WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஸ்பெயின்
ஸ்பெயினின் நீதிபதி கார்சோன் மீது பிராங்கோவின் வாரிசுகள் வழக்கு தொடர்கின்றனர்
Alejandro López and Chris Marsden
17 February 2012
use
this version to print | Send
feedback
ஸ்பெயினின் அதிகாரிகள் நீதிபதி பால்டசார் கார்சோன் மீது வழக்குத்
தொடர்ந்திருப்பது அரசியல் மற்றும் அறநெறி வழிகளில் இழிந்த செயல் ஆகும். ஏற்கனவே 11
ஆண்டுகள் பதவி வகிப்பதற்கு தடைசெய்யப்பட்டுவிட்ட நிலையில், ஜெனரல் பிரான்ஸிஸ்கோ
பிராங்கோவின் பாசிச ஆட்சி நடத்திய மிருகத்தனமான குற்றங்களின் விளைவினால், இப்பொழுது
இவர் ஒருவர்தான் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார்.
நீதிவிசாரணை பாதையை தடைசெய்ததாகவும், 1977ம் ஆண்டு பொதுமன்னிப்புச்
சட்டத்தை உடைக்கும் வகையில் 1936-1939 ஸ்பெயினின் உள்நாட்டுப்போரில் நடத்தப்பட்ட
114,000 மக்களுக்கு மேலான கொலைகளைப் பற்றிய விசாரணைகளை நடத்துவதாகவும் கார்சோன்
மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அப்போரின்போது பிராங்கோவின் பாசிச சக்திகள் பெற்ற
வெற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக மாஸ்கோவில் இருந்த ஸ்ராலினிச ஆட்சி, அதன் இரகசியப்
போலிஸ் மற்றும்
PCE
எனப்படும் ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தொடர்ந்திருந்த
எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள்தான் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போருக்கான அரங்கை
அமைத்தன. பிராங்கோவின் அரசு யுத்தத்தில் தப்பிப்பிழைத்ததுடன், அமெரிக்க
ஏகாதிபத்தியத்துடன் இணைந்து அச்சர்வாதிகாரி 1975 இல் இறக்கும்வரை நீடித்திருந்தது.
பொதுமன்னிப்பினால் ஒரு பாசிஸ்ட் கூட குற்றங்களுக்காக நீதிக்கு
முன்பு நிறுத்தப்படவில்லை. அக்குற்றங்களுள் 300,000 அரசியல் எதிர்ப்பாளர்கள்
கொலைசெய்யப்பட்டனர், 500,000 பேர் காவலில் வைக்கப்பட்டனர் மற்றும் 500,000
நாடுகடத்தப்பட்டனர் என்ற மதிப்பீடுகள் அடங்கும். கார்சோன்மீது குற்றம்
சாட்டுபவர்கள் பாசிச
Falange
மற்றும் கொடூரமான பெயரைக்கொண்ட வலதுசாரித் தொழிற்சங்கமான சுத்தமான கரங்கள் -Clean HandsClean- ஆகியவை அடங்கும். இவற்றிற்குப்பின்
ஆளும் வலதுசாரி மக்கள் கட்சி -PP-
உள்ளது. இக்கட்சியில் பிராங்கோ கட்சியின் அரசியல் பின்தோன்றல்கள் உள்ளனர்.
கார்சோன்மீது வலதுசாரிகள் வழக்குத் தொடுக்கக்கூடியதாக இருந்ததற்கு
அரசியல் பொறுப்பு
PSOE
எனப்படும் சோசலிஸ்ட் கட்சியிடமும் மக்கள் கட்சிக்கு மாற்றாக அதற்கு
ஆதரவை கொடுத்த பல போலி இடது அமைப்புக்களிடையேயும்தான் உள்ளது.
2008ம் ஆண்டு கார்சோன் ஜூலை 17, 1936 இராணுவ ஆட்சி மாற்றத்திற்குப்
பொறுப்பானவர்கள்மீது முதல் விசாரணையைத் தொடங்கினார். இதில் 114,266 பேர் மறைந்து
போனது குறித்த ஆய்வு அடங்கியிருந்தது. இறுதியில் பிராங்கோ, 44 முன்னாள் ஜெனரல்கள்,
மந்திரிகள் மற்றும் 10
Falange
கட்சி உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அவர் 19 அடையாளம் காட்டப்படாத ஏராளமானவர்களின் கல்லறைகள் மீண்டும் திறக்கப்பட்டு
உடல் சோதனைகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலம் நடத்திய
பிரச்சாரங்கள், 2004ம் ஆண்டு மக்கள் கட்சி தேர்தலில் தோற்றதை அடுத்து புத்துயிர்
பெற்றன.
