WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
கிரீஸ்
கிரேக்க
ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு இன்னும் வேதனை
ஐரோப்பிய நெருக்கடிக்கு
முடிவு இல்லை
By
Julie Hyland
22 February 2012
use
this version to print | Send
feedback
130 பில்லியன் ஈரோக்கள் கடன் தொகுப்பு என்று யூரோப் பகுதியின்
மந்திரிகள் ஒப்புக்கொண்டிருப்பது கிரேக்கத்தை திவால்தன்மையிலிருந்து காப்பதற்கு
ஏதும் செய்துவிடவில்லை. தவிர்க்க முடியாமல் இது ஒத்திப்போடத்தான் செய்துள்ளது; அதே
நேரத்தில் ஐரோப்பிய, சர்வதேச நிதிய மூலதனம் கிரேக்கத்தை தங்கள் கண்டம் முழுவதும்
செயல்படுத்தவுள்ள மிருகத்தனமான சிக்கன நடவடிக்கையான நிலத்தை எரிக்கும் கொள்கைக்கு
ஒரு சோதனைக் களமாகத்தான் பயன்படுத்துகின்றன.
இதுவரை இன்னமும் எதுவும் உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. திட்டத்தின்
கீழ் தனியாரிடம் உள்ள கிரேக்கக் கடன் பத்திரங்கள் தங்கள் தன்னார்வ
”மறுகட்டமைப்பில்”
பங்குகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவர், கிட்டத்தட்ட 53 சதவிகிதம் இழப்புக்களை
ஏற்குமாறு கோரப்படுவர். மேலும் திங்கள் வந்துள்ள பொதி முற்றிலும் இன்னும் 3
பில்லியன் ஈரோக்கள் செலவுக் குறைப்புக்களைச் செய்வதைத்தான் முன்னிபந்தனையாகக்
கொண்டுள்ளது.
“ஒரு
உரிய நேரத்தில், திறமையாக”
இது செய்யப்பட்ட பின்தான் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து கடன் உதவி
வரும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக கிரேக்கம் மந்தநிலை என்னும் சகதியில்
ஆழ்ந்திருக்கும் நிலையில் இக்கோரிக்கை வந்துள்ளது; கிரேக்க அரசியல் ஸ்தாபனமும்
“முக்கூட்டும்”
(ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி)
வலியுறுத்திச் செயல்படுத்தும் சிக்கன நடவடிக்கைகளுக்கு இடையே இக்கோரிக்கை
வெளிவந்துள்ளது.
தொழிலாளர்கள் ஒரு பெரும் சமூகப் பேரழிவில் தத்தளிக்கின்றனர்.
வேலையின்மை 21 சதவிகிதத்தைவிட அதிகமாகிவிட்டது, இளைஞர் வேலையின்மை 50 சதவிகிதம்
என்று உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 150,000 வேலைகள் பொதுத்துறையில் நீக்கப்பட
உள்ளன, அதே நேரத்தில் சமூகநலச் செலவுகள் மற்றும் ஓய்வூதியங்களும் பெரிதும்
குறைக்கப்பட்டுவிட்டன. கிரேக்கத்தில் ஊதியங்கள் 30 சதவிகிதம் குறைந்துவிட்டன.
தற்பொழுது குறைந்தபட்ச ஊதியம் 22 சதவிகிதம், இளம் தொழிலாளர்களுக்கு 35 சதவிகிதமெனக்
குறைக்கப்பட்டுவிட்டது. அப்படி இருந்தும்கூட இப்பொழுது ஐரோப்பிய ஒன்றிய, சர்வதேச
நாணய நிதிய அதிகாரிகள் இன்னும் ஊதியங்கள் குறைக்கப்பட்டால்தான்
“கிரேக்கப்
போட்டித்தன்மை”
மீட்கப்படமுடியும் என ஒப்புக்கொள்கின்றனர்.
