சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Amnesty International details torture and murder in Libya

லிபியாவில் சித்திரவதைகள், கொலைகள் குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு விபரிக்கிறது

By Patrick Martin 
17 February 2012

use this version to print | Send feedback

லிபியாவில் கேர்னல் முயம்மர் கடாபியை அகற்றி படுகொலை செய்தபின் நிறுவப்பட்ட ஆட்சியின் கீழ் சிறைகளிலும், தற்காலிகக் காவல் மையங்களிலும் பரந்து நடத்தப்பட்டவை பற்றிய விவரங்களை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கொடுத்துள்ள அறிக்கை ஒன்று விபரித்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஆரம்பக் கண்டுபிடிப்புக்கள் விசாரணை நடத்தப்படும்போது கடந்த மாதம் தகவல் கொடுக்கப்பட்டன. இதன் பிரதிநிதிகள் காவலில் வைக்கப்பட்டவர்கள் மற்றும் சித்திரவதைக்கு உட்பட்டவர்களை ஜனவரி முழுவதும் மற்றும் பெப்ருவரி முன்பகுதியிலும் பேட்டி கண்டனர்; விரிவான அறிக்கைகள் பெப்ருவரி 15ம் தேதி அறிவிக்கப்பட்டன.

மனித உரிமைகள் அமைப்பின் விசாரணையாளர்கள் ஆவணப்படுத்தியுள்ள மிருகத்தனமான வழக்கங்களில் சாட்டையை வைத்து அடித்தல், மின்கம்பிகளால் அடித்தல், மரக் கட்டைகளால் அடித்தல் ஆகியவற்றைத் தவிர, மின்சார அதிர்ச்சி கொடுத்தல், நகங்களை நீக்குதல், கற்பழிப்பு ஆகியவையும் அடங்கியுள்ளன. இத்தாக்குதல்களை போராளிக்குழு உறுப்பினர்கள் எக்கவலையும் படாமல் திமிர்த்தனமாக நடத்தினர்; சில நேரங்களில் மனித உரிமைகளுக்காக வாதிடுபவர்கள் இருக்கையிலேயே கைதிகளைத் தவறாக நடத்துவது தொடர்ந்தது.

மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையின்படி, ஏகாதிபத்திய சக்திகளால் பதவியில் இருத்தப்பட்டுள்ள தேசிய இடைக்கால குழு, ஒரு விசாரணையைக்கூட சித்திரவதை, கைதிகள் தவறாக நடத்தப்படுதல் பற்றி நடத்தவில்லை என்றும் போராளிகள் தங்கள் விருப்பப்படி எதையும் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. போர்க் குற்றங்களுக்காக எவரும் கைது செய்யப்படவில்லை, விசாரிக்கப்படவும் இல்லை; உள்நாட்டுப் போரில் தோல்வியுற்ற பக்கத்தில், அகற்றப்பட்ட கடாபி ஆட்சிக்காக போராடியவர்களைத் தவிர.

அதிகாரிகள் கடாபி எதிர்ப்புப் போராளிகளுடைய போர்க் குற்றங்களைப் பற்றியும் மனித உரிமைகள் மீறலையும் செய்ததற்கு, நீதி முன் நிறுத்துவதற்கான விசாரணையை கூட ஆரம்பிக்கவில்லை என்பது அத்தகைய குற்றங்களை கேட்பாரின்றிச் செய்யலாம் என்னும் சூழ்நிலையைத்தான் நீடிக்க வைத்துள்ளது என்று அறிக்கை அறிவிக்கிறது.

