World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan SEP condemns government attack on the party’s rightsகட்சியின் உரிமைகள் மீதான அராசங்கத்தின் தாக்குதலை இலங்கை சோ.ச.க. கண்டனம் செய்கின்றது
By our
correspondents Back to screen versionஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் பொதுக் கூட்டமொன்றை நடத்தின. யாழ்ப்பாணத்தில் கட்சியின் கூட்டத்தை தடை செய்ததோடு சோ.ச.க. உறுப்பினர்களை அச்சுறுத்தியதற்கும் எதிராகவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக தனியார் பஸ்கள் இயங்காத நிலையில், போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அநேகமானோர் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர். ஜனவரி 29 அன்று சோ.ச.க. ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்துக்கு மண்டபத்தை கொடுக்க வேண்டாம் என கூட்டம் நடக்கவிருந்த யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தின் நிர்வாகத்துக்கு பாதுகாப்பு அமைச்சு கட்டளையிட்டிருந்தது. சகல அரசியல் கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யக் கோரி கட்சி முன்னெடுத்துள்ள பிரச்சாரத்தின் பாகமாகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு மூன்று நாட்கள் முன்னதாக, இராணுவப் புலனாய்வுத் துறையினர், முத்துலிங்கம் முருகானந்தன், இராசேந்திரன் சுதர்சன் ஆகிய இரு சோ.ச.க. உறுப்பினர்களை தடுத்து வைத்து விசாரித்திருந்ததோடு பின்னர் அவர்கள் மீது சரீரத் தாக்குதலையும் மேற்கொண்டனர். யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை இராணுவம் தொடர்ந்தும் திரட்டி வருவதானது, கட்சிக்கு எதிரான வேட்டையாடல் ஒன்று திட்டமிடப்படுவதை சுட்டிக் காட்டுகின்றது. கூட்டத்துக்கு முன்னதாக, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் தாக்குதலுக்கு பின்னால் உள்ள அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தைப் பற்றி எச்சரித்தவாறு, சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.இ. ஆதரவாளர்கள் வேலைத் தளங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிலாள வர்க்கப் பிரதேசங்களில் பிரச்சாரம் செய்திருந்தனர். பிரச்சாரத்தின் போது சோ.ச.க. விநியோகித்த அறிக்கைகளில், பாதுகாப்பு அமைச்சருமான ஜனாதிபதிக்கு, அரசாங்கத்தின் தாக்குதலை கண்டனம் செய்தும் தாக்குதலுக்கான காரணங்களையும் அம்பலப்படுத்தியும் கட்சி எழுதிய திறந்த கடிதமும் அடங்கும் கூட்டத்துக்கு தலைமை வகித்த சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினரான கே. ரட்னாயக்க, சோ.ச.க. மீதான தாக்குதல் முற்றிலும் சட்ட விரோதமானது என்றார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களை எட்டியுள்ள போதிலும், இராஜபக்ஷ அரசாங்கம் வடக்கில் ஏறத்தாழ இராணுவ ஆட்சியொன்றை பேணிவருகின்றது எனவும் அவர் கூறினார். பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் முதுகில் சுமத்துவதற்காக சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் கட்டவிழ்த்துவிடத் தொடங்கியுள்ளது என ரட்னாயக்க கூறினார். “இராஜபக்ஷ அரசாங்கமும் ஆளும் தட்டின் பகுதிகளும், அரசாங்கத்துக்கு எதிராக சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களின் இணைந்த போராட்டமொன்றை சோ.ச.க. அபிவிருத்தி செய்வதையிட்டு பீதியடைந்துள்ளன,” என அவர் விளக்கினார். பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்பின் சர்வதேச பண்பை பேச்சாளர் சுட்டிக் காட்டினார். அவர் சண்டே டைம்ஸ் பத்திரகையின் ஆசிரியர் தலைப்பு ஒன்றை மேற்கோள் காட்டினார். “கடந்த ஆண்டு ‘அரேபிய எழுச்சியில்’ இருந்து உலகம் பூராவும் மக்கள் எழுச்சி ஒரு நாகரீகமாகி வருகின்றது. அவர்கள் அரேபிய உலகத்தில் உள்ள சர்வாதிகார தூண்களை தகர்த்ததோடு, அமெரிக்காவில் மற்றும் ஐரோப்பாவில் கூட முதலாளித்துவத்தின் பேய்களை எதிர்ப்பதற்கு வீதிக்கு இறங்கியுள்ளனர்,” என