WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
ஐ.நா. வாக்கெடுப்பு சிரியாவில் இராணுவத் தலையீட்டிற்கு உதவும்
ஒரு படியாகக் காணப்படுகிறது
By Chris Marsden
18 February 2012
se
this version to print | Send
feedback
“மனிதாபிமான”
அடித்தளத்தில் சிரிய ஜனாதிபதி பதவியிறங்கவேண்டும் என்ற அரபு லீக்கின் அழைப்பிற்கு
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் ஆதரவு இராணுவ தலையீட்டிற்கு ஒரு படி நெருக்கமாகின்றது.
17பேர்
வாக்களிக்காது,
132-12
என
ஆதரவாக வாக்களிக்கப்பட்டது சட்டரீதியானது இல்லாவிடினும்,
ஆனால் ரஷ்யா மற்றும் சீனா பாதுகாப்புச் சபையில் தடுத்துவிட்ட அரபு லீக்கின்
முன்மொழிவான ஆட்சிமாற்றத்திற்கு ஒரு ஐ.நா
ஆதரவை கொடுக்கிறது.
மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கிலிருந்து வந்த எதிர்ப்பிற்கு
விடையிறுக்கும் வகையிலும், மத்திய கிழக்கில் ஈரானின் நட்பு நாடு என்றுள்ள மூலோபாய
நிலைப்பாடு இருக்கையிலும், வாஷிங்டன், பாரிஸ் மற்றும் லண்டன் ஆகியவை கவனத்துடன்
செயல்பட வேண்டும். ஆனால் தலையீட்டுக்கு இப்பொழுது
“அரபு
முகம்”,
ஒபாமா நிர்வாகம் விரும்பியபடி கொடுக்கப்பட்டுள்ளது; மேலும் ஐ.நா. கருத்து இதற்கு
ஒரு அத்தி இலை நெறியையும் கொடுக்கிறது; அதேபோல் லிபியாவிற்கு எதிராக நடத்தப்பட்ட
போரின் கீழ் வெளிவந்த
“பாதுகாக்கும்
பொறுப்பு”
என்னும் கோட்பாட்டிற்கு உட்குறிப்பான அதிகாரத்தையும் அளிக்கிறது.
நேரடி ஈடுபாடு என்பதற்குப் பதிலாக, பல அரசியல் நபர்கள்,
செய்தித்தாள்கள் மற்றும் கொள்கை இயற்றும் அமைப்புக்கள் எதிர்த்தரப்பான சுதந்திர
சிரிய இராணுவத்திற்கு ஆயுதங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று வாதிடுவது
“இடைப்பட்ட
பகுதிகள்”,
“மனிதாபிமானத்
தளம்”
ஆகியவற்றை அறிவிப்பதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளாக கருதப்படுகின்றன.
இதையொட்டி நேட்டோ தாக்குதல்கள் நடைபெறும், துருக்கி மற்றும் வளைகுடா நாடுகள் என்று
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளூர் பதிலிகள் முன்வைக்கப்படும்.
புதனன்று வெளியுறவு மந்திரி அலன் யூப்பே பிரான்ஸ் ஏற்கனவே ஒரு புதிய
பாதுகாப்புச் சபைத் தீர்மானம் சிரியா பற்றி இயற்ற ரஷ்யாவுடன் பேச்சுக்கள்
நடத்தப்படுவதாகவும், அதன் நோக்கம் மனிதாபிமான இடைவழிகளை தோற்றுவித்தல் என்றும்
கூறினார்.
“மனிதாபிமான
இடைவழிகள்
என்னும் கருத்து, முன்பு நான் அரசாங்கம் சாரா அமைப்புக்கள் அயோக்கியத்தனமான
படுகொலைகள் நடக்குமிடத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று முன்வைத்த திட்டங்கள்
பாதுகாப்புச் சபையில் விவாதிப்பதற்கானவை”
என்று அவர் பிரான்ஸ் இன்போ வானொலியிடம் கூறினார்.
அமெரிக்க செனட்டில் ஒரு இரு கட்சித் தீர்மானம் வெள்ளியன்று ஒபாமா
நிர்வாகம் சிரிய எதிர்த்தரப்பிற்கு
“கணிசமான
பொருள்சார் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை”
அளிக்க வேண்டும் என்ற அழைப்புவிடுத்து, இயற்றப்பட்டது. பெப்ருவரி 7ம் திகதி
கார்டியனில் எழுதிய இயன் பிளாக்கும் ஜூலியன் போர்ஜேரும் ஒபாமாவின் தேசிய
பாதுகாப்புக்குழு “இரகசிய
நடவடிக்கைக்கு இசைவு கொடுக்கும் நிர்வாக உத்தரவிற்காக”,
“ஜனாதிபதி
அறிதல்”
ஒன்றிற்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது எனக்
குறிப்பிட்டுள்ளனர்.
