சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Australian government torn apart by US-China tensions

அமெரிக்க-சீன பதட்டங்களால் ஆஸ்திரேலிய அரசாங்கம் பிளவுபட்டது

Peter Symonds
25 February 2012

use this version to print | Send feedback

ஆஸ்திரேலிய அரசாங்கத்தையும் தொழிற்கட்சியையும் சின்னாபின்னமாக்கி கொண்டிருக்கும் அசாதாரண அரசியல் நெருக்கடியானது, திங்களன்று பிரதம மந்திரி ஜூலியா கில்லார்டு மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கெவின் ரூட் இடையிலான தலைமைக்கான போட்டியுடன் இன்னும் முன்வரவுள்ளது.  எவ்வாறிருந்த போதினும், ஊடகத்தில், இந்த அடிப்படை பிளவு, இன்றைய Australian இதழ் தலையங்கத்தின் வார்த்தைகளில், கொள்கைக்காகவோ, அல்லது தேசிய நலனுக்காகவோ அல்ல... [மாறாக] கடந்தகாலத்தின் சிறிய பூசல்களுக்காக, பதிலடியாக பழிக்குப்பழி வாங்கும் மோதலாக, தனிமனித அரசியலாக" இருப்பதாக சித்தரிக்கப்பட்டு வருகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யுத்தத்திற்குப் பிந்தைய ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் முன்னொருபோதுமில்லதவாறான தலமைத்துவத்திற்கான போரில் ரூட் மற்றும் கில்லார்டு அவரவர்களின் எதிராளிகளுக்கு  எதிராக அவர்களின் ஆதரவாளர்களால் திசைதிருப்பிவிடப்படும் அந்த மோதல் அடிப்படை கொள்கை வேறுபாடுகளோடு ஒன்றுடனும் சம்பந்தப்பட்டதில்லை என்று அர்த்தப்படுகின்றது. கடந்த நூற்றாண்டின் ஒவ்வொரு பிரதான நெருக்கடியிலும் ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கம் எதை சார்ந்திருந்ததோ நாட்டின் அந்த மிகப் பழமைவாய்ந்த தொழிற்கட்சி, இரண்டு தனிமனிதர்களின் தற்பெருமைமிக்க ஆசைகளாலேயே சீர்குலைந்திருப்பதாக எடுத்துக்காட்டப்பட்டு வருகிறது.

சம்பவங்களின் இவ்வாறான விளக்கங்கள் முற்றிலும் முட்டாள்தனமானவையாகும்.

முதன்மையாக, இந்த மோதலின் அடியிலிருக்கும் காரணங்களை உள்நாட்டு அரசியல் வட்டத்திலிருந்து காண முடியாது. நிதியியல் மூலதனத்தால் கோரப்பட்ட சமூக செலவின குறைப்பு திட்டத்திற்கு பொறுப்பேற்றிருந்த ரூட் மற்றும் கில்லார்டு இருவருமே, தொழிலாளர் வர்க்கத்தின் மீது தேவைப்பட்ட தாக்குதல்களை நடைமுறைப்படுத்துவதற்கான பெரிய வியாபாரங்களின் சிறந்த அமைப்புகளாக தம்மைத்தாமே  நிலைநிறுத்திக் காட்டி வருகின்றன.

இவற்றிற்கு அப்பாற்பட்டு, தொழிற்கட்சியின் முறிவானது சீனாவோடு அதிகரித்துவரும் ஒபாமா நிர்வாகத்தின் விரோதத்தின் மீது மையங்கொண்ட சக்திவாய்ந்த பூகோள-அரசியல் போட்டிகளோடு பின்னிப்பிணைந்துள்ளது. ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கம் ஒருபுறம் பொருளாதாரரீதியில் சீனாவை பலமாக சார்ந்திருப்பதும் மற்றும் மறுபுறம் அமெரிக்காவுடனான அதன் இராணுவ கூட்டணியின் மீது சார்ந்திருக்கும் அதன் புவி-மூலோபாய பொறுப்புறுதியாலும் முன்நிறுத்தப்பட்ட நீண்டகால குழப்பத்துடன் நேருக்குநேர் எதிர்கொண்டிருக்கும் இந்த பெருஞ்சுழலில் ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கம் மாட்டிக் கொண்டுள்ளது.      