நெருக்கடியின் கடுமையான தன்மையையொட்டி தொழிலாளர்கள் பல மாதங்களாக
ஊதியமின்றி உழைக்கின்றனர்; அதே நேரத்தில் வறுமை, வீடற்ற நிலை ஆகியவைகள்
உயர்ந்துவிட்டன. கிரேக்க உற்பத்தியாளர்கள் இறக்குமதி செய்யும் மூலப்பொருட்களுக்கு
கடன் கிடைக்காததால் ரொக்கம்தான் கொடுக்கின்றனர்.
ஆயினும்கூட மற்றும் ஒரு 20 பில்லியன் ஈரோக்கள் கிரேக்க வங்கிகளுக்கு
மறுமூலதனம் அளிக்கத் தேவைப்படுகிறது
—இது
மொத்தத்தை 50 பில்லியன் ஈரோக்கள் என்று, நாட்டில் இருந்து மூலதனம் வெளியேறுவதால்
ஏற்படுத்தியுள்ளது. தனியார்மயத் திட்டங்களை மிகப் பெரிய அளவில் விரிவாக்கும்
திட்டமும் உள்ளது. இவை 5 முதல் 35 வரை என இருக்கும்; இதன் பொருள் அரசாங்க
நிலங்களும் கட்டிடங்களும் மொத்தமாக விற்பனைக்கு வரும் என்பதாகும்.
இதைச் செயல்படுத்துவதற்கு, கிரேக்கப் பொருளாதாரத்தின் மீதான
கட்டுப்பாடு முற்றிலும் முக்கூட்டின் கரங்களில் கொடுக்கப்பட்டுள்ளது; பிபிசியின்
கவின் ஹெவிட் இதை
“கிரேக்க
இறைமையில் அவமானகரமான, முன்னோடியில்லாத தலையீடு”
என்று விளக்கியுள்ளார்.
ஐரோப்பிய பொருளாதார, நிதி விவகாரங்களுக்கான ஆணையாளரான ஒல்லி ரெஹ்ன்
ஒரு தனிக் கணக்கு சமீபத்திய பிணை எடுப்புப் பொதிக்காகத் தோற்றுவிக்கப்படும் என்பதை
உறுதிப்படுத்தினார். இது வங்கிகளுக்கு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டிய கடன் மற்றும்
வட்டி ஆகியவைகள் அரசாங்கப் பணிகள், ஊதியங்கள் ஆகியவற்றிற்கு நிதியளிப்பதை விட
முன்னுரிமை பெறுவதை உத்தரவாதப்படுத்தும்.
கடன் ஆய்வாளர்கள்
“எண்ணிக்கை
விரிவாக்கப்பட்டு, நிரந்தரமாக இருத்தலும்”
ஏதென்ஸில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். இது கோரிக்கைகளை செயல்படுத்துவது நடைமுறை
எனச் செய்துவிடும். இதற்கு டச்சு நிதிமந்திரி
Jan
Kees de Jager
தலைமை
தாங்குவார்; ஏனெனில் முக்கூட்டுத்தான் கிரேக்கத்திற்குள்
“நிரந்தர
நிலைப்பாட்டை”
கொடுத்துள்ளது.
நிதிய மூலதனத்தின் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த, ஐரோப்பிய ஒன்றிய
மந்திரிகள் கிரேக்க அரசியலமைப்பு சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த வகை செய்வதற்கு
மறுபடி எழுதப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். இப்பொழுதுள்ள நிலையில், அரசியலமைப்பு
இன்னும் ஓராண்டு காலத்திற்கு திருத்தப்பட முடியாது; ஆனால் புதிய ஜனநாயகம்,
PASOK,
மற்றும் தீவிர வலது
LAOS
கட்சி ஆகியவற்றின் இடைக்காலக் கூட்டணி அரசு அத்தகைய திருத்தத்திற்கு
ஒப்புதல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும்.
