WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
High Court ruling paves way for closure of 600 UK libraries
600
பிரிட்டன் நூலகங்களை மூடுவதற்கு உயர்நீதிமன்றம் வழிவகுக்கிறது
By Daniel O’Flynn
4 January 2012
Brent SOS
நூலகங்கள் உயர்நீதிமன்றத்தில் நூலகங்களை மூடுவதற்கு எதிராகச்
செய்திருந்த மேல்முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,
உள்ளூராட்சி சபைகளுக்கு நாடு முழுவதும் அதையொட்டிய பச்சை
விளக்குகள் காட்டப்பெற்றன. பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள்
வடக்கு லண்டன் பிரிவில் ஆறு நூலகங்கள் மூடப்படுவது என்னும்
முடிவு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று வாதிட்டிருந்தனர்.
இவற்றையொட்டி இப்பொழுது குறைந்தப்பட்சம் 4,612 நூலகங்கள்
மூடும் அச்சறுத்தலின் கீழ் உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் பிரென்ட் உள்ளூராட்சி சபைப் பகுதியிலுள்ள
நூலகங்களில் 50 சதவிகிதத்தை மூடும் விருப்பத்தை அறிவித்தது.
பிரச்சாரகர்கள் முறையீட்டை
தொடக்குமுன்னரே
இவை துப்புரவாக்கப்பட்டு மூடப்பட்டன. ஒரு செய்தித் தொடர்பு
பெண்மணி கூறினார்:
“ஏப்ரல்
மாதம் நிர்வாகம் மூடப்படவேண்டும் என்று முடிவெடுத்த ஆறு
நூலகங்களும் இப்பொழுது மூடப்பட்டுவிட்டன, பாதுகாப்பாக
மூடப்பட்டன.”
மூன்று நீதிபதிகள், நீதிபதிப் பிரபு பில், நீதிபதிப் பிரபு
ரிச்சர்ட்ஸ் மற்றும் நீதிபதிப் பிரபு டேவிஸ் ஆகியோர்
எடுத்துள்ள முடிவு
Brent SOS
நூலகங்கள் பர்ஹாம் பார்க், கென்சல் ரைச், பிரெஸ்டர் ரோட்,
நியஸ்டன், கிரிக்கிள்வுட் மற்றும் டோகிங்டன் ஆகியவற்றிலுள்ள
நூலக மூடல்கள்
“அடிப்படையில்
தவறு நிறைந்தவை, சட்டவிரோதமானவை”
என்று முன்னதாக உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றிற்கு வந்த
சவாலுக்கு அது செல்லத்தக்கதே என்ற தீர்ப்பைக் கொடுத்துள்ளது.
Cricklewood Library
நீதிபதிப்பிரபு பில் கூறினார்:
“செலவுக்
குறைப்புக்கள் அளவின் தன்மையைக் காணும்போது, உள்ளூராட்சிச் சபை
முந்தைய ஆய்வுகளில் கிடைத்த தகவல் அடிப்படையில் முடிவெடுக்க
வேண்டியதாயிற்று; நூலகப் பணிகளும் குறைப்புக்களில் ஒரு பங்கைப்
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற முடிவு, என் தீர்மானப்படி,
சட்டவிரோதம் அல்ல.”
Brent
உள்ளூராட்சிச் சபை தொழிற் கட்சியின் ஆதிக்கத்தில் உள்ளது;
இதில் 40 குழு உறுப்பினர்கள் உள்ளனர்; லிபரல் ஜனநாயகவாதிகளின்
எண்ணிக்கை 17 என்றும் கன்சர்வேடிவ்களின் எண்ணிக்கை 6 என்றும்
உள்ளது. தொழிற் கட்சியில் ஆன் ஜோன் தலைமையில் இச்சபை இப்பொழுது
104 மில்லியன் பவுண்டுகள் வெட்டுக்களை உள்ளூராட்சிப் பணிகளில்
குறைப்புக்கள் மூலம் செய்கிறது; அதையொட்டித்தான்
கன்சர்வேடிவ்/லிபரல் டெமக்ராட் கூட்டாட்சியின் வரவு-செலவுத்
திட்டத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட முடியும்.