அந்த தலைப்பு அரசாங்கத்துக்கு நினைவூட்டியது. “தெற்காசியாவிலும் அதைச் சூழவும் வீசுகின்ற இந்த மாற்றம் என்ற காற்று, தமது இறையான்மை குறிப்பிட்ட காலங்களுக்குள் நடக்கும் தேர்தல்களுக்கு மட்டுப்படுத்தப்பட முடியாதது என்ற மக்களின் சக்திவாய்ந்த செய்தியை சொல்கின்றது...” என அந்த ஆசிரியர் தலைப்பு எச்சரித்திருந்தது. “அபிவிருத்தியடைகின்ற நிலைமைகளையிட்டு பீதியடைந்துள்ள அரசாங்கம், பொலிஸ்-அரச வழிமுறையிலான வன்முறை ஆட்சியை நாடுகின்றது. அனைத்துலக வேலைத் திட்டத்தின் அடிப்படையில் சோசலிசத்துக்காகப் போராடுவதன் பாகமாகவே ஜனநாயக உரிமைகளை காக்க முடியும்” என ரட்னாயக்க வலியுறுத்தினார். அடுத்து உரையாற்றிய ஐ.எஸ்.எஸ்.இ. அழைப்பாளர் கபில பெர்ணான்டோ, சோ.ச.க. மீதான தாக்குதல் தற்செயலானது அல்ல எனத் தெரிவித்தார். “தமது கொள்கைகளுக்கு தக்க அரசியல் சவாலை விடுக்கக் கூடிய ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே என்பதையிட்டு அரசாங்கமும் அதன் முகவர்களும் நன்கு அறிந்துள்ளனர்.” பிரிவினைவாதத்துடன் சோ.ச.க.யை அடையாளப்படுத்தி யாழ்ப்பாணத்தில் கூட்டத்தை தடை செய்ய பாதுகாப்பு அமைச்சு எடுத்த முயற்சியை அவர் நிராகரித்தார். “முதலாளித்துவ ஆட்சியை பேணுவதற்காக சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர் வர்க்கத்தை இனவாத ரீதியில் பிளவுபடுத்த அரசாங்கமே செயற்படுகின்றது,” என பெர்ணான்டோ தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த மீனவர்களைத் தாக்குவதற்கு நாட்டின் வடமேற்கு கரையோரப் பிரதேசங்களில் அன்று அரசாங்கம் இராணுவத்தை நிலை நிறுத்தியிருந்ததை ஐ.எஸ்.எஸ்.இ. அழைப்பாளர் சுட்டிக்காட்டினார். “வடக்கு மற்றும் கிழக்கில் இனவாத யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக குறிவைக்கப்பட்ட துப்பாக்கிகள், ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் எதிராகத் திருப்பப்படும் என சோ.ச.க. அன்று எச்சரித்தமை நிரூபிக்கப்பட்டுள்ளது,” என அவர் கூறினார். அடுத்து உரையாற்றிய சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா, யுத்தத்தின் முடிவு வடக்கிலோ அல்லது தெற்கிலோ சமாதானத்தை அல்லது விடுதலையை கொண்டுவந்து விடவில்லை, மாறாக, ஒட்டு மொத்தமாக தமிழ் மற்றும் சிங்கள உழைக்கும் மக்கள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன, என தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற உலக மற்றும் பிராந்திய சக்திகளின் அனுசரணையுடன் தீவின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆளும் தட்டுக்களுக்கு இடையில் “அரசியல் தீர்வு” மற்றும் “அதிகாரப் பகிர்வு” பற்றிய பேச்சுக்கள், அரசாங்கம் பொலிஸ்-அரச நிலைமைகளை அபிவிருத்தி செய்வதற்கு ஒரு மூடு திரையை வழங்குகின்றன. “தெற்காசியாவில் சோசலிசத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காக ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டிக்கொண்டு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் ஐக்கியப்பட்டுப் போராடுவதன் மூலம் மட்டுமே, தமிழர்களதும் அதே போல் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களதும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த முடியும்,” என தேவராஜா தெரிவித்தார். சோ.ச.க. பொதுச் செயலாளரும், உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமான விஜே டயஸ், பிரதான உரையை ஆற்றினார். யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. கூட்டத்துக்கு இராஜபக்ஷ அரசாங்கமும் இராணுவமும் திணித்த தடையின் அரசியல் அர்த்தத்தை அவர் விளக்கினார். “சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரியே நாங்கள் கூட்டம் நடத்தவிருந்தோம். இது ஒரு விடயத்துக்காக மட்டும் நடத்தும் போராட்டம் அல்ல. பிற்போக்கு இராஜபக்ஷ அரசாங்கத்தை தொழிலாளர்கள் விவசாயிகள் அரசாங்கத்தால், மற்றும் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசால் பதிலீடு செய்வதற்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்தும் ஒரு அரசியல் முன்னோக்கின் அடிப்படையிலேயே சோ.