சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Speculation on Greek default mounts as EU demands still more cuts

ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் அதிக வெட்டுக்களைக் கோருகையில் கிரேக்கத்தின் செலுத்துமதி நிலுவை குறித்த ஊகங்கள் அதிகரிக்கின்றன

By Robert Stevens
11 February 2012

use this version to print | Send feedback

கிரேக்கத்தின் ஆளும் கட்சிகள் இறுதியாக செலவுக் குறைப்புக்களில் பெரும் வெட்டுக்களை இறுதியில் ஒப்புக் கொள்ளுவதது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்ததை தொடர்ந்து, ஐரோப்பிய பகுதியின் நிதி மந்திரிகள் வியாழன் அன்று அழுத்தத்தை அதிகரித்து 130 பில்லியன் யூரோ ($170 பில்லியனை) கடன்தொகை கொடுக்கப்படுவதற்காக இன்னும் கூடுதலான  325 மில்லியன் யூரோ வெட்டுக்களை கோரியுள்ளது. முக்கூட்டுஎனப்படும் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்தியவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (EC, ECB, IMF) ஆகியவற்றில் இருந்து புதிய கடனைப் பெறாவிட்டால், கிரேக்கம் மார்ச் 20 அன்று தான் கொடுக்க வேண்டிய 350 பில்லியன் யூரோக்களின் கடன்களை திருப்பி கொடுக்க முடியாதுபோய்விடும். அன்றைய தினத்தில்தான் அது முன்பு அது விற்றுள்ள பத்திரங்களுக்கு 14.5 பில்லியன் யூரோ காப்பீட்டையும் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

யூரோப் பகுதியில் இருந்து ஒருவேளை கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற ஊகங்கள் பெருகியிருக்கையில், பிரதம மந்திரி லூகாஸ் பாப்படெமோஸின் தலைமையில் உள்ள தேர்ந்தெடுக்கப்படாத கூட்டணி அராசங்கம் ஞாயிறன்று நடக்க உள்ள பாராளுமன்றத்தில் கோரப்பட்டுள்ள எவ்விதமான கோரிக்கைகளுக்கும் சாதகமாக  வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளது. 

சமீபத்திய வெட்டுக்கள் மக்கள் எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன. புதன் அன்று GSEE, ADEDY என்று தனியார் மற்றும் பொதுத் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பைத் தொடர்ந்து, வெள்ளியன்று ஒரு 48 மணி நேரப் பொதுவேலைநிறுத்தம் தொடங்கியது. தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை, அரசாங்க அலுவலகங்கள், பள்ளிகள், நீதிமன்றங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் ஆகியவை மூடப்பட்டன. பொதுப் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. ஏதென்ஸில் சின்டகமா சதுக்கத்தில் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

முந்தைய நாள் சுகாதார அமைச்சரகம் ஆக்கிரமிக்கப்பட்டதை தொடர்ந்து, நிதி அமைச்சரகமும் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டது. பொலிஸ் கலகப்படைப் பிரிவினர் எதிர்ப்பாளர்களை கண்ணீர்ப்புகை, தடியடி ஆகியவற்றால் தாக்கினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றி வளைக்கப்பட்டு அடித்து, உதைக்கப்பட்டனர்.

PASOK என்னும் சமூக ஜனநாயகக் கட்சி, கன்சர்வேடிவ் புதிய ஜனநாயகம் மற்றும் பாசிச மக்கள் பழமைவாத அணி (LAOS) ஆகியவை புதன் அன்று ஒரு 3.3 பில்லியன் யூரோ ($4.3 பில்லியன்) வெட்டுக்கள் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டன. ஆனால் நிதி மந்திரி எவன்ஜெலோஸ் வெனிஜெலோஸ், பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஒரு யூரோப் பகுதி நிதிமந்திரிகள் கூட்டத்தின்போது இது போதாது என்று கூறப்பட்டார்.

