WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The Pentagon’s strategy review: A blueprint for world war
பென்டகனின் மூலோபாய
மீளாய்வு: உலகப் போருக்கான முதல்நிலைத் திட்டம்
Bill Van Auken
9 January 2012
போர்
அலை பின் வாங்குகிறது”,
என்று ஒருமுறை அல்ல, இருமுறை வியாழன் அன்று பென்டகனில்
ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு புதிய பாதுகாப்பு மூலோபாய
வழிகாட்டியை அறிமுகப்படுத்துகையில் அறிவித்தார். இது முறையாக
சீனாவுடன் இராணுவ மோதலை ஆக்கிரோஷமான முறையில் அமெரிக்கா
கட்டமைப்பதை அறிவிப்பதாகும்.
அமெரிக்க ஜனாதிபதி இச்சொற்றொடரை மீண்டும் கூறும் கட்டாயத்தை
உணர்ந்திருக்கலாம். ஏனெனில் அவர் வெளியிட்ட ஆவணத்தின்
உள்ளடக்கம் தவறாக காட்டப்பட்டுள்ளதாலாகும். மூலோபாய
வழிகாட்டியும், அது வெளியிடப்பட்டபின் அதைத் தொடர்ந்த
கருத்துக்களும் அமெரிக்க இராணுவத்தின் கூடுதலான வெடிப்பு
மற்றும் ஒரு மூன்றாம் உலகப் போர் குறித்த எளிதில் புலப்படும்
அச்சுறுத்தலைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.
ஒரு
போர் அலை பின்வாங்குகிறது என்ற தன் வனப்புரைக்குத் அடித்தளமாக
ஒபாமா,
ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படுவது,
ஆப்கானிஸ்தானில் இருந்து ஓரளவு படைகள் திரும்பி வருவது
ஆகியவற்றைத் கொண்டிருந்தார். ஆப்கானிஸ்தானில் 90,000 அமெரிக்க
படையினர் மற்றும் மரைன்கள் இன்னும் உள்ளனர். காங்கிரஸினால்
இயற்றப்பட்ட சட்டத்தின்படி, பென்டகன் அடுத்த தசாப்தத்தில்
செலவழிக்கத் திட்டமிட்டிருந்த பணத்தில் இருந்து 487 பில்லியன்
டாலர் குறைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது.
ஆயினும்கூட அமெரிக்க ஜனாதிபதி தன்னுடைய குடியரசுக்கட்சி
எதிர்ப்பாளர்களிடம் இருந்தும் திசைதிருப்ப மற்றும் அமெரிக்க
இராணுவ-தொழில்துறை பிரிவினரிடம் இருந்தும் தவிர்க்க முடியாமல்
வரும் விமர்சனங்களை திசைதிருப்பப் பெரும் முயற்சி எடுத்துக்
கொண்டார். இதற்காக அவர் பென்டகனுடைய வரவு-செலவுத்திட்டம்
புஷ் நிர்வாகத்தின் இறுதிக் காலத்தில் இருந்த மிக உயர்ந்த
அளவுகளில் தொடரும் என்றும், இன்னும் அதிகரிக்கும் என்றும்,
ஆனால் அது கடந்த தசாப்தத்தில் மிக உயர்ந்தளவில் பதியப்பட்ட 80%
என இருக்காது என்றும் கூறினார்.
ஈராக்
மற்றும் ஆப்கானிஸ்தானில் அழிவைத் தந்த அமெரிக்கப் போர்களைக்
குறிப்பிட்ட ஒபாமா,
“நீண்ட
கால நாட்டைக் கட்டமைக்கும் முயற்சி பெரிய இராணுவ
அடிச்சுவடுகளின் முடிவுற்றது”
என்று
அறிவித்தார். ஆயினும் மூலோபாய வழிகாட்டி அமெரிக்கா அதன் முழு
நலன்களையும் எண்ணெய் வளமுடைய பாரசீக வளைகுடா மற்றும் பரந்த
மத்திய கிழக்கில் தொடரும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும்,
“இந்த
நோக்கங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கு அமெரிக்கா, அமெரிக்க
மற்றும் நட்பு நாடுகளின் இராணுவ கூட்டை தொடர்வதில் சிறப்பு
அக்கறை காட்டும்; அப்பிராந்தியத்திலும் அதைச்சுற்றிலும்
இருக்கும் பங்காளி நாடுகளின் ஆதரவு குறித்தும் அக்கறை
காட்டும்.”
