WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Obama hails record GM profits
The wage-cutter in chief
ஜெனரல் மோட்டார்ஸின் உயர்ந்த இலாபங்களை ஒபாமா பாராட்டுகிறார்
அமெரிக்காவின்
தலைமை ஊதிய வெட்டி
Patrick Martin
20 February 2012
இந்த வாரம் மிகப்பெரிய அமெரிக்க கார்த் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல்
மோட்டர்ஸ் தான் முக்கியமாக அதன் வட அமெரிக்க செயல்கள் மூலம் இதுவரை இல்லாதளவு
இலாபமான $7.6 பில்லியனை 2011இல் பெற்றுள்ளதாக அறிவித்திருந்தது. இதனை ஜனாதிபதி
ஒபாமா தனக்கு மதிப்பினை தேடிக்கொள்ளும் விடயமாக்கிக்கொண்டார். மொத்தத்தில் வட
அமெரிக்க இலாபங்களின் பங்கு $7.2 பில்லியன் என்று இருந்தது.
மேற்கு கடலோரப் பிரச்சாரங்களின்போது, தொடர்ச்சியான தனிப்பட்ட நிதி
திரட்டும் நிகழ்வுகளில் தோன்றி பல மில்லியின் உடைய ஆதரவாளர்களுக்கு
உரையாற்றியபோதும், வாஷிங்டன் சியாட்டிலில் உள்ள போயிங் விமானக் கட்டுமான ஆலையின்
தொழிற்சங்க கூட்டத்தில் பேசுகையிலும், இதே கருத்தைத்தான் ஒபாமா வலியுறுத்தினார்.
அதாவது
GM
உடைய இலாபங்கள் கார்த்தொழில்துறைக்கு 2009ம் ஆண்டு அவர் கொடுத்த
பிணையெடுப்பை சரியென நிரூபித்துள்ளது என்று.
சான் பிரான்ஸிஸ்கோவில் மிகச் செல்வக்கொழிப்புடைய பகுதிகளில் ஒன்றான
நோப் ஹில்லில் ஓர் அரங்கத்தில் பார்வையாளர்களிடம் அவர்
“இன்று
GM
மீண்டும் உலகின் முதல் கார்த்தயாரிப்பு நிறுவனம் என்ற உயரிடத்திற்கு வந்துள்ளது.
இப்பொழுதுதான் அது நிறுவனத்தின் 100 ஆண்டு வரலாற்றில் மிக அதிகமாக இலாபங்களை
ஈட்டியதாகத் தெரிவித்துள்ளது.”
என்று கூறினார்.
கார்த் தொழிலில்
“சேமிப்பு”
பற்றிய மிக முக்கியமான கூறுபாடு குறித்து ஒபாமா நேரடிக் குறிப்பு எதையும்
கொடுக்கவில்லை. அதாவது வெள்ளை மாளிகையின் தலையீட்டின் பேரில்
GM, Chrysler
ஆகியவற்றில் புதிதாக வேலைக்கு சேர்க்கப்படுவர்களுக்கு 50 சதவிகிதம் ஊதியக் குறைப்பு
சுமத்தப்பட்டுள்ளமை, அதைத்தவிர பணியில் இருக்கும் மற்றும் தொழிற்சங்கத்தில் உள்ள
மற்றும் இல்லாத ஓய்வுபெற்ற
GM
தொழிலாளர்கள் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு நலன்களில்
வெட்டுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை குறிப்பிடவில்லை.
ஆனால் வெள்ளியன்று போயிங் ஆலையில் அவர் வழங்கிய உரையின்போது அவர்
மறைமுகமாக கருத்தை தெரிவித்தார். அது சுருக்கப்பட்டு அவருடைய சனிக்கிழமை வானொலி
மற்றும் இணைய தள உரையில் மறு ஒளிபரப்பாயிற்று.
“அமெரிக்கத்
தொழிலாளர்களே, உலகிலேயே நீங்கள்தான் மிக அதிக உற்பத்தித் திறனை உடையவர்கள்.
