WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
சீனாவிடமிருந்து ஒதுங்கியிருப்பதற்கு பர்மாவிற்கு அமெரிக்கா ஊக்கம் அளிக்கிறது
By
John Roberts
23 February 2012
use
this version to print | Send
feedback
சீனாவுடன் கொண்டிருக்கும் பொருளாதார, மூலோபாய உறவுகளைக் குறைக்கும்
வகையிலும், இராணுவ ஆட்சிக்குழுவுடன் சமரசத்திற்கு உதவும் வகையிலான முயற்சிகளின் ஒரு
பகுதியாகவும்
பர்மா (மியன்மர்) மீது சுமத்தியுள்ளப் பொருளாதார நடவடிக்கைகளை அகற்றுவதற்கான முதல்
தற்காலிக நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது.
அமெரிக்க
வெளிவிவகாரச்
செயலர் ஹில்லாரி கிளின்டன் பெப்ருவரி 6ம் திகிதி பர்மாவின் பொருளாதாரத்தின் மீது
மதிப்பீடுகளை நடத்திக் கொண்டுவரும் உலக வங்கி மற்றும் பிற நிதிய நிறுவனங்களுக்கு
முறையான அமெரிக்க எதிர்ப்பை முடித்துக் கொள்ளும் தள்ளுபடி அறிக்கையில்
கையெழுத்திட்டார். இந்த நடவடிக்கை பர்மா சர்வதேசப் பொருளாதார உதவியைப் பெறும்
திறனுடைய பாதைக்கு வழிவகுக்கிறது.
உலக வங்கியின் துணைத் தலைவர் பமேலா கோக்ஸ் பெப்ருவரி 16ம் திகதி
அவ்வங்கி பர்மிய அரசுடன் மீண்டும் பேச்சுக்களை
“மியன்மரிலுள்ள
வறிய, இடருக்கு உட்படக்கூடியவர்கள் உட்பட எல்லா மக்களுக்கும் நலன்களைக் கொடுக்கும்
சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தருவதற்காக”
நடத்திவருவதாகக் கூறினார். உண்மையில், உலக வங்கியின்
செயற்பட்டியலுடைய நோக்கம் நாட்டை வெளிமுதலீட்டாளர்களுக்கு அதன் மூலப் பொருட்கள்,
குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பைத் திறப்பதுதான்; இவைகள் ஏழைகளுக்கும்
பணக்காரர்களுக்கும் இடையே சமூகப் பிளவை அதிகரிக்கத்தான் செய்யும்.
கடந்ந வெள்ளியன்று ஐரோப்பிய ஒன்றியம் 87 உயர்மட்ட பர்மிய அதிகாரிகள்
மீது இருந்த விசாத் தடைகளை தற்காலிகமாக அகற்றியது; ஜனாதிபதி, துணை ஜனாதிபதிகள்,
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தடைக்கு உட்பட்டிருந்தனர்; கடந்த மாதம் இராணுவ
ஆட்சிக்குழு நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை விடுவித்ததை எதிர்கொண்ட
நடவடிக்கையாகும் இது. முந்தைய வாரத்தில்,
ஐரோப்பிய
ஒன்றியத்தின்
ஆணையர் Andris
Piebalgs,
ஜனாதிபதி
Thein Sein
ஐ
சந்தித்ததோடு,
பர்மாவுக்கு
200
மில்லியன் டாலர் உதவி வளங்க உள்ளதாக அறிவித்தார்.
பெரும்பாலான சர்வதேசப் பொருளாதாரத் தடைகள் 1990 ஆண்டு தேசியத்
தேர்தல்களின் முடிவுகளை இராணுவ ஆட்சிக்குழு பொருட்படுத்தாமல் இருந்ததை அடுத்து
பர்மா மீது சுமத்தப்பட்டன. அத்தேர்தல்களில் எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக லீக் (NLD)
மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. அமெரிக்காவும் ஐரோப்பிய
ஒன்றியமும் ஏற்கனவே பிற பொருளாதாரத் தடைகளை அகற்றுவது என்பது எதிர்க் கட்சிகள்மீது
உள்ள தடைகளைத் தளர்த்துதல், நாட்டில் வடக்கே நீண்டகாலமாகவுள்ள இனப் பிரச்சனைகளை
முடித்தல் இவற்றைப் பொறுத்துத்தான் இருக்கும் என்று தெளிவாக்கியுள்ளன.
