WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
US-backed regime crushes protest in Bahrain
அமெரிக்க ஆதரவு ஆட்சி பஹ்ரைனில் எதிர்ப்புக்களை
நசுக்குகிறது
By Bill Van Auken
15 February 2012
வளைகுடாத் தீவு நாடான பஹ்ரைனில் உள்ள அமெரிக்க
ஆதரவு முடியாட்சி, பெப்ருவரி 14, 2011 அன்று தொடங்கிய ஜனநாயக
சார்பு எதிர்ப்புக்களை மிருகத்தனமாக அடக்கியதன் முதலாண்டு
நிறைவைக் குறிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்
மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்களை திங்கள்
மற்றும் செவ்வாயன்று உடைப்பதற்காக மோசமான அடக்குமுறையை
கையாண்டது.
பஹ்ரைனின் எதிர்ப்பாளர்கள், ஒரு சுன்னி
முடியரசான சர்வாதிகார அல்-கலீபா ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி
வேண்டும் எனக் கோரியுள்ளதுடன், நாட்டின் மக்களில் 70%
இருக்கும் ஷியா பெரும்பான்மைகளுக்கும் வேலைகள் மற்றும் சம
உரிமைகள் வேண்டும் என்றும் கோரியுள்ளனர்; ஷியாக்கள் முறையாக
பாகுபாட்டிற்கு உட்பட்டுள்ளனர்.
பஹ்ரைனின் தலைநகரான மனாமாவுடன் அதைச்
சுற்றியுள்ள புறநகர்களும் இறுக்கமாக பிடிக்கப்பட்டுள்ள ஒரு
அரசாங்க முற்றுகைக்கு, கலக எதிர்ப்புக் கவசங்கள் ஏந்திய
கார்கள் தெருக்களில் வரிசையாக நிற்பது, ஆயிரக்கணக்கான பொலிஸ்
மற்றும் துருப்பக்களை நிலைப்பாடு கொள்ளவைத்திருப்பது,
கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்திற்கு சமமான
Pearl Roundabout
என்னும் பெருமிதச் சின்ன இடத்தைச் சுற்றிலும்
முள்வேலி என உட்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒருமாத காலமாக
Roundabout
ல்
முகாமிட்டிருந்தனர்; பின்னர் மன்னர் ஹமத் அல்-கலீபாவின்
முடியாட்சி ஆயுத படைகளை கொண்டு அவர்களைக் கலைத்தது. சௌதி
அரேபியா, அரபு எமிரேட்டுக்கள் மற்றும் குவைத்தில் இருந்து
துருப்புக்களும் டாங்கிகளும் பஹ்ரைனை முக்கிய நிலப்பகுதியுடன்
இணைக்கும் பாதை மூலம் கொண்டுவரப்பட்டன; இதைத்தொடர்ந்து
இராணுவத் தாக்குதல் நடைபெற்றது; அதில் 30 ஆண்டுகாலமாக
பஹ்ரைனில் ஒரு அடையாளச் சின்னமாக இருந்த பேர்ல்
Roundabout
இல் இருந்த நினைவுச் சின்னம் அகற்றப்பட்டதும்
அடங்கியது.
திங்களன்று ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்
அடக்கு முறையை எதிர்ப்பதற்காக கடந்த ஆண்டு இராஜிநாமா
செய்திருந்த 18 பாராளுமன்ற பிரதிநிதிகளின் ஷியா எதிர்ப்புக்
கட்சியான அல்வேபக் மனாமாவிற்கு வெளியே ஏற்படு செய்திருந்த
10,000 பேருக்கும் மேலான ஆட்சி அனுமதித்திருந்த எதிர்ப்பில்
இருந்து மீறி வெளிவந்தபோது திங்கள் மோதல்கள் தொடங்கின.