வாஷிங்டன் உடன் நெருக்கமாக தொடர்புபட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய குழுவாத தலைவர்களால் ஒரேயிரவில் நடத்தப்பட்ட உட்கட்சி ஆட்சிக்கவிழ்ப்பு சதியில், ரூட் ஜூன் 2010இல் பிரதம மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதேநேரத்தில், விரிவடைந்துவரும் சீனாவின் செல்வாக்கிற்கு குழிபறிக்கும் நோக்கத்துடன், ஒபாமா ஆசியாவில் இராஜாங்க மற்றும் மூலோபாய தலையீட்டைத் தீவிரப்படுத்த மத்தியகிழக்கிலிருந்து அவரது "முன்னோடியான" வெளிநாட்டு கொள்கையை அப்போதுதான் தொடங்கி இருந்தார்.   

ஒபாமா நிர்வாகம் அதன் நிலைநோக்கிற்கு ரூடை ஒரு தடையாக கருதியது. இது, விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரகசிய ஆவணங்களில் நிரூபணமான அமெரிக்க-ஆஸ்திரேலிய உறவிற்கு ரூட் எந்தவிதத்திலாவது தடையாக இருப்பார் என்பதற்காக அல்ல. அந்த ஆவணங்களில் அவர், சீனாவுடன் ஓர் அமெரிக்க யுத்தம் தவிர்க்கவியலாமல் நிகழும் என்று கணித்த "ஒரு தீவிரமான யதார்த்தவாதியாக" அவர் தம்மைத்தாமே அமெரிக்க அதிகாரிகளுக்கு விளக்கியிருந்தார்

எவ்வாறிருந்த போதினும், கைவந்த பேரம்பேசல் மற்றும் வழக்கமான இராஜாங்க பேச்சுவார்த்தைகள் மூலமாக அமெரிக்கா மற்றும் சீனாவின் இரண்டிற்குமான பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு இடவசதி செய்தளிப்பதன் மூலமாக ஒரு பிராந்திய பேரவையை உருவாக்குவதை ரூட் முன்மொழிந்தார். இது, பதட்டங்களைத் தணிப்பதற்கு அல்லாமல் மாறாக இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் சீனாவின் மீது அழுத்தத்தை அதிகரிக்க செய்யும் ஒபாமாவின் விருப்பத்தைக் குறுக்காக வெட்டியது. அவர் (ஒபாமா) கான்பெர்ராவில் ஒரு இராஜாங்க மத்தியஸ்தரை விரும்பவில்லை, மாறாக ஒரு உறுதியான, கேள்விகேட்காத கூட்டாளியை விரும்பினார்.   

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்க-சீன பதட்டங்கள் படிப்படியாக தீவிரமடைந்துள்ளது. ஒபாமாவின் ஒவ்வொரு முனைவையும் இழிவார்ந்த முறையில் ஆதரித்ததன் மூலமாக கில்லார்டு அவரின் மதிப்பை நிரூபித்துள்ளார். எந்த கடற்பாதை வழியாக சீனா அதன் எரிபொருள் மற்றும் மூலப்பொருட்களை மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து பெறுகிறதோ அந்த முக்கிய சீர்மிகு வழித்தடங்களுக்கு இணையாக உள்ள ஆஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி முழுவதிலும் உள்ள அந்நாட்டின் இராணுவ தளங்களை அமெரிக்க கப்பற்படை உட்பட அமெரிக்க இராணுவம் பாவிக்கலாமென அவர் கடந்த நவம்பரில் அறிவித்தார்.       

லிபியாவில் நேட்டோ இராணுவ தலையீடு உட்பட எண்ணற்ற பிரச்சினைகளில் ரூட், அவர் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தபோது, அமெரிக்க போக்கை மழுங்கடித்துள்ளார். மேலும் ஜனவரியில் அவர் வாஷிங்டனில் உள்ள ஆசியா சமூகத்திடம் (Asia Society) கூறுகையில், அமெரிக்க மற்றும் சீன சக்திகளின் எதார்த்தங்களை உணர்ந்து, இறுதியில் பொதுவான பாதுகாப்பு கோட்பாடுகளின் அடிப்படையில் அமையக்கூடிய ஒரு அமைதி தீர்வு வேண்டுமென" அவர் கூறியிருந்த நிலையில், ஒரு சமாதான பசிபிக்காவிற்கான அவசியம் குறித்து சர்வதேச மாநாடுகளில் பிரச்சாரம் செய்வதையும் அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.

