WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
சிரியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரபு லீக்கிற்கு
வாஷிங்டன் அழுத்தம் கொடுக்கிறது
By Chris Marsden
6 January 2012
use this version to print | Send
feedback
அண்மித்த கிழக்கு விவகாரங்களுக்கான உதவி
வெளிவிவகாரச் செயலாளராக இருக்கும் ஜெப்ரி பெல்ட்மனை ஒபாமா
நிர்வாகம் நேற்று சிரியா பற்றி அரபு லீக்குடன் பேச்சுக்களை
நடத்துவதற்கு அனுப்பிவைத்தது. சிரியாவிற்கு பணியில்
சென்றிருந்த அரபு லீக் நோக்காளர்கள் ஒரு எதிர்மறைத் தீர்ப்பைக்
கொடுக்க வேண்டும் என உறுதிப்படுத்துவதுதான் அவருடைய செயல்
ஆகும்—இதையொட்டி
ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானம் ஒன்று சிரிய ஜனாதிபதி
பஷிர் அல்-அசாத் பதவியை விட்டு அகற்றுவதை இராணுவத் தலையீட்டின்
மூலம் செய்வது நெறியாக்கப்படுவது எளிதாகும்.
பெல்ட்மனுடைய வருகைக்கு முன் வெள்ளை மாளிகையில்
இருந்து பல அறிக்கைகள் சிரிய ஆட்சி நகரங்களில் இருந்து
துருப்புக்கள் வெளியேற்றப்பட வேண்டும், அடக்குமுறைக்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை
நிறைவேற்றவில்லை என்று வலியுறுத்தி வெளிவந்தன.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளார் ஜே கார்னி
கூறினார்:
“ஸ்னைப்பர்ச்
சூடு, சித்திரவதை மற்றும் கொலை ஆகியவை சிரியாவில் தொடர்வதால்,
அரபு லீக் அளித்த நெறிக் கோட்பாட்டின் தேவைகள்
நிறைவேற்றப்படவில்லை என்பது தெளிவு. பாதுகாப்புச் சபை
செயற்படுவதற்கான நேரம் வந்து விட்டது என நம்புகிறோம்.”
அரச அலுவலகச் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா
நியூலாந்த்,
“வன்முறை
இன்னும் நிற்கவில்லை; நிலைமை அதைவிட மோசமாகத்தான் உள்ளது”
என்றார்.
“வன்முறையைத்
தன் அணிதிரட்டுதல், தூண்டுதல் மூலம் மீண்டும் தூண்டிவிட
முற்படும் அமைப்புக்களுள் அமெரிக்காவும் ஒன்று”
என்று
சிரிய வெளியுறவு அமைச்சரகச் செய்தித் தொடர்பாளர் ஜிஹட் மக்டிசி
கூறினார்.
“அமெரிக்க...அறிக்கைகள்
அரபு லீக்கின் பணியில் பெரும் தலையீடு ஆகும்”,
“சிரியவில்
வேண்டுமென்றே நியாயமற்ற சர்வதேசக் குறுக்கீட்டைக்
கொண்டுவருவதற்கான முயற்சியாகும்”
என்றும் கூறினார்.
அமெரிக்கா தனது அசாத்-விரோத வனப்புரையை
லீக்கின் கிட்டத்தட்ட 100 கண்காணிப்பாளர்கள், ஆட்சி
உடன்பாட்டின் விதிகளை கௌரவிப்பது குறித்து சாதாகமான தீர்ப்பைப்
பரிசீலிக்கிறது என்ற அடையாளங்கள் வந்தவுடன்
முடுக்கிவிட்டுள்ளது. அரபு லீக்கின் செய்தித் தொடர்பாளர்
ஒருவர் சிரிய இராணுவம் இப்பொழுது முக்கிய நகரங்களில் இருந்து
அகற்றப்பட்டுவிட்டது, நகர்களுக்கு வெளியேதான் உள்ளது என்றார்.
அரபு லீக்கின் அதிகாரி அட்னன் அல்-குடீர் கூறினார்,
“குறிப்பிடத்தக்க
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.”