ஈராக் போருக்கு மக்கள் கட்சி அரசாங்கம் கொடுத்த ஆதரவு, அதன்
தொழிலாளர் வர்க்க விரோத சமூகக் கொள்கைகள் ஆகியவற்றிற்கு பாரிய எதிர்ப்பினால் அந்த
ஆண்டு சோசலிஸ்ட் கட்சி பதவிக்குக் கொண்டுவரப்பட்டது. மாட்ரிட்டில் இஸ்லாமிய
அடிப்படைவாதிகள் பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல் செய்தபின், மக்கள் கட்சி
வாஷிங்டனின் குற்றம் சார்ந்த போருக்கு ஆதரவாக ஸ்பெயினை இழுத்துத்சென்றதற்கு
குற்றம்சாட்டப்பட்டது.
சோசலிஸ்ட் கட்சி ஸ்பெயின் முதலாளித்துவத்தின் நலன்களுக்குத் தான்
போராடும் பணிக்கு முகங்கொடுத்திருப்பதாகத் தன்னைக் காண்கிறது. அதே நேரத்தில் மக்கள்
விரோதப்போக்கையும் சமாதானப்படுத்த முயல்கிறது. சில சமூக, கலாச்சார பிரச்சினைகளில்
இடது போல் காட்டிக் கொண்டது, தன்னுடைய வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு
மாத்திரையில் சர்க்கரையைச் சேர்ப்பது போல்.
அத்தகைய வெகுஜனங்களை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்று
2007ல் வரலாற்று ஞாபகார்த்த சட்டத்தை
-Law
of Historical Memory-
நிறைவேற்றியதாகும். இது பிராங்கோ ஆட்சியின் குற்றங்களைக் கண்டித்து,
சர்வாதிகாரியைக் குறித்த சில நினைவு நிகழ்ச்சிகளைத் தடைசெய்து, ஏராளமான கொலை
செய்யப்பட்டவர்களின் கல்லறைகள் மீண்டும் தோண்டப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின்
அடையாளங்களைக் காண்பதிலும் அரசாங்க உதவியைக் கொடுத்தது.
இதன் அடிப்படையில்தான் கார்சோன் தன் 2008 விசாரணையைத் தொடங்கினார்.
ஆனால் எல்லா முக்கிய பிரச்சினையிலும் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் வலதிற்குமுன்
சரணடைந்து நின்றது. அதுவோ எதிர்த்தாக்குதல் ஒன்றை இராணுவம், செய்தி ஊடகம்,
கத்தோலிக்கத் திருச்சபை ஆகியவற்றின் சில பிரிவுகள் மூலம் நடத்தியது.
மதிப்பிழிந்த வகையில் வரலாற்று ஞாபகார்த்த சட்டத்தை அரசியல், சமய
மற்றும் சிந்தனைப் போக்கு வன்முறை என்பதை உள்நாட்டுப் போரின் இரு பக்கங்களிலும்
அங்கீரித்தது. ஆனால் அப்படியும் மக்கள் கட்சியும் 1977 பொது மன்னிப்புச்
சட்டத்தையும் அதன்
“மறந்துவிடுவோம்
என்னும் உடன்படிக்கையையும்”
“Pact of Forgetting”
இந்நடவடிக்கை மீறுகிறது எனத் தாக்கியது. அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டது
கம்யூனிஸ்ட கட்சி,
சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றின் பங்குடன் தொழிலாள வர்க்கத்தை
வரலாற்றுரீதியாக காட்டிக்கொடுத்த நிகழ்வாகும்.
இப்பிற்போக்குத்தன உடன்பாடு பிராங்கோவின் ஆட்சியில் இருந்து
“அமைதியான
முறையில் ஜனநாயகத்திற்கு மாற்றம்”
என்பதை உத்தரவாதம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில்
ஏராளமான தொழிலாளர்கள்
Falange
உடன் கணக்குத் தீர்க்கப்படவேண்டும் என்று கோரினர். மாறாக அவர்கள்
“மறந்து,
மன்னிப்போம்”
என்று நடந்துகொள்ளுமாறு கூறப்பட்டு, முதலாளித்துவ ஆட்சி
உறுதியானவுடன் வலதுசாரி தன் செயற்பாட்டைக் காட்ட அனுமதித்தனர்.
நவம்பர் 17, 2008இல் கார்சோன் அரச வழக்குத்தொடுனர்கள் அவருடைய
அதிகாரவரம்பைக் கேள்விக்கு உட்படுத்தியவுடன் விசாரணையைக் கைவிட ஒப்புக் கொண்டார்.
ஆனால் அவர் குற்றவழக்கையும், கூர்டெல் வழக்கையும்-
Gürtel case-
விசாரிக்கத் துவங்கியிருந்தார். அது முக்கிய மக்கள் கட்சி நபர்களுக்கு வர்த்தகரான
பிரான்சிஸ்கோ கொரீயா கொடுத்த இலஞ்சங்களைப் பற்றியது ஆகும். 2010 தலைமை நீதிமன்றம்
கார்சோனுக்கு எதிரான மூன்று குற்ற வழக்குகள் ஏற்கத்தக்கவை என அறிவித்தது. ஒன்று
அவர் இலஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டியது; மற்றொன்று பொது மன்னிப்புச் சட்டத்தை
மீறியதற்கு; மூன்றாவது கூர்டெல் வழக்கில் சட்டவிரோத ஒற்றுக் கேட்டலுக்கு
உத்தரவிட்டதாக என இருந்தது.