ஆர்ப்பாட்டக்காரர்களை போலிசார் கண்ணீர்ப்புகைக்
குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள் மற்றும்
stun
கையெறிகுண்டுகள் ஆகியவற்றால் தாக்கினர். சில
ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களையும் மொலோடோவ் கலவைபானங்களையும்
பாதுகாப்புப் படைகள் மீது எறிந்த வகையில் இதை எதிர்கொண்டதாகக்
கூறப்படுகிறது.
நாடெங்கிலும் உள்ள முக்கிய ஷியா கிராமங்களையும்
பொலிசார் முற்றுகையிட்டனர்; இதில்
Bilad al-Qadim
மும் அடங்கும்.
செவ்வாயன்று தீவிர அடக்குமுறைகள் தொடர்ந்தன;
பொலிசார்
Pearl Roundabout
இற்கு செல்ல இருந்த அணிவகுப்பு ஒன்றை தடுக்கும்
நோக்கத்துடன் முன்கூட்டிய கைதுகளைச் செய்தனர்; ஆட்சி எதிர்ப்பு
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடம் அளிப்பதாகக் கருதப்படும்
வீடுகள் மீது சோதனைகளையும் நடத்தினர்.
இந்த வன்முறை அடக்குமுறையில் கைது
செய்யப்பட்டவர்களில் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த இரு
மனித உரிமைகள் வக்கீல்களும் அடங்குவர்: சடுதியில் அவர்கள்
நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஓராண்டாக தளர்ச்சியின்றி நடைபெறும்
அடக்குமுறையை அடுத்து இச்சமீபத்திய தாக்குதல்கள் வந்துள்ளன.
பாதுகாப்புப் படைகளால் குறைந்தப்பட்சம் 60 பேர்
கொல்லப்பட்டுள்ளனர்; பஹ்ரைனின் ஜனத்தொகை குறைவாக இருக்கையில்,
இந்த எண்ணிக்கை பல அரபு நாடுகளிலும் காணப்படாத மிக அதிக
தலாநபர் இறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளது. பல மக்கள்
எழுச்சிகள் கடந்த ஆண்டு நடைபெற்றபோது நூற்றுக்கணக்கானவர்களை
காணவில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் அரசியல் கைதிகளாக இன்னமும்
உள்ளனர்; கடுமையான சித்திரவதைக்கு உட்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 2,000 பேர் எதிர்ப்புக்களில்
கலந்து கொண்ட குற்றச்சாட்டுக்களுக்காக அவர்களுடைய வேலைகளில்
இருந்து நீக்கப்பட்டவர்கள் இன்னமும் பணியில் மீண்டும்
இருத்தப்படவில்லை.
செய்தி ஊடகத்தில் இருந்த சிறிய அளவுச்
சுதந்திரமும் முறையாக அடக்கப்பட்டுவிட்டன; செய்தியாளர்கள்
சிறையில் கொல்லப்பட்டுள்ளனர், சித்திரவதைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளனர், ஆளும் முடியரசு பற்றி
எக்குறைகூறலையும் அமைதிப்படுத்துவதற்காக தாக்கவும் பட்டுள்னர்.
அல் வசத்தின் நிறுவனரான கரிம் பகரவி, ஆட்சியின்
கட்டுப்பாட்டின்கீழ் இல்லாத ஒரே செய்தித்தாள், கடந்த ஏப்ரல்
மாதம் பொலிஸ் காவலில் இறந்தார். ஆன்லைன் செய்தியாளர்
அப்துல்ஜலில் அல்சிங்கேஸ், ஒரு உயர்கல்வி மற்றும் மனித
உரிமைகள் ஆர்வலர், கடந்த ஜூன் மாதம் சிறப்பு இராணுவ
நீதிமன்றத்தால் ஆட்சியை பற்றிக் குறைகூறிய கட்டுரைகளுக்காக
(ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டு) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆளும் முடியாட்சியின் மிக இகழ்வான செயல்களில்
47 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ தொழிலாளர்கள்
ஒரு இராணுவ நீதிமன்றத்தின் முன் ஆட்சிக்கு எதிராகச் சதி
செய்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதும் ஒன்றாகும். காவலில்
வைக்கப்பட்டு, சிலர் சித்திரவதை செய்யப்பட்டதற்கும் ஒரே காரணம்
அவர்கள் அரசாங்க அடக்குமுறையினால் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை
அளித்ததுதான். சமீபத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு சற்று முன்னதாக,
ஆட்சி,
சிகிச்சைக்காக கொண்டுவரப்படும் அனைவர்கள்
பற்றிப் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட வேண்டும்
என்னும் ஆணையை அனுப்பிவைத்தது.
