World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama, “Friends of Syria” press for military intervention against Damascus

ஒபாமாவும் சிரியாவின் நண்பர்களும் டமாஸ்கஸிற்கு எதிரான இராணுவத் தலையீட்டிற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்

By Alex Lantier
25 February 2012
Back to screen version

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் சர்வதேச இராஜதந்திரிகளும் துனிஸில் நடைபெற்ற சிரியாவின் நண்பர்கள்கூட்டத்தில் பங்கு பெற்று, சிரியாவில் இராணுவத் தலையீட்டிற்கு அழுத்தம் கொடுத்து நேற்று அறிக்கைகளை வெளியிட்டனர். அமெரிக்க ஆதரவு பெற்ற சிரிய எழுச்சிப் படைகளுக்கும் ஜனாதிபதி பஷர் அல்-அசத்தின் ஆட்சிக்கும் இடையே பெருகியுள்ள போர்களை ஒரு போலிக்காரணமாளக அவர்கள் காட்டியுள்ளனர்.

துனிஸ் கூட்டத்திற்குப்பின் ஒபாமா வாஷிங்டனில் பேசினார்; சிரியாவில் மோதலை நிறுத்துவது மிகவும் முக்கியம்என்று கூறினார். தங்கள் அரசாங்கத்தாலேயே சிரியக் குடிமக்கள் கொலை செய்யப்படுவதை நிறுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்று அவர் அறிவித்தார். ஆனால் அமெரிக்கா என்ன நடவடிக்கையைப் பரிசீலிக்கிறது என்பது பற்றி அவர் ஏதும் குறிப்பிடவில்லை.

துனிஸ் கூட்டத்திற்குப் பின்னர், அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் பெப்ருவரி 4ம் திகதி  அசாத் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அரபுலீக் கோரிய ஐ.நா.பாதுகாப்புக் குழுத் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுத்தியதை கண்டித்தார். பாதுகாப்புக் குழுவின் இரு நிரந்தர உறுப்பினர்கள் மகளிர், குழந்தைகள், தைரியிம் மிக்க இளைஞர்கள் என மக்கள் அங்கு கொலைசெய்யப்படும்போது இங்கு தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தியதை காண்பது வருத்தம் தருகிறது. வீடுகள் அழிக்கப்படுகின்றன. இது இழிந்த செயல், உங்களைக் கேட்கிறேன், அவர்கள் எப்பக்கம் உள்ளனர்? சிரிய மக்களுடன் இல்லை என்பது தெளிவு.

கிளன்டன் சீற்றத்தைக் காட்டுவது போல் காண்பித்துக் கொள்வது இழிந்த நாடகமாகும். இதன் நோக்கம் இராணுவத்திற்கும் எழுச்சி சக்திகளுக்கும் மோதல் என்று வந்துள்ள தகவல்களை கொண்டு, கடந்த ஆண்டு லிபியாவில் நேட்டோப் போர் நடத்திய வகையில் அமெரிக்கத் தலைமையில் இன்னும் குருதி கொட்டும் தலையீட்டை நியாயப்படுத்துவதுதான்.

அத்தகைய கொள்கைக்காக மிகவும் வெட்கமற்ற பொய்யைக் கூறுவதின் மூலம்தான் செயல்படமுடியும். ஒருபுறம் அமெரிக்க அதிகாரிகள் சிரிய மக்களுக்கு மனிதாபிமானஉதவியைத்தான் பரிசீலிப்பதாகக் கூறுகின்றனர். மறுபுறம் அவர்கள் போருக்குத் தூபம் போடுகின்றனர்இராணுவரீதியில் ஒரு வலதுசாரி இஸ்லாமியத் தலைமை எழுச்சிக்கு ஆதரவு கொடுக்கும் வகையில்.

துனிஸ் கூட்டத்தில இருந்த சிரியாவின் எதிர்த்தரப்புச் செய்தித்தொடர்பாளர்கள் ராய்ட்டர்ஸிடம் கூறினர்: நாங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆயுதங்களைக் கொண்டுவருகிறோம்... எல்லா இடங்களில் இருந்தும், மேலை நாடுகள் உட்பட, அவை வருகின்றன, எல்லைகள் வழியே எதையும் பெறுவது கடினம் அல்ல.

