WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
கிரீஸ்
யூரோப்பகுதி மந்திரிகள் கிரேக்கத்தின்மீது இறுக்கத்தை அதிகரிக்கின்றனர்
By
Nick Beams
16 February 2012
use
this version to print | Send
feedback
முக்கிய ஐரோப்பிய நாடுகள் பிணையெடுப்பு நிதிகள் கொடுப்பதற்கு முன்பு
இன்னும் கூடுதலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோருகையில்,
“ஐரோப்பாவில்
உள்ள சக்திகள்”
தன்னைப் பொது நாணயத்தில் இருந்து வெளியேற்ற முற்படுகின்றன என்று
கிரேக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
முக்கிய நாடுகள் கிரேக்கத்தை யூரோப் பகுதியில் இருந்து அகற்ற
வேண்டும் என விரும்புவதால்
€130
பில்லியன் பிணையெடுப்பிற்கான விதிமுறைகள் தொடர்ந்து மாற்றப்படுகின்றன என்று கிரேக்க
நிதிமந்திரி எவாஞ்சலோஸ் வெனிஜெலோஸ் கூறினார்.
“யூரோப்பகுதியில்
நாம் அங்கு இருப்பதை விரும்பவில்லை. நமக்குத் தொடர்ந்து புதிய விதிமுறைகளும்,
நிபந்தனைகளும் கொடுக்கப்படுகின்றன”
என்று அவர் ஜனாதிபதி காரோலோஸ் பாப்பௌலியஸைச் சந்தித்தபோது கூறினார்.
வெனிஜெலோஸின் சீற்ற வெளிப்பாடு புதன்கிழமை அன்று யூரோ
நிதிமந்திரிகள் குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டம் இரத்துச்செய்யப்பட்டபின்
வந்துள்ளது. முக்கூட்டு எனப்படும் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்தி வங்கி, சர்வதேச
நாணய நிதியம் ஆகியவை நிர்ணயித்திருந்த விதிகளுக்கு உடன்பட்டு கிரேக்கப்
பாராளுமன்றம் ஞாயிறன்று ஒப்புதல் கொடுத்தபின், அக்கூட்டம் பிணையெடுப்பிற்கு
இசைவுதருமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குழுவின் தலைவர்
லுக்சம்பேர்க்கின்
பிரதம மந்திரி ஜீன் கிளவ்ட யங்கர் இன்னும் அதிக உத்தரவாதங்கள் தேவை எனக்கூறிக்
கூட்டத்தை இரத்து செய்துவிட்டார்.
கிரேக்க சோசலிச கட்சியின்
–PASOK-
தலைவர் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் அன்டோனிஸ்
சமரஸ், தேர்ந்தெடுக்கப்படாத பிரதம மந்திரி லூக்காஸ் பாப்படெமோஸ் மற்றும் கூட்டணி
அரசாங்கத்தில் இரு முக்கிய நபர்களும் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் தேர்தல்களுக்கு
பின்னரும் சிக்கன நடவடிக்கைகள் தொடரும் என்று கடிதம் கொடுக்க வேண்டும் என்பது
அவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.
சமரஸ் மற்றும் பாப்பாண்ட்ரூ இருவருமே அத்தகைய கடிதத்தைப் புதன்
அன்று அனுப்பினர். ஆனால் யூரோப்பகுதி அதிகாரிகள் சமரஸின் கடிதத்தில் ஒரு பத்தி
குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்; அதில்
“திட்டம்
முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க கொள்கைத்
திருத்தங்கள் தேவைப்படலாம்”
என்று எழுதப்பட்டிருந்தது. எத்தகைய திருத்தங்களும்
“திட்டதில்
கோடிட்டுள்ள வடிவமைப்பிற்குள்தான் உறுதியாக”
செயல்படுத்தப்படும் என்று சமரஸ் வலியுறுத்தியிருந்தாலும்,
அச்சொற்றொடர் முழு உறுதிப்பாடு இல்லை என்பதற்குச் சான்றாக உள்ளது என்று
கூறப்பட்டுவிட்டது.
இன்றைய பைனான்சியல் டைம்ஸ் ஜேர்மனி, பின்லாந்து, நெதர்லாந்து
ஆகியவை உள்ளடங்கிய
AAA தரம்
நிர்ணயிக்கப்பட்டுள்ள அரசாங்கங்களின் குழு, இன்னும் கூடுதலான உத்தரவாதங்களைக்
கேட்டுள்ளன என்று தெரிவிக்கிறது. பைனான்சியல் டைம்ஸ் இன்
கருத்துப்படி
“யூரோப்பகுதியின்
நிதிமந்திரிகள் மாநாடு தொர்பான பேச்சுக்களில், மூன்று நாடுகளும் மற்ற சிறிய
கிரேக்கக் கட்சிகளிடம் இருந்தும் கூடுதல் கடிதங்களைத் தாங்கள் விரும்பக்கூடும்
என்றும் வெளிப்படையாக கிரேக்கத் தேர்தல்கள் ஒத்திப்போடும் வாயப்பு பற்றியும்
விவாதித்துள்ளனர்.”
