WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
US
navy prepared for war against Iran
அமெரிக்க கடற்படை ஈரானுக்கு எதிரான போருக்கு தயாராக உள்ளது
By
Peter Symonds
14 February 2012
ஈரான் மீது பெருகிய முறையில் அச்சறுத்தும் அமெரிக்க வனப்புரை
ஞாயிறன்று செய்தி ஊடகங்களிடம் பேர்சிய வளைகுடாவில் பஹ்ரைனில் தளம் கொண்டுள்ள
அமெரிக்க ஐந்தாம் கடற்படையின் தளபதியான அட்மைரல் மார்க் பாக்ஸ் தெரிவித்துள்ள
கருத்துக்களில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.
அமெரிக்க கடற்படை
“ஜனாதிபதிக்கு
பலவித விருப்பத் தேர்வுகள் கொடுக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது,”
தெஹ்ரான் எடுக்கும் எத்தகைய விரோத நடவடிக்கையையும் எதிர்கொள்ளுவதற்கு
“இன்று
அது தயார்நிலையில் உள்ளது”
என்று நிருபர்களிடம் பாக்ஸ் கூறினார்.
“மிகத்
துல்லியமான, பேராபத்து தரும் ஆயுதங்களை நாங்கள் கொண்டுள்ளோம், அவை மிகத்
திறமையானவை, நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். எந்த நெருக்கடிக்கும் தயாராக உள்ளோம்”
என்றார் அவர்.
“தற்காப்பு”
என்ற கருத்துக்களில் கூறப்பட்டிருந்தாலும், பாக்ஸின் கருத்துக்கள் அதிகம்
மறைக்கப்படாத அச்சறுத்தலைத்தான் கொண்டிருந்தன. ஜனாதிபதி பாரக் ஒபாமா பலமுறையும்
அமெரிக்கா ஈரானை ஒரு அணுவாயதத்தை தயாரிக்க விடாது என்றும் அத்தகைய நிகழ்வு
நடக்காமல் இருக்க
“அனைத்து
விருப்பத் தேர்வுகளும் மேசையின் மீது உள்ளன”
என்று கூறிவந்துள்ளார். போர் உட்பட
“எந்த
நெருக்கடிக்கும்”
ஐந்தாம் கடற்படை
“இன்றே
தயாராக உள்ளது”
என்று பாக்ஸ் அடையாளம் காட்டியுள்ளார்.
சமீபத்தில் பென்டகன்,
விமானத் தளம்
கொண்ட
போர்க்கப்பல் குழுக்களை பேர்சிய வளைகுடா அல்லது அதற்கு அருகே ஒன்றில் இருந்து
இரண்டாக அதிகரித்துள்ளது; இதையொட்டி மாபெரும் வான் மற்றும் கடல் தாக்குதலை
ஈரானுக்கு எதிராக அது நடத்தும் திறன் இருமடங்காக ஆகியுள்ளது.
USS Abraham Lincoln
ஜனவரி 22ம்திகதி ஒரு பெரிய அமெரிக்க, பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு
போர்க்கப்பல்கள் புடைசூழ வளைகுடாவிற்குள் நுழைந்தது.
வாஷிங்டனில் தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரச்சாரமான ஈரானிய ஆட்சி ஒரு
முரட்டு நாடு, ஆக்கிரமிப்பை செய்ய உறுதி கொண்டுள்ளது என்பதை வெட்கம் கெட்டத்தனமாக
அமெரிக்க செய்தி ஊடகம் பலமுறை கூறுவதுடன், ஈரான் தன் கட்டுப்பாட்டின் கீழ் பெரிய
இராணுவ அச்சுறுத்தல்களையும் கொண்டுள்ளது என்று வனப்புரையாகவும் கூறுகிறது.
உண்மையில் மிகப் பரந்த அளவில் அமெரிக்காக கொண்டுள்ள மேன்மையான தாக்கும் சக்தி,
குறைந்த வரம்புடைய, பழைய ஈரானிய கடற்படை மற்றும் விமானப்படைகளை
விரைவில் அழித்துவிடும். தான் அணுகுண்டு தயாரிக்கப்படுதல் அல்லது அதற்கான
தயாரிப்புக்களை நடத்துதல் என்னும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை ஈரான் பலமுறையும்
நிராகரித்துள்ளது. ஈரானை அரக்கத்தனமாக சித்தரிப்பதின் ஒரே நோக்கம் அமெரிக்க மற்றும்
இஸ்ரேல் செய்தி ஊடகங்களில் வெளிப்படையாக விவாதிக்கப்படும் ஆக்கிரமிப்பு என்னும்
குற்றம் சார்ந்த செயலை நியாயப்படுத்துவதுதான்.
