சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Afghans besiege US bases in Koran protests

குர்ரான் எதிர்ப்புக்களை ஒட்டி அமெரிக்கத் தளங்களை ஆப்கானியர்கள் முற்றுகையிடுகின்றனர்

By Bill Van Auken
24 February 2012

use this version to print | Send feedback

வியாழன் அன்று மூன்றாவது நாளாக குர்ரான் பிரதிகளை அமெரிக்கத் துருப்புக்கள் எரித்தது குறித்த எதிர்ப்புக்கள் பெருகியுள்ள நிலையில், அமெரிக்க, நேட்டோ தளங்களைக் கூட்டங்கள் முற்றுகையிடுகையில், இரண்டு அமெரிக்க சிப்பாய்களும் குறைந்தப்பட்சம் 15 ஆப்கானியர்களும் கொல்லப்பட்டனர்.

மூன்று நாட்களாக நடக்கும் எதிர்ப்புக்கள் ஆப்கானிஸ்தான் முழுவதும் வன்முறை மோதல்களைக் கண்டுள்ளன; பல பகுதிகளிலும் மக்கள் நெடுஞ்சாலைகளை தடைக்கு உட்படுத்தி, அரசாங்க நிலையங்களை தாக்கித் தீ வைப்பதுடன், கிழக்கு நகரான ஜலாலாபாத்தில் நேட்டோ எரிபொருள் டிரக்குகளையும் தாக்கி தீ வைத்தனர்.

வியாழன் அன்று சீற்றத்துடன் ஏராளமான ஆப்கானியர்கள் கிழக்கே உள்ள நங்கர்ஹர் மாநிலத்தில் ஒரு இராணுவத் தளத்தைத் தாக்க முயல்கையில், இரு அமெரிக்க சிப்பாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மற்றும் நான்கு பேர் காயமுற்றனர். சீருடை அணிந்த ஆப்கானிய சிப்பாய் ஒருவர் அமெரிக்கத் துருப்புக்கள்மீது சுட்டுவிட்டு, ஏராளமான எதிர்ப்பாளர்களிடையே ஓடி மறைந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

வெளியே அதே தளத்தில் நிலையத்திற்குள் கட்டாயமாக நுழைய முற்பட்ட எதிர்ப்பாளர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் சுட்டதில் இரு ஆப்கானிய குடிமக்கள் கொல்லப்பட்னர். 12 வயதுச் சிறுவன் ஒருவர் உட்பட மற்றும் இருவர் அதே மாநிலத்தில் பாட்டிக் கோட் மாவடத்தில் கொல்லப்பட்டனர் என்று ஆப்கானிஸ்தானின் Pajhwok செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

வெளிநாட்டு ஆக்கிரமிப்புச் சக்திகளை தாக்குமாறு ஆப்கானிய துருப்புக்களுக்கும் பொலிசாருக்கும் ஆப்கானிய தாலிபன்கள் பகிரங்கமாக முறையிட்டதை அடுத்து இந்த அமெரிக்கத் துருப்புக்கள் கொலையுண்டமை நடந்துள்ளது. அந்த அறிக்கை, காபூல் ஆட்சியின் பாதுகாப்புக் கருவியில் உள்ள அனைத்து இளைஞர்களும் தங்கள் மத, தேசியக் கடமையை நிறைவேற்றுமாறு அழைப்புவிடப்படுகிறது... அயல்நாட்டு மாற்று மத படையெடுப்பாளர்கள்மீது துப்பாக்கிகளைத் திருப்பவும் எனக் கூறியது.

அருகே இருக்கும் லாக்மன் மாநிலத்தில், தங்கள் தளத்தை முறியடிக்க முயன்ற கற்கள் வீசிய எதிர்ப்பாளர்களைத் துரத்த ஆப்கானியத் துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது குறைந்தப்பட்சம் ஒரு குடிமகனாவது கொல்லப்பட்டார்.

மத்திய ஆப்கானிய மாநிலமான உருஸ்கன்னில், குறைந்தப்பட்சம் மூன்று எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர்; 12 பேர் காயமுற்றனர்; பாதுகாப்புப் பிரிவுகளுக்கும் ஆயுதமேந்திய எழுச்சியாளர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிப் போரின் நடுவில் அகப்பட்டுக் கொண்டதால் இது ஏற்பட்டது என்று ஆப்கானிய அதிகாரிகள் விளக்கினர்.

