சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French unions prepare to back cuts in PSA-GM tie-up

பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் வெட்டுக்களுக்கான ஆதரவிற்கு PSA-GM இணைப்பில் தயாரிப்புக்கள் நடத்துகின்றன

By Kumaran Ira
28 February 2012

use this version to print | Send feedback

தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு CGT மற்றும் பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) இரண்டும் PSA Peugeot-Citroën மற்றும் General Motors-Opel இணைக்கப்படுவதற்கு வசதியாக வேலைகள் மற்றும் ஊதியங்களில் ஆழ்ந்த தாக்குதல்களுக்கு தயாரிப்பை மேற்கொண்டுள்ளன.

பிரெஞ்சு வணிக ஏடான LaTribune கருத்துப்படி, இரு கார்த் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே நடக்கும் விவாதங்கள், பல மாதங்கள் முன்பு தொடங்கியவை, இப்பொழுது இறுதிக் கட்டங்களை அடைந்துள்ளனஎனத் தெரிகிறது. இறுதி உடன்பாடு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள கார்க் கண்காட்சியின்போது முறையாக்கப்படும்: அதாவது PSA மற்றும் GM இன் ஓப்பல்-வாக்ஸ்ஹால் பிரிவுகள் கூட்டாக எஞ்சின்களையும் கடத்துக் கருவிகளையும் வடிவமைத்துத் தயாரிப்பதுடன், அவற்றுடைய தனித்தனி முத்திரையின் பேரில் விற்கப்பட்டாலும் இணைப்பு வடிவமைப்புக்களை ஒருங்கிணைக்கும். PSA ஆனது பாரிஸிற்கு அருகில் இருக்கும் அதன் Aulnay-sous-Bois, வடக்கு பிரான்ஸில் இருக்கும் SevelNord, மாட்ரிட்டிற்கு அருகே உள்ள ஆலைகள் ஆகியவற்றை மூடும் திட்டங்களை அறிவித்துள்ளது: இவைகள் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட 800 மில்லியன் யூரோக்கள் செலவினக் குறைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பிரெஞ்சு தொழில்துறை மந்திரி சேவியர் பேர்ட்ரண்ட் PSA இன் தலைமை நிர்வாக அதிகாரி Philippe Varin உடன் பேசிய பின் இரு குழுக்களுக்கும் இடையேயான மூலோபாய பங்காளித்தனத்தை உறுதிப்படுத்தினார்.

முதன் முதலில் PSA-GM இணைப்பு பற்றிய செய்தி ஊடக அறிக்கைகள் வெளிவந்தவுடன், CGT, இந்த விவாதங்கள் ஓர் ஒத்துழைப்பிற்கான திட்டம், SevelNord  இல் பயன்பாட்டு வாகனங்கள் தயாரிக்கப்பட்டு அந்த இடத்தின் எதிர்கால வேலைக்கு  உத்தரவாதம் கொடுத்தால் சாதகமாக இருக்கலாம்என்று அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது ஒரு மூலோபாய முதலாளித்துவ ஒன்றியம் என்றால்... சமூக இடர்களும் முக்கியமானவைஎன்று CGT தொடர்ந்து எழுதியது.

இது ஓர் இழிந்த முறையில் தவிர்ப்பதாகும். ஐரோப்பிய கார்ச் சந்தைகள் சிக்கன நடவடிக்கைளினால் சரிந்துவிட்டன, அவைகளோ தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைகளுக்கான வாங்கும் சக்தியையும் பெரிதும் குறைத்துவிட்டன, மற்றும் PSA இன்னமும் ஆழ்ந்த வெட்டுக்களை வேலைகளிலும் ஊதியங்களிலும் ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்பதை CGT நன்கு அறியும். கடந்த வாரம் PSA பிரான்சிலும் ஐரோப்பாவிலும் முறையே 10, 5 சதவிகிதம் கார் விற்பனைகளில் சரிவு இருக்கும் என்று கணித்துள்ளது.

