World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

GM and Peugeot Citroën conspire to sack thousands of auto workers

ஆயிரக்கணக்கான கார்த்தயாரிப்புத் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதற்கு GM மற்றும் Peugeot Citroën சதித்திட்டம் தீட்டுகின்றன

By Dietmar Henning
27 February 2012
Back to screen version

பிரான்சின் வணிக செய்தி வலைத் தளமான La Tribune ஜெனரல் மோட்டார்ஸிற்கும் பிரான்சின் Peugeot Citroën-PSA- க்கும் இடையே ஒரு தவிர்க்க முடியாத உடன்பாடு வரவிருப்பதைப் பற்றிக்கொடுத்துள்ள தகவல் ஒன்று ஐரோப்பாவில் கார்த்தொழிலில் ஆலை மூடல்கள், ஏராளமான பணிநீக்கங்கள் மற்றும் ஊதியக் குறைப்புக்கள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.

La Tribune கருத்துப்படி, PSA இயக்குனர் குழுத் தலைவர் பிலிப் வரன், ஜெனரல் மோட்டார்ஸின் முதலாளிகளை ஜனவரி மாதம் நடைபெற்ற டெட்ரோயிட் கார்க் கண்காட்சியில் சந்தித்தார். பெயரிடாத ஆதாரம் ஒன்று பேச்சுக்கள் ஏற்கனவே ஒருமுன்னேற்றகரமான கட்டத்தில் இருப்பதாகக் கூறுகிறது. இப்பேச்சுக்கள்ஒரு தற்காலிக ஒத்துழைப்பு என்று இல்லாமல் ஓர் உடன்பாடு பற்றியதாகும் என்று கூறப்படுகிறது; இது உலகின் மிகப் பெரிய கார்த்தயாரிப்பு நிறுவனமான GM Europe பிற்கும் இரண்டாம் மிகப் பெரிய நிறுவனமான PSA Peugeot Citroën க்கும் இடையேயானது.

Opel இற்கு சேவைசெய்யும் மற்றும் தற்பொழுது Peugeot இனால் நியமிக்கப்பட்டுள்ள பிரன்ஸ்விக் ஆலோசனை நிறுவனம், வருங்கால ஒத்துழைப்பு குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாகவில்லை என்று கூறியுள்ளது. “கூட்டாக கார்த்தயாரிப்பு அரங்குகளை வளர்ப்பது குறித்து பரிசீலனை, மற்றவற்றுடன் இருக்கும் எனத் தெரிகிறது என்று அது கூறுகிறது.

செய்தி ஊடகங்கள் கொடுத்துள்ள தகவல்கள்படி, பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறுவது மார்ச் மாதத் தொடக்கத்தில் ஜெனிவா கார்க் கண்காட்சியின் போது GM மற்றும் PSA க்கு இடையே உடன்பாடு என அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Peugeot ஏற்கனவே மிக நெருக்கமாக போட்டியாளர்களுடன் ஒத்துழைத்து வருகிறது; இவற்றுள் Fiat, BMW, Mitsubishi, Toyota ஆகியவை உள்ளன. ஆனால் அவற்றுடனான ஒத்துழைப்பு மோட்டார்கள் அல்லது குறிப்பிட்ட மாதிரிகளில் உற்பத்திகளின் சில பிரிவுகளில் மட்டுமே உள்ளன. இப்பொழுது கருதப்படும் GM உடனான கூட்டு இதற்கு மிகவும் அப்பால் செல்லுகிறது.

இக்கூட்டுவேதனையைத் தராமல் ஏற்பட்டுவிடாது என்று La Tribune எச்சரித்துள்ளது. இதுஐரோப்பியக் கண்டத்தில் பரந்த சமூகச் சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அது கூறியுள்ளது.

அமெரிக்காவில் சமீபத்திய ஆண்டுகளில் பணி நிலைமைகளை ஜெனரல் மோட்டார்ஸ் பெரிதும் கீழறுக்கும் வகையில், மிருகத்தனமான ஊதிய வெட்டுக்கள் 50% வரை செயல்படுத்தியுள்ளது. இப்பொழுது ஐரோப்பியக் கார் ஆலைகளும் அமெரிக்க முறையைப் பின்பற்றப் போகின்றன. பியட் மற்றும் கிறைஸ்லருக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பு ஏற்கனவே கடந்த ஆண்டு மிருகத்தனமான ஊதிய, பொதுநலப் பிரிவுகளில் வெட்டுக்களை ஏற்படுத்திவிட்டது.

இப்பொழுது PSA மற்றும் Opel-Vauxhall இழப்புக்கள் அவற்றின் ஊழியர்கள்மீது சுமத்தப்பட்டுவிடும். கடந்த வாரம் PSA முதலாளி வரன் நிறுவனத்தின் தானியக்கப் பிரிவில் 92 மில்லியன் யூரோ (124 மில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பு 2011ல் ஏற்பட்டது என்று அறிவித்துள்ளார். மிகப் பெரிய பிரெஞ்சுக் கார்த்தயாரிப்பாளர் 3.6 மில்லியன் வாகனங்களை மட்டுமே விற்க முடிந்தது. அப்படியும் இலாபங்கள் 621 மில்லியின் யூரோ ($836  மில்லியன்) என்று கடந்த ஆண்டில் இருந்தன.

