WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பியத்
தொழிற்சங்கங்கள்
ஐரோப்பிய
ஒன்றியத்தின்
சிக்கன
நடவடிக்கை
கோரிக்கைகளுக்கு
ஆதரவு
கொடுக்கின்றன
By
Christoph Dreier
25 February 2012
use
this version to print | Send
feedback
ஐரோப்பிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு
(ETUC)
பெப்ருவரி
29ல்
“வேலை
மற்றும் சமூக நீதிக்கான ஐரோப்பிய நடவடிக்கை தினம்”
எனக் கூறப்படுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த பயனற்ற எதிர்ப்பு ஐரோப்பிய
ஒன்றியத்தின் ஆணையில் சுமத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளுக்கு அதிகரிக்கும்
பரந்துபட்ட விரோதப்போக்கு மற்றும் ஐரோப்பிய தொழிலாளர்களிடையே அதிகரிக்கும்
தீவிரமயமாகல் ஆகியவற்றை எதிர்நோக்கும் தொழிற்சங்கத்தின் பிரதிபலிப்பாகும்.
ஒரு
நாள் நடவடிக்கை,
கிரேக்கத் தொழிலாளர்களுடன் ஒற்றுமையை முன்னெடுப்பதற்கோ, ஐரோப்பியத்
தொழிலாளர்களுக்கு எதிராக சிக்கன நடவடிக்கைகள் சுமத்தப்படுவதற்கு ஒரு ஐக்கியப்பட்ட
போராட்டத்திற்கோ அல்ல. மாறாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஐரோப்பாவின் தேசிய
அரசாங்கங்களுக்கும் தொழிலாள வர்க்கத்தை அடிபணியசெய்யும் முயற்சியும் மற்றும்
நடத்தப்படும் மிருகத்தன வெட்டுக்களுக்கு எதிராக ஒன்றும் செய்ய இயலாது என்ற
உணர்வுக்கு ஊக்கம்கொடுப்பதும்தான்.
ETUC
நடவடிக்கைக்கு அழைப்புவிடுத்துள்ளதே
“நீண்டகால
அடிப்படையில் வரவு-செலவுத்திட்ட
சமச்சீர்நிலை மீட்கப்பட வேண்டும்”
என்பதைப்பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்கிறது. இது வங்கிகள் மற்றும் ஆளும்
வர்க்கங்கள் கோரும் ஊழியங்கள், ஊதியங்கள், சமூகநலச் செலவுகள் ஆகியவற்றில் பெரும்
குறைப்புக்களை ஏற்பதாகும். ஜேர்மன் தொழிற்சங்கக் கூட்டமைப்பான
DGB
அதன் அறிக்கையில் இன்னும் வெளிப்படையாக வெட்டுக்கள் தேவை என்னும் வகையில்,
“சேமிப்புக்களும்
முதலீடுகளும் ஒரே நேரத்தில் இருக்க வேண்டும், இதுதான் சரியான சூத்திரம்”
என்று கூறியுள்ளது.
இச்சூத்திரம் ஜேர்மனிய நிதிமந்திரி வொல்ப்காங் ஷொய்பிள மற்றும் ஜேர்மனிய
பாராளுமன்றத்தில் இருக்கும் பிற கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவராலும்
ஆதரவுகொடுக்கப்படும். நடவடிக்கைத் தின அமைப்பாளர்களின்
பேச்சுக்கள்
“ஐரோப்பாவின்
கொள்கை
முடிவு
எடுப்பவர்களுக்கு ஒரு வலுவான தகவலை”
கொடுக்கும் என்பதின் பொருள் ஐரோப்பிய மற்றும் சர்வதேச முதலாளித்துவத்திற்கு அவை
வங்கிகள் ஆணையிடும் வெட்டுக்களைச் சுமத்துவதற்கு ஒத்துழைப்பர் என்பதைத்தான்
தெளிவாக்குகிறது.
இதன்படி,
ETUC
மற்றும்
DGB
ஆகியவை
நடவடிக்கை தினம் என்பதை ஒரு அடையாள நடவடிக்கை நாள் என்று மட்டுப்படுத்தும்
முயற்சியில் ஈடுபடுகின்றனரே ஒழிய வெகுஜன சமூக எதிர்ப்பு என்று காட்ட முற்படவில்லை
என்பது தெரிகிறது.