வடக்கு பக்லான் மாநிலத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை எதிர்க்கும் வகையில் கூட்டம் பொலிசைத் தாக்கியபோது ஒரு பொலிஸ்காரர் கொலையுண்டார்.

இந்த, இன்னும் பிற இடங்களிலும், ஆர்பாட்டக்காரர்கள் அமெரிக்காவிற்கு மரணம், கர்சாய் வீழ்க என்ற கோஷங்களை எழுப்பினர்; இது அமெரிக்க ஆதரவு காபூல் ஆட்சியின் ஜனாதிபதி ஹமித் கர்சாயைக் குறிப்பதாகும்.

புதன் அன்று நாடுமுழுவதும் படர்ந்த ஆர்ப்பாட்டங்களின்போது குறைந்தப்பட்சம் எட்டு ஆப்கானியர்கள் கொலை செய்யப்பட்டனர். இருபுறத்திலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்றனர்.

வெள்ளியன்று நாட்டின் மசூதிகளில் பிரார்த்தனைக் கூட்டங்களுக்குப் பின் கூடுதலான வெடிப்புக்களைக் காணக்கூடும் என்ற அச்சங்கள் ஆக்கிரமிப்புப் படைகள் மற்றும் கர்சாய் ஆட்சியிடையே உள்ளன. காபூலிலும் இன்னும் பிற இடங்களும் உள்ள அமெரிக்கத் தூதரகம், அது தொடர்பான நிலையங்கள் மூடப்பட்டு எவரும் உள்ள நுழையவோ, வெளியே செல்லவோ, அனுமதிக்கப்படவில்லை.

குர்ரான் மற்றும் பிற இஸ்லாமிய மத நூல்களின் பிரதிகளை குப்பையுடன் எரிப்பதற்காக அமெரிக்கத் துருப்புக்கள் அமெரிக்க பக்ரம் விமானத்தளத்தில் உள்ள எரிக்கும் இடத்தில் குவித்ததைக் கண்டபோது நாடு முழுவதும் இந்தக் கிளர்ச்சி பெரும் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.

இப்பிரதிகள் பக்ரம் சிறையில் இருந்த ஒரு நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை; அங்கு அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் தாலிபன் இன்னும் எதிர்ப்புப் படைகள் பலவற்றின் உறுப்பினர்கள் எனச் சந்தேகப்படுபவர்களைக் காவலில் வைத்துள்ளன. CNN இடம் ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி அவற்றுள் சில தீவிரவாதக்கருத்துக்கள் இருந்ததாக நம்பப்பட்டதால், தீவிரிவாத தொடர்புகளைப் பறிமாற்றிக் கொள்ளப் பயன்பட்டன என்று நம்பப்பட்டதால், அவை எரிக்க எடுத்துச் செல்லப்பட்டன என்று கூறினார்.

ஒபாமா நிர்வாகமும் பென்டகனும் நெருக்கடியைக் குறைத்துக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன; ஜனாதிபதி மன்னிப்பு கோரியதுடன், உயர்மட்ட இராணுவத் தளபதி ஆப்கானிஸ்தானத்தில் உள்ள அனைத்து அமெரிக்கப் படைகளும் குர்ரான் இன்னும் பிற மத நூல்களைக் கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்படுவர் என்று கூறினார்.

நடந்த நிகழ்வு குறித்து என் ஆழ்ந்த வருத்தத்தை நான் தெரிவிக்க விரும்புகிறேன். உங்களுக்கும் ஆப்கானிய மக்களுக்கும் என் மனப்பூர்வ மன்னிப்புக்களை தெரிவிக்கிறேன் என்று ஒபாமா வியாழன் அன்று அமெரிக்கத் தூதர் ரியன் க்ரோக்கர் கர்சாயிடம் கொடுத்த கடிதத்தில் எழுதியுள்ளார். இத்தவறு தெரியாமல் நடந்துவிட்டது; உரிய நடவடிக்கைகளை இதுபோல் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு எடுப்போம், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கையும் எடுப்போம். என்று அதில் கூறப்பட்டது.