இதன் பின்னணியில் உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் நிலச் சொத்துக்
குமிழின் சரிவும் ஸ்பெயினை மிகவும் கடுமையாகத் தாக்கியுள்ளன. சோசலிஸ்ட் கட்சி இதை
எதிர்கொள்ளும் வகையில் சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்தியது. இதனால் அது
பெற்றிருந்த எஞ்சியிருந்த மக்கள் ஆதரவையும் இழந்தது. இதனால் ஒரேயொரு தேர்தல்
மாற்றீடாக இருந்த ஸ்ராலினிச ஐக்கிய இடது கூட்டணி மற்றும் பிற போலி
“இடது”
குழுக்கள், சோசலிஸ்ட் கட்சிக்கு நீண்டகால ஆதரவு கொடுத்த சான்றுகளை
உடையது என்பதால், மக்கள் கட்சி நவம்பர் 2011 பொதுத் தேர்தலில் பெரும் வெற்றியை
அடைந்தது.
மக்கள் கட்சியின் வெற்றிக்குப் பிந்தைய எதிர்ப்புரட்சித்
தாக்குதலில் கார்சோன் மிக உயர்மட்ட பாதிப்பாளர் ஆவார். ஆனால் இந்த வழக்கில் பரந்த
பாகுபாடுகளும் உள்ளன.
தொழிலாளர் வர்க்க எதிர்ப்பை அகற்றுவதற்கு
“மறத்தல்
பற்றிய உடன்பாட்டின்”
விதிகளை அது இன்னும் பயன்படுத்துகையில், ஸ்பெயினின் முதலாளித்துவ வர்க்கம் எதையும்
“மறந்து
மன்னிப்பதாகத்”
திட்டம் எதையும் கொள்ளவில்லை. மாறாக பிராங்கோவின் அரசியல் வாரிசுகள்
இப்பொழுது வரலாற்றின் கடியாரத்தைத் திருப்ப முயல்கின்றனர்.
கார்சோனுக்குக் கொடுக்கப்படும் மரியாதை தொழிலாள வர்க்கத்திற்கும்
இளைஞர்களுக்கும் என்ன வரவிருக்கின்றது என்பது குறித்த மங்கலான பிரதிபலிப்புத்தான்.
1930களுக்குப் பின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக் காலத்தில், மக்கள் கட்சி
மில்லியன் கணக்கான மக்களை வறுமை, வேலையின்மை, வீடற்ற நிலை ஆகியவற்றில்
தள்ளுவதற்குத் மிருகத்தனமான தாக்குதலை தயாரித்து வருகிறது. அடுத்த மாத
வரவுசெலவுத்திட்டத்தில் 16.5 பில்லியின்
யூரோ
(அமெரிக்க$21.7 பில்லியன்) வெட்டுக்கள், ஊதியக் குறைப்புக்கள் 15%, வேலையில்லாத
இளைஞர்களுக்கு வீட்டு உதவிநலன்கள் நிறுத்தப்படல், அற்பத்தனமான 641.40
யூரோ
($842.38)குறைந்தப்பட்ச மாத வருமான வரம்பு என்று நிர்ணயித்தல் ஆகியவை உள்ளன. இவை
அனைத்தும் தொழிலாள வர்க்கத்தின் மூன்றில் ஒரு பகுதியினரை முழுமையாகப் பாதிக்கும்.
ஸ்பெயின் மக்களில் ஐந்தில் ஒரு பங்கை விட அதிகமானவர்கள்
வேலையின்மையில் இருக்கும் சூழலில்
—அதாவது
கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மக்கள்—
மற்றும் 16-25 வயதில் உள்ளவர்களில் பாதிப்பேருக்கும் வேலையில்லாத
நிலைமையில், இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக முறையில் சுமத்தப்பட முடியாது.
வேறுவிதமாகக் கூறினால், பிராங்கோ சகாப்தத்தின் குற்றங்களை மறைக்கும் முயற்சிகள்
வரலாற்று அக்கறைகளினால் மட்டும் உந்துதல் பெறவில்லை.
ஸ்பெயினின் ஆளும் உயரடுக்கிற்குள்ளேயே பலரும் சமூகப் புரட்சி
மீண்டும் உண்மையான, அதிகரித்துவரும் ஆபத்தாகிவிட்டது என்ற முடிவிற்கு வந்திருப்பர்.
தேவையானால் இந்த அச்சறுத்தலை எதிர்கொள்ள பெரும் அடக்குமுறை, சர்வாதிகாரத்திற்குத்
திரும்புதல் என்பதற்கு அவர்கள் தயாராக உள்ளனர். பிராங்கோவின் வாரிசுகளுக்கு எதிராக
தொழிலாள வர்க்கம் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன
அரசியல் இயக்கம் ஒன்று இப்பொழுது கட்டமைக்கப்படுவது அவசரமானதாக உள்ளது. |