இந்த நிலைப்பாட்டை CGT எடுத்துள்ளது, தனக்கு அரசியல் மறைப்பைக் கொடுத்துக் கொள்ளுவதற்குத்தான்; அதே நேரத்தில் அது தொழிலாளர் விரோத வெட்டுக்கள் பற்றி பேச்சுக்களை PSA, GM  இன்னும் பிற GM தொழிற்சங்கங்களுடன் நடத்துகிறது.

வோக்ஸ்வாகனுக்கு அடுத்தாற்போல் மிகப் பெரிய கார்த் தயாரிப்பாளராக இருக்கும் PSA சமீப ஆண்டுகளில் கடல் கடந்த  சந்தைகளில் தன் இலாபங்களை உயர்த்துவதற்கு ஒரு மூலோபாய உடன்பாட்டைக் காண விரும்பி வருகிறது. தற்பொழுது அதன் கார் விற்பனைகளில் 58% ஐரோப்பிய கார்ச் சந்தைகளில்தான் உள்ளனஇவை குறைந்தப்பட்சம் 22 முதல் 23 சதவிகிதம் வரை அவற்றின் 2007 அளவுகளைவிடக் குறைவாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. GM உடன் கூட்டு என்பது PSA  ஆனது ஆசியா போன்ற சந்தைகளில், GM இலாபம் காணும் சந்தைகளில் குவிப்பைக் காட்ட அனுமதிக்கும்.

மொத்தத்தில் 2011ல் நிகர இலாபம் 588 மில்லியன் ஈரோக்கள் என்று, 2010ல் இருந்த 1.13 பில்லியன் ஈரோக்களைவிடக் குறைவு என PSA அறிவித்தாலும், அதன் கார்த் தயாரிப்புப் பிரிவு 2011ல் 92 மில்லியன் ஈரோக்கள் இழப்பை அறிவித்துள்ளது. PSA  ஐரோப்பாவில் பிரான்ஸில் 100,000 தொழிலாளர்கள் உட்பட 167,000 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது; ஐரோப்பா முழுவதும் இது 12 இணைப்பு ஆலைகளையும் (assembly plants) GM  8 இணைப்பு ஆலைகளையும் கொண்டுள்ளன. இந்த இரண்டும் இணைவது என்பது 4 ஆலைகள் மூடப்பட வழிவகுக்கும் என்று செய்தி ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

PSA இன்னும் இலாபகரமாக இயங்கினாலும்கூட, அதன் இலக்கு நிறுவனத்தின் நீண்டக்காலப் போட்டித்தன்மை உலகச் சந்தைகளில் உறுதி செய்யப்படுவதற்காகத் தொழிலாளர்களின் ஊதியங்களையும் நலன்களையும் ஆழ்ந்த வகையில் குறைக்கும் வெட்டுக்களைச் சுமத்துதல் என்று உள்ளது. பைனான்சியல் டைம்ஸிடம் வரன் கூறினார்: எங்கள் ஆலைகளில் ஒரு மணிநேர மனித சக்தியின் செலவைப் பார்த்தால், இது பிரான்ஸில் 35 ஈரோக்களுக்கு அருகே உள்ளது, ஜேர்மனியை விட அதிகம் என்று காண்பீர்கள் என்றார். அவர் மேலும் கூறியது: பிரான்ஸ் சரியான வழியில் செல்லவில்லை; குறிப்பாக நீங்கள் பெற்றுள்ள சமூகப் பாதுகாப்பு போன்றவை நல்ல நலன்கள் தரத்தில் இருக்கும்போது.