ஆனால், சாதாரண ஆப்கானியர்களால் இத்தகைய மன்னிப்புக்கள் பொருளற்றதையும் விட மோசமாகத்தான் கருதப்படுகிறது. சமீபத்திய குர்ரான் எரிப்பு அமெரிக்கத் தலைமையின்கீழ் நாடு அடக்கப்பட்டு, அவமானப்படுவதில் மற்றொரு நிகழ்ச்சி என்றுதான் காணப்படுகிறது. கடந்த மாதம்தான் அமெரிக்க மரைன்கள் கொல்லப்பட்ட ஆப்கானியர்கள்மீது சிறுநீர் கழித்த வீடியோ காட்சி வெளிவந்ததை அடுத்து இது வந்துள்ளது; அந்நிகழ்வும் எதிர்ப்புக்களைத் தூண்டியது. குர்ரானை இழிவுபடுத்தியது முன்பும் இரு தீவிர எதிர்ப்புக்களைத் தூண்டியுள்ளது.

 

இது குர்ரானை அகௌரவப்படுத்தியது மட்டும் அல்ல, நம்மில் இறந்தவர்கள், நம் குழந்தைகள் கொலை செய்யப்படுவது குறித்தும்தான் என்று 60 வயதான மருப் ஹோடக்கூறினார்; காபூலுக்கு வெளியே நடந்த எதிர்ப்புக்களில் கலந்து கொண்ட அவர் நியூ யோர்க் டைம்ஸிடம் தெரிவித்தது: அவர்கள் தங்கள் தவறுகளை எப்பொழுதும் ஒப்புக்கொள்கின்றனர். எங்கள் குர்ரானை எரித்து, பிறகு மன்னிப்புக் கேட்கிறார்கள். நீங்கள் எங்கள் புனித நூலை அவமதித்து, எங்கள் நிரபராதியான குழந்தைகளைக் கொன்றபின், ஒரு சிறிய மன்னிப்புக் கேட்பதில் அர்த்தமில்லை.

புதன் அன்று எதிர்ப்புக்கள் பரவிக் கொண்டிருக்கையில், நங்கர்ஹர் மாநில அதிகாரிகள், நேட்டோ ஹெலிகாப்டர் ஒரு பள்ளியைத் தாக்கியது என்று தெரிவித்தனர். இன்று காலை ஒரு பள்ளி நேட்டோ ஹெலிகாப்டரால் தாக்கப்பட்டது. ஒன்பது பெண் குழந்தைகளும், பள்ளியின் வேலையாளும் காயமுற்றனர். என்று மாநில அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். குறைந்தப்பட்சம் ஐந்து பள்ளி மாணவிகளாவது இன்னும் மருத்துவ மனையில் உள்ளனர்.

கடந்த வாரம் பெப்ருவரி 8ம் திகதி வான் தாக்குதல் வடகிழக்கு கபிச மாநிலத்தில் எட்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டது என்று ஒப்புக் கொள்ளப்பட்டபின், இத்தாக்குதல் வந்துள்ளது.

இப்படித் தொடர்ந்த கொலைகளோடு, ஆப்கானிஸ்தானில் வீழ்ச்சியடையும் சமூக நிலைமைகளும் வெகுஜன எதிர்ப்பு, சீற்றம் ஆகியவற்றிற்கு எரியூட்டி, குர்ரான் ஆர்ப்பாட்டங்களாக வெளிப்பட்டுள்ளன.

வியாழன் அன்று சர்வதேச பொதுமன்னிப்புச் சபை அரைமில்லியன் ஆப்கானியர்கள் எதிர்கொண்டிருக்கும் மோசமான நிலைமையை விவரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அமெரிக்கத் தலைமையிலான போரை ஒட்டி அவர்கள் வீடுகளை விட்டு நீங்கவும், மற்றும் நகர்ப்புறச் சேரிகளில் இடர்ப்படும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் குளிரில் உறைந்துபோகும், நெரிசலான நிலைமையில் வாழ்கின்றனர், பட்டினியின் விளிம்பில் உள்ளனர்; அதே நேரத்தில் ஆப்கானிய அரசாங்கம் அவர்களுக்கு உதவி ஏதும் செய்யாமல் வேறுபுறம் பார்க்கிறது என்று சர்வதேச பொதுமன்னிப்புச் சபையின் ஆப்கானிய ஆய்வாளர், ஹொரியா மோஸடிக், கூறினார். சமீபத்திய வாரங்களில் காபூலைச் சுற்றி உள்ள தற்காலிக முகாம்களில் 28 குழந்தைகள் பட்டினியால் அல்லது உறையவைக்கும் குளிரினால் இறந்துவிட்டனர்.