PSA நிறுவனம் ஏற்கனவே இழப்புக்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் இன்னும் அழுத்தம் கொடுக்கும் பணிநிலைமைகளையும் ஏராளமான பணிநீக்கங்களையும் தொடக்கியுள்ளது. கடந்தவாரம், Aulnay-sous-Bois என்று பாரிசிற்குக் கிழக்கே இருக்கும் ஆலையின் கார்த்தயாரிப்புத் தொழிலாளர்கள் தங்கள் ஆலை 2014ல் மூடத்திட்டமிடப்பட்டுள்ளதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 3,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு Citroën C3 மாதிரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.

 “நெருக்கமாக்குதல்/ஒருமுகப்படுத்துல்-compactage” (compression/concentration) என்னும் நிர்வாகத்தின் மூலோபாயம் மாட்ரிட்டில் (2,200 தொழிலாளர்கள்) உள்ள ஆலை மூடப்படல், வடக்கு பிரான்ஸில் Valenciennes நகர Sevelnord ஆலை மூடப்படல் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்கிறது. அதில் PSA பியட் உடன் இணைந்து 2,700 பேருக்கு மேல் பணியில் உள்ளனர்.

PSA க்கும் Opel-Vauxhall க்கும் இடையே திட்டமிடப்பட்டுள்ள கூட்டு, அவர்களுடைய கார்கள் கிட்டத்தட்ட ஐரோப்பாவில் மட்டுமே பிரத்தியேகமாக விற்கப்பட்டதை அடுத்து பெரும் இழப்புக்களை அடைந்த இரு கார்த்தயாரிப்பு நிறுவனங்களை ஒன்றாகக் கொண்டு வருகிறது. நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடியின் செலவினங்கள் ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தின் தோள்களில் சுமத்தப்படுவதாலும் அதிலும் குறிப்பாக தெற்கு ஐரோப்பிய நாடுகளில் மற்றும் இப்பகுதியில் பொருளாதார மந்தநிலை மோசமாக  இருப்பதாலும், ஒரு புதிய கார் வாங்குவதற்குச் சிலரால்தான் முடிகிறது.

Opel-Vauxhall ஆண்டு ஒன்றிற்குக் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் கார்களை விற்கிறது. கடந்த ஆண்டு இதன் இழப்புக்கள் $747 மில்லியன் (€537 மில்லியன்) என ஆயிற்று. எனவே GM உடைய முக்கிய டெட்ரோயிட் ஆலை புதிய செலவினச் சேமிப்புத் திட்டத்தை அறிவித்தது; இது ஐரோப்பியத் தொழிலாளர்களின் இழப்பில் செயல்படுத்தப்படும். இரண்டு வாரங்களுக்கு முன்பு வோல்ஸ்ட்ரீட் ஒரு பெயரிடப்படாத GM பிரதிநிதிஓப்பல் மீண்டும் நல்ல இடத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றால், இப்பொழுதுதான் அது நடக்க வேண்டும், வெட்டுக்கள் ஆழ்மாக இருக்கும் என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

இக்குறைப்புக்களில் ஐக்கிய இராச்சியத்தில் Ellesmere Port என்று லிவர்பூலுக்கு அருகே இருப்பது, வடக்கு ரைன் வேஸ்ட்பாலியாவிற்கு (ஜேர்மனி) வடக்கே உள்ள Bochum ஆகியவற்றில் உள்ள ஆலைகள் மூடப்படுவதும் அடங்கும். ஐரோப்பிய தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் ஓப்பலின் உயர்மட்ட நிர்வாகத்துடன் பல மாதங்களாக தொழிலாளர் பிரிவினரின் முதுகிற்கு பின்னே இன்னும் வெட்டுக்களுக்காகப் பேச்சுக்களை நடத்துகின்றன. அதே நேரத்தில் 2014 கடைசி வரை ஆலை மூடல்கள், பணிநீக்கங்களைத் தடைசெய்திருப்பதாகக் கூறும் GM உடனான உடன்பாடு குறித்தும் இடைவிடாமல் கவனத்தைக் காட்டுகிறது.

உண்மையில், இது தொழிலாளர் தொகுப்பைச் சமாதானப்படுத்தும் வடிவமைப்பு கொண்ட ஒரு திட்டம்தான்; அதே நேரத்தில் வேலை வெட்டுக்கள் தொடர்கின்றன, தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் அனைத்து மோசமாகும் நிலைமைகளையும் ஏற்கின்றன. ஓப்பலின் Bochum நகர ஆலைகள் இதை நிரூபிக்கின்றன. அங்கு தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் கடந்த ஜனவரிக் கடைசியில் உள் உடன்பாட்டில் கையெழுத்திட்டன. போலந்தின் ஓப்பல் க்ளிவைஸ் ஆலையில் உள்ள 90 தொழிலாளர்கள் தற்காலிகமாக Bochum இல் நியமிக்கப்படுவர் என்பது உட்பட பல விதிகள் அதில் இருந்தன. அவர்களுக்கு போலந்து ஊதியம்தான் கொடுக்கப்படும். அதாவது கிட்டத்தட்ட மாதத்திற்கு €770 உம் வீட்டில் இருந்து வெளியே இருப்பதால் நாள் ஒன்றிற்குப் €42 படியும் வழங்கப்படும்.

