WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
French Socialist Party presidential candidate calls for interning the Roma
ரோமாக்களை முகாம்களில்
காவலில் அடைக்க வேண்டும் என்று பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்
அழைப்புவிடுகிறார்
By
Antoine Lerougetel
24 February 2012
Canal
Plus TV
இல் பெப்ருவரி 12ம் திகதி
கொடுத்த பேட்டி ஒன்றில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாபதி
வேட்பாளராகவுள்ள பிரான்சுவா ஹோலண்ட் ஐரோப்பிய ஒன்றிய ரோமாக்கள் பிரான்ஸில் இருப்பது
குறித்து “அவர்களைப்
பராமரிப்பதற்கு.... முகாம்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும்”
என்ற
“தீர்வை”
முன்வைத்துள்ளார்.
குறிப்பிட்ட
இனக்குழுக்களுக்கு சிறப்பு முகாம்கள் என்ற வகையில்
“தீர்வு”
எனப்படுவது ஐரோப்பாவில் நாஜி ஆட்சிக் காலத்தைத்தான் மனதில்
நிறுத்துகிறது; அப்பொழுது யூதர்களும், ஓரினச் சேர்க்கையாளர்களும் என்று
மட்டுமில்லாமல், ரோமாக்களும், நாடோடிகளும் (ஜிப்சிகளும்) சுற்றிவளைக்கப்பட்டு,
அழிப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இது இன்னமும் பல பிரெஞ்சு மக்களின்
நினைவில் இருந்து மறைந்து விடவில்லை.
“ரோமாக்கள்
பற்றிய இடையறாத பிரச்சினையை நாம் அனுபவிப்பதை தவிர்க்க ஐரோப்பிய விதிகள்
நிர்ணயிக்கப்பட வேண்டும். இம்மக்கள் எங்கும் வசிப்பதைத் தவிர்ப்பதற்கு நாம் முதலில்
முகாம்களை நிர்ணயிக்கலாம். ...இது அவர்கள் பின்னர் ருமேனியாவிற்கு திரும்ப
உதவும்... பிரான்ஸிற்கு மீண்டும் வரவேண்டிய தேவை இல்லாமல்”
என்று ஹோலண்ட் கூறினார்.
இன்னும்
தெளிவாகக் கூறுவது என்றால், ரோமாக்கள் சுற்றிவிளைக்கப்பட்டு, அவர்களுடைய வறிய
முகாம்கள் அகற்றப்பட்டபின், அவர்கள் ருமேனியாவிற்கு அனுப்பப்படுவர்.
இக்கொள்கையைத்தான் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் தற்போதைய வலதுசாரி அரசாங்கமும்
தொடர்கிறது.
“சோசலிஸ்ட்”
ஹோலண்ட்டின்
புதுமையான கருத்து,
காவல் முகாம்களை
கட்டமைத்து பின்னர் ரோமாக்கள் வேறு வகையில் மீண்டும் வருவதை ஒருவகை எல்லைக்
கட்டுப்பாட்டின் மூலம் தடுத்தல் என்பதாகும். இங்கு இந்த ஐரோப்பிய மக்களின்
சுதந்திரமான நடமாட்டத்தைத்தான் ஹோலண்ட் தாக்குகிறார். 1985ம் ஆண்டு
Schengen
உடன்பாட்டில் ஐரோப்பிய முதலாளித்துவம் தற்காலிகமாக அனுமதித்திருந்த வெகு சில
முன்னேற்றகரமான சலுகைகளில் இதுவும் ஒன்றாகும்.
ஆளும்
UMP (மக்கள்
பெரும்பான்மைக்கான ஒன்றியம்) உடைய பிரதிநிதிகள் ஹோலண்டின் அறிக்கையைப் பற்றி
எடுத்து அரசாங்கத்தின் தற்போதைய மிருகத்தனக் கொள்கையை நியாயப்படுத்த
பயன்படுத்தினர்.
RTL வானொலியில்
வேலைப்பயிற்சித்துறை மந்திரி, ஒரு தீவிர இனவெறியாளர்,
Nadine Morano,
இத்தகைய “சட்டவிரோதத்
திட்டம் பற்றி நான் ஆழ்ந்த அதிர்ச்சி கொண்டுள்ளேன்... நாங்கள் [அரசாங்கம்] பிரெஞ்சு
சட்டத்தை ஒட்டி,
ரோமா முகாம்களை சட்டபூர்வமாக அகற்றுவது என ஏற்பாடு செய்தோம்... திரு ஹோலண்ட்
பிரான்ஸில் ரோமாக்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என திட்டமிடுகிறார்”
என்று கூறினார்.
ருமேனியா,
பல்கேரியா ஆகியவற்றிலிருந்து வந்துள்ள கிட்டத்தட்ட 12,500 முதல் 15,000 ரோமாக்கள்
2007ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் அவர்களுடைய நாடுகள் இணைக்கப்பட்டதிலிருந்து
பிரான்ஸிற்குச் சட்டபூர்வமாக வந்துள்ளனர்.