இந்த முடிவு எப்படி நாடெங்கும் தொழிற்கட்சி உள்ளூராட்சி சபைகள்
அரசாங்கத்திற்கு நடைமுறைக் கூட்டணிப் பங்காளிகள் போல்
செயல்பட்டு சிக்கன நடவடிக்கைகளை வங்கிகள், கொழுத்த
பணக்காரர்களின் நலன்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய
எடுக்கின்றன என்பதைக் காட்டுகிறது. உள்ளூராட்சித்
தொழிற்சங்கங்களின் பங்கு எதிர்ப்புக்களை சிதைத்து உள்ளூராட்சி
ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் வெட்டுக்களுக்கு எதிராக
ஒன்றுபட்ட தாக்குதலைத் தடுத்தல் என்று உள்ளது
Brent SOS
நூலகங்கள் உள்ளூர் குடும்பங்கள், ஆசிரியர்கள், ஆட்சித்
தொழிலாளர்கள் மற்றும் உயர்மட்டப் பிரச்சாரகர்கள், நாடகாசிரியர்
ஆலன் பென்னட், ஆசிரியர்கள் ஜேடி ஸ்மித், பிலிப் புல்மன்,
இசைக்கலைஞர்கள் நிக் கேவ், டெபெஷே மோடு மற்றும் பெட் ஷாப்
பாய்ஸ் ஆகியோரின் பரந்த ஆதரவைக் கொண்டுள்ளன.
ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் ஆலன் பென்னெட் கூறினார்:
“நூலகங்கள்
உள்ளூராட்சியால் நடத்தப்பட வேண்டும். அவைகள் அருகில் இருக்க
வேண்டும். அவற்றிற்குச் செல்லுதல் ஒரு பெரும் முயற்சியாக
இருக்கக் கூடாது. ... ஆனால் ஒரு குழந்தையின் இளம்பிராய
படிக்கும் வாழ்வு மிக முக்கியமானது ஆகும். அதில் தலையிட்டால்,
ஒரு குழந்தை நூல்களை அணுகுவது என்பதை எந்த வகையிலும்
தடுத்தால், நீங்கள் அக்குழந்தையைச் சேதப்படுத்துகிறீர்கள்,
வாழ்நாள் முழுவதும் ஒருவேளை
அது நீடிக்கும்.... எல்லா குடும்பங்களிலும் கணினி இல்லை. பல
குடும்பங்கள் பெரும் வறுமையில் உள்ளன. தங்கள் வகுப்பு
நண்பர்களுக்கு இணையாக அவர்களை வைப்பது, கணினி, புத்தகங்களை
அணுகுவதற்கு வாய்ப்பைத் தருவது நூலகங்கள்தாம்.”
Brent
நூலக மூடல் திட்டத்தின் செலவு 150,000 பவுண்டுகளாக இருக்கலாம்,
மற்றும் ஒரு 256,000 ஊழியர் பணிநீக்கச் செலவுகளுக்கு ஆகும்
என்று பிரச்சாரகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்; இதற்குப்
பதிலாக பல நூலகங்களை மூடாமலேயே வைத்திருக்கலாம். தலைமை
நீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துக் கொண்டு செல்வது குறித்து
அவர்கள் பரிசீலிக்கின்றனர். இதற்குக் கணிசமான நிதி
தேவைப்படும்.
ஒரு ஆபத்தான பின்வாங்கும் முறையில், பிரச்சாரகர்கள் குழு
இப்பொழுது சமூகத்தின் பிரென்ட் உள்ளூராட்சிச் சபைக்கு ஒரு
வணிகத் திட்டத்தை நூலகத்தை நடத்துவதற்காக அனுப்பியுள்ளது;
இதில் உள்ளூராட்சிக்கு செலவு இருக்காது. ஆனால் பணிகளை
நடத்துவதற்கான செலவுகள் வறிய மக்கள் மீது சுமத்தப்படும்.
இத்தகைய அடிப்படையில் பொது நூலக முறை செயல்படுத்தப்படுவது
–பிரிட்டனில்
பிற சமூகநலத் திட்டங்கள் போல்—ஏற்பதற்கில்லை.