என்றும் அது வலியுறுத்தியுள்ளது (வலியுறுத்தல் மூல ஆவணத்திலேயே
இருப்பது)
வாஷிங்டன் அதன் நலன்களை, வான், கடல் மிக்குயர் வலிமையை ஆளற்ற
விமான டிரோன் ஏவுகணைப் படுகொலைகள் மற்றும் சிறப்புப் படைகள்,
CIA
நடத்தும் கொலைகளுடனும் இணைக்கும் என்று தெரிவிக்கிறது.
அமெரிக்க இராணுவம்
“பிராந்தியங்களையும்
மக்களையும் பாதுகாக்கவும் ஒரு உறுதியான ஆட்சி வருவதற்கு
மாறுவதற்கு உதவியளிக்க
குறைந்த காலத்திற்கேனும், சிறியளவில் படைகளை நிறுத்திக்
கொண்டு, தேவையேற்படின் நீண்ட காலத்திற்கும் அணிதிரட்டப்பட்ட
படைகளுடன் நிலைகொள்ளும்”
என்றும் அது வலியுறுத்துகிறது. (வலியுறுத்தல் மூல ஆவணத்திலேயே
இருப்பது)
வேறுவிதமாகக் கூறினால் ஆட்சிமாற்றத்திற்கான போர்கள் மற்றும்
நீடித்த அமெரிக்க ஆக்கிரமிப்பின்
“பெரும்
இராணுவ அடிச்சுவடுகள்”
அடுத்த
முறை தாக்கும் வரை தொடரும்.
“போக்கை
மாற்றும் கருத்தாய்வு”
என்பது
பென்டகனின் கணக்கீடுகளில்
“முக்கியமானது
(திறவுகோல் போல்) என்றும் வலியுறுத்துகிறது; இதன் பொருள்
இராணுவப் பிரிவை விரைவில் அதிகரிப்பதற்கான திட்டங்கள்
தயாரிப்பில் உள்ளன, அதில் தேசியப்பாதுகாப்புப் படை மற்றும்
இருப்புப் படை திரட்டல் அடங்கும். இதைத்தவிர இராணுவத்தில்
கட்டாயமாகச் சேர்க்கப்படும் சாத்தியமும் உள்ளது.
ஜனவரி
6ம் திகதி மூலோபாய வழிகாட்டியைப் பற்றி வாஷிங்டன் போஸ்ட்
வெளியிட்டுள்ள ஒரு விமர்சனரீதியான தலையங்கம் அமெரிக்க ஆளும்
உயரடுக்கின் இரத்தம்சிந்தும் மனப்பாங்குக் கணக்கீடுகளைப்
பற்றிய ஒரு பார்வையைத் தருகிறது. ஈரான் மற்றும் வடகொரியாவுடன்
போர்கள் என்பது தொடுவானத்தில்தான் உள்ளன; இதில்
“பெரிய
அமெரிக்கத் தரைப்படை, நீடித்த காலத்திற்குத் தேவைப்படும்”
என்று
செய்தித்தாள் தெரிவிக்கிறது. இதேபோன்ற தலையீடுகள் யேமன்
மற்றும் பாக்கிஸ்தானிலும்கூட தேவைப்படலாம்,
“அதே
நேரத்தில் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள்.... பல ஆண்டுகளாக
ஆப்கானிஸ்தானில் உள்ளன”
என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
மூலோபாய வழிகாட்டியின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கூறுபாடு
அமெரிக்க இராணுவ வலிமை ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கொண்டுள்ள
மறு சார்பும், எழுச்சி பெற்று வரும் சீன சக்தியுடன் ஒரு
மோதலுக்கான போக்கும் ஆகும்.