ச.க. பிரச்சாரம் செய்கின்றது.” இராஜபக்ஷவினதும் இனவாத கும்பல்களதும் பிளவுபடுத்தும் இனவாத கொள்கைகளை குறுக்கே வெட்டும் சோசலிச முன்நோக்கு இதுவென்பதாலேயே வடக்கில் உள்ள ஆக்கிரமிப்பு இராணுவம் இந்த கூட்டத்தை தடை செய்ய பயன்படுத்தப்பட்டது, என டயஸ் விளக்கினார் “2009 மே மாதம் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை இராஜபக்ஷ முடிவுக்கு கொண்டுவந்திருந்தாலும், தீவு பூராவும் இராணுவ-பொலிஸ் அரசை ஸ்தாபிப்பதற்கான ஒரு பரிசோதனைக் களமாக வடக்கு மற்றும் கிழக்கை பயன்படுத்துவதை அவர் நிறுத்தவில்லை. சோ.ச.க. கூட்டத்தின் மீதான நிபந்தனையற்ற இராணுவத் தடையானது, அந்த இலக்கை நோக்கிய அடியெடுப்பாகும், ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவரும் இதை கண்டனம் செய்ய வேண்டும்.” அண்மையில் நாட்டின் 64வது சுதந்திர தினத்தில் இராஜபக்ஷ ஆற்றிய உரையை பேச்சாளர் சுட்டிக் காட்டினார். அதில் இராஜபக்ஷ இனவாத பதட்ட நிலைமைகளையும் யுத்தப் மனோநிலையையும் கிளறிவிடுவதற்கு தேசப்பற்று வாதத்தை தூண்டினார். “தாய் நாட்டை ஆட்டம் காணச் செய்வதற்காக” பிரிவினைவாத தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையினுள் இருக்கும் சக்திகளுடன் செயற்படுகின்றன என இராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கத்தின் அரசியலை எதிர்க்கும் எவர் மீதும் “பிரிவினைவாத ஆதரவாளர்” என்ற லேபலை ஒட்டுவதை அரசாங்கம் வழமையாக்கிக்கொண்டுள்ளது என டயஸ் விளக்கினார். அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட கட்சிக்குள்ள ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்காக இந்த முத்திரையை சோ.ச.க. மீதும் ஒட்டுவதானது, இந்தக் கேலிக்கூத்தான நகர்வுகளின் மையப் புள்ளியாகும். 1948ல் சுதந்திரத்துக்கு எதிராக, அப்போது இந்திய துணைக்கண்டத்தின் ட்ரொட்ஸ்கிசக் கட்சியாக இருந்த இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பீ.ஐ.) எடுத்த நிலைப்பாட்டை டயஸ் சுட்டிக் காட்டினார். போலி சுதந்திரத்தை கண்டனம் செய்வதற்காக கொழும்பில் அது நடத்திய கூட்டத்துக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுமாக 50,000 பேரை பலமான முறையில் பி.எல்.பீ.ஐ. அணிதிரட்டியிருந்தது. தீவின் மீதான காலனித்துவ ஆதிக்கத்தை மறு ஒழுங்கு செய்வது மட்டுமே இந்த சுதந்திரம் என பி.எல்.பீ.ஐ. அதை பண்புமயப்படுத்தியிருந்தது. “இப்போது இராஜபக்ஷ உழைக்கும் மக்களதும் சகல சமூகங்களைச் சேர்ந்த கிராமப்புற வறியவர்களதும் வாழ்க்கைத் தரத்தை சீரழிக்க சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை நம்பிக்கையுடன் அமுல்படுத்துகின்றார். உழைக்கும் மக்களில் பெரும்பான்மையானவர்களின் சமூக நிலைமைகளை கீழறுப்பது அவரது அரசாங்கமேயாகும்.” உழைக்கும் மக்கள், இளைஞர்கள் மற்றும் தீவின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளின் அபிவிருத்தியடைந்துவரும் போராட்டங்களைச் சுட்டிக் காட்டி டயஸ் தெரிவித்ததாவது: “இவை கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகம் பூராவும் தோன்றத் தொடங்கிய புரட்சிகரப் போராட்ட அலைகளின் மறுபக்கமாகும். அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில உலகம் பூராவும் புரட்சிகர கட்சிகளை கட்டியெழுப்ப வேண்டியதன் வரலாற்று அவசியத்தை இந்தப் போராட்டங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.” “உலக சோசலிசக் கட்சியொன்றைக் கட்டியெழுப்பப் போராடும் ஒரே சக்தி சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மட்டுமேயாகும். சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளில் அக்கறை காட்டும் அனைவரையும் இந்தக் கட்சியைக் கட்டியெழுப்ப இணைந்துகொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்,” எனக் கூறி அவர் உரையை முடித்தார். |
|