வன்முறை அடக்குமுறைக்கான அரசியல் உள்நோக்கத்தை அறிக்கை தெளிவாக்குகிறது. போராளிகள், ஆயிரக்கணக்கான அல் கடாபி விசுவாசிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்கள், சிப்பாய்கள் மற்றும் வெளிநாட்டு கூலிப்படையினர்என்று கூறப்படுபவர்களைக் காவலில் வைத்தனர்; அவர்களில் பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர், அல்லது காவலில் முறைகேடாக நடத்தப்பட்டனர்: இதையொட்டி சிலர் இறந்துபோயினர். ஏராளமான அல்-கடாபி விசுவாசிகள் எனச் சந்தேகத்திற்கு உட்பட்டவர்கள் கைப்பற்றவுடன் சட்டத்திற்குப் புறம்பாக கொல்லப்பட்டனர்; அவர்களுள் லிபியத் தலைவரும் அவருடைய மகன்களில் ஒருவரும் அடங்குவர். போராளிகள் வீடுகளைக் கொள்ளையடித்துத் தீக்கிரையாக்கினர்; பழிவாங்கும் தாக்குதல்கள் இன்னும் பிற பதிலடிகளில் அல்-கடாபி ஆதரவாளர்கள் என்று கூறப்பட்டவர்களுக்கு எதிராக நடத்தினர்; பல்லாயிரக்கணக்கான மக்களை வற்புறுத்தி இடம் மாறச் செய்தனர்.

கடாபி அகற்றப்பட்டதிலிருந்து, போராளிகள் எந்தத் தடையும் இன்றி செயல்பட்டு வருகின்றனர்; மக்களைக் கைப்பற்றி இரகசிய காவல் மையங்களில், விசாரணை ஏதும் இன்றி, அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதன் சட்டபூர்வத்தன்மையை சவால் விட வழிவகையின்றி இருத்தப்பட்டுள்ளனர். காவலில் உள்ளவர்களுக்கு வக்கீல்களை அணுகும் உரிமை கொடுக்கப்படவில்லை, பல நேரங்களிலும் அரசாங்க வக்கீல் அலுவலகமே நீதித்துறை அதிகாரமாகச் செயல்படுகிறது.

மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் நூற்றுக்கணக்கான சித்திரவதைப் பாதிப்பாளர்களை பேட்டி கண்டனர்; இவர்கள் திரிப்போலி, பெங்காசி, அல்-ஜவியா, கர்யன், மிஸ்ரடா, சிர்ட்டே ஆகிய இடங்களில் சிறையில் உள்ளனர்; இவர்களைத் தவிர, சித்திரவதைக்குப்பின் காவலில் இறந்தவர்களின் குடும்பங்களையும் பேட்டி கண்டனர். கண்ணுக்குத் தெரியும் காயங்கள் போன்றவையும் மருத்துவ அறிக்கைகளும் சித்திரவதை பற்றிய சான்றுகளை உறுதிப்படுத்தின. பல நேரமும் பாதிப்பாளர்களும் தங்கள் நிலைமையை காயங்களைக் காட்டும்போதுகூட கூறுவதற்குப் பெரிதும் பயந்தனர்.

கிட்டத்தட்ட 2,400 பேர்கள் NTC யின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள சிறையில் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது; ஆனால் இன்னும் ஆயிரக்கணக்கானவர் உத்தியோகபூர்வ லிபிய இராணுவம் மற்றும் பொலிஸ் மற்றும் போராளிப் பிரிவுகள் என எந்த சட்டபூர்வ அமைப்பிற்கும் வெளியே இருந்து செயல்படுபவற்றினாலும் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். சிறிதும் குறையாமல் கைதுகள் தொடர்கின்றன; இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து எல்லையற்ற மருத்துவர்கள், மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு மற்றும் இப்பொழுது மனித உரிமைகள் அமைப்பு ஆகியவை தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டும், கைதுகள் குறைவில்லாமல் தொடர்கின்றன.

இத்தகைய முறையில் மிருகத்தனம் மற்றும் கொலை நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கு, NTC தலைவர்கள் மட்டுமின்றி, அவர்களுடைய ஏகாதிபத்திய எஜமானர்களாகிய ஜனாதிபதி ஒபாமா, பிரித்தானியாவின் பிரதம மந்திரி டேவிட் காமெரோன், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி இன்னும் பிற நேட்டோ குண்டர்கள் லிபியாவை எட்டு மாதக் காலம் இரக்கமின்றிக் குண்டுத் தாக்குதல்களுக்கு உட்படுத்தியவர்கள், மற்றும் ஆயுதமேந்திய ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டவர்கள், பேர்சிய வளைகுடாவின் வலதுசாரி ஷேக் ஆட்சிகள் நியமித்த கூலிப்படைகள் மற்றும் முகவர்களின் தலைமை ஆகியோர்களும் பொறுப்பாவர்.