இந்த அரசியல் பிளவு தற்போதைய தொழிற்கட்சித் தலைமையோடு, தொழிற்கட்சி அல்லது ஆஸ்திரேலியாவோடு முடிந்துவிடவில்லை. முன்னாள் தொழிற்கட்சி பிரதம மந்திரி பால் கீட்டிங் மற்றும் முன்னாள்-தாராளவாத கட்சி எதிர்ப்பு தலைவர் மால்காம் டர்ன்புல் ஆகியோர் பகிரங்கமாகவே சீனாவுடனான ஒபாமாவின் விரோத அணுகுமுறை குறித்து கடந்த நவம்பரில் அவர்களின் கவலைகளை வெளியிட்டிருந்தனர். கீட்டிங் ஆசியாவோடு ஒரு நெருங்கிய நிலைநோக்கைத் தொடர்வதன் பாகமாக 1991இல் தொழிற்கட்சி தலைவராக இருந்த பாப் ஹாவ்கியை பதவியிலிருந்து நீக்கினார். 2009க்குப் பிந்தைய காலப்பகுதியில் தாராளவாத கட்சி தலைவராக இருந்த போது நீக்கப்பட்ட டர்ன்புல் எதிர்கட்சி மட்டத்திலே உள்ள வெளியுறவு கொள்கை பிளவுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார்.

சீனாவில் முதலீடு செய்வதை பலமாக சார்ந்துள்ள சக்திவாய்ந்த பொருளாதார மற்றும் நிதியியல் நலன்கள் இருக்கும் அமெரிக்கா, ஐரோப்பாவிலும் மற்றும் சர்வதேச அளவில் வேறு இடங்களிலும் இதேபோன்ற தடுமாற்றங்கள் அரசியல் அமைப்புமுறையை எதிர்கொள்கின்றன. சான்றாக, வாகனத்துறை ஜாம்பவான் ஜெனரல் மோட்டார்ஸ் சீனாவிலுள்ள அதன் உயர்ந்த இலாபகரமான செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு விட்டுக்கொடுத்தால், அது உடனடியாக அபாயத்திற்குள் மூழ்கும். கடந்த தசாப்தத்தில், சீனாவிற்கான அமெரிக்காவின் ஏற்றுமதி 468 சதவீதம் உயர்ந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் இந்த ஆண்டில் அரை ட்ரில்லியன் டாலரை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.    

ஆகவே இந்த கண்ணோட்டங்களை கொண்டுள்ளவர்களில் ரூட் மட்டும் தனியாக இல்லை. முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski அவருடைய புதிய புத்தகமான Strategic Visionஇன் இறுதி பக்கங்களில் பின்வருமாறு எழுதினார்: ஆசியாவில் அமெரிக்காவின் தீவிரமான செயல்பாடுகள் அப்பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதற்காக மட்டுமல்ல, மாறாக, அதற்கும் இன்னும் கூடுதலாக, அமெரிக்க-சீன உறவு அமைதியாகவும், கூட்டுறவோடும் பரிணமிப்பதற்கான மற்றும் அது ஒரு பரந்த அரசியல் மற்றும் பொருளாதார உலகளாவிய கூட்டணிக்குள் தவிர்க்கவியலாமல் வளர்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு பிரதானமானதாகும்.      

1972இல் அமெரிக்க-சீன நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் கருவியாக இருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கையின் மற்றொரு முக்கியஸ்தர் ஹென்ரி கீஸிங்கரும், கூட்டுறவைப் புதுப்பிப்பதற்கு அழைப்புவிடுத்துள்ளதோடு, ஒரு விரோதபோக்கின் மீது அச்சங்களையும் வெளிப்படுத்தினார். கடந்த ஆண்டு பிரசுரிக்கப்பட்ட அவரது On China  என்ற புத்தகத்தில், சீனாவுடனான ஒரு பனிப்போர் "பசிப்பிக்கின் இரண்டு பக்கங்களிலும் உள்ள ஒரு தலைமுறையின் முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடும்" என்பதோடு, ஒவ்வொரு பிராந்தியத்தின் உள்நாட்டு கொள்கைகளுக்குள்ளேயும் பிரச்சினைகளையும் பரப்பும், என்று எச்சரித்தார்.    

குறிப்பிடத்தக்க விதத்தில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடந்த உயர்மட்ட முனீச் பாதுகாப்பு மாநாட்டின் ஒரு அமர்வில் கீஸிங்கர் தலைமையும் வகித்தார். அதில், தேசிய இறையாண்மைக்கான சீனாவின் சட்டப்பூர்வ தேடலையும்" அத்தோடு "ஆசியாவில் அமெரிக்கா தொடர்ந்து கொண்டிருக்கும் மூலோபாய ஈடுபாட்டையும்" இரண்டையும் உள்ளடக்கக்கூடிய ஒரு சமாதான பசிப்பிக்காவிற்கு அழைப்புவிடுப்பதை ரூட் மீண்டும் தொடர்ந்தார். "பரந்த ஆசியா முழுவதிலும் எழுந்துள்ள இந்தவொரு பொதுவான பாதுகாப்பு உணர்வை வடிவமைக்க உதவ... ஐரோப்பிய சக்திகள் அவற்றின் "பொதுவான பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை குரலைப் பயன்படுத்த" அவற்றிற்கு அவர் ஒரு குறிப்பிட்ட அழைப்பை விட்டார்