கொரியா
மற்றும் வியட்நாமில் பேரழிவை விளைவித்த அமெரிக்க ஏகாதிபத்திய
தலையீட்டிற்குப் பின், வாஷிங்டன் அது தான்
“மீண்டும்”
ஆசியாவிற்கு வந்துவிட்டதாக அறிவிக்கின்றது. தன்னுடைய ஆயுத
வலிமையைப் பயன்படுத்தி இப்பிராந்தியத்தின் மேல் ஆதிக்கத்தை
உறுதிப்படுத்தவும், சீனச் செல்வாக்கை விரட்டவும் முடிந்தால்
கட்டுப்படுத்தவும் முயல்கிறது. கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ்,
இந்தோனிசியாவில் இருந்து வியட்நாம், பர்மா என்று பிராந்திய
சக்திகளுடன் உள்ள உடன்பாடுகளை உறுதிப்படுத்துவதைக் கண்டுள்ளது.
தென் சீனக் கடலில் பிராந்தியப் மோதல்களில் இது
ஆத்திரமூட்டும்வகையில் தலையிட்டுள்ளது; இன்னும் சமீபத்தில் வட
ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 2,500 மரைன்களை நிலைப்படுத்தும்
திட்டங்களைச் செயல்படுத்தியது.
2008
தேர்தலில் போர் எதிர்ப்பாளன் என்று தவறாக தன்னை காட்டிக் கொண்ட
ஒபாமாவின் நிலைப்பாட்டின் பின்னணயில் இத்தகைய அமெரிக்க
இராணுவக் கொள்கையின் மாற்றுநிலைப்பாடு வெள்ளை மாளிகையில் அவரை
இருத்த முற்படும் அமெரிக்க அரசியல் ஆளும்பிரிவின் சிலவற்றின்
முக்கிய இலக்கு ஆகும். புஷ் நிர்வாகத்தின் நீடித்த மற்றும்
செலவுகள் கொடுத்த ஈராக், ஆப்கானியப் போர்கள் மற்றும் பாரசீக
வளைகுடா மற்றும் மத்திய ஆசிய எரிசக்தி இருப்புக்கள் மீது
உறுதிகூறப்பட்ட அமெரிக்கக் கட்டுப்பாட்டை அளிக்கத் தவறியதும்,
இந்த அடுக்குகளை அமெரிக்க இராணுவச் சக்தியின் முக்கிய, முதலில்
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குக் ஆசியாவில் மட்டுமின்றி,
பெருகிய முறையில் ஆபிரிக்கா மற்றும் பிற இடங்களில் போட்டியாக
இருப்பதற்கு எதிராக கணிசமான சவால் விடக்கூடிய நாட்டிற்கு
எதிராக இயக்கப்பட வேண்டும் என்று விரும்பின.
அமெரிக்க ஆளும் உயரடுக்கு கடந்த தசாப்தத்தின் இரு முக்கிய
போர்களின் அடித்தளத்தில் இருந்த உண்மையான இலக்குகளை
கைவிட்டுவிடவில்லை. இதைத்தான் மூலோபாய வழிகாட்டி
தெளிவாக்குகிறது; வேறு வகைகளிலும் உயரடுக்கு இவற்றைத் தொடர
விரும்புகிறது. அந்நோக்கங்களின் முக்கியமானது சீனா
நம்பியிருக்கும் மூலோபாய எரிசக்தி ஆதாரங்கள்மீது அமெரிக்கக்
கட்டுப்பாட்டை திணிப்பதாகும்.
சீனாவுடன் இராணுவ மோதல் என்பதின் தாக்கங்கள் மூலோபாய
வழிகாட்டியின் ஒரு பிரிவில் விவரமாகக் கூறப்பட்டுள்ளன.
வாஷிங்டன்
“திறமையுடன்
விளங்கும் அணுசக்தி ஆயுதக் கிடங்கை”
தக்கவைத்துக்கொள்ளும் என்று உலகிற்கு இது உறுதி கொடுக்கிறது;
“எச்சூழ்நிலையிலும்
நாம் ஒரு விரோதியை,
ஏற்கமுடியாத சேதத்தை எதிர்கொள்ளும் நிலையைக் கொடுப்போம்.”