திங்களன்று
PASOK
யைச் சேர்ந்த முன்னாள் பிரதம மந்திரி ஜோர்ஜியோஸ் பாப்பாண்ட்ரூ
மற்றும் அவருக்குப் பின் நியமிக்கப்பட்ட கூட்டணியின் பிரதம மந்திரி, பொருளாதார
வல்லுனர் லூகாஸ் பாப்படெமோஸும் எழுத்து மூலமாக ஐரோப்பிய ஒன்றிய மந்திரிகளுக்கு,
இப்பொழுது ஏப்ரல் மாதம் நடத்தப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள்
எப்படி இருந்தாலும், செலவினக் குறைப்புக்களை செயல்படுத்துவதாக கொடுத்துள்ளனர்.
பாராளுமன்றம் சமீபத்திய பொதிக்கு இன்று வாக்களிக்கும்போது ஒப்புதல் கொடுக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் கொடுத்த ஒப்புதல் ஒரு இரகசிய அறிக்கை, முக்கூட்டின்
பகுத்தாய்வாளர்கள் இலக்குகள் அடையப்படக்கூடியவை, மிக நம்பகத்தன்மை உடைய
கணிப்பின்படிகூட, வெட்டுக்கள் மற்றும் கோரிக்கைகள் இன்னும் அதிக கடன்களையும்
பொருளாதார நெருக்கடியையும்தான் தோற்றுவிக்கும் என்று கூறியபின் வந்துள்ளது.
அனைவருக்குமே இப்படித்தான் நடக்கும் என்று தெரியும். சமீபத்திய பிணை
எடுப்புப் பொதி பரந்த முறையில்
“ஒரு
தற்கொலை உடன்பாடு”
என்றும் இதையொட்டி கிரேக்க மக்கள் இன்னும் கூடுதலான வறிய நிலையை அடைவர், அதே
நேரத்தில் முக்கூட்டு
“முறையான
தவறு பற்றிய”
அவசர திட்டத்தைத் தயாரிக்கிறது என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த முக்கிய நாள்
D-Day,
மார்ச் 20 ஐ ஒட்டி இருக்கலாம் என்று பலர் முன்கணிக்கின்றனர், அப்பொழுது கிரேக்கம்
14.5 பில்லியன் ஈரோக்கள் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதற்குள் பெப்ருவரி
G20
மற்றும் ஓர் ஐரோப்பிய ஒன்றிய மார்ச் 1ம் திகதி உச்சிமாநாடு பல
ஐரோப்பிய மீட்பு நிதிகளின் திறனை இருமடங்காக்க ஒப்புக் கொண்டிருக்கும். இதையொட்டி
கண்டத்தின் நலிந்த பொருளாதாரங்கள், வங்கிகள் முழுவதும் பரவக்கூடிய ஒரு நிதிய
நெருக்கடி பற்றிய இடர் குறைந்துவிடும்.
அரசாங்கக் கட்சிகளும் முக்கூட்டும் இப்பொழுது இந்த வெடிப்புத்தன்மை
உடைய சமூக அரசியல் அழுத்தங்கள் கிரேக்கத்தில் பெருகிவருவதைக் குறைப்பது, அவைகள்
ஐரோப்பா முழுவதும் வெடித்து படர்வதைத் தடுப்பது என்ற சிந்தனையில் மூழ்கியுள்ளன.
கசியப்பட்டுள்ள அறிக்கை,
“கிரேக்க
அதிகாரிகள் கட்டுமான சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை சரிசெய்தலையும்
எதிர்பார்க்கும் விரைவுத்தன்மையில் அளிக்க முடியாது, ஏனெனில் ஊதியக்
குறைப்புக்களும், தனியார்மயமாக்கலும்
“வலுவான
எதிர்ப்பு நலன்கள் நிறைந்த பிரிவுகளில் இருந்து ஏற்படக்கூடும்”
என்று எச்சரித்துள்ளது—
இது தொழிலாள வர்க்கத்தின் பெருகும் சீற்றம் மற்றும்
போராளித்தனத்தைப் பற்றிய குறிப்பு ஆகும்.