அரபு லீக்கின் மந்திரிகள் இந்த வார இறுதியில்
சந்திப்பர்; கண்காணிப்புக் குழுவின் ஆரம்ப அறிக்கை ஞாயிறன்று
தயாராகி விடும்—ஒரு
நாள் தாமதமாக; இதற்குக் காரணம் இன்னும் அட்டவணையிடப்படாத
உயர்மட்ட மந்திரிகள் கூட்டத்திற்கு பரிந்துரைகள் அனுப்பப்
படுவதற்கு முன்னதாக அமெரிக்கா தன் குறைகூறல்களை அதிகரிக்கும்
வகையில் கொடுக்கும் அழுத்தமாக இருக்கலாம்.
திங்களன்று அரபு லீக்கின் தலைமைச் செயலர் நபில்
எலர்பி கண்காணிப்பாளர்கள் 3,484 கைதிகளை விடுவித்த சாதனையைப்
புரிந்துள்ளனர். நகரங்களில் இருந்து கனரக ஆயுதங்கள்
அகற்றப்பட்டுவிட்டன என்றார்; ஆனால்,
“ஆம்.
இன்னமும் துப்பாக்கிச் சூடுகளும் நடக்கின்றன; ஆம்.
ஸ்னைப்பர்களும் உள்ளன; ஆம். கொலைகள் தொடர்கின்றன”
என்றும் கூறினார்.
அரபு லீக்கிடம் இருந்து தான் விரும்புவதைப்
பெறலாம் என்று அமெரிக்க மிக நம்பிக்கையுடன் உள்ளது; ஆனால்
அவ்வாறு நடக்கவில்லை என்றால் சிரிய ஏமாற்றுத்தனத்திற்கு அரபு
லீக் சரணடைந்துவிட்டது என்று கண்டிக்கத் தயாராகத் தான் உள்ளது
என்பதையும் தெளிவாக்கியுள்ளது.
புதன்கிழமை அன்று, அரபு லீக்கின் கவனம்
ஈர்க்கப்பட்டது. கத்தார் பிரதம மந்திரி ஷேக் ஹமத் பின் ஜசெம்
அல்-தனி, சிரியாவிலுள்ள லீக்கின் செயற்பாட்டுப் படையின்
தலைவர், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனுடன் நியூயோர்க்கில்
விவாதங்களை நடத்தினார்—“தொழில்நுட்ப
உதவி நாடவும், ஐ.நா.வின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளவும்
முயல்கிறோம்; ஏனெனில் இப்பொழுதுதான் கண்காணிப்பாளர்களை அரபு
லீக் முதல் தடவயாக அனுப்பியுள்ளது; சில தவறுகள் இருக்கக்
கூடும்”
என்று அவர் கூறினார்.
திரைக்குப்பின், வாஷிங்டன் எதிர்ப்பு சிரிய
தேசியக் குழு (Syrian
National Council SNC)
மற்றும் பல பிராந்திய சக்திகளுடன் இணைந்து
செயல்படுகிறது; இதில் கட்டாரும் உண்டு. இது பாதுகாப்புச்
சபையின் மூலம் அல்லது பல இடைச் சக்திகள் மூலம் லிபியாவில்
நடந்தது போல் இராணுவத் தலையீட்டை நடத்துவதற்காகும்.
துருக்கியைத் தளமாகக் கொண்டு, அந்நாட்டு
ஆதரவில் செயல்படும்
SNC,
பல
CIA
சொத்துக்களைக்
கொண்டுள்ளது. அதைத்தவிர, அசாத் ஆட்சியில் இருந்து
வெளியேறியவர்கள், மற்றும் இஸ்லாமியவாதிகளையும் கொண்டுள்ளது;
முக்கியமாக முஸ்லிம் பிரதர்ஹுட்டில் இருந்து வந்தவர்களைக்
கொண்டுள்ளது. இது அமெரிக்கா, துருக்கி, சௌதி அரேபியா, கட்டார்
தலைமையில் உள்ள வளைகுடா நாடுகளுக்கு ஒரு முகப்பாகச்
செயல்படுகிறது; அவைகள் அனைத்தும் சிரியாவில் ஆட்சி மாற்றத்தை,
ஈரானைத் தனிமைப்படுத்துவதற்கு நடக்கும் முயற்சிகளில் ஒரு
பகுதியாக, ஒன்றுபட்டுச் செயல்படுகின்றன.