ஒபாமா நிர்வாகத்திற்கு மிகவும் இடரளிக்கும் நேரத்தில் இந்நாடு தழுவிய எதிர்ப்புக்கள் வந்துள்ளன; நிர்வாகம் கர்சாய் ஆட்சியுடன் 2014 முடிவில் முறையாக நேட்டோப் படைகள் பின்வாங்கிய பின்னரும் அமெரிக்கத் துருப்புக்கள் அங்கு நீடிக்க அனுமதிப்பது குறித்து உடன்பாட்டை பேச்சுக்கள் மூலம் காண முற்படுகிறது.

அசோசியேட்டட் பிரஸ் கூற்றுப்படி, வாஷிங்டன் மற்றும் கர்சாய் ஆட்சி ஆப்கானிய வீடுகளில் அமெரிக்க சிறப்புப் படைகள் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்துவது மற்றும் அமெரிக்கா நடத்தும் சிறைகளை ஆப்கானிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தல் குறித்த பிரச்சினைகளைத் தனித்தனியே விவாதிக்க வேண்டும் என்ற உடன்பாட்டை பரிசீலிக்கின்றன; இதையொட்டி நாட்டில் தங்களைத் தொடர்ந்து வைத்துக் கொள்ள அமெரிக்க இராணுவத்திற்கு அனுமதி கொடுக்கும் பரந்த உடன்பாடு கையெழுத்திடப்படலாம்.

ஆக்கிரமிப்பு மற்றும் அதன் கைப்பாவை ஆட்சிக்கு எதிராக அதிகரித்த சீற்றத்தைத் தூண்டியுள்ள இரவுத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் அல்லது ஆப்கானியத் தலைமையில் நடத்தப்பட வேண்டும் என்று கர்சாய் கோரியுள்ளார். அமெரிக்க இராணுவக் கட்டுப்பாடு இரண்டில் எதுவும் பரிசீலிப்பதற்கு இல்லை என்று மறுத்து, சிறப்புப் படைப் பிரிவுகள் நடவடிக்கைகள் மற்றும் வான் தாக்குதல்களைத் தொடர, அதவும் முறையான படைகள் நாட்டில் இருந்து வெளியேறியபின்னும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

ஆப்கானியர்கள் அமெரிக்கர்கள் நடத்தும் சிறைகளை நடத்தும் திறன் அற்றவர்கள் என்றும் அமெரிக்கர்கள் கூறியுள்ளனர்; அங்கோ காவலில் உள்ளவர்கள் சித்திரவதைக்கு உட்படுவதாகப் புகார் கூறியுள்ளனர். பக்ராமில் உள்ள நிலையத்தைத் தாங்கள் நடத்தினால் குர்ரான் எரிப்புக்கள் குறித்த தற்போதைய நடவடிக்கை ஏற்பட்டிருக்காது என்று ஆப்கானிய ஆட்சியிலுள்ள அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கர்சாயும் அவருடன் இருப்பவர்களும் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பின் மிக மோசமான சில தவறுகளுக்கு முடிவு கட்ட விரும்புகையில், அது மக்கள் சீற்றத்தை வலுப்படுத்தி ஆப்கானிய அமெரிக்க எதிர்ப்பாளர்களை வலுப்படுத்தும் என்ற கருத்தைக் கொண்டிருந்தாலும்கூட, அவர்களுடைய ஆட்சியே அமெரிக்கப் படைகள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டால் விரைவில் தூக்கி எறியப்படும் என்பதையும் அறிவர்.

வாஷிங்டன் மற்றும் கர்சாய் ஆட்சி இரண்டும் மே மாதம் சிக்காகோவில் நடக்க இருக்கும் நேட்டோ உச்சமாநாட்டிற்கு முன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் தொடர்ந்து இருப்பது பற்றிய உடன்பாட்டில் தாங்கள் கையெழுத்திட விரும்புவதாகக் குறிப்பைக் காட்டியுள்ளன.