மாநாட்டு அழைப்பிற்கு முன்னதாக, ஜேர்மனிய நிதிமந்திரி வொல்ப்காங்
ஷௌய்பிள ஒரு வானொலிப் பேட்டியில் கிரேக்கத்தின் தேர்தல்கள் தாமதப்படுத்தப்படலாம்,
இத்தாலியைப் போல் முக்கிய அரசியல்வாதிகள் எவரையும் சேர்க்காமல் ஒரு நிபுணத்துவ -technocratic-
அரசாங்கம் நிறுவப்படலாம் என்று கூறினார்.
ஜேர்மனிய நிதியமைச்சரகத்தின் தலைமைச் செய்தித் தொடர்பாளர்,
மார்ட்டின் கொட்ஹௌஸ்,
“இது
முக்கிய கட்சிகள் அனைத்தும் தம் நம்பகத்தன்மையை நிரூபணம் செய்வது ஆகும். அத்தகைய
நம்பகத்தன்மையை நாம் எந்த தேர்தல் தேதிக்கும் அப்பாலும் கொண்டிருக்கவேண்டும்”
என்றார்.
ஆனால்
PASOK
கருத்துக் கணிப்புக்களில் 8% வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கையில்,
புதிய ஜனநாயகக் கட்சி கிட்டத்தட்ட 33% பெற்றிருக்கையில், ஒரு புதிய
பாராளுமன்றத்தில் முறையாக திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு உறுதி கொடுத்துள்ள
கட்சிகள் பெரும்பான்மை அடையும் என்பதற்கே உத்தரவாதம் ஏதும் இல்லை. இதுதான்
தேர்தல்களைத் தள்ளிப்போடுவது குறித்த விவாதங்களுக்கு ஊக்கம் கொடுத்துள்ளது.
யூரோப்பகுதி நிதிமந்திரிகளின் சமீபத்தியக் கோரிக்கைகள் கிரேக்க
ஜனாதிபதி காரோலோஸ் பாப்பௌலியஸிடம் இருந்து சீற்றமான விடையிறுப்பைத் தூண்டியுள்ளது.
ஒரு இராணுவத் தலைவர்கள் கூட்டத்தில்,
“நாம்
அனைவரும் இந்த நெருக்கடியில் கடினமாக உழைக்கும் கடமையைக் கொண்டுள்ளோம். ஆனால்
திரு.ஷொய்பிளவிடம் இருந்து நாம் ஒன்றும் அவமரியாதைகளை ஏற்க முடியாது. கிரேக்கத்தை
அவமரியாதை செய்வதற்கு திரு. ஷொய்பிள யார்? யார் இந்த
டொச்சுக்காரர்களும்,
பின்லாந்துக்காரர்களும்? நம் நாட்டின் சுதந்திரத்தை மட்டும் இல்லாமல் ஐரோப்பாவின்
சுதந்திரத்தையும் நாம் எப்பொழுதும் பாதுகாத்துள்ளோம்”
என்றார்.
ஜேர்மன் தலைமைதாங்கும் யூரோப்பகுதி நிதி மந்திரிகள்,
வங்கிகள் மற்றும் நிதியத் தன்னலக்குழுவின் சார்பில் தூண்டில் போடும் செயற்பாடுகளைச்
செய்து வருகின்றனர். கிரேக்கத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன, அவை
பூர்த்தி செய்யப்பட்ட உடன், இன்னும் அதிக கோரிக்கைகள் ஏதென்ஸின் நடவடிக்கைகள்
எடுக்காத தன்மையினால் யூரோப்பகுதி தலைவர்கள் பொறுமை இழக்கின்றனர் என்ற கூற்றுக்கள்
வெளிவருகின்றன. யூரோப்பகுதி மந்திரிகளின் செயற்பாடுகள் மேலும் மேலும்
குண்டர்குழுவினருடையதைப் போல் வருவதால் அவர்களுடைய வார்த்தைப்பிரயோகங்களும்
The Godfather
திரைப்படத்தில் வரும் உரையாடலைப் போல் உள்ளது. ஒரு சிரேஷ்ட டொச்சு அதிகாரி
“காலம்
கடக்கப்படுவதால், நாம் அவர்களுக்கு உதவ அவர்களை எங்களுக்கு உதவுமாறு கிரேக்க
அரசியல் தலைவர்களிடம் வலியுறுத்துகிறோம்”
என்றார்.
இப்படி இறுக்கங்கள் அதிகரிக்கையில், கிரேக்க அரசாங்கம் அது கொடுக்க
வேண்டிய பணத்தைக் கொடுப்பதைப் பெறுவதற்கு முன்னதாகவே வங்கிகள் பிணையெடுப்பு
நிதிகளைப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்த விவாதங்கள் நடத்துகின்றன.
பைனான்சியல் டைம்ஸ்
கருத்துப்படி கிரேக்கப் பத்திரங்களை வைத்திருக்கும் தனியாருக்கான ஒரு கடன்
மறுகட்டமைப்பு என்பது முழு
€130
பில்லியன் பிணை எடுப்பிற்கான ஒப்புதல் இல்லமலேயே நடத்தப்படும் திட்டம் உள்ளது.