ஆளும் முடியரசு மோதல்களுக்கு
“ஒரு
பெரிய பயங்கரவாதக் குழுவினர்”,
“தீவிரவாதிகள்”
மற்றும்
“குண்டர்கள்தான்”
காரணம் என்று கூறியுள்ளது.
இத்தகைய அவதூறு விரைவில் பிரித்தானிய
அரசாங்கத்தாலும் எதிரொலிக்கப்பட்டது; அந்நாட்டின் வெளியுறவு
அலுவலகம் திங்களன்று
“பஹ்ரைனில்
பயங்கரவாதத்திடம் இருந்து ஒரு பொது அச்சுறுத்தல் வந்துள்ளது”
என்ற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவும் பஹ்ரைன் ஆட்சிக்கு ஆதரவைக்
கொடுத்துள்ளது. எதிர்ப்புக்களுக்கு முன்னதாக உயர்மட்ட அமெரிக்க
மத்திய கிழக்குத் தூதர்
Jeffrey Feltman
மனாமாவிற்கு கலந்துரையாடல்களுக்காக இருநாட்கள் பயணமாக
வந்திருந்தார்; இது வரவிருக்கும்
“சிரிய
நண்பர்கள்”
என்னும் அமைப்பின் அடுத்தவாரம் நடக்க இருக்கும் மாநாடு குறித்த
விவாதங்களை நடத்துவதற்காக, சிரியாவில் ஆட்சிமாற்றத்திற்கு
ஆதரவைத் திரட்ட என்று உள்ளது. வெளிவிவகார செயலகத்தின்
செய்தித்தொடர்பாளர் ஒருவர்
Feltman
“மனித
உரிமைகள்”
பிரச்சினையையும் எழுப்பினார் என்று கூறினார்.
உண்மையில், வாஷிங்டன் பஹ்ரைனியாட்சி மற்றும்
அதன் சக முடியாட்சிகள் குறிப்பாக சௌதி அரேபியா ஆகியவை நடத்தும்
அடக்குமுறைக்கு அதன் உட்குறிப்பான ஆதரவைக் கொடுத்துள்ளது. இந்த
ஆட்சிகள் நம்பமுடியாத அளவிற்கு தங்களை சிரியாவில்
“ஜனநாயகத்திற்கான
பாதுகாவலர்கள்”
என்ற கருத்தை முன்வைத்து மேற்கத்தைய
தலையீட்டிற்கு பாதையை அமைக்கின்றன.
அமெரிக்க நலன்களின் பார்வையில் இன்னும்
உறுதியுடன் இருப்பது பஹ்ரைன் அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாம்
பிரிவின் தலைமையகமாக இருப்பதுதான்; இங்கு 6,200
கடற்படையினர்களும், சிவிலிய ஒப்பந்தக்காரர்களும், நாட்டில்
நிலைநிறுத்தப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர்.
இத்தளம் ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர்த்தயாரிப்புக்களுக்கு
முக்கியமான வசதிகளை அளிக்கிறது.