பெயரிடப்படாத கிரேக்க அதிகாரி முக்கூட்டைப் பற்றிக் கூறியதை
கார்டியன் மேற்கோளிட்டுள்ளது:
“சிலியில்
பினோசே செய்ததை நாங்கள் செய்ய வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர், அதாவது
ஆட்சிப்பணி ஊழியர்களை அகற்றிப் பல வேதனைதரும் நடவடிக்கைகளை ஒரே நாளில் எடுக்க
வேண்டும் என்று... நாம் ஜனநாயக ஆட்சியில் இல்லாவிட்டால், அதைச் செய்யமுடியும்.
உண்மை என்னவென்றால், மக்கள் விடையிறுப்பைக் காட்டினால், அவர்கள் எதிர்ப்பர்,
எனவேதான் நாம் இவற்றை ஒரே நாளில் செய்யமுடியாது.”
செப்டம்பர் 11, 1973ல் நடைபெற்ற அமெரிக்க ஆதரவுடைய இராணுவ ஆட்சி
மாற்றம் ஜனாதிபதி சால்வடோர் அலெண்டேயின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து
தளபதி அகஸ்டோ பினோஷேயை பதவியில் இருத்தியது. இந்த பாசிச-இராணுவச் சர்வாதிகாரம்
வாஷிங்டன் ஆதரவு கொடுத்திருந்த, மில்டன் ப்ரீட்மனுடைய
”சிகாகோ
சிறுவர்கள் வழிநடத்திய
“அதிர்ச்சி
வைத்தியம்”
ஒன்றைச் செயல்படுத்தியது. இது உலகம் முழுவதும் நிதியக் கொள்கைகள்
சுமத்தப்படுவது, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களின் அழிக்கும் தளம் உடையதாக, மறு
தசாப்தத்தில் நடந்ததற்கு தொடக்கமாயிற்று.
முக்கூட்டின் கொள்கைகள் அதே செயற்பட்டியலை ஐரோப்பாவில் சுமத்தும்
நோக்கத்தைக் கொண்டுள்ளது; அதற்காக பொருளாதார நெருக்கடியை ஒரு சமூக
எதிர்ப்புரட்சிக்காக பயன்படுத்துகிறது; இதற்குத்தான் கிரேக்கம் ஒரு சோதனைக்கூடமாகச்
செயல்படுகிறது.
இத்தகைய தாக்குதல் ஜனநாயக வழிவகைகளின்படி சாதிக்கப்பட முடியாது.
சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் கூட்டாட்சிக் கட்சிகளுக்கான ஆதரவு மிக மிகக்
குறைந்துவிட்டது, புதிய ஜனநாயகக் கட்சிக்கு 19 சதவிகிதம்,
PASOK
க்கு13 சதவிகிதம் மற்றும்
LAOS
க்கு 5 சதவிகிதம் என்றுதான் காட்டியுள்ளது.
இக்காரணத்தை ஒட்டித்தான், ஜேர்மனிய நிதிமந்திரி வுல்ப்காங் ஷௌபிள
கிரேக்கத்தில் தேர்தல்கள் ஒத்திப்போடப்பட வேண்டும்,
“தொழில்நுட்பவாத”
நிர்வாகத்தில் முழுமையாக தேர்ந்தெடுக்கப்படாத நபர்கள் இருக்க
வேண்டும், இது வங்கிகள் மற்றும் ஊகவணிகத்தினர் சொல்லுக்கேற்ப நேரடியாகச் செயல்பட
வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர்களுடைய கவலை ஒரு தேர்தல் ஆளும் கட்சிகளுக்கும் அவற்றின் சிக்கன
நடவடிக்கைகளுக்கும் உறுதியான மூக்குடைப்பைக் கொடுத்து ஆளும் உயரடுக்கிற்கு எந்த
ஆதரவு இல்லை என்பதை அம்பலப்படுத்திவிடும் என்பதுதான். இது கிரேக்கத்தில் சமூக
எதிர்ப்பிற்கு தைரியம் கொடுக்கும் என்பது மட்டும் இல்லாமல், ஐரோப்பாவில் மற்ற
இடங்களிலும் கொடுக்கும்; ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லில் மக்கள் எதிர்ப்புக்கள்
சுமத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளன. |