கிரேக்கப் பாராளுமன்றம் இன்னும் கூடுதலான 325 மில்லியன் யூரோ வெட்டுக்களுக்கு ஞாயிறுக்குள் ஒப்புதல் தரவேண்டும் என்று நிதி மந்திரிகள் கோரினர். வரவிருக்கும் தேர்தல்களின் முடிவு எப்படி இருந்தாலும், சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவாதங்களையும் அவர்கள் கோரினர். பாராளுமன்றம் உடன்பாட்டை எதிர்த்து வாக்களித்தால் என்ன நடக்கும் எனக் கேட்கப்பட்டதற்கு, யூரோக் குழுவின் தலைவரான Jean-Claude Juncker “இதற்கு விடை மிக எளிது. பாராளுமன்றம் அதை நிராகரிக்காது. என்று அறிவித்தார்.

ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளில் 1.1 பில்லியன் யூரோ சுகாதாரநலச் செலவுகளில் வெட்டும், இந்த ஆண்டு 15,000 அரசாங்க ஊழியர்களின் பணிநீக்கமும் அடங்கும். அடுத்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 150,000 பொதுத்துறை வேலைகள் அகற்றப்பட்டுவிடும்.

மத்திய அரசின் குறைந்தப்பட்ச ஊதிய மட்டத்தில் மிகப் பெரிய வெட்டுக்கள் சுமத்தப்பட உள்ளன. இதை 300,000 மக்கள் நம்பியுள்ளனர். ஊதியம் 750 யூரோவில் இருந்து (975 டாலர்) 20 சதவிகிதம் குறைக்கப்பட்டு 600 யூரோ (780 டாலர்) என்று மாறும். 25 வயதிற்கு உட்பட்டதொழிலாளர்களுக்கு குறைந்தப்பட்ச ஊதியம் மற்றும் ஒரு 10% குறைக்கப்படும். தனியார் துறையிலும் ஊதியங்கள் 20% குறைக்கப்படும். தற்போதைய 19.2%த்தில் இருந்து 10%க்கும் குறைவாகப் போகும் வரை அனைத்து ஊதியங்களும் உள்ள நிலையிலேயே இருக்கும்; அது வருவதற்குப் பல தசாப்தங்கள் ஆகலாம். தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் இனி நிரந்தர ஒப்பந்தத்திற்கான உரிமைகளை பெற மாட்டார்கள்.

வேலையற்றோருக்கான உதவிகள் 460 யூரோவில் ($600) இருந்து மாதத்திற்கு 360 யூரோ ($470) என்று குறைக்கப்பட்டுவிடும். துணை ஓய்வூதியங்கள் 15% குறைக்கப்பட்டுவிடும். இவை ஆரம்ப வெட்டுக்கள்தான். உடன்பாட்டின்படி கிட்டத்தட்ட 13 பில்லியன் யூரோ செலவுக் குறைப்புக்கள் 2015 அளவில் சுமத்தப்படும். இது ஆரம்பத்தில் உறுதியளிக்கப்பட்ட 7 பில்லியன் யூரோவைப் போல் இருமடங்கு ஆகும்.

இதற்கு மாறான வகையில், கிரேக்க வங்கிகள் 40 பில்லியன் யூரோ அளவிற்கு மறு மூலதனத்தைப்” (“recapitalised”) பெறும்.

கிரேக்கத்தில் இவ்வளவிலான சமூக எதிர்ப்புரட்சி சுமத்தப்படுவதால், ஆளும் கட்சிகளின் பிரிவுகள் நடத்தப்படும் தாக்குதல்களில் இருந்து தங்களை தொடர்பற்றதாக காட்டிக்கொள்ள முயல்கின்றன.

வெள்ளியன்று LAOS தலைவர் ஜார்ஜியோஸ் கராட்ஸபெரிஸ், கிரேக்கத்திற்குக் கடன் கொடுத்தவர்களுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கு ஆதரவாக தான் வாக்களிப்பதாக இல்லை என்று அறிவித்தார். ஒரு தேசியவாதத் திசையில் எதிர்ப்புக்களை திசை திருப்பும் வகையில், அவர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே கிரேக்கம் தப்பிப் பிழைக்கலாம். ஆனால் ஒரு ஜேர்மனிய காலனியின் கீழ் தப்பிப் பிழைக்க முடியாது. என்றார்.