தன்னுடைய பேட்டியில், அட்மைரல் பாக்ஸ் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடும்
ஈரானிய அச்சுறுத்தல் குறித்துக் கேள்விகள் கேட்பட்டதற்கு விடையிறுத்தார். ஒரு முழு
அமெரிக்க அல்லது ஐரோப்பியத் தடை அதன் எண்ணெய் ஏற்றுமதிகள் மீது
சுமத்தப்படும்போதுதான்
—ஈரானியப்
பொருளாதாரத்தை அழிக்கக்கூடிய ஒரு பொருளாதாரச்செயல்—
அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரானிய அதிகாரிகள் கூறியிருப்பது
குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா ஏற்கனவே ஈரானுக்கு, ஒரு முறையான கடிதம் உட்பட
பலவற்றின்மூலம், முக்கிய நீர்ப்பாதையை மூடுவது என்பது போருக்கு இட்டுச் செல்லும்
“ஒரு
சிவப்புக் கோடு”
ஆகும் என்று எச்சரித்துள்ளது.
அப்பின்னணியில், பாக்ஸின் கருத்துக்கள் வேண்டுமென்றே தூண்டிவிடும்
தன்மையைக் கொண்டுள்ளன; இவை ஈரானை எதிர்கொள்ள ஊக்கம் அளிக்கின்றனவே ஒழிய
அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அவர் ஈரானின் கடற்படைக்
கட்டுமானம் குறித்து மிகைப்படுத்திப் பேசினார். ஈரானின் பெருகிய நீர்மூழ்கிக்
கப்பல்கள், சிறு அதிவேகத் தாக்குதல் கப்பல்களையும்,
“மிகப்
பெரியச் சுரங்கக் கிடங்குளையும்”
குறிப்பிட்டார். ஈரான்
“ஒரு
தாக்குதுல் நடத்தும் திறன் உடையது”
ஆனால் ஐந்தாம் கடற்படை ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறந்து வைப்பதற்கான
தயார் நிலையில் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
சர்வதேச நீர்நிலைகளில் ஈரான்
மைன்ஸ்களை
போடுதல்
பற்றி
குறிப்பிட்ட அவர், அது
“ஒரு
போர்ச்செயல்”
என்றார். அவர் மேலும் கூறியதாவது:
“எனவே
தேசியத் தலைமையின் இயக்கத்தில் அவ்வாறு நடைபெறாமல் தடுப்போம். தற்காப்பிற்கான
கடமையும் உரிமையும் எங்களிடம் எப்பொழுதும் உள்ளது, இது
“தற்காப்பு”
என்ற பிரிவின்கீழ் வரும்.”
மைன்ஸ்கள்
போடுவதை
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் சற்றே நவீனமுறையில் பயன்படுத்தப்பட்ட சாலையோர
வெடிகுண்டுகளுடன் பாக்ஸ் ஒப்பிட்டார்; மேலும் அமெரிக்கக் கட்றபடை இன்னும்
கட்டப்படுதல் என்பதற்குப் பதிலாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றார். வளைகுடாப்
பகுதியில் இருக்கும் எல்லா அமெரிக்க போர்க்கப்பல்களும் மிக உச்ச தயார் நிலையில்
உள்ளன என்று குறிப்புக்
காட்டிய அவர்,
“என்னுடைய
கப்பல்களில் இருக்கும் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு நான் கொடுக்கும் வழிகாட்டுநெறி
“தற்காப்பிற்கான
உரிமையும், கடமையும் உங்களிடம் உள்ளன”
என்று கூறியிருப்பதுதான்.”
என்றார்.
உண்மையில், பாக்ஸ் கோடிட்டுக் காட்டியுள்ள பெரும் தோற்றம்
போருக்குப் போலிக்காரணம் கொடுக்கும் வகையில் ஒரு அமெரிக்க
தூண்டிவிடும் செயல்தான்
—“ஈரானிய”
மைன்ஸ்கள்
தோன்றியிருப்பது, எரியூட்டும் செய்தி ஊடகப் பிரச்சாரம் மற்றும் ஈரானிய கடற்படைச்
சொத்துக்கள்மீது அமெரிக்கத் தாக்குதல், ஆகியவை அனைத்தும் ஒரு முழு மோதலை விரைவில்
விரிவாக்கலாம்.
ஒரு போர் நடவடிக்கைக்கு உதவக்கூடிய கடற்படை நிகழ்வுகள் பலவற்றைத்
தயாரித்த வரலாற்றை அமெரிக்கா கொண்டுள்ளது. 1964ம் ஆண்டு இழிந்த டொன்கின் வளைகுடா
நிகழ்ச்சி, வியட்நாமிய
PT
படகுகள் அமெரிக்க அழிக்கும் கப்பலை தாக்கியதாகக் கூறப்பட்ட
குற்றச்சாட்டு, மகத்தான இராணுவ நடவடிக்கை இந்தோசைனாவில் தலையிடுவத்கு காங்கிரசின்
ஒப்புதலைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.
