சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government prepares for colonisation in plantation districts

இலங்கை அரசாங்கம் பெருந்தோட்ட மாவட்டங்களில் குடியேற்றங்களை ஏற்படுத்த தயாராகின்றது

By M. Vasanthan
6 January 2012

use this version to print | Send feedback

இலங்கை அரசாங்கம் 2012 வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டங்களில் 37,000 ஹெக்டர் நிலங்களை பொறுப்பேற்று அவற்றைசிறு தோட்ட உரிமையாளர்கள் மத்தியில் விநியோகிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் தொழிலுக்கு ஆபத்து ஏற்படவிருப்பதோடு, இது பெருந்தோட்ட மாவட்டங்களில் தொழிலாளர்களின் தொழிற்துறை சக்தியை பலவீனப்படுத்த குடியேற்றங்களை முன்னெடுப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கையாகும்.

நிதியமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய போது, “1992ல் பெருந்தோட்ட நிலங்கள் தனியார்மயப்படுத்தப்பட்ட பின்னர் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படாத நிலங்கள் பொறுப்பேற்கப்பட்டு “30 வருடகால குத்தகைத் திட்டத்தின் கீழ் 2 ஏக்கர் துண்டுகளாக பிரித்து சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு பங்கிடப்படும் என தெரிவித்தார். நிதி உதவிகள், உயர் தர விதைகள் மற்றும் நடுகைப் பொருட்களும் அவர்களுக்கு வழங்கப்படும் என இராஜபக்ஷ தெரிவித்தார்.

ஒதுக்கப்படவுள்ள நிலங்களைப் பற்றிய விபரங்களை இராஜபக்ஷ வளங்காவிட்டாலும், அவரது வரவு செலவுத் திட்ட உரையானது பிரதேசங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியது. இந்தக் கையகப்படுத்தும் நடவடிக்கையின் அளவு எவ்வளவு எனில், பெருந்தோட்டங்களில் சுமார் 20 வீதம் என்ற பிரமாண்டமான அளவாகும், மற்றும் அது பிரதானமாக தேயிலைத் தோட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.  

பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சின் செயலாளர் மாலனி பீரிஸ் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவிக்கையில், “பல முதலீட்டாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வெளியாரும் காணிகளுக்காக காத்திருக்கின்றனர். நிலங்கள் வெளியாருக்கு கொடுக்கப்படும் என்ற தவறான எண்ணம் காணப்படுகின்றது. சகலருக்கும் நன்மை கிடைக்கக் கூடிய வகையில் நியாயமான விநியோக்தை நாம் உறுதிப்படுத்துவோம்,” என்றார்.

நியாயமான விநியோகம் என்ற பதம் ஒரு மூடி மறைப்பாகும். பெருந்தோட்டங்களில் இருந்து பரந்த பிரதேசங்களை பிரித்து விவசாயிகளுக்கு அல்லது ஏனைய முதலீட்டாளர்களுக்கு கட்டிடங்களை அமைப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும். இந்த திட்டம்சிறு தோட்ட உரிமையாளர்கள் அல்லது நிலங்கள் அற்ற விவசாயிகள் மீதான அனுதாபத்தினால் தயாரிக்கப்பட்டதல்ல. பெருந்தோட்டப் பிரதேசங்களில் அத்தகைய குடியேற்றங்களை ஸ்தாபிப்பதன் மூலம், ஒரு குட்டி முதலாளித்துவ தட்டுக்களை உருவாக்கி அவர்களை தொழிலாளர்களுக்கு எதிராக அணிதிரட்ட அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