இவ்வகையில் வாஷிங்டன் பஹ்ரனில் நடக்கும்
ஆட்சியின் அடக்குமுறைக்கு ஆதரவு கொடுப்பது, அதே நேரத்தில்
சிரியாவில் அசாத் அரசாங்கம் நடத்தும் அடக்குமுறையை ஒட்டிப்
பதவியில் இருந்து விலக வேண்டும் என்பது தோற்றத்தில் மட்டும்
முரண்பாட்டைக் கொடுக்கவில்லை. இரண்டுமே ஏகாதிபத்திய மூலோபாயமான
அமெரிக்க மேலாதிக்கத்தை அப்பகுதியில் விரிவாக்குதல், ஈரானுடனான
இராணுவ மோதலுக்கு தயாரிப்பு நடத்துதல் என்பவற்றை நோக்கமாகக்
கொண்டதுதான்.
அமெரிக்கா, பிரித்தானியா இரண்டுமே பஹ்ரைனில்
நடக்கும் அடக்குமுறையுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளன.
ஆளும் முடியாட்சிக்கு கிட்டத்தட்ட 1.4 பில்லியன் டாலர்
மதிப்புள்ள ஆயுதங்களை 2000த்தில் இருந்து வாஷிங்டன்
கொடுத்திருப்பதுடன், புதிய ஆயுத உடன்பாடு ஒன்றிற்கு, 53
மில்லியன் டாலர் மதிப்புக் கொண்டதையும் காண விரும்புகிறது.
ஐந்தாம் கடற்படைப் பிரிவு இப்பொழுது ஆட்சியின்
உறுதிப்பாட்டிற்கு இராணுவரீதியான உத்தரவாதம் கொடுத்து
நிறுத்தப்பட்டிருக்கிறது.
தன் பங்கிற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் 2
மில்லியன் டாலருக்கும் மேலான மதிப்புடைய ஆயுதங்களுக்கான
ஏற்றமதி உரிமங்களைக் கடந்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர்
மாதங்களுக்கு இடையே மட்டும் அளித்துள்ளது. இத்தகவல்
Campaign Against Arms Trade
என்னும் அமைப்பினால் தொகுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கை ஒன்று பிரித்தானியா
பஹ்ரனிய ஆட்சிக்கு கண்ணீர்ப்புகைக் குண்டுகள், கையெறிகுண்டுகள்
ஏவும் கருவிகள் மற்றும் துப்பாக்கிகளுக்கான விற்பனைக்கு
அங்கீகாரம் கொடுத்துள்ளது எனக்கூறுகிறது.
கடந்த ஜூலை மாதம் மொர்டோக் தொலைப்பேசி
ஓற்றுக்கேட்டல் தகவல்களை சிதைத்தல் என்ற நிகழ்வுகளுக்கு இடையே
லண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸில் துணை ஆணையர் என்னும் தன் பதவியை
இராஜிநாமா செய்த
John Yates
என்பவர்தான் அடக்குமுறைச் செயல்களுக்கு
ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.
பஹ்ரைன் பொலிஸ் படைகளைச்
“சீர்திருத்துவதற்காக”
முடியாட்சியால் நியமிக்கப்பட்டுள்ள
Yates
டெய்லி
டெலகிராப்பிடம்
பிரிட்டிஷ் பொலிசாரின் தந்திரோபாயமான
“சுற்றிவளைத்தல்”
முறை எப்படி ஆர்ப்பாட்டக்காரர்களை
நசுக்கிவிடும் என்பதை அறிமுகப்படுத்த உள்ளதாகத்
தெரிவித்துள்ளார்.
தன்னுடைய புதிய எஜமானர்களின் கருத்துக்களை
எதிரொலிக்கும் வகையில்
Yates
எதிர்ப்புக்கள்
“வெறும்
காலித்தனம்தான், தெருக்களில் நடத்தப்படும் கலகங்கள்....
வேண்டுமென்றே சேதம் ஏற்படுத்தி பொருளாதாரத்தை அழிக்கும்
முயற்சிகள்தான்”
என்று கண்டித்தார்.
|