ஆனால்
“மனித
உரிமைகளைப்”
பற்றிக் குறிப்பிடுவது ஒபாமா நிர்வாகத்திற்கு அதன் பெரிய நோக்கத்தை
மறைப்பதற்கு ஒரு வசதியான கருவிதான்: அதாவது இராணு ஆட்சிக்குழுவை அதன்
பெய்ஜிங்குடனான நெருக்கமான உறவுகளில் இருந்து பிரிப்பது; பெய்ஜிங்கோ அந்த உறவு
இந்தியப் பெருங்கடலில் இருந்து தெற்கு சீனாவிற்கு நேரடியாகச் செல்லும்
போக்குவரத்து, குழாய்கள் ஆகியவற்றிற்கு மிகவும் முக்கியம் எனக் கருதுகிறது.
பர்மாவில் வாஷிங்டனுடைய இராஜதந்திர முயற்சிகள் ஆசியா முழுவதும் சீனச் செல்வாக்கை
எதிர்ப்பதற்கான பரந்த மூலோபாயத் திட்டம் ஒன்றின் ஒரு பகுதிதான்.
டிசம்பர் மாதம் கிளின்டன் பர்மாவிற்குச் சென்றிருந்தார்—அரைநூற்றாண்டிற்கும்
மேல் அமெரிக்க
வெளிவிவகாரச்
செயலர் மேற்கொள்ளும் முதல் வருகையாகும் அது. ஒரு மாதத்திற்குள் வாஷிங்டன்
முதல்தடவையாக இருபது ஆண்டுகளில் பர்மாவிற்கு ஒரு தூதர் அனுப்பப்படுவார் என்று
அறிவித்தது.
பர்மாவில் ஜனநாயகச் சீர்திருத்தங்கள் என அழைக்கப்படுபவை தன்மையில்
மிகக் குறைவானவை. 2010ல் இராணுவம் 2008ல் இயற்றிய, ஒரு போலி வாக்கெடுப்பின்மூலம்
ஏற்கப்பட்டிருந்த குறைந்தப்பட்ச நெறிகளை உடைய அரசியலமைப்பின்கீழ் நடத்தப்பட்டன.
இந்த வழிவகை இராணுவத்தின் ஆதரவு பெற்ற
Union Solidarity and Development
கட்சிக்கு
வெற்றியைக் கொடுத்ததுடன் பாராளுமன்றத்தில் மொத்த 440இடங்களில் 110ஐ நியமிக்கப்படும்
இராணுவ அதிகாரிகளுக்காக ஒதுக்கியது.
ஒரு முன்னாள் தளபதியான தீன் சீன் கடந்த ஆண்டு ஜனாதிபதியாக
நியமிக்கப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவர் ஆங்சான் சூயுகியி உடன் பேச்சுக்களை
நடத்தும் வழிவகைகளைத் தொடங்கினார், இது அமெரிக்க, ஐரோப்பியச் சக்திகளுக்கு இயைந்து
நடப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது.
அனைவருடைய பார்வையும் இப்பொழுது ஏப்ரல்1ம் திகதி நடக்க உள்ள
தேர்தல்களில் உள்ளது. சூயி கியு, மற்றும் அவருடைய நாட்டின் ஜனநாயக விரோத
அரசியலமைப்பிற்கு எதிர்ப்பைக் கைவிட்ட
NLD
யினரும் தேர்தலில் நிற்கிறார்கள், ஒருவேளை மொத்த 48 இடங்களையும்
கைப்பற்றக்கூடும். சுயு கியி, முன்பு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்ததால்
தடைக்கு உட்பட்டிருந்தார், ஆனால் இப்பொழுது ஆட்சி விதிகளை மாற்றிக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் பர்மாவுடன் உறவுகளை
முன்னேற்றுவிப்பதற்கான நடவடிக்கைகள் தேர்தல் முடிவுகளைப் பொறுத்துத்தான் இருக்கும்
என்று வலியுறுத்தியுள்ளன. சுயு கியி மற்றும்
NLD,
பொருளாதாரத்தின் கணிசமான பகுதிகள்மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும்
இராணுவத்தினால் ஒதுக்கப்பட்ட பர்மிய உயரடுக்கைப் பிரதிபலிக்கின்றனர். பர்மாவை ஒரு
குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு அரங்கமாக மாற்றும் வகையில் வெளிநாட்டு
முதலீடுகளுக்கு
NLD
ஆர்வம் காட்டுகிறது.
