WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Guantánamo: A decade of US torture and repression
குவாந்தநாமோ: ஒரு தசாப்த அமெரிக்க சித்திரவதை
மற்றும் அடக்குமுறை
Bill Van Auken
13 January 2012
வாஷிங்டனின்
“உலகளாவிய
பயங்ரவாதத்தின் மீதான போரின்”
முதல் கைதிகள் போதை மருந்து கொடுக்கப்பட்டு,
முகங்கள் மறைக்கப்பட்டு, தளைகளுடன் குவாந்தநாமோ வளைகுடாவிற்கு
கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் முடிவதை இந்த வாரம்
குறிக்கிறது. ஒரு தசாப்தம் கடந்து விட்டபோதும், இழிவுமிக்க
சிறை முகாம் இன்னும் திறந்திருக்கிறது, அதன் குற்ற
நடவடிக்கைகள் காங்கிரஸ் மற்றும் ஜனாதிபதி பாரக் ஒபாமாவினால்
அமெரிக்க சட்டமாகத் தொகுக்கப்பட்டுவிட்டன.
“போரில்
ஈடுபட்ட எதிரிகள்”
என்று கைதிகளை நடத்தும் வெளிப்படையான
நோக்கத்துடன் புஷ் நிர்வாகம் தடுப்பு மையத்தை நிறுவியது.
இச்சொற்றொடர் அமெரிக்க அரசியலமைப்பின்கீழ் குற்றம்
சாட்டப்பட்டவர்கள் என்ற முறையில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய
உரிமைகளையும், போர்க் கைதிகள் என்று ஜெனீவா மரபுகள்படி
கிடைக்கக்கூடிய உரிமைகளையும் மறுப்பதற்காகக்
கண்டுபிடிக்கப்பட்டது. புஷ்ஷின் நீதித்துறை கடற்படைத்தளம் எந்த
அமெரிக்க நீதிமன்றத்தின் நிர்வாக அதிகாரத்திற்குப் புறத்தே
உள்ளது என்று தீர்ப்புக் கொடுத்துவிட்டது. இதனால் அங்கு
இருப்பர்கள் தங்கள் சிறையடைப்பு குறித்து எவ்வித சட்டபூர்வ
உதவிகளையும் நாடமுடியாது.
இந்த ஏற்பாடு அமெரிக்க இராணுவம் மற்றும்
உளவுத்துறைக் அமைப்புகளால் பிடிக்கப்பட்டவர்களை உலகெங்கிலும்
இருந்து குவாந்தநாமோ
வளைகுடாவிற்கு கொண்டுவந்து, அவர்களுக்கு எதிராகச் சித்திரவதை,
போர்க் குற்றங்களுக்கான
உரிய சூழ்நிலையைத் தோற்றுவிக்கும் வடிவமைப்பை கொண்டது.
காவலில் இருந்தவர்கள் நீரில்
மூழ்கடிக்கப்படுதல்,
“உலர
வைக்கப்படுதல்”
(இதில் குப்பைகள் பாதிக்கப்பட்டவரின் தொண்டைவழியே உள்ளே
தள்ளப்பட்டு அவருடைய வாயும், மூக்கும் மூடப்பட்டு
மூச்சுத்திணறல் தூண்டப்படும்), உத்தரத்தில் இருந்து
தொங்கவிடப்படல், அழுத்தங்கள் தரும் வகையில் இருத்துதல்,
அடித்தல், முள்வேலிகள், உடைந்த கண்ணாடிகளால்
சித்திரவதைப்படுத்தப்படல், தூங்கவிடாமல் துன்புறுத்துதல்
மற்றும் தீவிர வெப்ப, குளிர்ச் சூழலில் நீடித்த காவல்,
இருட்டில் வைத்திருத்தல் ஆகியவற்றிற்கு உட்பட்டனர். இதைத்தவிர,
பாலியல் இழிபடுத்தலும் வாடிக்கையாகப் பயன்படுத்தப்பட்டு
காவலில் இருப்பவர்கள் தளர்ந்துபோக வகை செய்யப்பட்டது. மேலும்
அவர்கள் மதங்களும் இழிவிற்கு உட்படுத்தப்பட்டன.