“இந்த
நடவடிக்கை கிரேக்க அரசாங்கம் நிதி பெறாமல் தத்தளிக்கும் நிலையை உருவாக்குவதுடன்,
கிரேக்கத்தின் பத்திரங்களை வைத்திருக்கும் தனியார்கள் ஒரு தனிப்பட்ட உடன்பாட்டிற்கு
ஒப்புக்கொண்ட நேரத்திலேயே வத்துள்ளது.”
என்று அது கூறியுள்ளது.
இதற்கிடையில், கிரேக்கப் பொருளாதாரம் போருக்குப் பிந்திய
காலத்திலேயே மிக நீண்ட, ஆழ்ந்த மந்தநிலைக்கான புதிய மட்டத்தை எட்டியுள்ளது. இந்த
வாரம் வெளிவந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, பொருளாதாரம் 2011ல் 7% சுருங்கியது,
2007ல் மந்தநிலை தொடங்கியதில் இருந்து இப்பொழுது அது 16% என்ற நிலையில் உள்ளது
என்பது தெரியவருகிறது. உலக வங்கியின் ஒரு முன்னாள் மூத்த அதிகாரியான யூரி தாசேஷ்
கிரேக்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 30% என்ற அதிக அளவிற்குச் சுருங்கலாம்
என்று இந்த வாரம் எச்சரித்துள்ளார்.
2008ல் 7.7% என்று இருந்த வேலையின்மை இப்பொழுது 20% ஐயும் விட
அதிகமாகி, இளைஞர் வேலையின்மை 50%க்கும் மேல் உள்ளது.
முக்கூட்டு தொடர்ந்து கூறுவது தன் நிதியங்களை ஒழுங்குபடுத்துவதற்கு
கிரேக்கம் போதுமானதைச் செய்யவில்லை என்பதாகும். ஆனால் சமீபத்திய
புள்ளிவிவரங்களின்படி, வட்டிப்பணத்தை ஒதுக்கும் முக்கிய வரவுசெலவுத்திட்டத்தில்
மேலதிகமாக உள்ள தொகை, 2009ன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.4% பற்றாக்குறை
என்பதில் இருந்து எதிர்பார்க்கப்படும் உபரியான 0.2% என்று ஆகியுள்ளது. ஆனால்
கொடுக்க வேண்டிய வட்டிப்பணம் சேர்க்கப்பட்டால் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் 4.7% தான். 2013ல் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.3% என உயரும்.
உலகில் மிக அதிக வட்டிவிகிதச் சுமைகளில் ஒன்றாக இருக்கும்.
வேறுவிதமாகக் கூறினால், கிரேக்க மக்களின் சமூக நிலைமைகள்,
வங்கிகள் மற்றும் நிதிய நிறுவனங்களின் எப்பொழுதும் பெருகும் தீராத
பசிக்கு உணவளிப்பதால் அழிக்கப்படுகின்றன.
தற்போதுள்ள அரசியல் ஒழுங்குமுறைக்குள் அல்லது
“செலுத்துமதி
நிலுவை”
அல்லது தமக்கு சிறப்பான ஒழுங்குவிதிகளுக்கு முக்கூட்டிற்கு அழுத்தம் கொடுக்க
முற்படுவது என்ற வேறு
“மாற்றீட்டுத்
திட்டத்தின்”
அடித்தளத்தின் மூலம் நெருக்கடிக்கு இப்பொழுது தீர்வு இல்லை.
நேற்று
WSWS
வெளியிட்ட முன்னோக்கு வலியுறுத்துவதுபோல்,
“அரசாங்கமும்
அதை ஆதரிக்கும் கட்சிகளும் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கவும்,
சுகாதார நலன் மற்றும் கல்விமுறையைக் குழிதோண்டி புதைக்கவும் வேலை செய்துவருகின்ற
வேளையில்,
தொழிலாள வர்க்கம் அதுவே நாட்டை நடத்திச் செல்வதற்குரிய பொறுப்பை எடுக்க வேண்டும்.”
நடவடிக்கைக்குழுக்களை
சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தை அமைப்பதற்காக பணியிடங்கள்,
குடியிருப்புகள் ஆகியவற்றில் நிறுவுதல், முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுப்
புரட்சிகரப் போராட்டத்தை அபிவிருத்திசெய்வதற்கு ஐரோப்பிய, சர்வதேசத்
தொழிலாளர்களுடன் இணைந்து செயல்படுதல் ஆகியவை வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.
அத்தகைய போராட்டம்தான் வங்கிகளையும், பெருநிறுவனங்களையும் தமது கைகளில் எடுத்து,
பொருளாதாரத்தை ஒரு சோசலிச முறையில் மறுசீரமைத்து நிதிய உயரடுக்கின் செல்வங்களை
விரிவாக்குவதற்கு பதிலாக சமூகத் தேவைகளை நிறைவு செய்ய ஊக்கம் அளிப்பதற்கான
தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவுவதற்கு அடித்தளத்தை அமைக்கும். |