புதன்கிழமை அன்று,
SNC
சிரியாவில் ஜனநாயக மாற்றத்திற்கான தேசிய
ஒருங்கிணைப்பு அமைப்பு (NCB)
உடன்
ஒரு உடன்பாட்டை அறிவித்தது; பிந்தைய அமைப்பு ஒரு சிரியாவைத்
தளமாகக் கொண்ட அரபு தேசியவாதிகளின் நிழல் குழு ஆகும், போலி
சோசலிசக் குழுக்களையும் கொண்டுள்ளது; ஆனால் இது பிளவுற்று
உள்ளது. இதற்குக் காரணம் ஏகாதிபத்திய இராணுவக்
குறுக்கீட்டிற்கு
SNC
ஆதரவு கொடுப்பதுதான்.
SNC
உறுப்பினர்
கலித் கமால் இரு திறத்தாரும்
NCB
யின் பிரதிநித்துவச் சதவிகிதம் குறித்தும்,
குடிமக்களைக் காப்பாற்ற ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கு
NCB
அழைப்பு விடாதது குறித்தும் கருத்து
வேறுபாடுகள் கொண்டுள்ளன.
“SNC
யில்
ஒரு சிலர்தான் ஆயுதக் குறுக்கீடு நடவடிக்கை வேண்டாம்
என்பவர்கள்”
என்று
பெயர் சொல்ல விரும்பாத எஸ்.என்.சி. உறுப்பினர் ஒருவர்
கூறினார்.
The
Majalla
இதழிற்குக் கொடுத்த விரிவான பேட்டி ஒன்றில்,
SNC
தலைவர்
பர்ஹன் கலியௌன் முக்கிய சக்திகள் அரபு லீக்கை சிரியாவில்
தாங்கள் நுழைவதற்கு ஒரு நுழைவாயில் போல் பயன்படுத்துகின்றனர்
என்பதைத் தெளிவாக்கினார்.
“எவரும்,
அரபு லீக் கூட, இந்த ஆட்சி மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
பெரும்பாலான அரபு லீக் மந்திரிகள், முன்முயற்சிக்கு ஆதரவு
கொடுத்தவர்கள், ஆட்சி அதை கருக்கலைத்துவிடும் என்றுதான்
எதிர்பார்க்கின்றனர், பிரச்சினையை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு
அனுப்பும் நோக்கத்தைக் கொண்டுள்ளனர்”
என்றார் அவர்.
ரஷ்யாவும் சீனாவும் ஐ.நா. தீர்மானம் ஒன்றைப்
பெறுவதற்கு தடுப்பு அதிகாரத்தைக் கடக்கும் முயற்சி என்பதை அவர்
ஒப்புக் கொண்டார்; அரபு முன்முயற்சி ஒரு இராணுவத் தலையீடு என்ற
கருத்தை அது கொடுக்கிறது.
“முன்முயற்சிக்கு
மாற்றீடு ஏதும் இல்லை. ஆனால் அரபுக் குழு அதன் முயற்சிகள்
அனைத்தையும் அரபுத் முன்முயற்சி ஒன்றின் மூலம்தான் நடத்த
வேண்டும், அந்த அரபுத் முன்முயற்சி ஐ.நா. பாதுகாப்புச் சபையால்
ஏற்கப்பட வேண்டும்”
என்றார் அவர்.
“எதிர்ப்பு
நபர்கள்”
விடுத்த குற்றச்சாட்டுக்களை மறுக்கும் கட்டாயம் கௌலியனுக்கு
ஏற்பட்டது என்று த மஜால்லா கூறுகிறது;
“எதிர்ப்புக்
குழுவை முஸ்லிம் பிரதர்ஹுட்டிற்காக செயல்படும் ஒரு இஸ்லாமியவாத
அமைப்பு என்று விவரித்தனர்; ஆனால் உங்களால் பிரதிபலிக்கப்படும்
ஒரு மதச் சார்பற்ற செய்தித் தொடர்பாளர் உள்ளார்.”