உண்ணாவிரதம் மூலமாக சித்திரவதைக்கு எதிர்ப்புத்
தெரிவித்தவர்கள் மிக வேதனையும் வலியும் தரும் கட்டாயமாக உணவை
உட்கொள்ளச் செய்தல் என்ற வகையில் அவர்கள் மூக்கு, தொண்டை மூலம்
பிளாஸ்டிக் குழாய்களை செலுத்தி உணவை அவர்கள் வயிற்றில்
இறக்குதல் என்பதை அனுபவித்தனர்.
பலர் சித்திரவதைக்குட்பட்டு இறந்து போயினர்,
தற்கொலை செய்துகொண்டனர், குருடாயினர், முடமாயினர், பல ஆண்டுகள்
இப்படி நடத்தப்பட்டதால் மனத்தளவிலும் உணர்வளவிலும்
பாழ்படுத்தப்பட்டனர்.
புஷ் நிர்வாகம் குவாந்தநாமோவில் சிறையில்
அடைக்கப்பட்டிருந்த 775 பேர்
“மிக
மோசமனவர்களில் மோசமானவர்கள்”
என்று வலியுறுத்தியபோது, அமெரிக்க அரசாங்கத்தின்
பதிவேடுகள்படியே அவர்களுள் 92 சதவிகிதத்தினர் அல்-குவைதா
அல்லது பயங்கரவாதத்துடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.
ஏழு நபர்கள்தாம்
—காவலில்
வைக்கப்பட்டவர்களில் ஒரு சதவிகிதத்தையும் விடக் குறைந்தவர்கள்—
ஏதேனும் குற்றச்சாட்டிற்கு உட்பட்டுள்ளனர்.
பெரும்பாலானவர்கள் அமெரிக்க பயங்கரவாதப் போரினால்
பாதிக்கப்பட்டவர்கள்; பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானத்திலும்
அமெரிக்கா கொடுக்கும் பெரும்பணத்திற்காக விற்கப்பட்டவர்கள்.
அல்லது மற்ற இடங்களில் இருந்து அவர்களுடைய தேசியம் அல்லது
சமயத்திற்காக தெருக்களில் இருந்து கடத்தப்பட்டு
கொண்டுவரப்பட்டவர்கள்.
சர்வதேச அளவில் குவாந்தநாமோ என்னும் பெயர்
அமெரிக்க இராணுவவாதம், குற்றம் சார்ந்த தன்மை மற்றும்
ஆக்கிரமிப்பிற்கு ஒரே பொருட்சொல் ஆயிற்று.
இப்பொழுது வெள்ளை மாளிகையில் தன் மூன்றாம்
ஆண்டை நிறுவு செய்யும் ஒபாமா 2008ம் ஆண்டு அவருடைய உறுதிமொழியான
“மாற்றம்
கொண்டுவரப்படும்”
என்பதின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கருத்து பல
ஆண்டுகள் நடக்கும் ஆக்கிரமிப்பு போர், அடிப்படைய ஜனநாயக
உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் புஷ் நிர்வாகத்தின் கீழ்
வெட்கம் கெட்டத்தனமாக சித்திரவதை பயன்படுத்தப்பட்டது
ஆகியவற்றைக் குறித்து மக்களுடைய விரோதப் போக்கு மற்றும்
கசப்புணர்விற்கு அழைப்பை விடுத்திருந்தது.
அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள், ஜனநாயகக்
கட்சியைச் சேர்ந்த முதல் ஆபிரிக்க அமெரிக்க ஜனாதிபதி
வாஷிங்டனின் தோற்றத்தை வெளிநாட்டில் புத்துயிர் கொடுக்கலாம்,
அதே நேரத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதே அடிப்படைக்
கொள்கைகளைத் தொடரலாம் என்று நம்பப்பட்டது.
வேறு எந்த தனிச்செயலையும்விட, ஒபாமா தன்னுடைய
நிர்வாகத்தில் வரும் மாற்றத்திற்கு அடையாளமாக இருக்கும்
வகையில் முதலாண்டு தன் பதவிக்காலத்திற்குள் குவாந்தநாமோவை
மூடிவிடும் உறுதியைக் கொடுத்திருந்தார்.
“அமெரிக்க
வரலாற்றில் ஒரு துயரம் தோய்ந்த அத்தியாயம்”
குவாந்தநாமோ வளைகுடா என்றும், அது முடிவிற்குக்
கொண்டுவரப்பட வேண்டும் என்று அறிவித்திருந்தார்.
