சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Socialist Equality Party announces US election campaign

சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தை அறிவிக்கிறது  

By the editorial board 
13 February 2012

use this version to print | Send feedback

அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி 2012 தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறது. சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெரி வைட்; துணை ஜனாதிபதிப் பதவிக்கான வேட்பாளர் பிலிஸ் ஷெரர் ஆவார்.

இன்று உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வைட் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் அடித்தளத்தை விளக்கிக்காட்டியுள்ளார்.

SEP ஒரு புதிய தேர்தல் வலைத் தளத்தையும் தன் வேலைத்திட்டத்தை முன்வைக்கவும், நாடெங்கிலும் தேர்தல் குழுக்களையும், கூட்டங்களையும் ஒழுங்கமைக்கவும் நிறுவியுள்ளது.

candidates
SEP presidential candidate, Jerry White and vice presidential candidate Phyllis Scherrer

52 வயதான வைட் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சோசலிச இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளவராவார். யுனைட்டட் பார்சல் சேர்வீஸில் பணியாற்றியும், நியூ யோர்க் கல்கலைக்கழகத்தில் படித்து வந்தபோதும், 1979ம் ஆண்டு அவர் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பான வேர்க்கர்ஸ் லீக்கில் சேர்ந்தார்.

2008ம் ஆண்டு வைட் ஜனாதிபதி வேட்பாளராக பாரக் ஒபாமா ம்றும் ஜோன் மக்கெயினை எதிர்த்து நின்றார். 2006ல் கட்சியின் காங்கிரஸ் வேட்பாளராக மிச்சிகனின் 12வது காங்கிரஸ் தொகுதியில் கட்சி வேட்பாளராக நின்றது உட்பட அவர் பல தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரதிநிதியாக நின்றிருக்கிறார்.

உலக சோசலிச வலைத் தளத்தின்  எழுத்தாளராக வைட். கார்த் தொழிலாளர்கள், நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் இன்னும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவினரின் போராட்டங்களைப் பற்றி அவர் மிகப் பரந்த அளவில் எழுதியுள்ளார். மிகச் சமீபத்தில் அவர் ஒகையோவின் பின்லேயிலுள்ள மூடப்பட்ட கூப்பர் டயர் நிறுவத்தின் போராட்டத்தை குறித்து எழுதியுள்ளார்.

இத்தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரதிநிதியாக நிற்பதில் நான் பெருமிதம் அடைகிறேன்.என்று WSWS இடம் வைட் தெரிவித்தார். அமெரிக்காவிலும் உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் பெருகிய எதிர்ப்பு உள்ள ஆண்டாக இது இருக்கும். எங்கள் பிரச்சாரம் இப்போராட்டங்களை ஒன்றுபடுத்தி முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தின் பக்கம் திருப்புவதாக இருக்கும்.

48 வயதான பிலிஸ் ஷெரர் பென்சில்வானியாப் பகுதியலுள்ள பிட்ஸ்பர்க்கில் ஒரு பள்ளி ஆசிரியர் ஆவார். பிட்ஸ்பர்க் சாட்டாம் கல்லூரியில் அவர் மாணவராக இருந்தபோதே, 1984ம் ஆண்டு அவர் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்தார். பென்சில்வானியா மற்றும் மேற்கு வேர்ஜீனியாவில் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் எஃகுப்பிரிவுத் தொழிலாளர்களின் போராட்டங்களில் அவர் தீவிரமாகப் பங்கெடுத்துள்ளார். WSWS இன் எழுத்தாளர் என்ற வகையில் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்களின் பொதுக் கல்வியை பாதுகாக்கும் போராட்டத்தைப்பற்றி தகவல்களை அளித்துள்ளார்.

நம் பிரச்சாரம் இந்நாட்டிலும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களிடம் ஆதரவு பெறும் என்பதில் எனக்கு மாபெரும் நம்பிக்கை உள்ளதுஎன்றார் ஷெரர். ஒரு மாற்றத்தை நாடி மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒபாமாவிற்கு வாக்களித்தனர். மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், அந்நிர்வாகமோ வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களில் ஒரு வலதுசாரிக் கருவிதான் என்றுதான் தன்னை வெளிப்படுத்தியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் முதலாளித்துவ அமைப்புமுறை ஒரு வரலாற்றுத்தன்மை நிறைந்த நெருக்கடி, தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் பெருகியுள்ள நிலமை, மற்றும் உலகப்போர் மூளக்கூடும் என்று  பெருகும் ஆபத்து ஆகியவற்றின் நடுவே நடக்கிறது. பிரச்சாரத்தைப் பற்றிய அறிவிப்பு வருவதற்கு ஒரு நாள் முன்பு, கிரேக்கத்தில் பாராளுமன்றம் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கு வாக்களிக்கையில், பொலிசார் நூறாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதினர். அதே நேரத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் சிரியாவிற்கு எதிரான தங்கள் அச்சுறுத்தல்களை அதிகரித்து, ஆட்சிமாற்றத்திற்கான மற்றொரு போருக்குத் அடித்தளத்தை அமைத்து வருகின்றன.

அமெரிக்காவிலேயே முதலாளித்துவத்திற்கு ஒரு பரந்த விரோதப் போக்கு உள்ளது. ஆனால் இருக்கும் அரசியல் நடைமுறையில் அதற்கு எத்தகைய வெளிப்பாடும் இல்லை. ஒருவர்மீது ஒருவர் கண்டனங்களைத் தெரிவித்தல், சகதியை வாரி எறியும் போதும் பின்புலத்தில் ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளின் அனைத்து அடிப்படைத் தன்மைகளிலும் உடன்பட்டுள்ளன. இதற்கிடையில் 2012 தேர்தல்கள் இரு கட்சிகளுடைய கருவூலங்களுக்கும் மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களால் பாரிய நிதியளிப்பு வழங்கப்படுவதால் மேலாதிக்கம் செய்யப்படுகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி இயன்ற மாநிலங்களில் வாக்குப் பதிவுச்சீட்டிற்குள் இடம் பெற முயலும். ஆனால் ஜனநாயகமற்ற தேர்தல்விதிகள் சட்டத்தை ஒட்டி, பல இடங்களில் மனுக்களை அளிப்பதற்கே பல்லாயிரக்கணக்கான கையெழுத்துக்கள் தேவைப்படுவதால் சோசலிசச் சமத்துவக்கட்சி பல மாநிலங்களிலும் கருத்து வெளியீட்டுப் பிரச்சாரங்களை மட்டும் நடத்தும்.

சோசலிச சமத்துவக் கட்சி ஆக்கிரோஷமான முறையில் பிரச்சாரத்தை நடத்த உள்ளதுஎன்று தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் கூறினார். தேர்தல் குழுக்களை நிறுவுவோம், நாடெங்கிலும் பிரச்சாரத்திற்கு ஆதரவாகக் கூட்டங்களை நடத்துவோம். தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் அனைத்திலும் தலையிடுவோம். இத்தகைய ஒரு வெற்றிகரமான பிரச்சாரத்திற்கு சோசலிசத்தின் தேவைக்கான போராட்டத்துடன் உடன்படுவோரின் ஆதரவு தேவைஎன்றார்.

 

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தைப் பற்றிய தகவல்கள், எப்படி ஈடுபடுவது, எப்படி நிதியுதவி அளிப்பது என்பது உட்பட, சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சார வலைத் தளமான www.socialequality.com ல் சோசலிச சமத்துவத்திற்கு 2012ல் வாக்களிக்கவும்என்பதில் காணப்படலாம்.