அமெரிக்க-நேட்டோ படைகள் லிபியாவில் நடத்திய தலையீட்டில் இருந்த குற்றத் தன்மையையும் இது அம்பலப்படுத்துகிறது: அதேபோல் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும் ஆர்வத்துடன் மனித உரிமைகள் என்னும் ஒபாமா நிர்வாகமும் அதன் நேட்டோ பங்காளிகளும் அளித்த போலிக் காரணங்களை தழுவிய மத்தியதர வர்க்க இடது அமைப்புக்களின் குற்றத்தன்மையையும் அம்பலப்படுத்துகிறது.

இந்த அரசியல் சாத்தான்கள், மேற்கத்தைய சக்திகளின் தலையீடு ஒன்றுதான் பெங்காசியில் தவிர்க்க முடியாத குருதி கொட்டுதலைத் தடுக்கமுடியும் என்று கூறினர். போருக்கான உண்மை நோக்கத்தை இவர்கள் மூடிமறைத்தனர். இப்பொழுது பெரிய எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் லிபியாவின் பரந்த எண்ணெய் வளம்தான் அது. இப்பொழுது பெருகும் இறப்பு எண்ணிக்கை, சித்திரவதை, தவறான சிறைவாசம் ஏகாதிபத்திய விடுதலையாளர் குறித்து அவைகள் மௌனம் சாதிக்கின்றன.

மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையிலுள்ள அத்தியாயத் தலைப்புக்கள் அடக்குமுறையின் பரப்பைத் தெரிவிக்கின்றன: சட்டபூர்வ வடிவமைப்பிற்குப் புறத்தே காவல்கள்; சித்திரவதையும் பிற தவறாக நடத்தப்படுதல்களும்; காவலில் இறப்புக்கள்; பழிவாங்கும் தாக்குதல்கள் மற்றும் கட்டாயமாக இடம் பெயரவைத்தல்; தடையின்றி எதையும் செய்யலாம் என்னும் கொடூரத்தன்மை தொடர்தல்.

அறிக்கையின் பெரும்பகுதி சித்திரவதைக்குட்பட்ட பாதிப்பாளர்கள் கொடுத்த கொடூரத்தன்மை உடைய சாட்சியங்கள், அவர்களுடைய அடையாளத்தைக் காப்பதற்கும் போராளிகளிடம் இருந்து பதிலடி பெறுவதைத் தடுப்பதற்குமாக எழுத்துக் குறிப்பு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளவர்களுடையது உள்ளன. அவற்றில் ஒரு சில உதாரணங்கள் போதுமானவை:

 

ஒரு 29 வயது முன்னாள் இராணுவச் சிப்பாய்:

... அவர்கள் என்னை ஒரு படுக்கையில் முதுகுபடுமாறு படுக்கக் கட்டாயப்படுத்தினர், என்னுடைய கைகளும் கால்களும் கட்டில் சட்டத்துடன் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் என் முகத்தின் மீது குத்துக்களால் தாக்கப்பட்டேன். அதன் பின் அவர்கள் என்னை என் பாதங்களில் ஒரு பிளாஸ்டிக் நீர்ப்பாய்ச்சிக் குழாயினால் அடித்தனர். உடலில் பல பகுதிகளில், என் தலை உட்பட, மின் அதிர்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டேன். இதில் என் இடது தோள், மார்பு ஆகியவை அடங்கும். அவர்கள் பயன்படுத்திய கருவி 50 சென்டிமீட்டர் நீளமுடைய கறுப்புக் கம்பி ஆகும். என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரரும் இத்தகைய மின் அதிர்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

ஒரு 25 வயது கணினிப் பணி செய்பவர், கடாபி ஆதரவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டவர்:

 