அரசியலளவில், இது கூட்டணி அரசாங்கத்தின்
“பெரிய
சமூக”
பிரச்சாரத்தைத்தான் பின்பற்றுகிறது; அது அரசாங்கம் நடத்தும்
அனைவருக்கும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்பதை—பல
தலைமுறைத் தொழிலாளர்கள் போராளித்தன வர்க்கப் போராட்டங்கள்
மூலம் பெற்ற நலன்களை—அறக்கட்டளை
அமைப்புக்கள் என்பவை நடத்தும் என்று கூறப்படுகிறது. உண்மையில்,
இது சமூகப் பணிகள் தனியார் இலாபத்திற்கு அனுப்பப்படும்
முறையின் கருவிதான்; அல்லது சமூகப் பணிகள் உரிமை என்ற முறையில்
தகர்க்கப்பட்டுவிடும்.
நூலக மூடல்களுக்கு உள்ள எதிர்ப்பை ஐக்கியப்படுத்த வேண்டும்
என்ற பரந்த விருப்பம் இருந்தாலும், பிரச்சாரக் குழுக்கள்
போட்டியிடும் நிதியத் தொகுப்புக்களை கிட்டத்தட்ட
“அழகுப்
போட்டி”
போல் முன்வைத்துள்ள நிலையமையைத்தான் தோற்றுவித்துள்ளது.
பெரும்பாலான பிரச்சாரங்கள் உள்ளூராட்சி நூலகங்களைப் பாதுகாக்க
விரும்புபவை, தொழிலாள வர்க்க சமூகங்களின் உண்மையான சீற்றத்தை
போலித்தன சுய உதவிப் பிரச்சாரங்களாகத் திசை திருப்புகின்றன;
இதையொட்டி அரசாங்கம் நிர்ணயிக்கும் சிக்கன நடவடிக்கைகளின்
தன்மையையும் உறுதிப்படுத்துகின்றன. லண்டனிலுள்ள
Lewisham
பகுதியின் மூன்று நூலகங்கள் இப்பொழுது முற்றிலும் தன்னார்வச்
செயலர்களால் நடத்தப்படுகின்றன; அதே நேரத்தில் பெரும் திறமை
பெற்ற நூலக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டனர்
கல்வி, நூலகங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, இன்னும் பிற தேவைகள்
குறித்த அடிப்படை உரிமை செல்வந்தர்களுக்காக செல்வந்தர்கள்
நடத்தும் அரசாங்கங்களுக்கு வெறுப்பைத் தருகிறது. இப்பொழுது
தயாரிப்பில் இருக்கும் கலாச்சார நெறி அட்டூழியத்தின் உதாரணம்
ஒன்று லண்டனில் உள்ள
Kensal Rise
நூலகம் மூடப்பட்டுள்ளது ஆகும்; இது 1900ம் ஆண்டு பெரும்
அமெரிக்க எழுத்தாளர் மார்க் ருவைனால் திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழாவின்போது ருவைன் கூறினார்:
“இந்த
நூலகத்தை முறையாக நான் திறந்து வைக்கிறேன்; சட்டமன்றம் ஒரு
சமூகத்தைத் தானே அறிவார்ந்த உணவைத் தனக்கு அளித்துக்
கொள்ளும்படி வற்புறுத்தக்கூடாது என்று நான் நினைக்கிறேன்; அது
சமூகம் விரும்பும் வகையில் அதற்கு அச்சலுகையை அளிக்க வேண்டும்.”
லண்டனில் மிக அதிக குழந்தைகள் எழுத்தறிவில்லாத விகிதங்களைக்
கொண்ட பகுதிகளில்
Kensal Green
ம் ஒன்றாகும்.
பிரிட்டனில் முழுமையாக நிதியளிக்கப்படும் நூலக
அமைப்புமுறைக்கான தொகையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு
சதவிகிதத்தில் பத்தில் ஒன்றிற்கும் குறைவானதாகும்.
பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கானது சனத்தொகையில்
பெரும்பான்மையான பிரிவுகள் சீர்திருத்தப்பட முடியாத ஆனால்
பிரதியீடு செய்யப்பட வேண்டிய மனித கலாச்சாரத்தின் செல்வங்களை
அடைவதற்கான திறனை திட்டமிட்டவகையில் அழித்துக்
கொண்டிருக்கின்றன. |