BBC
கூற்றுப்படி, இன்னும் பத்து ஐரோப்பிய நாடுகள், ஜேர்மனி, இத்தாலி,
டென்மார்க், ஸ்வீடன் உட்பட, ரோமாக்களை வரவேற்றவை, பின்னர் வெளியேற்றுவதற்கான
கொள்கைகளை அறிமுகப்படுத்தினர். பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் ஏற்றுள்ள
நடவடிக்கைகள், தொழில்புரிய, வசிக்கும் உரிமைகளுக்கு ருமேனிய, பல்கேரிய
குடிபெயர்ந்தவர்களுக்கு குறைந்த வாய்ப்புத்தான், டிசம்பர் 12, 2013 வரை, அதன் பின்
தடைகள் இராது என்று இருந்தன. இத்தடைகளை முடிவுக்கு கொண்டுவர ஹோலண்ட் விரும்பவில்லை
என்பது தெளிவாகிறது; மாறாக அவர் அவற்றை விரிவாக்கி, வலுப்படுத்த விரும்புகிறார்.
ஜூன் 20,
2010 அன்று
Grenoble
ல் வெறுக்கத்தக்க வகையில்
நிகழ்த்தப்பட்ட சார்க்கோசியின் உரையை ஹோலண்டின் அறிக்கைகளில் இருந்து பிரிப்பது
மிகவும் கடினம் ஆகும். அவர் கூறியது:
“நாம்
சந்தேகத்திற்குரிய முறையில், நெறியற்ற சூழலில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு
தற்பொழுது கிடைக்கும் உரிமைகள், பொதுநலச் சலுகைகள் குறித்து ஆராய்வோம்...பொது விதி
தெளிவாகவுள்ளது: சட்டவிரோதமாக வருபவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச்
சென்றுவிட வேண்டும் என்பதே அது.”
ஏற்கனவே அவர்
உள்துறை மந்திரியை
“அங்கீகாரமற்ற
நாடோடிகள் குடியிருப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவைகள்
சட்டபூர்வமற்ற பகுதிகள், பிரான்ஸில் இவைகள் பொறுத்துக் கொள்ள முடியாதவை”
என்று கூறியிருந்தார்.
நீதி,
அடிப்படை உரிமைகள், குடிமை உரிமை ஆகியவற்றின் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர்
Viviane Reading
சார்க்கோசி அரசாங்கம்
“இனவழியில்
பாகுபாடு காட்டுகிறது”
என்று சார்க்கோசி
அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டி,
“நம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது மதிப்புக்களையும் சட்டங்களையும், இது வினாவிற்கு
உட்படுத்துகிறது”
என்றார். பிரெஞ்சுக்
கொள்கை “இழிந்தது”
என்றும் அவர்
கூறினார். இரண்டாம் உலகப் போரின்போது பாசிஸ்ட்டுக்கள் கடைப்பிடித்த நடவடிக்கைகளுடன்
பிரெஞ்சு அரசாங்கத்தின் செயல்களையும் அவர் உட்குறிப்பாக ஒப்பிட்டார். எப்படியும்
பின்னர் அவர் இக்கருத்தைப் பின்வாங்க நேர்ந்து, சார்க்கோசி
“இந்த
இழிவைத் தொடர”
அனுமதிக்கப்பட்டார்.
ரோமாக்களின்
குடியிருப்புக்களைப் பொறுத்த வரை, சோசலிஸ்ட் கட்சி ஆதிக்கத்திலுள்ள நகரசபைகளின்
தற்போதைய வழக்கத்தைத்தான் ஹோலண்ட் நியாயப்படுத்துகிறார். பெப்ருவரி 13 அன்று
அவருடைய பிரச்சார மேலாளர் மானுவல் வால்ஸ், ஈவ்ரியின் மேயர்,
“ஒரு
நகரசபை மேயரின் ஆணைப்படி... குழந்தைகளையும் பெற்றோர்களையும் அகற்றி அவர்களின்
முகாம்களையும் புல்டோசர் பயன்படுத்தித் தகர்ப்பதற்கு பொலிஸ் தலைவருக்கு
உத்தரவிட்டார்”
என்று
Essonne Info
தகவல் கொடுத்துள்ளது. அவர்களுக்கு மாற்றீட்டு இருப்பிடம் மேயரால் கொடுக்கப்பட்டது
குறித்த அறிக்கை ஏதும் இல்லை.
