிரியத் தலைநகரான டமாஸ்கஸில் குண்டுத் தாக்குதலில் 26 பேரைக் கொன்று 63 பேரை காயப்படுத்தியுள்ளார்.

சனிக்கிழமையன்று அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த இறுதிச் சடங்குகளில் ஆயிரக்கணக்கான துக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள் கலந்து கொண்டு, நாங்கள் பயங்கரவாதத்திற்குத் தாயான அமெரிக்காவைக் கண்டு அச்சப்படவில்லை, நெருக்கடிக்கால ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள் போன்ற கோஷங்களை எழுப்பினர். அரசாங்க அதிகாரிகள் இக்குண்டுத்தாக்குதல் மேற்கத்தைய ஆதரவு கொண்ட எதிர்த்தரப்பினால் நடத்தப்பட்டது என்று கூறினர்; தகவல்துறை மந்திரி அட்னன் மஹ்முது, இந்த வெடிப்பு சிரியாவை ஒன்பது மாதங்களாக இலக்கு கொண்ட பயங்கரவாதம், கொலை செய்தல் என்ற திட்டத்தின் ஒரு பகுதி ஆகும் என்று கூறினார். உள்துறை அமைச்சரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பயங்கரவாதம் இரும்புக் கரத்துடன் ஒடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

மேற்கத்தைய ஆதரவுடைய சிரிய எதிர்ப்புச் சக்திகள், குண்டுவீச்சு ஜனாதிபதி பஷர் அல்-அசாத் உடைய சிரிய அரசாங்கத்தின் சதித்திட்டம், எதிர்ப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக நடத்தப்பட்டுள்ளது என்று கூறின.

கெய்ரோ கூட்டத்தில் அரபு லீக் தவறுகள் நடந்தன என்பதை ஒப்புக் கொண்டது; ஆனால் நோக்கர்களின் பணிக்கு ஆதரவு கொடுத்து, பணிக்குழு கைதிகளின் விடுதலையைப் பெற்றது, நகரங்களில் இருந்து டாங்குகள் திரும்பப் பெறுதலையும் பெற்றது என்று கூறியது. தற்பொழுது 163 என்று இருக்கும் நோக்கர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது ஒப்புக் கொண்டுள்ளது; ஐ.நா.வில் இருந்து இதற்கான தொழில்நுட்ப உதவியையும் தான் நாடக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

வெள்ளியன்று சிரியா பற்றிய அரபு லீக் குழுவின் தலைவராக இருக்கும் கட்டாரி பிரதம மந்திரி ஷேக் ஹமத் பின் ஜசெம் அல்-தனி, ஐ.நா. அதிகாரிகளையும் மனித உரிமைகள் வல்லுனர்களையும் சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் மற்றும் லீக்கின் திட்டங்களை அசாத் ஆட்சி எந்த அளவிற்குச் செயல்படுத்துகிறது என்பது பற்றிக் கண்காணிக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். அரபு லீக்கின் சமாதானத் திட்டத்தின் விதிகளுக்கேற்ப சிரியா அவற்றைச் செயல்படுத்தவில்லை என்றும் சிரியாவில் இருக்கும் கண்காணிப்பாளர்கள் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்றும் கூறினார். சிரிய இராணுவம் நகரங்களில் இருந்து திரும்பிவிடவில்லை, கொலைகள் நடத்தப்படுவது முடியவில்லை என்றும் அல்-தனி வலியுறுத்தினார்.

கடுமையான பிளவுகள் தோன்றியுள்ளன எனத் தகவல்கள் வந்துள்ள நிலையில், கட்டாரின் கோரிக்கை அரபு லீக்கினால் ஐ.நா. மூலம் பணியின் கட்டுப்பாட்டை அகற்றும் வாஷிங்டனின் முயற்சிதான் இது என்பது வெளிப்படை என்று நிராகரிக்கப்பட்டது; அதுவோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கருவியாக பணியாற்றும் நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளது.

எதிரெதிர் சக்திகள் நிற்கும் நிலை பற்றி இன்னும் தகவல் கொடுக்கப்படவில்லை என்றாலும், வளைகுடா முடியரசுகள்தான் ஐ.நா. எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளுக்குத் தலைமை தாங்குகின்றன. மற்ற அரபு நாடுகள் அவைகளும் பின்னர் வாஷிங்டனின் ஆட்சிமாற்றப் பட்டியலில் இடம் பெறலாம் என்ற கவலையுடன் உள்ளன. ஆனால் அவர்கள் கணக்கீடுகளில் மற்றொரு காரணி, அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் நட்பு நாடுகள் என்பது ஒருபுறம் இருக்க, அரபு உலகம் முழுவதும் எந்த வெளிநாட்டுத் தலையீட்டிற்கும் பெரும் எதிர்ப்பைக் காட்டும் என்பதாகும்.