கடந்த வாரம் கராட்ஸபெரிஸ் ஐரோப்பாவை எரிக்கக்கூடிய, நம்மை அவமானப்படுத்தக்கூடிய ஒரு புரட்சிக்கு நான் பங்களிக்கப்போவதில்லை என்று அறிவித்த வகையில் தன் அரசியல் அக்கறைகளை தெளிவாக்கினார்.

கராட்ஸபெரிஸின் பாவனைகள் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சியாக மாறாது. அவருடைய அறிக்கையைத் தொடர்ந்து நான்கு LAOS மந்திரிகளின் இராஜிநாமாக்கள் வெளிவந்தன. ஆனால் இவர்களில் இருவர், போக்குவரத்து மந்திரி மகிஸ் வொரிடிஸும் வணிகக் கப்பல் துறை துணை மந்திரி அடோனிஸ் ஜோர்ஜியடிஸும் தாங்கள் ஞாயிறன்று கடன் உடன்பாட்டிற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகக் கூறினர்.

இதைத்தவிர, PASOK ஐ சேர்ந்த வெளியறவுத் துணைமந்திரி மரிலிஸா ஸினொகியாகோபோபுளுவும் இராஜிநாமா செய்தார்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கம் பற்றிய கிரேக்க உயரடுக்கிற்குள் இருக்கும் அச்சம், இன்னும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜிநாமா செய்ததில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இதில் தொழிற்சங்க அதிகாரத்துடன் நெருக்கமான தொடர்புடைய நபர்களும் உள்ளனர். எழுச்சி பெறும் சமூக, அரசியல் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் எந்த முயற்சிக்கும் தொழிற்சங்கங்கள் மிக முக்கியமானவை ஆகும். நேரடியாக இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கொடுத்தல் என்னும் கறை அவற்றின்மீது படியக்கூடாது.

வியாழக்கிழமை வேலைத்துறை துணை மந்திரியும் முன்னாள் ADEDY தலைவருமான ஜியானிஸ் கவுட்சோகோஸ் உம் கட்சியின் தொழிற்சங்கப் பணிக்குப் பொறுப்புடையவரும், புதிய ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் யியனிஸ் மனோலிஸுடன் பதவியை விட்டு விலகினார்.

சமீபத்திய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ADEDY உடைய பொதுச் செயலாளர், இளைஞர்கள், வேலையற்றோர், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு வேதனையை உருவாக்கும் நடவடிக்கைகள் நமக்கு ஏதாவது செய்வதற்கு வாய்ப்பைக் கொடுக்கவில்லை... நாம் ஒரு சமூக எழுச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். என்று எச்சரித்தார்.

இராஜிநாமாக்கள் பற்றிய பிரதிபலிப்பில் ஒரு கிரேக்க அரசாங்கச் செய்தித்தொடர்பாளர், அரசாங்கம் எதையும் மாற்றாது என்ற கருத்தைக் கூறினார். அரசாங்கத்துடன் உடன்பாடு இல்லாதவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் நியமிக்கப்படுவர். என்று அவர் கூறினார்.

300 உறுப்பினர்கள் இருக்கும் பாராளுமன்றத்தில் அரசாங்கம் 235 என்ற பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. இதில் 16 பேர் LAOS ஐச் சேர்ந்தவர்கள். ஆனால் அரசாங்கத்தின் உறுதிமொழிகள் மற்றும் பாராளுமன்றக் கணிப்புகள் ஒருபுறம் இருக்க, உலக நிதிய மற்றும் அரசியல் உயரடுக்கினரிடையே கிரேக்கம் இறுதியில் கடன் செலுத்தமதியின்மைக்கு தள்ளப்படாது என்பதில் அதிக நம்பிக்கை இல்லை.

Fitch கடன்தரத்தை நிர்ணயம் செய்யும் அமைப்பு கடன் செலுத்துமதியின்மை என்பது முற்றிலும் நடக்காது எனக் கூறுவதற்கில்லை என்று எச்சரித்துள்ளது.