அவர் சுதந்திர சிரிய இராணுவம் (FSA)
பாதுகாப்பு முறைக்கு முக்கிய தூண் போன்றது என
விளக்கினார்;
“குடிமக்களைப்
பாதுகாக்க வெளிநாட்டவர்களுக்காக நாங்கள் காத்திருக்க
வேண்டியதில்லை என்பதற்கு இது நிரூபணம்; சிரியாவிற்குள்ளேயே
குடிமக்களைப் பாதுகாக்க வழிவகைகளை மேற்கொள்ளுவோம்...”
இதன்பின், அவர்
“சௌதி
அரேபியா உட்பட வளைகுடா நாடுகளை, சிரிய மக்களுக்கு அரசியல்
ஆதரவு கொடுப்பதற்கும் அரபுத் முன்முயற்சிக்கு ஆதரவு
கொடுப்பதற்குச் சக்தி வாய்ந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதற்கும்”
பாராட்டினார்.
“அரபு
லீக் முன்முயற்சி, துவக்கத்தில் ஒரு வளைகுடாத் துவக்க
முயற்சிதான்....”
இராணுவத்திலிருந்து வெளியேறி சுன்னி நபர்களைக்
கொண்ட
FSA,
துருக்கி மற்றும் வளைகுடா நாடுகளிடம் இருந்து ஆயுதங்களைப்
பெற்றுள்ளது; இந்த வாரம் அது அசாத் ஆட்சியின்
“முக்கிய
நலன்களுக்கு எதிராக பெரும் நடவடிக்கைகளை தொடக்கும்”
என்று அறிவித்துள்ளது.
FSA
தளபதி
கர்னல் ரியத் அல்-அசத்,
“நாம்
ஒன்றும் அவரை அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மூலம் அகற்றமுடியாது;
எனவே ஆயுதத்தின் மூலம் வெளியேற்றப்போகிறோம்”என்றார்.
“பெரிய
நடவடிக்கைகளுக்கு நாங்கள் தயாரிப்புக்கள் நடத்துகிறோம்; அரபு
லீக் கண்காணிப்பாளர்கள் அல்லது அவர்களுடைய பயனற்ற பணியில்
எங்களுக்கு நம்பிக்கை கிடையாது”
என்றும் அவர் கூறினார்.
FSA
இன்னும் பிற போராளிக் குழுக்கள் இராணுவ நடவடிக்கை ஒன்றை நடத்தி
வருகின்றன; இது கிட்டத்தட்ட 2,000 பாதுகாப்புப் படையினர்கள்
இறப்பதற்குக் காரணம் ஆகிவிட்டது. இது செய்தி ஊடகத்தால்
மறைக்கப்பட்டுவிட்டது; ஏனெனில் அசாத்தின் படைகள் அமைதியான
எதிர்ப்புக்களை மட்டுமே இலக்கு கொண்டதாக அவை சித்தரிக்க
விரும்புகின்றன. இராணுவ வாகன வரிசைகளை
FSA
தாக்குவதுடன், விமானத் தளம் ஒன்றையும்
தாக்கியுள்ளது; டமாஸ்கஸில் காத் கட்சி அலுவலகம் ஒன்றையும்
தாக்கியுள்ளது. டிசம்பர் 23ம் திகதி, இஸ்லாமியவாத தற்கொலைப்
படையினர் இரண்டு பாதுகாப்புத் தளங்களை இலக்கு வைத்து 44 பேரைக்
கொன்றனர்.
பாதுகாப்பு மந்திரி எகுத் பரக் இஸ்ரேலின்
வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் குழுவிடம் இந்த வாரம் அசாத்
இன்னும்
“ஒரு
சில வாரங்கள்”
மட்டும்தான் இருப்பார்; அதற்குள் அவர் அகற்றப்பட்டுவிடுவார்
என்று கூறினார். ஈரான், சிரியா, லெபனானிலுள்ள ஹெஸ்புல்லா
ஆகியவற்றைக் குறிப்பிட்டு, பாத்திய ஆட்சியின் சரிவு
“தீவிரவாத
அச்சுக்கு ஒரு பலத்த அடியாக இருக்கும்”
என்றார். |