துனிசில் பேசிய மற்ற தூதர்களும் இராணுவத் தலையீட்டிற்கு ஆதரவு கொடுத்தனர் -- ஏற்கனவே அது தொடங்கிவிட்டது என்பதை உறுதிபடுத்தும் சொற்களைத் தவிர்த்த வகையில். சௌதியின் வெளியுறவு மந்திரி சௌத் அல்-பைசல் அமெரிக்க சார்பு சிரிய சக்திகளுக்கு ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் அனுப்பிவைப்பது சிறந்த கருத்து என்றார். பிரெஞ்சு மற்றும் கட்டாரி அதிகாரிகள் சிரியாவிற்குப் படைகளை அனுப்பி வைப்பதற்கு ஆதரவாகப் பேசி, மனிதாபிமான தாழ்வாரங்களுக்குப் பாதை அமைப்பதையும் ஆதரித்தனர்அதாவது எழுச்சியாளர்களுக்கு அளிப்புக்கள் கொடுப்பதின்மூலம் சிரியாவின் பகுதிகளை வெற்றி கொள்ளுதல்.

அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், அவர்கள் சிரிய எழுச்சியாளர்களுக்குஇராணுரீதியில் ஆதரவு தருவதைத் தெளிவாக்கியுள்ளன. வியாழன் அன்று லண்டனில் பிரிட்டிஷ், பிரெஞ்சு, ஜேர்மன் மற்றும் அரபு தூதுர்களுடன் துனிஸ் கூட்டத்திற்கு முன்னதாகப் பேசிய கிளின்டன், அசாத் அதிகரித்தவகையில் திறமையான எதிர்தரப்புச் சக்திகளைஎதிர்கொள்வார் என்றார். தங்களைக் காத்துக் கொள்ளவும், தாக்குதலை தொடக்கவும், அவர்கள் எங்கிருந்தோ, எப்படியோ வழிவகைகளைப் பெற்றுக் கொள்வர் என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

இத்தகைய கருத்துக்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் முற்றிலும் ஏமாற்றுத்தனம் நிறைந்த தன்மையைத்தான் அம்பலப்படுத்துகின்றன. அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளினால் கொல்லப்பட்ட நூறாயிரக் கணக்கான கொலையுண்ட, காயமுற்ற ஈராக்கியர்கள் மற்றும் ஆப்கானியர்களின் இரத்தங்கள் அவர்கள் கைகளில் படர்ந்திருக்கையில், அமெரிக்க அரசாங்கம் ஒரு புதிய போரை, வெளிநாட்டு ஆதரவு பெற்ற எழுச்சியை அசாத் அடக்குவதைத் தான் பொறுத்துக் கொள்ள முடியாத செயல் என்ற பாசாங்குத்தனத்தின் அடிப்படையில் தளத்தைக் கொண்டு கூறுகிறது. சிரியாவில் தற்பொழுது நடக்கும் போருக்கான பொறுப்பு முக்கியமாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடம்தான் உள்ளது.

கிளின்டனும் அவருக்கு உடந்தையாக இருப்பவர்களும் மனிதாபிமான வேதனை எனக் காட்டிக் கொள்வது அமெரிக்க இராஜதந்திர முறை ஆயுதக்கிடங்கில் உள்ள இன்னும் ஒரு ஆயுதம்தான்; அதில் பொருளாதாரத் தடைகள், இலக்கு வைக்கப்பட்டுள்ள படுகொலைகள், ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் வெகுஜனக் கொலைகள் ஆகியவையும் உள்ளன.

நேற்று முக்கிய செய்தித்தாட்கள், வெளிப்படையாக ஏகாதிபத்திய தூதர்களும் உளவுத்துறை அமைப்புக்களும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சிரியாவை வெற்றி கொள்வது குறித்த திட்டங்களைப்பற்றிக் கூறின.