நிலமற்ற சிங்கள விவசாயிகளை குடியேற்றி அவர்களை தொழிலாளர்களுக்கு எதிராக இருத்துவதற்காக கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் இத்தகைய கிராமங்களை அமைத்தன. இது தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான தமிழர் விரோத பாரபட்சங்களை பாகமாகும். இராஜபக்ஷ அரசாங்கம் இத்தகைய குடியிறுப்புக்களை பெரிய அளவில் உருவாக்க முயற்சிக்கின்றது.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் விலைவாசி அதிகரிப்பின் மத்தயில் கடும் வறுமை, வேலைச் சுமை அதிகரிப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை மற்றும் வசதிகள் பற்றாக்குறைக்கு எதிராக அமைதியின்மை அதிகரித்து வருகின்ற நிலையிலேயே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினராவர். இவர்களது சம்பளத்தை வறிய மட்டத்திலேயே வைத்திருக்க தொழிற்சங்கங்கள் உதவுகின்றன.

தோட்டப்புறங்களில் அமைதியின்மை வெடிக்கும் என்று எதிர்பார்த்து, பெருந்தோட்ட மாவட்டங்களில் அரச ஒடுக்குமுறை கருவிகளும் பலப்படுத்தப்படுகின்றன. தற்போது இராணுவம் நுவரெலியாவுக்கு அருகில் தலவாக்கலையில் முகாம் ஒன்றை அமைக்கின்றது. யுத்த காலத்தில் இருந்தே விசேட அதிரடிப் படை முகாம் ஒன்று நுவரெலியாவில் உள்ளது. சிறு தோட்ட உரிமையாளர் பகுதிகளை உருவாக்க பரந்த பிரதேசங்களை ஒதுக்குவதானது தொழில் மற்றும் ஏனைய உரிமைகளுக்காகப் போராட்டத்துக்கு வரவுள்ள தொழிலாளர்களை பயமுறுத்துவதற்காக அரசாங்கம் வேண்டுமென்றே தீட்டும் திட்டமாகும்.

நிலங்களை நியாயமான முறையில் விநியோகிப்பதாகவும் வெளியாரை அனுமதிப்பதில்லை என்றும் பீரிஸ் குறிப்பிட்டது தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு வளரவிடாமல் தடுப்பதற்கே ஆகும். தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிந்துகொண்டே, பெருந்தோட்டங்களில் காணிகளை கையகப்படுத்துவது என்பதுஒரு உணர்வைத் தூண்டக்கூடிய விடயமாகும் என அவர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் என்ற பீதியில், தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் திட்டத்தை தொழிலாளர்களுக்கு கூறாமல் மறைத்து விட்டன. ஒரு சில தொழிலாளர்களுக்கே இதைப் பற்றி தெரியும். தொழிற்சங்கங்கள் இந்த திட்டத்தை முழுமையாக ஆதரிக்கின்றன.

அரசாங்கத்தின் தயாரிப்பைப் பற்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் [.தொ.கா] தலைவர் முத்து சிவலிங்கத்திடம் உலக சோசலிச வலைத் தளம் கேட்ட போது, “நிலங்கள் தொழிலாளர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும். நிலங்கள் வெளியாருக்கு கொடுக்கப்பட்டால் நாங்கள் அதற்கு எதிராகப் போராடுவோம்,” என்றார். ஆயினும், “பெருந்தோட்ட அமைச்சு திட்டத்தின் விபரங்களை கொடுக்க மறுக்கின்றது என்றும் அவர் புலம்பினார். சிவலிங்கம் இராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரதி அமைச்சராக இருக்கின்ற அதே வேளை, .தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அமைச்சரவை அமைச்சராக இருக்கின்றார்.