சிரியாவுடன் விரிவான எல்லையைக் கொண்டுள்ள துருக்கி, எதிர்த்தரப்பின்
அரசியல் மற்றும் இராணுவத் தலைமைகளுக்கு, சிரிய தேசியக் குழு (SNC)
மற்றும்
FSA
எனப்படும் சுதந்திர சிரிய இராணுவம் ஆகியவற்றிற்கு செயற்பாட்டுத் தளமாகவும் உள்ளது,
எந்த இராணுவத் தாக்குதலிலும் முக்கிய பங்கை ஏற்க வேண்டும்.
Carnegie Endowment for International Peace
என்னும் அமைப்பிற்காகப் பணிபுரியும் முன்னாள் துருக்கிய தூதரான சினன் உல்ஜென்
அங்காரா ஏற்கனவே நேட்டோ செயற்பாட்டிற்கு ஆதரவு கொடுக்கும் பிராந்திய சக்தி
ஒன்றிற்குத் தலைமை தாங்கத் தன்னை நிலைப்பாடு கொண்டுள்ளது என்று கூறினார்.
“ஆட்சி
மாற்றத்திற்கு மிக அதிக அளவில் பந்தயம் கட்டியுள்ள”
வகையில் துருக்கி
“திரும்பிச்
செல்ல இயலாத பாதைக்கு”
வந்து விட்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கட்டார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் மற்றும்
ஜோர்டான் அனைத்தும் இராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் உட்பட, அவைகள்
லிபியாவில் கொடுத்தது போல் ஆதரவைக் கொடுக்கும்.
இந்த விருப்பத் தேர்விற்கு ஆதரவாக பைனான்சியல் டைம்ஸும் உள்ளது; இது
இரகசிய மற்றும் வெளிப்படையான முயற்சிகளை
SNC, FSA
ஆகியவற்றை வலுப்படுத்த மேற்கொள்வதில் தொடங்கும். பெப்ருவரி 13ம் திகதி வந்த
தலையங்கம் ஒன்று,
“இதுவரை
பிளவுற்றிருந்த எதிர்த்தரப்பு முகாமில் ஒற்றுமை, நடைமுறைச் சீரமைப்பு ஆகியவற்றை
அதிகரிப்பதற்கு அனைத்து முயற்சிகளும் தேவை”
என்று கூறியுள்ளது. மேலும்
FSA
விற்கு ஆயுதம் கொடுத்தல் என்பது
“விரைவில்
மற்ற செயற்பாடுகளான அகதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் அளித்தல், அவை பின்னர்
காக்கப்படுதல், வானில் இருந்து குண்டுத் தாக்குதல் ஆகியவை உட்பட என்றும்”
கூறுகிறது.
பைனான்சியல்
டைம்ஸ்
தன்னுடைய பக்கங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு ராட்வன் ஜியடே க்கும்
திறந்துள்ளது; அவர் பெப்ருவரி 15ம் திகதி
“கோசோவோ
எப்படி சிரியாவில் மேற்கத்தைய நாடுகள் தலையிடலாம் என்பதைக் காட்டுகிறது”
என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.
“ஐ.நா.
பாதுகாப்புச் சபைக்கு வெளியே அமெரிக்கத் துருப்புக்கள் எதையும் இழக்காமல் ஒரு
சுதந்திர கோசோவோ எப்படித் தோற்றுவிக்கப்படலாம் என்பதில் அமெரிக்கா உதவியது. ஒரு
நல்ல தலையீட்டு மூலோபாயம் கீழ்க்கண்டதை கொண்டிருக்க வேண்டும். முதலில் கொசோவோவில்
நடந்ததுபோல், சர்வதேச சமூகம்
—அது
கூட்டு ஐ.நா.- அரபு லீக் பணிக்குழு என்றாலும்
“சிரிய
நண்பர்கள்”
கூட்டணியாயினும் சரி—
வான் சக்தியால் பாதுகாக்கப்பட வேண்டிய பாதுகாப்புப் பகுதிகளைக் குறிக்க வேண்டும்”
என்று அவர் எழுதியுள்ளார்.