ஆனால் நவம்பர் 2009ஐ ஒட்டி, நிர்வாகம் தானே
விதித்துக் கொண்டிருந்த காலக்கெடுவைச் செயல்படுத்தாது என்று
ஒப்புக் கொண்டு, 2010ல் ஒரு குறிப்பிட்ட திகதி
குறிப்பிடப்பிடாது குவாந்தநாமோ மூடப்படுவதை ஒத்திவைத்தது.
ஒபாமாவின் உறுதிமொழி ஓர் அடையாளத்திற்கு
என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அவருடைய நிர்வாகம் பின்னர்
தெளிவாக்கியது போல், குவாந்தநாமோ சிறை முகாமை இகழ்வுறச்செய்த
செயற்பாடுகளை அது ஒன்றும் கைவிடவில்லை என்பதைத்
தெளிவுபடுத்தியது—காலவரையற்ற,
விசாரணையற்ற அசாதாரண காவலும் சித்திரவதையும் தொடரும் என. இது
இவ்வமைப்பை மூட முற்படுகிறது, அதே நேரத்தில் அத்தகைய குற்ற
நடவடிக்கைகள் மற்ற இடத்தில் செய்யப்படுகின்றன.
உண்மையில் இது
“ஒரு
வடக்கு குவாந்தநாமோவை”
திறக்கத் திட்டங்களை தயாரித்தது. அதன்படி
காவலில் வைக்கப்படுபவர்கள் கியூபாவில் இருந்து
அமெரிக்காவிலுள்ள ஒரு சிறைக்கு மாற்றப்படுவர். ஆனால் அங்கு
குற்றச்சாட்டுக்களோ, விசாரணையோ இன்றி வைக்கப்படுவர்.
இதற்கிடையில் ஆயிரக்கணக்கானவர்கள் இதேபோன்ற
சூழலில் ஆப்கானிஸ்தானத்தில் உள்ள பாக்ரம் சிறையிலோ அல்லது
CIA
உடைய இரகசியச் சிறைகளிலோ வைக்கப்பட்டனர். அதே
நேரத்தில் ஒபாமா நிர்வாகம் தனக்கு முன் அதிகாரத்தில்
இருந்தவர்கள் பதவியில் இருந்தபோது செய்த சித்திரவதை, பிற
குற்றங்கள் தொடர்பாக அவர்கள் மீது விசாரணை எதுவும் நடைபெறாது
உறுதியாக பாதுகாத்தது.
ஜனவரி 2011ல் ஒபாமா ஒரு இராணுவ நிதிக்கு
அங்கீகரிக்கும் சட்டவரைவில் கையெழுத்திட்டு அதைச்
சட்டமாக்கினார். இது குவாந்தநாமோவில் காவலில் இருப்பவர்களை
அமெரிக்காவிற்கு மாற்றுவதைத் தடுத்து சிறைமுகாம் மூடப்படுவதை
தடைக்கு உட்படுத்திவிட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின் வெள்ளை
மாளிகை இராணுவக்குழுக்களுக்கு முன் நடந்த போலித்தன விசாரணைகளை
மீண்டும் நடத்த உத்தரவிட்டது. ஒபாமாவின் நிர்வாக உத்தரவு
காலவறையற்ற காவலில்வைப்பதை அவருடைய நிர்வாகத்தின்
உத்தியோகபூர்வ கொள்கையாக ஆக்கியது.
இதன்பின் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ஒபாமா
NDAA
எனப்படும் தேசியப்பாதுகாப்பு ஒப்புதல்
சட்டத்தில் கையெழுத்திட்டார். இதில் இராணுவம் காலவரையின்றிக்
குற்றச்சாட்டுக்கள் அல்லது விசாரணை இல்லாமல் குடிமக்கள்,
குடிமக்கள் இல்லோதோர் காவலில் வைக்கப்படுவதை சட்டநெறியாக்கும்
விதிகள் உள்ளன. இந்நடவடிக்கைகள் அடிப்படையில் அமெரிக்க
அரசியலமைப்பு, உரிமைகள் சட்டம் மற்றும் பல நூற்றாண்டுகளாக
இருந்துவரும் ஆட்கொணர்தல் முறை ஆகியவற்றிற்கு முற்றிலும்
முரணானவை ஆகும் என்பதுடன் நாட்டிற்கு இராணுவப் பொலிஸ்
சர்வாதிகார வழிவகைகளின் சட்டத்தில் எழுதியும் விட்டன.