GM உடன் PSA இணைப்பின் நோக்கம் பிரெஞ்சுக் கார்த் தயாரிப்புத் தொழிலாளர்கள் மீது டெட்ரோயிட்டில் GM  மற்றும் ஐக்கியக் கார்த் தொழிலாளர் சங்கம் (UAW) சுமத்திய வகையிலான வேலை, ஊதிய வெட்டுக்களைச் சுமத்த வேண்டும் என்பதே. 2009ல் ஒபாமா நிர்வாகம் GM மற்றும் கிறைஸ்லரை திவால் பதிவிற்கு உட்படுத்தி, கார்ப் பெருநிறுவனங்கள் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வழிவகுத்தார்ஆலைகள் மூடல், 50 சதவிகிதம் ஊதிய வெட்டுக்கள் புதிதாக நியமிக்கப்படும் தொழிலாளர்களுக்கு, மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதிய நலன்களில் வெட்டுக்கள் ஆகியவை இதில் அடங்கும். ஐரோப்பிய கார்த் தயாரிப்பாளர்கள் அதேபோன்ற நடவடிக்கைகளை சுமத்த விரும்புகின்றனர்.

UAW தலைவர் பாப் கிங் நிர்வாகம் அதன் இலாபங்களை அதிகரிக்க தொழிலாளர் செலவினங்களைக் குறைப்பதற்கு தொழிற்சங்கத்தின் பங்கைப் பற்றி வெளிப்படையாக பாராட்டினார். ஓப்பல் மேற்பார்வை குழுவிற்கு கிங் ஜேர்மனிய IG Metall சங்கத்தின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது ஐரோப்பாவில் GM தொழிலாளர்கள் மீது தாக்குதலை மேற்பார்வையிடும். ஏற்கனவே GM பெல்ஜியம் ஆன்ட்வேர்ப்பில் உள்ள அதன் ஓப்பல் ஆலையை மூடி 2,500 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துவிட்டது. இப்பொழுது அது ஜேர்மனியில் Bochum ஆலையை மூடுவதாகவும் (3,100 வேலைகள்), இங்கிலாந்தில் Ellesmere Port ஆலையை மூடுவதாகவும் (2,100 வேலைகள்) அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய சந்தைகளின் நிலைமை குறித்துப் பேசுகையில் GM இன் தலைமை நிர்வாக அதிகாரி Dan Akerson, எல்லாத் தொகுப்புக்களிலும் நிலைமை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்ததை விட அதிக வேறுபாட்டைக் கொண்டிருக்கவில்லை என்ற பொது உணர்வு உள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன்என்றார். அதாவது GM, UAW  இரண்டும் வெட்டுக்களைச் சுமத்தும்போது இருந்த நிலை.

இப்பொழுது தயாரிப்பில் உள்ள வெட்டுக்களுக்கு எதிராகத் தொழிலாளர்களுக்கு உள்ள ஒரே வழி தொழிலாள வர்க்கத்திடையே சமூகநல வெட்டுக்களுக்கு எதிராகப் பரந்த எதிர்ப்பைத் திரட்டுவதுதான்; இது வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும்.

CGT, UAW இரண்டும் ஏற்கனவே சர்வதேச கார்த் தொழிலுடன் நெருக்கமான ஒத்துழைப்பு குறித்து அறிவித்துள்ளன. ஏப்ரல் 2008ல், UAW மற்றும் FTM-CGT (CGT உலோகத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம்) இரண்டும் ஒரு கூட்டு உலக மூலோபாயத்தை பொது முதலாளிகள் அமைப்புடன் செயல்படுத்துவதற்கான இப்பொழுது நடைபெறும் ஒத்துழைப்பைத் தொடங்கின.

அப்பொழுது UAW இன் துணைத் தலைவரும் ஒழுங்கு அமைக்கும் இயக்குனருமான Terry Thurman கூறினார்: எமது பிரெஞ்சு சகோதர, சகோதரிகளுடன் உழைப்பதில் நாம் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம். ஒருவரிடம் இருந்து ஒருவர், நாம் நிறையக் கற்றுக் கொள்ள முடியும்....பெருநிறுவனங்கள் தேசிய எல்லைகளைக் கடந்த அவற்றின் சுயலத்திற்காகச் செயல்படுகின்றன, நம் தொழிற்சங்கங்களும் அதையேதான் செய்ய வேண்டும் என்றார்.