எவருடனும் நீங்கள் போட்டியிட முடியும். எவரையும் விட நீங்கள் அதிக வேலையைச்
செய்யமுடியும். ஆடும் களம் சமமாக இருந்தால் எந்த நேரத்திலும், எங்கும், எந்த
தொழிலாளியுடனும் நீங்கள் போட்டியிட முடியும்—சீனாவானலும்,
ஐரோப்பாவானாலும், அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.”
இக்கருத்துக்கள் பெரும் கரவொலியினால் தடைபட்டன. ஐயத்திற்கு இடமின்றி
அது சியாட்டில் அணிவகுப்பில் ஆரவாரம் செய்யும் பிரிவில் முக்கியமாக இருந்த
தொழிற்சங்க நிர்வாகிகளிடமிருந்துதான் இது வந்தது. இது தொழிற்சங்க அமைப்புக்களினதும்
மற்றும் அவர்கள் ஜனநாயகக் கட்சியுடனும் ஒபாமா நிர்வாகத்துடனும் கொண்டுள்ள கூட்டின்
பிற்போக்கத்தன்மையைத்தான் நிரூபிக்கிறது.
மற்ற நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களைப்
“போட்டியில்
வென்றுவிடமுடியும்”
என்ற கருத்திற்குத் தொழிலாளர்கள் ஏன் கரவொலி கொடுக்க வேண்டும்?
அத்தகைய போட்டியினால் அமெரிக்கத் தொழிலாளர்கள் எவ்வாறு பயனடைகின்றனர்? அமெரிக்கத்
தொழிலாளர்களை தங்கள் ஐரோப்பிய, சீன, உலகெங்கிலும் உள்ள வர்க்க சகோதரர்களுக்கு
எதிரான மிகக் குறைந்த ஊதியங்களுக்கான போட்டியில் மிகப் பெரிய சுரண்டலை பெரும்
சர்வதேச நிறுவனங்களுக்கு கொடுக்க தூண்டி விட்டுள்ளதற்கு ஒபாமா தன்னைத்தானேயும்
தன்னுடைய தொழிற்சங்க கைக்கூலிகளையும் பாராட்டிக் கொள்கிறார்.
“ஆடுகளம்
சமமாக இருக்க வேண்டும்”
என்ற கருத்தை ஒபாமா வலியுறுத்துகையில், நாட்டுக்கான உரையின்போது செய்தது போன்று,
ஒபாமா அமெரிக்கப் பெருநிறுவன உயரடுக்கிற்கு அவர் அதன் உந்துதலான அமெரிக்காவில்
உற்பத்தியை புதுப்பிக்க தொழிலாளர்களின் பணிநிலைமையைக் குறைக்க, சீனா, மெக்சிகோ
இன்னும் பிற
“போட்டி
நாடுகளில்”
உள்ள தரங்களுக்குக் குறைப்பதற்கு தான் முழு ஆதரவு தருவதாகத்தான்
செய்தியை அனுப்புகிறார்.
வர்க்க
நனவுடைய
தொழிலாளர்கள் இத்தகைய உலகளாவிய சகோதரக்கொலை முன்னோக்கை அதற்குரிய இகழ்வுடன்
நிராகரிக்க வேண்டும். அமெரிக்க தொழிலாளர்கள் வெள்ளை மாளிகையிலோ, அபத்தமாகத் தவறாகப்
பெயரிடப்பட்டுள்ள டெட்ரோயிட்டில் இருக்கும்
Solidarity House
உடனோ கூட்டுக்களைக் கொண்டிருக்கவில்லை.
தொழிற்சங்க நிர்வாகிகளும் ஜனநாயகக் கட்சியினரும் தொழிலாளர்
செலவினங்களைக் குறைத்து கார்த்தயாரிப்பு முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ வர்க்கம்
முழுவதுமே இலாபங்களை அதிகம் ஈட்டுவதற்காகத்தான் உழைக்கின்றனர். அதுவும் வேலைகள்
மற்றும் வாழ்க்கைத் தரங்கள் என்று தொழிலாளர்கள் கொண்டிருப்பவற்றின் இழப்பில்.