DGB
எந்தப்
பெரிய தொழில்துறை நகரிலும் அதன் உறுப்பினர்களைத் திரட்ட முயற்சி ஏதும் எடுக்கவில்லை,
மாறாகக் காலை
8.30க்கு
ஒப்புமையில் தொலைவாக உள்ள,
அதிக மக்கள் இல்லாத மாக்டபேர்க்கில் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இத்தகைய
நடவடிக்கைகள் ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின்
ஆணைகளை மக்கள் எதிர்ப்பை மீறிச் சுமத்துவதற்கு தொழிற்சங்கங்கள் உதவுகின்றன என்ற
உண்மையை மறைக்க முடியாது.
இது கிரேக்கத்தைவிட வேறு எங்கும் இன்னும் வெளிப்படையாகத் தெரியவில்லை. அங்கு
வேலைகள்,
ஊதியங்கள் மற்றும் சமூகநலப் பணிகளில் மிருகத்தனமான வெட்டுக்கள் ஆகியவை ஐரோப்பா
மற்றும் சர்வதேச அளவில் இதேபோன்ற தாக்குதல்களுக்கு வடிவமைப்பாக உதவுகின்றன.
இரண்டு
ஆண்டுகளாக சிக்கன நடவடிக்கைகள் விரிவாக்கப்பட்டுள்ளதுடன், கிரேக்க மக்களின் பெரும்
பிரிவுகளை வறிய நிலைக்குத் தள்ளவிட்டது.
வீடற்ற நிலை,
தற்கொலைகள் ஆகியவை பாரிய பணிநீக்கங்கள்,
ஓய்வுதிய வெட்டுக்கள்
30%, 50%
இன்னும்
அதிகம் என்பவற்றுடன் இணைந்து உயர்ந்து,
சுகாதாரப் பாதுகாப்பு முறையிலும் பேரழிவு வெட்டுக்களும் நடத்தப்பட்டுள்ளன.
பொது வேலையின்மை
20%
என்றும்
இளைஞர் வேலையின்மை
50%
என்றும்
உள்ளன.
இத்தாக்குதல்கள் கிரேக்கத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் எதிர்ப்பை
காட்டும் பல முயற்சிகளையும் மீறி செயல்படுத்தப்பட்டுள்ளன.
அவர்களுடைய எதிர்ப்பிற்கு குழிபறிக்கும் முக்கிய காரணி கிரேக்கத் தொழிற்சங்கக்
கூட்டமைப்புக்களின் காட்டிக் கொடுப்புத்தான். இதில் பொதுத்துறை
ஆட்சிப்பணியாளர்களின்
ADEDY,
மற்றும்
தனியார்துறை கிரேக்கத் தொழிலாளர்களின் பொதுக் கூட்டமைப்பு
GSEE,
மற்றும்
கம்யூனிஸ்ட் கட்சியுடன் பிணைந்துள்ள
PAME
எனப்படும் அனைத்துத் தொழிலாளர்களின் போராளித்தன முன்னணி ஆகியவை அடங்குகின்றன.
இந்த
மூன்றுமே சமூக ஜனநாயக
PASOK
கட்சிக்கு ஆதரவு கொடுக்கின்றன. அது நிதியச் சந்தைகள் மற்றும்
“முக்கூட்டு”
–ஐரோப்பிய
ஆணையம்,
ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம்—ஆகியவற்றின்
கோரிக்கைகளைப் பெரும் கடமை உணர்வுடன் செயல்படுத்தியது. கடந்த நவம்பர் மாதம் சமூக
ஜனநாயகக் கட்சி,
கன்சர்வேடிவ் புதிய ஜனநாயகம் மற்றும் புதிய பாசிச
LAOS
கட்சி
ஆகியவை அடங்கிய ஒரு கூட்டணி அரசாங்கத்தால் இடம்பெயரச்செய்யும்வரை அது இதனை
செய்துவந்தது.
(LAOS
பின்னர்
அரசாங்கத்தில் இருந்து விலகிவிட்டது).
எந்த நேரத்திலும் தொழிற்சங்கங்கள் அரசாங்கம் இராஜிநாமா செய்யவேண்டும் என்ற
கோரிக்கையை முன்வைக்கவில்லை.