எதிர்க்கட்சி மற்றும் இராணுவக்குழு என பர்மிய ஆளும் வர்க்கம்
முழுவதுமே
“அரபு
வசந்தத்தினால்”
அதிர்வில் உள்ளது. அங்கு வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பல ஆட்சிகள் சரிய
வழிவகைகளை ஏற்பட்டன. பர்மாவில்
“அரபு
வகையிலான”
எழுச்சிக்கு எதிராக சுயு கியி எச்சரித்துள்ளார்;
“ஆட்சி
மாற்றம் பேச்சுவார்த்தைகள் மூலம் சமாதானமான முறையில் நடக்க வேண்டும்”
என்று வலியுறுத்தியுள்ளார்.
ஒபாமா நிர்வாகத்தின் செயற்பட்டியலுடன் இணைந்த வகையில்தான் சுயு கியி
உடைய நிலைப்பாடு உள்ளது. அமெரிக்கா தன் கொள்கைகளை முந்தைய புஷ் நிர்வாகம்
விடுக்கும் இறுதி எச்சரிக்கைகளைக் கொடுப்பதில் இருந்து பேச்சுவார்த்தைகளை
நிறுவுவதில் முயல்கிறது. கடந்த டிசம்பர் மாதம் கிளின்டன் வருகை புரிவதற்கு முன் பல
உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் சமரசத்திற்குத் தளம் அமைக்கப் பர்மாவிற்குச்
சென்றிருந்தனர்.
சுயு கியி ஆட்சியுடன் நடத்திய உரையாடலே வெள்ளை மாளிகைக்கு அதன்
பர்மியக் கொள்கை குறித்து இரு கட்சியின் ஆதரவையும் பெற எளிதாயிற்று. கடந்த மாதம்
மூத்த குடியரசுக் கட்சி செனட்டர்களான ஜோன் மக்கெயின் மற்றும் மிட்ச் மக்கோனல்
இருவரும் பர்மாவிற்கு விஜயம் புரிந்தனர். மக்கோனல் விரைவில் பொருளாதாரத் தடைகள்
அமெரிக்காவால் அகற்றப்படும் என்றும் ஆனால் அதற்கான குறிப்பு சுயு கியிவிடம் இருந்து
வரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மிக நெருக்கமான அமெரிக்கப்-பர்மிய பிணைப்புக்களுக்குத் தெளிவான
அடையாளமாக இம்மாதம் முன்னதாக நியூ யோர்க் டைம்ஸில் வெளிவந்த அறிக்கை ஒன்று,CIA
இன்
முன்னாள் தளபதி டேவிட் பெட்ரீயஸ் இந்த ஆண்டு பிற்பகுதியில் பர்மாவிற்குச்
செல்லுமாறு கிளின்டனால் கேட்டுக் கொள்ளப்பட்டார் என்பது உள்ளது. பாங்காக்கின்
Chulalongkom பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியாளரான
ரோபர்ட் பிட்ஸ் அத்தகைய பயணம் விரிவான, ஆழ்ந்த விவாதங்களை அனுமதிக்கும் என்றார்.
“அவர்கள்
வெளிவிவகாரச்
செயலர் கிளின்டனால் முடியாத சில தொடர்பு முறைகளை நிறுவமுடியும்”
என்றார் அவர்.
அமெரிக்காவும் மியன்மரும் ஒப்புமையில் நெருக்கமான இராணுவ,
உளவுத்துறை ஒத்துழைப்பை 1988 வரை கொண்டிருந்தன; அப்பொழுது இராணுவ ஆட்சியானது
மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் வெகுஜன எழுச்சியை நசுக்கியது.
CIA
ஆனது பர்மியத் தளபதிகளுடன் கொள்ளும்
“ஆழ்ந்த
உரையாடல்”
முதலில் பழைய தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்துவதிலும், சீனச்
செல்வாக்கை வலுவிழக்கச் செய்வதிலும் இயக்கம் பெறும். இதையொட்டி அப்பிராந்தியம்
முழுவதும் சீனாவின் நிலைப்பாட்டைக் குறைமதிப்பிற்குட்படுத்தும் நடைமுறைகள் தீவிரமாக
ஏற்படும். |