யூ.என்.பீ. சார்ந்த தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் [தே.தோ.தொ.] தலைவர் ஆர். யோகராஜன், நிலங்களை வேறு பயிர்களை பயிரிடவோ அல்லது வீடுகளை கட்டவோ பயன்படுத்த வேண்டாம், தேயிலை மற்றும் இறப்பரை மட்டுமே பயிரிட பயன்படுத்துமாறு தான் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டதாக வீரகேசரி பத்திரிகைக்குக் கூறினார். இந்த காணிகளில் உயர்ந்த உற்பத்தியைப் பெறுவதற்காக தொழிலாளர்களதும் இளைஞர்களதும் அனுபவங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறும் அவர் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

.தொ.கா. மற்றும் தே.தோ.தொ.. உட்பட தோட்டத் தொழிற்சங்கங்கள், அரசாங்கத்தின் திட்டங்களை மூடி மறைக்கின்றன. குறிப்பாக இ.தொ.கா. சில தோட்டங்களை பகுதிகளாக பிரித்து தொழிலாளர்களுக்கு கொடுக்குமாறு நீண்டகாலமாக பரிந்துரைத்து வருகின்றது. அது தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றும் பிற்போக்குத் திட்டமாகும்.

தோட்டங்களைப் பிரிப்பது தொழிலாளர்களின் தொழில் மற்றும் நிலைமைகளுக்கும் ஒரு பெரும் அடியாகும். அரசாங்கத்தின் திட்டத்தைப் பற்றி வெளி ஓயா தோட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி சிவலிங்கத்திடம் கேள்வி எழுப்பினார். திட்டத்தை மூடி மறைக்க முயற்சித்த அவர், தொழிலாளர்களுக்கு நிலம் கிடைக்கும் எனக் கூறினார்.

எமது வலைத் தளத்துடன் உரையாடிய ஒரு தொழிலாளி, “இந்த அரசாங்கம் எங்களுக்கு காணிகளைக் கொடுக்கும் என நான் நம்பவில்லை அவர்கள் எங்களுக்கு நிலம் கொடுத்தாலும் பணம் இன்றி நாங்கள் எப்படி விவசாயம் செய்வது? இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டால் நாங்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்வோம். எங்களது தொழில்களை மட்டுமல்ல, எங்களது பிள்ளைகளின் தொழிலையும் இழக்க நேரிடும். .தொ.கா. இந்த திட்டத்தை ஆதரிப்பது தொழிலாளர்களுக்கு பெரும் ஆபத்தாகும்,” என்றார்.

செல்வந்த தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள், தொழிலாளர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி அக்கறை செலுத்துவதில்லை. அவர்கள் செல்வத்தைப் பெருக்கவே தொழிற்சங்கங்களைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் சிலர் பெருந்தோட்ட உரிமையாளர்களாவர் மற்றும் ஏனையவர்கள் வர்த்தகர்களாவர். ஏனைய அதிகாரத்துவவாதிகள் அரசாங்க அமைச்சர்களாக, பிரதி அமைச்சர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக மற்றும் அரச அதிகாரிகளாக இருந்து பிரமாண்டமான சலுகைகளுடன் வசதியாக வாழ்கின்றனர்.

அரசாங்கம் பல பெருந்தோட்டப் பிரதேசங்களை துண்டாடுவதற்கு பரந்த திட்டங்களைக் கொண்டுள்ளது. அது ஏற்கனவே அரசுக்குச் சொந்தமான ஜனவசம தோட்டங்களை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கத் தொடங்கியுள்ளது. தொழிலாளர்கள் தொழில்களை மட்டுமன்றி தரமற்ற லயன் காம்பராக்களைக் கூட இழப்பர். 

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம், ஏனைய தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது போலவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகவும் ஆத்திரமூட்டல்கள், அச்சுறுத்தல்கள், கைதுகள் மற்றும் சரீரத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிடப் பயன்படுத்தப்பட்டது. யுத்தத்தின் பின்னர் கொழும்பு அரசாங்கம் பொலிஸ் அரச வழிமுறைகளை பயன்படுத்துவதோடு, அதனுடன் சேர்த்து குடியேற்றமயப்படுத்தும் சூழ்ச்சித் திட்டங்களையும் தயார் செய்கின்றது. இது நாட்டின் முழு தொழிலாள வர்க்கத்துக்கும் எதிராக தயாரிக்கப்பட்டுவரும் தாக்குதல்களின் பாகமாகும்.