ஆயினும்கூட, இந்த மாதத்தின் பின்னர் வெளிவரவுள்ள அரபு லீக் அறிக்கை அமெரிக்காவிற்கு இன்னமும் அதற்குத் தேவையான அசாத் ஆட்சியைக் கண்டிப்பதற்குத் தேவையான போலிக்காரணத்தை அளிக்கக்கூடும்.

இப்பணியை ஐ.நா.விடம் ஒப்படைத்தல் என்னும் கட்டாரின் திட்டம் அடிப்படையில் சிரியாவுடன் கொண்டுள்ள உடன்படிக்கையின் தன்மையை மாற்றிவிடும். அதுவோ மோதல்களை நிறுத்துவதற்கும், அரசாங்கத்திற்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஒரு தேசிய உரையாடலுக்கு ஏற்பாடு செய்வதற்கான அரபு முன்முயற்சி என்று கூறப்பட்டது. முதலில் சௌதி ஆதிக்கத்திற்கு உட்பட்ட வளைகுடா ஒத்துழைப்புக் குழுவினால் (Gulf Cooperation Council -GCC), இயற்றப்பட்ட இந்த உடன்பாடு, பின்னர் லீக்கினால் ஏற்கப்பட்டது; இது அனைத்துத் தரப்பினரும் வன்முறைக்கு முடிவு கண்டு சிரிய அரசாங்கம் அதன் துருப்புக்களை நகரங்களில் இருந்து பின் வாங்கவேண்டும், கடந்த மார்ச் எதிர்ப்புக்கள் வெடித்ததில் இருந்து கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், எதிர்த்தரப்புடன் பேச்சுக்களை நடத்த வேண்டும், பல கட்சிகள் பங்கு பெறும் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது.

அரபு லீக்கிலிருந்து வந்த முன்னோடியில்லாத அழுத்தத்தை ஒட்டி அசாத் கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்: அதன் உறுப்புத் தன்மை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது, டமாஸ்கஸில் இருந்து சில வளைகுடா நாட்டுத் தூதர்கள் நாடு திரும்பினர், மூத்த சிரிய அதிகாரிகள் மற்றும் அதன் வங்கிகளுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இவைகள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கி ஆகியவை சிரியாவின் நலிந்த பொருளாதாரத்தை முடக்குவதற்காகச்  சுமத்தியுள்ள பொருளாதாரத் தடைகளைவிடக் கூடுதலானவை ஆகும். ஒரு ஐ.நா. மனித உரிமைகள் அறிக்கை ஒன்று சிரியப் பாதுகாப்புப் படைகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதுஅதில் சித்திரவதை , கற்பழிப்பு, 4,000 சிரியர்கள் கொல்லப்பட்டது, 14,000 பேர் மார்ச்சில் இருந்து காவலில் வைக்கப்பட்டுள்ளது ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன.

முன்முயற்சியை நடைமுறையில் ஐ.நா. பணி போல் மாற்ற வேண்டும் என்னும் கட்டாரின் கோரிக்கை, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானம் ஒன்றை இயற்றி இராணவக் குறுக்கீட்டை நெறிப்படுத்தி, சிரியாவில் வளைந்து கொடுக்கும் அமெரிக்காவிற்குத் தாழ்ந்து நிற்கும் அமைப்பை, ஈரானைத் தனிமைப்படுத்தும் அதன் முயற்சிகளில் ஒரு பகுதியாகச் செய்தல் என்பதற்கு வழிவகுக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே, அரபு லீக் திட்டம் அசாத்திற்குப் பொறி வைக்கும் தன்மையைக் கொண்டுள்ளது எனவேதான் அவர் ரஷ்யா அழுத்தம் கொடுக்கும் வரை அதற்கு இணங்கத் தயக்கம் காட்டினார். சிரியாவின் நீண்ட கால நட்பு நாடு மத்தியதரைக் கடல் பகுதியில் அதன் ஒரே கடற்படைத்தளத்தை டார்ட்டஸில் கொண்டுள்ளது; மேலும் பரந்த பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளையும் டமாஸ்கஸுடன் கொண்டுள்ளது. சிரியாவிற்கு எதிரான லிபிய வகைக் குறுக்கீட்டை அது தவிர்க்க முற்படுகிறது; அதே நேரத்தில் அசாத் வீழ்ச்சி அடைந்தால், தான் தன்னுடைய மூலோபாய நலன்களை அந்நாட்டில் காப்பதை உறுதிப்படுத்தும் வகையில் செயல்படவும் விரும்புகிறது.