காவல் மையத்திற்கு அழைத்துச் செல்லும்போதே அவர்கள் என்னை அடிக்கத் தொடங்கி விட்டனர். மட்டமான சொற்களையும் பயன்படுத்தினர். காவல் மையத்தில் ஒரு கதவின் இரும்புக் குறுப்புத் தடுப்பில் என்னைத் தொங்கவிட்டனர்; தடியால் அடிக்கப்பட்டேன், ஒரு கேபிளினாலும் அடிக்கப்பட்டேன். இது பல மணி நேரம் நீடித்தது. பின்னர் வேறு ஒரு அறைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டு எனக்கு மின்சார அதிர்ச்சிகள் கொடுக்கப்பட்டன. நான் முதுகுப் புறமாகத் தரையில் படுத்துக்கொண்டிருந்தபோது அவர்கள் என் கால்களைக் கட்டினர். இரு உயிர்த்த மின்கம்பிகள் என்னுடைய கால் கட்டைவிரல்களில் பிணைக்கப்பட்டன. ஆறு அல்லது ஏழு முறைகள் அவர்கள் மின்சார அதிர்ச்சியைக் கொடுத்தனர். இதன்பின் ஒரு தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்; அங்கு மூன்று நாட்கள் தங்கினேன்.

ஒரு 26 வயது சிகரெட் விற்பனையாளர், கடாபியின் சொந்த ஊரான சிர்ட்டேயில் காவலில் வைக்கப்பட்டவர், பின்னர் மிஸ்ரடாவிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

 

ஒருவர் ஒரு கண்ணாடிப் போத்தலை எடுத்து என் தலையில் அடித்தார். அதன்பின் அவர்கள் என்னைத் தரையில் உட்காருமாறு கட்டாயப்படுத்தி, என் கைகளைப் பின்புறமாகக் கட்டினர். என் தலையில் உதைத்தனர். என் உடல் முழுவதும் நீர்க்குழாயினால் அடித்தனர்; மரக்கட்டை மற்றும் கார்களில் பயன்படுத்தப்படும் கேபிளும் உபயோகிக்கப்பட்டன. எனக்குத் தெரியாத நபர்களைப் பற்றி என்னிடம் தகவல் அறிய விரும்பினர்.

மிஸ்டரடாவிற்கு அருகே மிஸ்ரடப் போராளிகள் படையினரால் பழிவாங்கும் கொலைகளுக்கு இலக்கான, அதிகமான கறுப்பு லிபியர்கள் வசிக்கும் சிறுநகரமான டவர்காவில் இருந்து 26 வயது வயது சிப்பாய் கூறியது:

 

ஐந்து பேர் சிவிலிய உடை உடுத்து அலுவலகத்தில் இருந்தனர். டவர்காவில் இருந்து வந்தேன் என்பதற்காக என்னை அவமதித்தார்கள். நான் சிர்ட்டேயில் ஒரு வீரராக உள்ளேன், மிஸ்ரடாப் போரில் பங்கு பெறவில்லை என்றேன். ஆனால் அவர்கள் என்னை நம்பவில்லை. மாறி மாறி அவர்கள் என்னை அடித்தனர், சாட்டையாலும் அடித்தனர். இப்பொழுது வீங்கியுள்ள என் வலது கையிலும் தலையிலும் அடித்தனர். கதவின் உச்சியில் இருந்து என்னைத் தொங்கவிட்டார்கள்; கைகளைக்கட்டி ஒரு மணி நேரத்திற்கு இது நீடித்தது. அப்பொழுது அவர்கள் என்னை அடித்துக் கொண்டே இருந்தனர். அவர்கள் என்னை உதைக்கவும் செய்தனர். இன்னும் என் இடது பக்கம் வலிக்கிறது. சிறையில் இந்த அறைக்குக் கொண்டு வருவதற்குமுன் என் கண்களையும் கட்டினர்.