“அத்தகைய
கூட்டணியின் வான்-தளப் பாதுகாப்பு மனிதாபிமான இடைவழிகளை பாதுகாக்கவும்
பயன்படுத்தப்படலாம்”
என்று அவர் சேர்த்துக் கொண்டார்.
சிரியாவில் இராணுவத் தலையீடு மக்கள் கோரிக்கையாக இருக்கிறது
என்பதைச் செய்தி ஊடகம் சித்தரிப்பதற்கு மேற்கோளிடப்பட்டுள்ள பல
SNC
உறுப்பினர்களில் ஜியடேயும் ஒருவராவார். ஆனால் அனைத்துச் சான்றுகளும்
அசாத்தை எதிர்க்கும் பல சக்திகளுக்கு இடையே பெரும்பான்மை எதிர்ப்பு இருக்கிறது
என்றும், இன்னும் கணிசமான ஆதரவு பாதிஸ்ட் ஆட்சிக்கு இருப்பதற்குக் காரணம்
மேற்கத்தைய தலையீடு ஒரு சுன்னி ஆட்சியை நிறுவி அது மதச் சிறுபான்மையினரை
துன்புறுத்தலாம் என்ற அச்சத்தைக் கொண்டுள்ளதால் என்றும் சுட்டிக்காட்டுகின்றன.
அமெரிக்கச் சமாதானக் கூடத்தில் ஒரு மூத்த ஆராய்ச்சியாளராக ஜியடே
உள்ளார். வாஷிங்டனில் சிரிய அரசியல் மற்றும் மூலோபாய ஆய்வுகள் மையத்தின் நிர்வாக
இயக்குனராக அவர் பணிபுரிந்துள்ளதுடன் அதை இணையாக நிறுவியவரும் ஆவார். அவர்
கொண்டிருந்த ஏனைய பதவிகளில் பிரிட்டனின் அரசரின் சர்வதேச விவகாரங்களின் கூடம் என்று
சாத்தாம் ஹௌசில் இருப்பதில் வருகை ஆராய்ச்சியாளர் என்பதும் அடங்கும்.
“கோசோவோ
மாதிரி”
என்பதில் கோசோவோ விடுதலை இராணுவம் என்பது ஒரு அமெரிக்க கூலியாகக் கட்டமைக்கப்பட்டு
இருந்தது; இது நிலைமையை உறுதிகுலைக்கும் வகையில் அச்சுறுத்தல் பிரச்சாரத்தை
மேற்கொண்டு பின்னர், வெளிப்படையாக தலையீட்டிற்கு ஒரு கருவியையும் அளித்தது.
SNC, FSA
இரண்டும் கூட்டாக அதே பணிகளைத்தான் லிபியாவில் தேசிய இடைக்காலக்குழு செய்தது போல்
செய்து கொண்டிருக்கின்றன.
FSA
தன் நோக்கத்தில் தரமாகப் பொருந்தியிருப்பதற்கான கடுமையான முயற்சிகள் தேவை.
வாஷிங்டனின் அருகே உள்ள கிழக்குக் கொள்கைக்கூடம் என்பதில் உயர் பதவியில் இருக்கும்
ஜேப்ரி ஓயிட், Foreign Policy என்னும் இதழிடம்
FSA
படைகள் கிட்டத்தட்ட 4,000 முதல் 7,000 எண்ணிக்கையைக் கொண்டுள்ளன என்றும், அது
கூறும் 40,000 ஐ விட இது மிகக்குறைவு என்றும் தெரிவித்துள்ளார். துருக்கியிலுள்ள
அதன் கட்டுப்பாட்டு அலுவலகம், குறைந்தப்பட்ச செயற்பாட்டுக் கட்டுப்பாட்டைத்தான்
கொண்டுள்ளது; யார் அதற்குத் தலைமை தாங்குவது என்பது குறித்து அதிகாரப் போராட்டம்
நடைபெறுகிறது—துருக்கிய
ஆதரவு கொண்ட தளபதி ரியத் அல் அசத்தா அல்லது இன்னும் சமீபத்திய ஆனால் உயர்மட்ட
ஆட்சியிலிருந்து வெளியேறிய தளபதி முஸ்தாபா ஷேக்கா என.
வெள்ளியன்று பாரிசில் நடந்த கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில்,
ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியும், பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் காமெரோனும்
சிரிய எதிர்த்தரப்பு ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கையில் குவிப்பைக் காட்டினர்.