பலமுறை
தொழிற்சங்கங்கள் ஒரு நாள் எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இது தொழிலாள
வர்க்கத்தின் சீற்றத்தைத் தணித்து சிதைத்துவிடுவதுடன்,
அதே நேரத்தில் அவை திரைக்குப் பின் அரசாங்கம் மற்றும் முதலாளிகளுடன் சுமத்தப்பட
இருக்கும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து பேச்சுக்கள் நடத்த உதவியுள்ளன.
எண்ணெய்துறைத் தொழிலாளர்கள் மற்றும் வாகன சாரதிகள் போன்ற பல தொழில்துறைகளில் உள்ள
தொழிலாளர்கள் குறைந்தப்பட்ச எதிர்ப்புக்களுக்கு அப்பால் சென்று அரசாங்கத்தை உறுதி
குலைக்க வைத்தல் மற்றும் தீவிர பொருளாதாரச் சேதம் ஏற்படுத்தும் வேலைநிறுத்தங்களை
மேற்கொள்ள முற்பட்டனர்.
ஆனால் தொழிற்சங்கங்கள் குறுக்கிட்டு அவர்களுடைய வேலைநிறுத்தங்களை முறித்ததுடன்,
சிலசமயம் வெளிப்படையாக அரசாங்க அடக்குமுறைக்கு ஆதரவையும் கொடுத்தன.
நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சமீபத்திய சிக்கன நடவடிக்கைக் கோரிக்கைகளுக்கு
எதிராக நடத்திய எதிர்ப்புக்களில் பங்கு பெற்றனர். பெப்ருவரி
12
முதல்,
GSEE
மற்றும்
ADEDY
ஆகியவை
எதிர்ப்புக்களைக் குறைந்தமட்ட நிலையில் இருத்த முற்பட்டுள்ளன.
இந்த அமைப்புக்களுடன் தொழிலாளர்கள் கொண்ட பெருகிய இகழ்வுணர்வை ஒட்டி,
கடந்த வாரம் ஏதென்ஸில் சின்டகமா சதுக்கத்தில் இவை கூட்டாக விடுத்த தொழிற்சங்க
எதிர்ப்பு ஒரு சில ஆயிரம் பேரைத்தான் ஈர்த்தது.
கிரேக்கத்திலும் ஐரோப்பா முழுவதிலும் தொழிற்சங்கங்களின் பிற்போக்குத்தன பங்கு
மோசமான தலைவர்கள் என்பது தொடர்பானது அல்ல. மாறாக தொழிற்சங்கங்களின் தேசியவாத,
முதலாளித்துவ சார்பு வேலைத்திட்டம் மற்றும் அரசாங்கத்துடன் அவை இணைந்து
செயல்படுவதின் விளைவு ஆகும்.
வர்க்க விரோதங்கள் பெருகியுள்ளதை எதிர்கொள்ளும் வகையில் இந்த எதிர்ப்புரட்சி
அமைப்புக்கள் இன்னும் நெருக்கமாக அரசாங்கத்துடன் பிணைகின்றன.
GSEE
செய்தித் தொடர்பாளர் உலக சோசலிச வலைத் தளத்திடம் இந்த வாரம் கூறியபடி,
தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எதிர்ப்புக் காட்டவில்லை,
அதன் நடவடிக்கைகள் சிலவற்றிற்குத்தான் காட்டுகின்றன.
“கிரேக்கத்தில்
உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும் இருக்கும் ஆதரவான சக்திகளுடைய உதவியுடன்
நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாம் வேறு ஒரு திட்டத்தைக் கண்டறிய வேண்டும்;.”
என்று அவர் கூறினார்.
வேறுவிதமாகக் கூறினால்,
தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் முதலாளித்துவ நெருக்கடியைக்
கட்டுப்படுத்த முயலும் அரசாங்கம்,
வங்கிகளுடன் முழுமையாக இணைந்து செயல்படுகின்றன.
ஒரு சமூக எதிர்ப்புரட்சியை செயல்படுத்தும் முதலாளித்துவ அரசாங்கத்திற்கு அவை ஆதரவு
தருகின்றன—இவற்றுள்
புதிய பாசிச சக்திகள்
LAOS
போன்றவையும் அடங்கும்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் நிறுவனங்களை பாதுகாத்தல் குறித்து தொழிற்சங்கங்கள்
இரகசியமாக எதையும் செய்யவில்லை.