வாஷி\ங்டனின்
நோக்கங்களை வெளிப்படையாக அறிந்துள்ள தெஹ்ரான் தன் விடையிறுப்பில் நிதானம்
காட்டியுள்ளது; குறிப்பாக ஈரானுக்குள் நடத்தப்படும் இரகசியப் போரின் பின்னணியில்,
ஈரானின் அணுத்திட்டங்கள் மீது சைபர் தாக்குதல்கள் நடத்துவது தொடர்புடையவற்றில்,
அணுகுண்டு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதில், இன்னும் பல விளக்கப்படாத
முக்கிய இராணுவ, அணுச்சக்தி நிலையங்கள் மீது நடந்துள்ள வெடிகுண்டுத் தாக்குதல்கள்
என்பவற்றில்.
இஸ்ரேலிய அதிகாரிகள் கிட்டத்தட்ட டம்பம் பேசுதல் என்ற நிலையில்,
மோசாட்
இக்குற்றம் சார்ந்த பிரச்சாரத்தின் பின்னணியில் உள்ளது என்பதை பகிரங்கமாக ஒப்புக்
கொண்டுள்ளது. சமீபத்தில் பேராசிரியர் முஸ்தபா அஹ்மதி ரோஷன் ஜனவரி 11ம் திகதி
மோசாட்டால்
எப்படிப் படுகொலை செய்யப்பட்டார் என்பது பற்றிய விவரங்கள் சண்டே டைம்ஸிற்கு
கசியவிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஈரானைப் பதிலடி கொடுக்கத்தூண்டும் இஸ்ரேலிய
முயற்சிகள் ஆகும்; அதை ஒட்டி ஈரானிய அணுச்சக்தி ஆலைகள்மீது இஸ்ரேலிய வான்தாக்குதல்,
நீண்ட தயாரிப்பில் உள்ளது, நடத்தப்படுவதற்கு
போலிக்காரணம் கிடைக்கும்.
நேற்று இரு நிகழ்வுகளுக்கு,
இஸ்ரேல் ஈரான் மீது குறைகூறியுள்ளது: புது டெல்லியின் இஸ்ரேலிய தூதர் ஒருவருடைய
கார் வெடிகுண்டினால் தாக்குதலுக்கு உட்பட்டது, ஜோர்ஜிய தலைநகரான டிபிலிசியில்
இஸ்ரேலிய தூதரக ஊழியருக்கு சொந்தமான வாகனத்தின்மீது குண்டுவைக்க மேற்கொண்ட முயற்சி
என. இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஞமின்
நெத்தென்யாகு
இஸ்ரேல்
“சர்வதேச
அச்சுறுத்தல், ஈரானில் இருந்து வெளிப்படுவதற்கு எதிராக”
தொடர்ந்து செயல்படும் என்று அறிவித்தார். இந்நிகழ்வுகளில் ஒருவரும்
கொல்லப்படவில்லை. தனக்கு தொடர்பு ஏதும் இல்லை என்று தெஹ்ரான் மறுத்துள்ளது; ஈரான்
மீது கறைபடியவைப்பதற்காக இஸ்ரேல் அரங்குபடுத்துவதுதான் இவை என்றும் கூறியுள்ளது.
ஒபாமா நிர்வாகம்,
ஈரானுக்குள் நடத்தப்படும் இஸ்ரேலின் சட்டவிரோத நடவடிக்கைகளில்
தனக்குத் தொடர்பில்லை
என்று உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது. ஆனால் பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகள்
வாஷிங்டனுக்கு இஸ்ரேலுடைய தொடர்பு பற்றி நன்கு தெரியும் என்றும் குறைந்தப்பட்சம்
வாஷிங்டன் இதற்கு பச்சை விளக்கேனும் காட்டியிருக்கும்
என்ற குறிப்பைத்தான் கொடுத்துள்ளனர்.
“தூதரகத்
தீர்வு”
தேவை என்று இன்னும் கூறுகையில், அமெரிக்கா
இஸ்ரேலுடன் ஈரானுக்கு எதிரான போர்த்தயாரிக்களை நெருக்கமாக ஒருங்கிணைத்து வருகிறது.
ஈரானைப் போலல்லாமல், அமெரிக்க இஸ்ரேல் இரண்டுமே தங்கள் பொருளாதார,
மூலோபாய நலன்களை மத்திய கிழக்கில் முன்னேற்றுவிப்பதற்கு ஆக்கிரமிப்பு போர்களை
நடத்திய நீண்ட வரலாற்றை கொண்டுள்ளன. பேர்சிய வளைகுடாவை மயிரிழையில்
தூண்டுவிடும் தன்மையில் நிறுத்தியிருப்பது மற்றும் ஈரானுக்குள் இரகசிய கொலைகளைச்
செய்திருப்பது ஆகியவற்றின் மூலம் இந்த அரசாங்கங்களின் அரசியல் குண்டர்கள் ஒரு
போருக்கான போக்கிற்கு பொறுப்பற்றதனமாக பாதை அமைத்துள்ளனர். |