வெளியே
கொடூரமான புதிய போர்கள் என்னும் அச்சுறுத்தல்,
உள்நாட்டில் இராணுவப் பொலிஸ் அரச சர்வாதிகாரத்தை நோக்கி
நடைபோடுவதுடன் இணைந்துள்ளது. பென்டகன் வழிகாட்டி இராணுவம்
“உள்நாட்டையும்
பாதுகாக்க வேண்டும்”,
“பொதுத்துறை
அதிகாரிகளுக்கு உரிய ஆதரவைக் கொடுக்க வேண்டும்”
என்று
குறிப்பாகப் பணிக்கிறது.
“உள்நாட்டுப்
பாதுகாப்பு மற்றும் பொதுத்துறை அதிகாரிகளுக்கு ஆதரவு என்பதற்கு
வலுவான, உறுதியான அரச படை தயார்நிலையில் இருக்க வேண்டும்”
என்று
அது வலியுறுத்துகிறது. இவ் வார்த்தைப் பிரயோகங்கள் அமெரிக்கத்
துருப்புக்கள் அமெரிக்க நகரங்களின் தெருக்களில் வர்க்கப்
போராட்டங்கள், சமூக அமைதி என்னும் தவிர்க்க முடியாத எழுச்சிகளை
எதிர்கொள்ளத் தயாராகின்றன என்ற பொருளைக் காட்டுகிறது.
குற்றச்சாட்டு சுமத்தப்படாமல், விசாரணைகள் இல்லாமல் குடிமகன்,
குடிமகன் அல்லாதவர் என்று எவரையும் இராணுவக் காவலில்
வைப்பதற்கு இசைவு கொடுக்கும், ஒபாமாவின்
NDAA
எனப்படும் தேசியப் பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தில்
கையெழுத்திட்டபின் வந்துள்ள நிலையில், இந்த விதி,
உள்நாட்டில் இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு தீவிர
எச்சரிக்கை ஆகும்.
2012
தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் அதே நேரத்தில் வந்துள்ள
இந்த மூலோபாய வழிகாட்டி, பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகையால்
வெளியிடப்பட்டுள்ளது, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக்
கட்சியினருக்கும் இடையே வரவிருக்கும் போட்டியின் பொருத்தமற்ற
தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது—இது
அடிப்படையான வெளிநாட்டு உள்நாட்டு அமெரிக்கக் கொள்கைக்கு
முற்றிலும் பொருந்தும். 2008ம் ஆண்டு புஷ் நிர்வாகத்தின்
வெளிநாட்டில் போர், உள்நாட்டின் ஜனநாயக உரிமைகள் மீதான
தாக்குதல் இவற்றிற்கு மக்கள் விரோதப் போக்கு அலையென வந்து
பதவியில் இருத்தப்பட்ட பின்னர், ஒபாமா நிர்வாகம் இரண்டையும்
விரிவாக்கம்தான் செய்துள்ளது. மனிதகுலத்தை நேரடியாக உலகளாவிய
பெரும் மோதல் என்னும் அச்சுறுத்தலுக்கு முகங் கொடுக்க
வைத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டால் இவருடைய குடியரசுக் கட்சி
போட்டியாளர் இதே போக்கைத்தான் கையாள்வார். இரு கட்சிகளுமே ஒரே
ஆளும் நிதியத் தன்னலக்குழு மற்றும் இராணுவ-உளவுத்துறை
பிரிவுகளில் இருந்துதான் உத்தரவுகளைப் பெறுகின்றன.
போருக்கு எதிரான போராட்டம், மற்றும் ஜனநாயக உரிமைகளைக்
பாதுகாப்பதற்கான போராட்டம் ஆகியவை ஜனநாயகக் கட்சியுடன்
சமரசத்திற்கு இடமில்லாத உடைவின் மூலம்தான் நடத்தப்பட முடியும்.
இதற்கு ஒபாமா நிர்வாகம், இராணுவவாதம் மற்றும் சர்வாதிகார
அச்சுறுத்தலுக்கு ஆதாரமாக இருக்கும் முதலாளித்துவ இலாப முறை
இவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன அரசியல்
இயக்கத்திற்காக திரட்டப்பட வேண்டும். |