உதாரணமாக
UAW
தலைவர் பாப் கிங் அமெரிக்க மாதிரியிலான ஊதியக் குறைப்புக்களைச் சுமத்தவும்,
ஜேர்மனியில் ஆலைகள் மூடலையும் ஜேர்மனிய கார்த்துறைத் தொழிலாளர்கள் மீது சுமத்த
உதவுவதற்காக
GM
இன் ஜேர்மனிய துணைநிறுவனமான ஓபலின் இயக்குனர் குழுவில்
இருத்தப்படவுள்ளார்.
அமெரிக்கத் தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்க முதலாளிகளுக்கிடையிலான
ஐக்கியம்”
என்றபெயரில் பெருநிறுவன இலாபங்களை ஊதியக் குறைப்புக்கள் மற்றும் மிருகத்தனச்
சுரண்டல் என்னும் அடிப்படையில் புதுப்பிப்பதற்காக கொண்டுவரப்படும்
“பொருளாதார
தேசியவாத்திற்கான இத்தகைய அழைப்புக்களை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது.
நாம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு போராடுகிறோம். அமெரிக்கத்
தொழிலாளர்கள் அவர்களுடைய உண்மையான நண்பர்களை, பல மில்லியனர்களான பெருநிறுவன தலைமை
நிர்வாகிகள் மற்றும் பல மில்லியன்களை உடைய ஜனநாயக அல்லது குடியரசுக் கட்சிகளின்
முதலாளித்துவ அரசியல்வாதிகளிடையே பெறமாட்டார்கள், மாறாக ஐரோப்பா, ஆசியா,
மத்தியகிழக்கு, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களிடம்தான்
காண்பர்.
கிரேக்கத் தொழிலாளர்கள் இயக்குனர் குழுக் கூட்டங்களில்
கொண்டுவரப்படும் வாழ்க்கைத் தரங்களில் 50 சதவிகிதச் சரிவிற்கு எதிராகப் போராடுதல்
அல்லது சீனத் தொழிலாளர்கள் பெரும் அமெரிக்க ஐரோப்பிய உற்பத்தியாளர்களுக்காக பொலிஸ்
அரசாங்க அடக்குமுறையை எதிர்த்துப் போராடுதலோ, அல்லது எகிப்திய தொழிலாளர்கள்
அமெரிக்க ஆதரவுடைய இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்ப்பதோ, அல்லது அமெரிக்க தொழிலாளர்கள்
ஊதியங்களையும் நலன்களையும் கூப்பர் டயரில் அழிக்கப்படுவதை எதிர்ப்பதோ, எதுவாயினும்
சரி, தொழிலாள வர்க்கம் உலகெங்கிலும் ஒரே விரோதிக்கு எதிராகத்தான் போராடுகின்றனர்.
சோசலிச சமத்துவக் கட்சி 2012 ஜனாதிபதித் தேர்தல்களுக்காக அதன்
பிரச்சாரத்தை ஜெரி வைட் ஜனாதிபதிப் பதவிக்கு, பிலிஸ் ஷெரர் துணை ஜனாதிபதிப்
பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்படல் என்னும் வகையில் ஆரம்பித்துள்ளது.
இப்பிரச்சாரத்தின் முதல் கொள்கை தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் தேசியவாத
வேலைத்திட்டத்தின் அடிப்படையில் பாதுகாக்கப்பட முடியாதவை என்றும், ஒரு சர்வதேசப்
புரட்சி மூலோபாயம் என முழுநனவுடன் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களை
முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான பொதுப் போராட்டத்திற்காக ஐக்கியப்படுத்துவதின்
மூலமாகத்தான் முடியும் என்பதாகும். உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் நாம்
இப்பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுக்குமாறு வலியுறுத்துகிறோம். இன்னும் கூடுதலான
தகவல்களை அறிய,
www.socialequality.com.
வலைத் தளத்தை அணுகவும். |