“ஒரு
சிரியப் புரட்சியை நாம் கொண்டுவர முடியாது. ...சிரியா ஒன்றாகத் திரண்டு அதற்கான
ஏற்பாடுகளைச் செய்யும் முயற்சியை எடுக்காவிட்டால்”
என்றார் சார்க்கோசி.
“லிபியாவில்
லிபியர்கள் இல்லாமல் நாம் புரட்சியைக் கண்டிருக்க முடியாது; சிரிய எதிர்த்தரப்பு
போதுமான முயற்சியை ஒன்றுபடுத்திக் கொள்ளுவதற்குக் காட்டினால்தான், நாம் அதிக
ஆதரவைக் கொடுக்க முடியும்.”
இப்பொழுது சிரிய நண்பர்கள் குழுவின் கூட்டம் ஒன்று ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது; இதற்கு யூப்பேயும் துருக்கிய வெளியுறவு மந்திரி அஹ்மத்
தவுடொக்லுவும் தலைமை தாங்குகின்றனர்; இது
FSA
க்குள் இருக்கும் பிளவுகளைத் தீர்க்க முற்படும்; அதை
SNCமூலம்
மேற்கத்தைய தலைமையை உறுதியாக ஏற்க வைக்கும்.
உட்பிளவுகள் இருந்தபோதிலும்,
FSA
மற்றும் பல பிராந்தியச் சக்திகளில் இருந்து அதன்கீழ் செயல்படும் அதன் செயலர்கள் ஒரு
KLA
வகையிலான உறுதியைக் குலைக்கும் செயலை பல மாதங்களாக நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
செய்தியாளர் நிர் ரோசன், சமீபத்தில் எதிர்தரப்பு போராளிகளுடன் தொடர்பைக்
கொண்டிருந்தவர், கட்டார் அரசாங்கத்திற்குச் சொந்தமானதும், அசாத் எதிர்ப்பு
எழுச்சிக்குப் பெரும் ஆதரவையும் அளிக்கும் அல் ஜசீராவிடம் விவரங்களை விளக்கும்
பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். இப்பேட்டியில் அவர்
“மிக
ஆரம்ப கட்டங்களில் இருந்தே”
எதிர்த்தரப்பு ஆயுதங்களை எடுத்துவிட்டது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
“கோடையையொட்டி
பாதுகாப்பு அதிகாரிகள் மீது முறையான தாக்குதல்கள் இருக்கும், இயக்கம் ஒரு சீர்
எழுச்சியாக வளர்ந்துவிட்டது”
என்றார்.
அயல் நாட்டில் வாழும் சிரியர்களிடமிருந்து எதிர்த்தரப்பு நிதிகளைப்
பெறுகிறது; நிதி கொடுப்போர் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களான முஸ்லிம் பிரதர்ஹுட்
அல்லது வளைகுடாவின் கன்சர்வேடிவ் மதகுருமார்களாக இருக்கலாம்; அவர்களும் சில
குழுக்களுக்குப் பணத்தை அனுப்புகின்றனர்”
என்று அவர் கூறியுள்ளார்.
தலையீட்டை நியாயப்படுத்துவதற்கு கூறப்படும் விமர்சனத்தில்,
பிரச்சாரத்தின் பெரும்பகுதியை முரண்படுத்தும் வகையில்
“ஒவ்வொரு
நாளும் எதிர்தரப்பு,
இறப்பு எண்ணிக்கைப் பட்டியலைக் கொடுக்கிறது; பொதுவாக இறப்புக்களுக்கான காரணங்கள்
விளக்கப்படுவதில்லை. இவ்வாறு மடிந்துவிட்டதாகக் கூறப்படுபவர்களில் பலர் உண்மையில்
இறந்துவிட்ட எதிர்த்தரப்புப் போராளிகள்தான், ஆனால் அவர்களின்
இறப்பின் காரணம் மறைக்கப்பட்டுள்ளது; அவர்கள் அறிக்கைகளில் நிரபராதியான குடிமக்கள்,
பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டவர்கள் என்று விவரிக்கப்படுகின்றனர்; ஏதோ அவர்கள்
வெறுமே எதிர்ப்பை தெரிவித்தனர் அல்லது தங்கள் வீடுகளில் உட்கார்ந்து கொண்டிருந்தனர்
என்பது போல்”
என உள்ளது. |