பல விமர்சகர்கள் ஜேர்மனியின் கோரிக்கைகள் மிகத் தீவிரமாகவும், அதன் நிலைப்பாடு சற்றும் வளைந்து கொடுக்காத தன்மையில் இருக்கையில், ஏற்கனவே அது கிரேக்கத்தை யூரோவை விட்டு அகற்றுதல் என்பதை அது முடிவெடுத்துவிட்டது என்ற முடிவிற்கு வந்தனர். இது இரு-தடங்களைக் கொண்ட ஐரோப்பா என்று வெளிப்படையாக பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி கூறியதை நோக்கி ஒரு படி முன்வைப்பது ஆகும். ஆனால் இதுவரை ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலால் உத்தியோகபூர்வமாக எதிர்க்கப்படுகிறது. ஜேர்மனியர்கள் கிரேக்கம் வெளியேற வேண்டும் என விரும்புகின்றனர். அது ஒரு தெளிவான தகவல் என்று கார்டியனுடைய லாரி எலியட் வெளிப்படையாக கூறினார்.

பேர்லின் மற்றும் பாரிசின் உண்மையான நோக்கம் அதுதான் என்று இருந்தால், அது தற்கொலை மூலோபாய சாத்தியப்பாட்டை கொண்டுள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கி ஐரோப்பிய வங்கிகளுக்கு, அவற்றை நிலைநிறுத்தக் கிடைக்குமாறு செய்துள்ள மிகப் பெரிய நிதிகள் மற்றும் போர்த்துக்கல், இத்தாலி, ஸ்பெயின் இன்னும் பிரச்சனைக்குட்பட்ட  பொருளாதாரங்களின் கடன்களுக்கு உத்தரவாதம் கொடுத்தல், கிரேக்கம் மற்றும் பிற நாடுகளின் செலுத்தமதியின்மையை சமாளிக்கப்படலாம், இவை யூரோவினுள் வணிகம் இன்னும் செய்யும் முக்கிய உள்வட்ட நாடுகளுக்கான சாத்தியத்தை ஏற்படுத்தும், என்பவற்றால் தொற்று ஏற்படும் என்னும் வாய்ப்பு குறைந்துவிட்டது என்ற கணக்கீட்டைத் தளமாகக் கொண்டுள்ளது.

ஆனால் நொமுராவில் இருக்கும் ஐரோப்பிய பொருளாதார வல்லுனர், யூரோப்பகுதியில் இருந்து அறுவை சிகிச்சை முறையில் கிரேக்கத்தை நீங்கள் அகற்றமுடியாது. அவ்வாறு அச்சுறுத்துதலும் ஓர் ஆபத்தான விளையாட்டாகும். வங்கிகளுக்கு சொந்த மூலதனத்தை பயன்படுத்துவது என்னும் மோசமான பானக்கலவை, குறைந்த வளர்ச்சி மற்றும் வரவுசெலவுத்திட்ட வெட்டுக்கள் ஸ்பெயின் அல்லது இத்தாலி போன்ற கடன்பட்டுள்ள நாடுகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களைக் கவலைக்கு உட்படுத்தும் தன்மை இன்னும் நீங்கவில்லை. என்று எச்சரித்தார்.

Fitch இன் நிர்வாக இயக்குனர் டோனி ஸ்ட்ரிங்கர் பின்வருமாறு எச்சரித்தார்: கிரேக்க வங்கி முறையில் சேமிப்பாளர்கள் விரைவில் அகன்றுவிடல், மக்கள் பணத்தைத் திருப்பிப் பெற்று நிதிகளை வேறுநாடுகளில் மாற்றுவர்என்னும் பீதி உள்ளது, ஆனால் அதேபோன்று முழுக்கவனமும் மற்ற அண்டை இறைமை நாடுகளான போர்த்துக்கல், அயர்லாந்து மற்றும் இத்தாலி, ஸ்பெயின் ஆகியவையும் அச்சாத்தியப்பாட்டை கொண்டுள்ளன என்பது குறித்து கவனம் செலுத்தும் பயமும் உள்ளது.