ஐரோப்பிய
நாடுகளுக்கு இடையே எல்லைகள் மூடல் பற்றிய விவாதம் 2011ல் வெடித்தது; அப்பொழுது
துனிசிய அகதிகள், அரச அடக்குமுறை மற்றும் பேரழிவுதரும் வாழ்க்கை நிலையில் இருந்து
தப்பி ஓடிவந்தவர்கள் இத்தாலி வழியே வந்தவர்கள், குடும்பங்கள், நண்பர்கள் வசிக்கும்
பிரான்ஸிற்கு வருவதில் இருந்து, பிரெஞ்சு அரசாங்கத்தால் இத்தாலிய எல்லையைக்
கடப்பதில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஹோலண்டின்
ரோமாத்
“தீர்வு”
மார்ட்டினிக்
பாராளுமன்ற உறுப்பினர்
Serge Latchimi
உள்துறை மந்திரி
Claude Guéant
உடைய
அறிக்கையான சில நாகரீகங்கள் மற்றவற்றைவிட உயர்ந்தவை என்பது நாஜிசத்திற்கு
நெருக்கமாக உள்ளது என்று கூறியதை அடுத்து எழுந்த விவாதங்களுக்கு சில நாட்களுக்குப்
பின் வருகிறது. லட்சிமியின் நிலைப்பாட்டிற்கு ஹோலண்ட் ஆதரவு கொடுக்க மறுத்து
விட்டார்.
பிரெஞ்சு
சமூகத்தின் மிகப் பிற்பட்ட கூறுபாடுகளுக்குத்தான் ஹோலண்ட் முறையிடுகிறார்; அடிப்படை
மனித உரிமைகள் மீது அரச தாக்குதல்களின் மிருகத்தனத்தை எதிர்க்கும் மக்களின் பரந்த
தட்டுக்களில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துக் கொள்கிறார்.
சட்டவிரோதக்
குடியேறுபவர்கள் மீது
“மிருதுவாக”
உள்ளார் எனக்
குற்றம் சாட்டப்படுகையில், ஹோலண்ட் தன்னுடைய தேர்தல் திட்டத்தை மேற்கோளிட
விரும்புகிறார்:
“சட்டவிரோதக்
குடியேற்றம் பற்றி உறுதியான போராட்டத்தை நான் நடத்துவேன்...சட்டபூர்வமாக வசிக்கும்
உரிமை என்பது பொதுநிலை அளவுகோல்களின்படி ஒவ்வொரு விவகாரத்திற்கும் தனித்தனியே
வழங்கப்படும்.”
உள்துறை
மந்திரி
Claude Guéant
பெருமையுடன் 2011ல் ஆவணமற்ற குடியேறியவர்கள் 32,912 பேரை வெளியேற்றிச் சாதனை
புரிந்தது பற்றி எக்குறையையும் சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கூறவில்லை; இந்த
எண்ணிக்கை 2010ல் 28,026 என்பதில் இருந்து 17.5 சதவிகிதம் அதிகரிப்பு ஆகும்.
ஆவணமற்ற
குடியேறுவோரை மிகப் பெரிய அளவில் சட்டபூர்வமாக்கப்படுவதை ஹோலண்ட் ஆதரிக்கிறார்
என்று சார்க்கோசி தெரிவிக்கும் கருத்தை எதிர்கொள்கையில் சோசலிஸ்ட் கட்சியின்
Mireille Le Corre,
“குடியேற்றம்-ஒருங்கிணைப்பு”
கொள்கைக்குப்
பொறுப்பானவர், “பிரான்சுவா
ஹோலண்ட்...வெகுஜனச் சட்டங்களை செயல்படுத்தவில்லை, ஒரு நியாயமான, வெளிப்படையான
நடைமுறையைத்தான் மீண்டும் நிறுவ முற்படுகிறார். சட்டத்தன்மைக்கு உட்பட்டிருக்க
முடியாது என்ற நிலையிலுள்ள வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்படும் நடவடிக்கைகளைத்தான்,
தங்கள் உரிமைகள், கௌரவம் ஆகியவற்றை மதிக்கும் சூழலில், எதிர்பார்க்க முடியும்”
என்றார்.
குடியேறுபவர்-விரோத ஹோலண்டின் நிலைப்பாடுகள் முழு முதலாளித்துவமும் குட்டி
முதலாளித்துவ
“இடதுகளும்”—சோசலிஸ்ட்
கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இடது கட்சி மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக்
கட்சி—சார்க்கோசியுடன்
இஸ்லாமியவாத எதிர்ப்பு வெறியில் பர்க்காவைத் தடை செய்தல், அதற்கும் முன்
பள்ளிகளில் முஸ்லிம் மறைப்பு அங்கியைத் தடைசெய்தல் ஆகியவற்றில் ஒன்றாகத்
தீவிரத்துடன் உழைத்தவர்களின் ஆதரவைக் கொண்டுள்ளது என்பதைத்தான்
வலியுறுத்துகிறது. அவர்கள் இப்பொழுது ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள
ஜனாதிபதித் தேர்தல்களில் ஹோலண்டிற்கு ஆதரவைத் திரட்டுகின்றன; இது பிரெஞ்சு
முதலாளித்துவத்திற்கு பொருளாதார நெருக்கடியைக் கடப்பதற்கு கிரேக்கத்தில்
நடைபெறும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்கள், உரிமைகள் அழிப்பு
ஆகியவற்றைச் செயல்படுத்த உதவும்.
|