விட்டுக்கொடுத்தல் மற்றும் நேரிய நடைமுறை  குறித்த இத்தகைய அழைப்புகள், அனைத்திற்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்றுரீதியிலான வீழ்ச்சியால் உந்தப்பட்டுவரும் பூகோள-அரசியல் பதட்டங்களைத் தீவிரப்படுத்தப்படுவதோடு கூர்மையாக முரண்பட்டு நிற்கிறது. அமெரிக்கா அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைத் தக்கவைக்கும் ஒரு முயற்சியில், கடந்த இரண்டு தசாப்தங்களில், அதன் பிரதான போட்டியாளர்களுக்குக் குழிபறிக்கும் நோக்கில் மத்தியகிழக்கு, பால்கன்கள் மற்றும் மத்திய ஆசியாவில் ஒரு தொடர்ச்சியான குற்றத்தனமான யுத்தங்களை நடத்த அதன் பாரிய இராணுவ பலத்தைப் பயன்படுத்தியது. சீனாவின் வேகமான பொருளாதார உயர்வை முகங்கொடுத்திருக்கும் நிலையில், ஆசிய பிராந்தியம் முழுவதிலும் அமெரிக்காவிற்கு ஒரு பிரதான உலக போட்டியாளராக அதை அது கருதுகிறதோ அதை இப்போது எதையும் பொருட்படுத்தாமல் எதிர்கொண்டு வருகிறது.

புதிய முரண்பாடுகளின் தவறான அடிப்படை போக்குகள் வேகமாக மேலெழுந்து வருகிறது. அது முதலாளித்துவம் இருக்கும் வரையில் ஒரு புதிய மற்றும் பேரழிவுமிக்க உலக யுத்தத்திற்குள் மனிதயினத்தைக் கொண்டு போய் தள்ளும். வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் உலக பொருளாதாரம் மிகமிக நெருக்கமாக ஒன்றோடொன்று பின்னிபிணைந்துள்ள போதினும், இந்த உலக ஒருங்கிணைவு காலாவதியாகிப்போன முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புமுறைக்குள் உள்ள மோதல்களையும், முரண்பாடுகளையும் மட்டுமே தீவிரப்படுத்தி உள்ளது.

இத்தகைய ஆழ்ந்த பதட்டங்கள் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் வெடிப்பார்ந்த வடிவத்தை எடுத்திருப்பதென்பது தற்செயலானதல்ல. இரும்பு தாது, நிலக்கரி மற்றும் கனிம பொருட்கள் போன்ற அதன் பண்டங்களுக்கான ஒரு ஏற்றுமதி சந்தையாக உலகில் வேறெந்த நாடும் சார்ந்திராத அளவிற்கு ஆஸ்திரேலியா சீனாவைச் சார்ந்துள்ளது. அதேநேரத்தில் அதன் சொந்த பிராந்திய மூலோபாய நலன்களுக்கு உத்திரவாதமளிக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ பலத்தையும் அதேயளவிற்கு அது சார்ந்துள்ளது. இந்த பிரச்சினைகளில் எதையுமே பகிரங்கமாக விவாதிக்க முடியாது, முக்கியமாக ஏனென்றால் அவ்வாறு செய்தால் அது அதன் இரண்டும்கெட்டான் என்ற நிலையை இன்னும் சிக்கலாக்குவதுடன், தொழிலாளர் வர்க்கம் முகங்கொடுக்கவுள்ள ஆபத்தை பற்றி அதற்கு எச்சரித்தும்விடும்.

அற்பமான தனிநபர் மோதல் என்பதற்கு அப்பாற்பட்டு, ஆஸ்திரேலிய அரசியல் நெருக்கடியானது யுத்த உந்துதலைத் தீவிரப்படுத்தும் அபாயங்கள் குறித்து உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் செயல்படுவதற்குரிய ஒரு எச்சரிக்கையாக உணரப்பட வேண்டும்; மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிந்துவிட்டு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களின் அரசாங்கங்களை ஸ்தாபிப்பதற்கான பொதுவான போராட்டத்தில் சர்வதேசரீதியில் தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் அவசியமும் உணரப்பட வேண்டும்.