அதிகப் பட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் 5,000க்கும் மேற்பட்ட Opel-Vauxhall தொழிலாளர்களும் விநியோகத்துறையில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் தங்கள் வேலைகளை இழப்பர்.

வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் பொருளாதார மந்திரி ஹெரி வொய்ஷ்பேர்கர் (SPD) ஓப்பல் முதலாளி கார்ல் பிரீட்ரிச் ஸ்ட்ராக்க இனை சந்தித்ததில் இது உறுதிப்படுத்தப்படுகிறது. Bochum ஆலை அதற்கு பாகங்கள் விநியோகிக்கும் நிறுவனங்கள் ஆகியவை மூடப்படல் கிட்டத்தட்ட 20,000 வேலைகளை அழிக்கக் கூடும். சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி மாநில அரசாங்கத்தின் மந்திரி 2014க்கும் பின்னர் Bochum ஆலை தொடரப்படுமா குறித்துத் தான் கேட்க விரும்புவதாகக் கூறினார்: ஏனெனில் அவர் அப்பகுதியில் சமூக அமைதியின்மை பற்றிக் கவலை கொண்டுள்ளார். அத்தகைய சலுகைகளை ஸ்ட்ராக்க வேண்டுமென்றே கொடுக்காமல் இருந்ததும் மற்றும் அது பற்றிய வாய்ப்பைக் கூடச் சுட்டிக்காட்டாதது Bochum ஆலை பற்றி முடிவு ஒன்று ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது.

La Tribune இது உடனடியாக சமூகப் பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று கூறினாலும் பங்குச் சந்தையும், செய்தி ஊடகங்களின் பெரும்பகுதியும் GM க்கும் Peugeot Citroën இடையே உள்ள வரவிருக்கும் கூட்டு பற்றி சாதகமாக பிரதிபலித்தன. வியாழன் அன்று Süddeutsche Zeitung  செய்தித்தாள் பின்வருமாறு எழுதியது: “அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களைப் போலன்றி, ஐரோப்பாவில் இருக்கும் நிறுவனங்கள் பல ஒரு புதிய ஆரம்பத்திற்காக பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்வதை தவிர்த்துவிட்டனர்.” இவை மிகப் பெரியதாகவும் வளைந்து கொடுக்கக் கூடியதாகவும் உள்ளன என்று கூறப்படுகிறது.

இவ்வகையில் செய்தித்தாள் அமெரிக்கக் கார்த்தயாரிப்பு நிறுவன முதலாளிகளின் முன்னோக்கை  எடுத்துக் கொண்டு அமெரிக்க ஜனாதிபதியின் வாதங்களுடன் இயைந்து நிற்கிறது. அதன் மிக அதிக இலாபமான 7.6 பில்லியன் டாலரை 2011 ஆண்டிற்காக GM அறிவித்த போது, பாரக் ஒபாமா உடனே அப்புதிய மட்டத்திற்காகத் தான் பெருமையை எடுத்துக் கொண்டார். தன் தலையீடு அமெரிக்க கார்த்தயாரிப்புத் தொழிலை காப்பாற்றிவிட்டதாக அவர் கூறினார்குறிப்பாக ஜெனரல் மோட்டர்ஸை. ஆனால் ஜேர்மனிய செய்தி ஊடகம் போல் அவரும் மௌனமாக இருப்பது இந்த நிர்வாகத்தின் கார்த்தொழில்மீட்பு என்பது, கிறைஸ்லர் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களில் புதிதாகச் சேரும் தொழிலாளர்களின் ஊதியம் 50% குறைக்கப்பட்டுவிட்டது என்பது பற்றியாகும். இதைத்தவிர அனைத்து ஜெனரல் மோட்டார்ஸ் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கும் நலன்கள் குறைக்கப்பட்டுவிட்டன. இதைத்தவிர, பல கார்த்தயாரிப்பு ஆலைகளும் மூடப்பட்டுவிட்டன.

இவ்வகைபுதிய ஆரம்பம் என்பது இப்பொழுது ஐரோப்பாவிலும் சுமத்தப்பட உள்ளது. GM க்கும் Peugeot Citroën க்கும் இடையே திட்டமிடப்பட்டுள்ள கூட்டு, தவிர்க்கமுடியாமல் வன்முறையான வர்க்கப் போராட்டங்களுக்கு எரியூட்டும்; அதில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கார்த்தயாரிப்புத் தொழிலாளர்களின் கூட்டுழைப்பு மிகவும் முக்கியமானதாகும்.