FTM-CGT கார்ப் பிரிவுத் தலைவர் Michel Ducret விடையிறுத்தார்: “UAW உடன் நம் பேச்சுக்கள் ஏற்கனவே ஒரே சர்வதேச கார்த் தயாரிப்புக் குழுவில் ஊதியம் ஈட்டுவோருக்கு இடையே நல்ல ஒத்துழைப்பை அனுமதிக்கும் வகையில் பலன்களைக் கொடுத்துள்ளது.

உண்மையில் அட்லான்டிக்கின் இருபுறமும் ஊதிய வெட்டுக்கள், ஆலைகள் மூடல்கள் ஆகிய அலைக்கு இதுதான் ஆரம்பமாயிற்று. பிரான்சில் Continental, New Fabris இன்னும் பலவகை கார் நிறுவனங்கள் ஆலைகளை மூடின; தொழிற்சங்கங்கள் இவற்றை எதிர்க்கவில்லை. இந்த நடவடிக்கைகள் பிரான்ஸின் குட்டி முதலாளித்துவத்தின் இடதுகட்சிகளுடைய ஆதரவையும் கொண்டிருந்தன. (see, “French NPA prepares international betrayal of auto workers’ struggles”).

இழிந்த தவிர்ப்புக்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், பிரெஞ்சு CFDT தொழிற்சங்கம் தொழிலாளர்களுக்கு எதிரான ஆழ்ந்த வெட்டுக்களைச் செயல்படுத்த அது உடன்படத்தயார் என்றுதான் குறிப்பைக் காட்டியுள்ளது. சமூகப் பரிமாணம் மற்றும் தொழிலாளர்களின் வருங்காலம் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லைஎன்ற கவலையைக் கூறினாலும், உடன்பாட்டிற்கான பேச்சுகளில் தான் பங்கு பெற்றதை அது நியாயப்படுத்தியுள்ளது. உடன்பாடு என்பது நிறுவனம் தப்பிப் பிழைக்கும் பிரச்சினை பற்றியது என்றும் கூறியது.

இக்கருத்து இருப்பதைத் தெளிவாக்கி விடுகிறது. தப்பிப் பிழைக்கும் பிரச்சினை என்று அவர்கள் இதைக் கண்டால், தொழிற்சங்கங்கள் நிறுவனத்தின் தொடர்ந்த இலாபத்தை உறுதிப்படுத்துவதற்குத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாரிப்புக்களை மேற்கொள்ளும். 2009ம் ஆண்டு பொது இழப்பில் பிரெஞ்சுக் கார் நிறுவனங்கள் பல பில்லியன் பிணை எடுப்பு நிதிகளைப் பெற்றுக் கொண்டாலும், தொழிலாளர் தொகுப்பிற்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகளை அவைகள் எடுக்கின்றன.

பிரான்சிலும் சர்வதேச அளவிலும் கார்த் தயாரிப்புத்துறைத் தொழிலாளர்கள் தொழிற்சங்க ஆதரவு பெற்ற PSA-GM உடன்பாட்டை நிராகரிக்க வேண்டும்; இந்த உடன்பாட்டில் இருந்து வெளிவரும் அனைத்து ஆலை மூடல்கள், ஊதிய வெட்டுக்கள் ஆகியவற்றையும் எதிர்க்க வேண்டும். இது பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் ஏற்றும் முதலாளித்துவத்தின் முயற்சியைத்தான் பிரதிபலிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் ஐரோப்பிய, அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட்டு சர்வதேச போராட்டம் ஒன்றை தொழிலாள வர்க்கத்தின் மீது இந்த வெட்டுக்களைச் சுமத்த முற்படும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மீதும் எதிர்ப்பை நடத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.