ஜனவரி 2ம் திகதி அரபு லீக் நோக்கர்கள் சிரியப் படைகள் முக்கிய நகரங்களில் இருந்து  திரும்பப்பெறப்பட்டு விட்டன, நகரத்திற்கு வெளியே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என்று கொடுத்த தகவலைப் பற்றி ஒபாமா நிர்வாகம் சீற்றம் அடைந்தது. அரபு லீக் அதிகாரியான அட்னன் அல்-குடெர், அரபு லீக் முன்னேற்றம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது என்றார்.

வாஷிங்டன் குடெரின் அறிக்கையை மொத்தமாக முரணாக உள்ளது என எதிர்த்தது; சிரியாவானது லீக்கின் கோரிக்கைகளைச் செயல்படுத்தத் தவறிவிட்டது என்று கூறி, பாதுகாப்புச் சபை செயற்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது. கட்டாரின் பிரதம மந்திரி ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த நியூயோர்க்கிற்கு அழைக்கப்பட்டார். அண்மித்த கிழக்கு விவகாரங்களுக்கான உதவி வெளிவிவகாரச் செயலர் ஜேப்ரி பெல்ட்மன் லீக்கின் வாரந்திரக் கூட்டத்திற்கு முன்னதாக இன்னும் கடுமையான அறிக்கை தயாரிக்கப்படுவதற்கு கெய்ரோவிற்கு அனுப்பப்பட்டார்.

வாஷிங்டனைப் பொறுத்தவரை, பணியின் பங்கு சிரியாவில் சர்வதேசக் குறுக்கீட்டிற்கு தக்க அரபு மறைப்பை அளிக்க வேண்டும் என்பதாகும்; அது சிரியாவிற்குள் பாதுகாப்பு உறைவிடங்கள் என்னும் வகையில் துருக்கி, லெபனான் மற்றும் ஜோர்டான் எல்லைகளை ஒட்டி இருக்கலாம், துருக்கிய, கட்டாரிய, ஜோர்டானிய படைகளின் தலைமையில் இருக்கலாம். கடந்த மாதம் வளைகுடா ஒத்துழைப்புக் குழு (GCC) ஆனது ஜோர்டான் மற்றும் மொரோக்கோ முடியரசுகளுக்கு 5 பில்லியன் டாலர்கள் உதவித்திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தது; இவை இரண்டுமே வளைகுடா ஒத்துழைப்புக் குழு (GCC) வில் உறுப்பு நாடுகள் இல்லை.

வாஷிங்டன், சிரிய தேசியக் குழுவிலுள்ள (SNC) அடம்பிடிக்கும் எதிர்ப்புச் சக்திகளுக்கு ஆதரவு கொடுத்து அவற்றுடன் பேச்சுக்களையும் நடத்துகிறது. இது முஸ்லிம் பிரதர்ஹுட்டின் ஆதிக்கத்தில் உள்ளது; SNC, தேசிய ஒருங்கிணைப்புக் குழு (NCC) மற்றும் சுதந்திர சிரிய இராணுவம் (FSA) ஆகியவற்றிலுள்ள சிரிய எதிர்ப்புச் சக்திகளுக்கு இடையே ஒரு உடன்பாட்டைப் பெறுவதற்கு முயல்கிறது. SNC, FSA  ஆகியவை சர்வதேச தலையீட்டிற்கு அழைப்பு விடுத்திருக்கையில், NCC  அதை எதிர்த்துள்ளது.

ஐ.நா. ஆதரவைப் பெறுவதற்கான அரபு லீக்கின் முடிவை சிரிய தேசியக் குழு (SNC) வரவேற்கும் வகையில், அரபு லீக் மற்றும் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கும் இடையே கூட்டு முயற்சி என்பது குடிமக்கள் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யத் தேவையான அவசர, நடவடிக்கைகளுக்கு முதல் படியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அத்துடன் ஆட்சி மேலதிக குண்டுவீச்சுக்கள் கொலைகள் இவற்றைச் செய்யாமல் இருக்கவும் உறுதியளிக்கும் என்று அறிவித்துள்ளது.