சில நாட்களுக்கு முன்பு
GSEE
ஓர்
அறிக்கையை வெளியிட்டு சில உரிமைகள் கடமைகளுடன் இணைந்தவை என்று ஐரோப்பிய ஒன்றியத்தை
அதில் மேற்கோளிட்டுள்ளது.
மேலே கூறப்பட்டுள்ள
GSEE
செய்தித் தொடர்பாளரும்
WSWS
இடம்
அனைத்து வெட்டுக்களும் இருந்தபோதிலும்கூட ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்கம்
அங்கத்துவ நாடாகத் தொடர்வதை பாதுகாக்கின்றன..
இந்த
நிலைப்பாடுதான்
ADEDY
பிரதிநிதி
Basil Xenakis
ஆலும்
எதிரொலிக்கப்படுகிறது.
அவர்
WSWS
இடம்
தன் தொழிற்சங்கம் தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களை எதிர்த்து காலவரையற்ற
வேலைநிறுத்தம் ஒன்றிற்கு அழைப்பு விடாததற்குக் காரணம்,
அரசாங்கம் ஏற்கனவே அனைத்தையும் முடிவெடுத்துவிட்டது என்பதால் என்றார்.
“நாம்
செயல்படுவதற்கு ஒன்றும் இல்லை. பிரதிபலிப்பை காட்டத்தான் வேண்டும்”
என்றார் அவர்.
தொழிலாளர்கள் மாறுபட்ட வகையில் உணர்கின்றனர் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
தொழிலாளர்கள் போராடத் தயார் என்பதை
“கிரேக்கத்தில்
ஒவ்வொருவரும் அறிவர்”
என்றார்.
PAME,
கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சி
(KKE)யின்
தொழிற்சங்கக் கூட்டமைப்பு,
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான தீவிரவாத வார்த்தைஜாலங்களை பயன்படுத்தினாலும்கூட,
அது
ADEDY, GSEE
இவற்றிற்கு எதிராக சுயாதீன முறையில் தீவிர வேலைநிறுத்த நடவடிக்கை எதற்கும்
அழைப்புக் கொடுக்கவில்லை.
கடந்த அக்டோபரில் நடைபெற்ற வெகுஜன எதிர்ப்புக்களின்போது இது
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பாராளுமன்றத்தை பாதுகாக்க தன்னுடைய சொந்தப்
பாதுகாவலர்களை ஏற்பாடு செய்தது.
கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின்
ஐரோப்பிய ஒன்றிய-விரோத
வார்த்தைஜாலங்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இது ஐரோப்பிய ஐக்கிய இடதின் ஒரு
உறுப்பினராக ஆவதைத் தடுக்கவில்லை. அந்த அமைப்பு வெளிப்படையாக ஐரோப்பிய ஒன்றியம்
சீர்திருத்தப்பட வேண்டும் எனக் கூறுகிறதே ஒழிய அதற்கு மாற்றீடு வேண்டும் என்று
கூறவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக குறைகூறுவதை கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின்
முக்கியமாக தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தேசியவாத வழிவகைகளில் திருப்புவதற்குத்தான்
பயன்படுத்துகிறது.
பொதுச் செயலாளர் அலேகா பாப்ரிகா ஒரு சமூகப் புரட்சி ஒன்றும் செயற்பட்டியலில் இல்லை
என்று அறிவித்துள்ளார்;
அதே நேரத்தில் கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சி கிரேக்கத் தொழிலாளர்களிடம் அதன்
எரிசக்தி இருப்புக்களினால் நாடு முதலாளித்துவத்தின் கீழ் தன்னிறைவு உடையதாக இருக்க
முடியும் என்று கூறுகிறார்.
வங்கியாளர்களின் ஐரோப்பிய ஒன்றியத்தை அகற்றுவதற்கான,
தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு தொழிற்சங்கங்களுடன்
முறித்துக் கொண்டு,
சோசலிச,
சர்வதேச முன்னோக்கினால் வழிகாட்டப்படும் தொழிலாள வர்க்கத்திற்கான போராட்டங்களுக்காக
புதிய அமைப்புக்கள் கட்டமைத்தல் தேவையாகும்.
இப்போராட்டத்தின் கோசம் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்பதாகும். |