 

ஜனவரி 29 அன்று மிஸ்ரடாவில் உள்ள வஹ்தா காவல் மையத்தில் சென்றிருந்தபோது:

 

மூன்று போராளிகள் அடிக்கப்படுவதையும், சில காவலர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு வந்து முற்றத்தில் வெளியேறக் காத்திரப்பவர்களை அச்சுறுத்தியதையும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கவனித்தது. ஒரு போராளி ஒரு வயதான காவலில் இருப்பவரைக் கொல்லப்போவதாக அச்சுறுத்தினார்; பிந்தையவர் பெரிதும் பயந்து சுவருக்கு எதிரே உட்கார்ந்து, அழுதுகொண்டிருந்தார். அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் பிரதிநிதி அச்சுறுத்தியவருக்குச் சவால் விட்டதும், அந்த தவர்கா விடுவிக்கப்படக்கூடாது, அப்படியானால் நாங்கள் அவர்களைக் கொன்றுவிடுவோம் என்று பதில் கொடுத்தார்.

மிருகத்தனத் தாக்குதல்களுக்குக் குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டவர்களில் குறிப்பாக  குறிப்பாக Msshashiya, Qawalish  பழங்குடி மக்கள், நபுசா மலைப்பகுதியில் இருந்து வந்தவர்களும், துணை சகாரா ஆபிரிக்கப் பகுதிகளில் இருந்து வந்து குடியேறிய தொழிலாளர்களும் இருந்தனர். இவர்கள் பொறுப்பற்றமுறையில் கடாபியின் கூலிப்படையினர் என்று முத்திரையிடப்பட்டனர்; பெரும்பாலும் இவர்கள் லிபியாவிற்கு வேலை தேடித்தான் வந்தவர்கள் ஆவர்.

மனித உரிமைகள் அமைப்பு சென்றிருந்த ஒரு சிறையில் 900 காவலில் வைக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 400 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், முக்கியமாக துணை சகாரா ஆபிரிக்கப் பகுதியில் இருந்து வந்தவர்கள். தாங்கள் கைது செய்யப்பட்டிருக்கையிலும் விசாரணையின்போதும் சித்திரவதைக்கு உட்பட்டதாகப் பலரும் விவரித்தனர். மற்ற ஆபிரிக்காவில் இருந்து குடியேறியவர்கள், போரில் இருந்து தப்பியோட முயற்சிக்கையில் காவலில் வைக்கப்படாமலேயே அடிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த அறிக்கை, காவலில் சித்திரவதைக்குட்பட்டு இறந்த 12 பேரைப் பற்றிய விவரங்களைக் கூறுகிறது. இவர்கள் 26ல் இருந்து 62 வயது வரை உள்ள ஆண்கள் ஆவர்; ஒரு ஆலைத் தொழிலாளி, ஒரு பள்ளி இயக்குனர், ஒரு முன்னாள் பொலிஸ்காரர், ஒரு முன்னாள் இராணுவக் கேர்னல் மற்றும் பிரான்ஸில் முன்னாள் லிபியத் தூதராக இருந்தவர் ஆகியோர் அடங்குவர். மற்ற கொலைகளில் டவர்காவில் இருந்து இடம் பெயர்ந்த அகதிகள் நடத்திய எதிர்ப்பின் வன்முறைத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அடங்குவர். இதில் அரை டஜனுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்டவர்களில் பல குழந்தைகளும் இருந்தனர்.

நீதிக்குப் புறம்பான தூக்கிலிடுதல்களும் நடக்கின்றன; கடாபி மற்றும் அவர் மகன் முடாசிம் ஆகியோர் அக்டோபர் 20 அன்று சிர்ட்டேயில் கைப்பற்றப்பட்டு கொலையுண்டது இதில் அடங்காது. அதற்கு மூன்று நாட்களுக்குப் பின், 65 பேருடைய சடலங்கள் சிர்ட்டேயில் மகரி ஹோட்டலுக்குள்ளும் அதைச் சுற்றியும் எடுக்கப்பட்டன; இந்த இடம்தான் NTC போராளிகள் நகரத்தைத் தாக்குவதற்குத் தளமாகக் கொண்டிருந்தனர். சில சடலங்களில் கைகள் உடலுக்குப் பின் கட்டிவைக்கப்பட்டிருந்தன; பலரும் தலையில் சுடப்பட்டிருந்தனர். இந்த வெகுஜன கொலைகள் பற்றி விசாரணை ஏதும் இல்லை என்பது வெளிப்படை.

கட்டுரையாளர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்:

Ongoing atrocities by NATO-installed Libyan regime
 

Former Gaddafi official tortured to death in Libya