பைனான்சியல் டைம்ஸ் கொடுத்துள்ள விமர்சனம் ஒன்றில், CIA இன் முன்னாள் அதிகாரி Emilie Nakhleh எழுதினார்: இந்த உதவி எதிர்த்தரப்பிற்கும் ஆட்சியை விட்டு விலகி வரும் இராணுவ அதிகாரிகளுக்கும், 1991ல் வட ஈராக்கில் அளித்தது போல், ஒரு பாதுகாப்பிடத்தை நிறுவுவதுடன் தொடங்க வேண்டும். உணவு, நீர், உடைகள், மருத்துவ அளிப்புக்கள், தொழில்நுட்பக் கருவிகள் ஆகியவை பாதுகாப்புப் பகுதியில் வானில் இருந்த போடப்பட வேண்டும். [துருக்கிய அரசாங்கம்] அங்காரா இத்திட்டத்தில் ஒரு முக்கிய பங்கை ஏற்கவேண்டும், இறுதியில் இப்பகுதியைத் தக்கவைத்து அதற்கு அளிப்புக்கள் கொடுப்பதிலும்; ஏனெனில் அது கிட்டத்தட்ட துருக்கியுடன் அண்டையில்தான் உறுதியாக இருக்கும். சிரிய சக்திகள் புகலிடத்தை தாக்கி மீறினால், மேற்கு எதிர்த்தரப்பிற்கு ஆயுதங்களை கொடுத்து, இராணுவத்தில் இருந்து விலகி வந்தவர்களுடன் இணைந்து செயல்பட்டு இன்னும் திறமையான எதிர்ப்பை அமைக்க வேண்டும்.

 

இதே போன்ற திட்டங்கள் முன்னாள் அமெரிக்க வெளிவிவகார அதிகாரி Anne-Marie Slaughter ஆலும் நியூ யோர்க் டைம்ஸில் விவரிக்கப்பட்டுள்ளது. டாங்கிகள்-எதிர்ப்பு, எதிர்ப்பு ஸ்னைப்பர், எடுத்துச் செல்லக்கூடிய விமானத்தாக்குதல் எதிர்ப்பு ஆயுதங்கள்ஆகியவற்றை அமெரிக்க ஆதரவு கொண்ட சக்திகளுக்கு அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், கொலை கூடாது பகுதிகள்நிறுவப்பட வேண்டும் என்றும் கூறினார். இப்படித் தவறாக பெயரிடப்படும் கொலை கூடாது பகுதிகளில்சிரிய அரசாங்க சக்திகள் கொலை செய்யப்பட்டு, கைப்பற்றப்பட்டு அல்லது பதிலடி இல்லாமல் மாறிவருவதற்கு வகை செய்துவிட்டால், கவனம் கொலை கூடாது பகுதிகளை விரிவாக்க, காக்க எனத் திரும்பும்.

இத்தகைய திட்டங்கள் ஒரு மனிதாபிமான நடவடிக்கையை விவரிக்கவில்லை: ஆனால் அமெரிக்கத் தலைமையில் நாட்டை காலனித்துவவகையில் அடிமைப்படுத்தும் செயல்களுக்கு தாழ்ந்து நடக்காத எந்தச் சிரிய சக்திகளும் அழிக்கப்படும் ஒரு போருக்குத்தான் வகை செய்கின்றன.

துனிஸ் கூட்டத்தின் பெரும்பகுதி, சிரிய எதிர்ப்பில் உள்ள பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை உடைய பிரிவுகள் முறையோடு செயல்படக்கூடிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பினாமியாக ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டது; அப்படித்தான் லிபியாவில் நடந்த போரில் தேசிய மாற்றுக்காலக் குழு அமைக்கப்பட்டது. மூன்று எதிர்தரப்புப் பிரிவினரிடையே ஆழ்ந்த அழுத்தங்கள் இருக்கும் நிலையில் இது கடினமாயிற்று: தேசிய ஒருங்கிணைப்புக் குழு NCC, சிரிய தேசியக் குழு SNC, மற்றும் சிரிய சுதந்திர இராணுவம் SFA என்பவையே அவை; இவற்றில் பெரும்பாலும் துருக்கிக்கு தப்பி ஓடி வந்துள்ள சிரிய இராணுவத்தை விட்டு விலகியவர்கள் உள்ளனர்.

அமெரிக்க அதிகாரிகள் அல் குவேடா மற்றும் அமெரிக்க ஆதரவு சிரிய எதிர்த்தரப்பில் உள்ள இஸ்லாமியக் கூறுபாடுகளுக்கும் இடையே உள்ள பிணைப்புக்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். (See, “International tensions mount over Syria conflict”). “எழுச்சிப்பிரிவுகளுடன் பேச்சுவார்த்தைகள் சிரியாவில் உள்ள அமெரிக்க பினாமிகள் எதற்கும் வெகுஜன ஆதரவு இல்லை என்ற உண்மையைத்தான் உயர்த்திக் காட்டியுள்ளன. சிரிய எதிர்ப்பு இனவழி, சமூகவழிகளில் பிளவுற்றுள்ளது என்று பைனான்சியல் டைம்ஸே குறைகூறியுள்ளது.