குவாந்தநாமோவில் இன்னும் 171 பேர் உள்ளனர்.
அவர்களில் 13 பேர் முழு தசாப்தத்தையும் அங்கு கழித்துள்ளனர்.
அவர்களில் ஒரே ஒருவர்தான் குற்றம் சாட்டப்பட்டு, ஏதேனும்
குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளார். அவர்கள் தொடர்ந்து
காவலில் வைக்கப்படுவது உடனடியாக நிவர்த்திசெய்யப்பட வேண்டிய
குற்றமாகும். மேலும் அங்கு கைதிகளை அனுப்பியவர்கள், காவலில்
வைத்திருந்தவர்கள் மற்றும் சித்திரவதை செய்தவர்கள் பொறுப்பேற்க
வேண்டும்.
இது முந்தைய நிர்வாகத்தின் முற்றுப்பெறாத செயலை
முடிவாக்குதல் என்னும் சாதாரண விஷயம் அல்ல. புஷ்
நிர்வாகத்தின்கீழ் ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் அரசாங்க வழிவகைகள்
இன்னும் ஆழமடைந்து தொடருதல் என்பது இவை ஒரு கட்சி அல்லது
அரசியல் சிந்தனையில் விளைவு என்பவை மட்டும் அல்ல, மாறாக
அமெரிக்க முதலாளித்துவத்திற்குள் இருக்கும் ஆழ்ந்த
முரண்பாடுகளின் விளைவுதான் என்பதற்கு நிரூபணம் ஆகும்.
எல்லாவற்றிற்கும் மேல் இவை, ஒருபுறத்தில்
உயர்மட்ட 1 சதவிகிதமான மிகச்சிறிய செல்வ உயரடுக்கு
செல்வத்தையும் அரசியல் அதிகாரத்தையும் ஏகபோக உரிமையாகக்
கொண்டுள்ளதற்கும் மறுபுறத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள்,
அரசியல் அளவில் வாக்கு உரிமை அற்றவர்கள், தங்கள் வருமானம்,
வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் இடைவிடாத்
தாக்குதல்களுக்கு உட்பட்ட வகையில் இருக்கும் முன்னோடியில்லாத
வகையிலான துருவப்படுத்தலினால் உந்தப்படுகின்றது.
அமெரிக்காவில் இன்று நிலவும் சமூக
சமத்துவமின்மையில் அளவுகள் எத்தகைய உண்மையான ஜனநாயக
நிகழ்போக்களையும் இயலாதவை ஆக்கிவிட்டன. நீடித்த பொருளாதார
நெருக்கடி சமூக எதிர்ப்பு மற்றும் வர்க்கப் போராட்டத்திற்கு
ஊக்கம் கொடுக்கையில், ஆளும் உயரடுக்கு இன்னும் அதிகமான நேரடி
வகைகளில் அரசாங்க அடக்குமுறையைக் கையாண்டு தன் அதிகாரத்தையும்
சலுகைகளையும் பாதுகாக்க முயல்கிறது.
ஒபாமாவின் வெள்ளை மாளிகை எடுத்துள்ள
நடவடிக்கைகள் குவாந்தநாமோவின் குற்ற வழிவகைகளை அமெரிக்க
தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அமெரிக்க நாட்டிற்குள்ளேயே
கொண்டுவரும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன.
குவாந்தநாமோவுடன் தொடர்புடைய முழு
அடக்குமுறையையும் அகற்றுவது உட்பட ஜனநாயக உரிமைகளைப்
பாதுகாத்தல், தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்திற்காக
போராடுவதற்காக அதன் சுயாதீன வலிமையை திரட்டுவதின் மூலமே
செயல்படுத்தப்பட முடியும். அதேபோல் முதலாளித்துவத்திற்கு
முற்றுப்புள்ளி வைத்து பொருளாதாரத்தை தனியார் இலாபத்திற்கு
என்பதற்கல்லாது மனிதத் தேவைகளுக்காக மறுஒழுங்கமைக்க வேண்டும். |