 

ஸ்ராலினிச மற்றும் குர்டிஷ் தேசியவாதக் கட்சியினரை அதிகமாகக் கொண்டிருக்கும் NCC, துனிஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை; இங்கு தூதர்கள் SNC ஐ, முஸ்லிம் பிரதர்ஹுட்டைச் சுற்றியுள்ள இஸ்லாமிய சக்திகளின் மேலாதிக்கத்தில் இருப்பதைத்தான் நெறியான உரையாடல் நடத்துபவர்கள் என்று அறிவித்தனர்.

ஆனால் சிலர் ஆரம்பத்தித்தில் முன் வைத்த கருத்தானசிரிய எழுச்சிக்கு பிரதிநிதிஎன்று SNC க்குப் பெயரிடுவதற்குக் கூட்டம் மறுத்துவிட்டது. இது, வாஷிங்டனின் திட்டங்களில் NCC  யின் முழுப் பங்கு பெறப்படலாம் என்பதற்கான கூடுதலான பேச்சுவார்த்தைகள் பற்றிய நம்பிக்கையைத்தான் பிரதிபலிப்பது போல் தோன்றுகிறது. செய்தி ஊடகத்திடம் பிரிட்டிஷ் அதிகாரிகள் எதிர்த்தரப்பு பகிர்ந்து கொள்ளும் கொள்கைத் தொகுப்பை ஏற்கும், சிரியாவில் உள்ள அனைத்து இனவழிப் பிரிவுகளும் சேரும் என்ற வலுவான தகவலுடன் என்று தாங்கள் நம்புவதாகக் கூறினர்.

எதிர்த்தரப்பின் தன்மை சிரியாவில் ஏகாதிபத்திய தலையீட்டின் அரசியல் வகையிலான குற்றம் சார்ந்த தன்மையைத்தான் உயர்த்திக் காட்டுகிறது. சிரிய எதிர்பாளர்களை பாதுகாத்தல் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இது, மத்திய கிழக்கில் மாற்றத்தைக் கொண்டுவரும் புரட்சிகப் போராட்டங்களின் விரிவு என்றும் அளிக்கப்படுகிறது. உண்மையில் அமெரிக்கக் கொள்கை துனிசியா, எகிப்து ஆகியவற்றில் கடந்த குளிர்காலத்தில் அமெரிக்க ஆதரவுடைய சர்வாதிகாரிகளை அகற்றிய தொழிலாள வர்க்கப் போராட்டங்களுக்கு எதிர்ப்புரட்சிகர விடையிறுப்புத்தான்.

துனிசியா மற்றும் எகிப்தில் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனப் போராட்டங்கள் நாடு முழுவதும் பரவி, ஆயுதப் படைகள் ஆட்சிக்கு விசுவாசம் கொண்டிருந்ததை வலுவற்றதாக்கி, வெறுக்கப்பட்ட நாட்டின் தலைவர்கள் இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்படுத்தின. வாஷிங்டன் பென் அலியைத் துனிசியாவிலும், முபாரக்கை எகிப்திலும் ஆதரித்திருந்தது; அவர்களை  அதிகாரத்தில் தக்க வைக்கப் பரபரப்புடன் செயல்பட்டது.

சிரியாவில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நாட்டின் சுன்னிப் பகுதிகளைத் தளமாகக் கொண்டு, மக்கள் தளம் இல்லாத அமைப்புக்களால் வழிநடத்தப்பட்ட பிராந்திய எதிர்ப்புக்களை விரைவில் வலதுசாரி எழுச்சியாக (கிட்டத்தட்ட சிரியாவின் இரு பெரிய நகரங்களான டமாஸ்கஸ், அலெப்போவில் உள்ள ஆதரவற்ற நிலையை) மாற்ற விரைந்துள்ளன. இது ஒன்றும் புரட்சி அல்ல; ஈரானுடன் நட்பு கொண்டுள்ள ஆட்சியை அகற்ற அமெரிக்க இயக்கத்தில் நடக்கும் ஓர் உந்துதல் ஆகும்; இதையொட்டி அந்நாட்டை இன்னும் தனிமைப்படுத்தி, எண்ணெய் செழிப்புடைய மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கம் வலுப்படுத்தப்படலாம்.