சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

  WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

Maldives president ousted in US-backed coup

அமெரிக்க ஆதரவு ஆட்சி சதியினால் மாலைதீவு ஜனாதிபதி பதவிவிலக்கப்படுகிறார்

By W. A. Sunil and Deepal Jayasekera
10 February 2012

use this version to print | Send feedback

செவ்வாயன்று மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் (MDP) லைவரான மஹம்மத் நஷித் ஒரு மூன்று வார எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒரு பொலிஸ் கலகத்தை அடுத்து இராணுவத்தால் பதவியை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். அவருக்குப் பதிலாக எதிர்த்தரப்புடன் சேர்ந்திருந்த துணை ஜனாதிபதி மஹமத் வஹீத் ஹாசன் மனிக் பதவி ஏற்றார்.

நான் பதவியில் தொடர்ந்து இருப்பது பிரச்சினைகளை அதிகரிக்கத்தான் செய்யும், நம் குடிமக்களுக்கு அது ஊறு விளைவிக்கும் என்று நான் உணர்கிறேன் என்று மட்டுமே செவ்வாயன்று ஒரு தொலைக்காட்சி உரையில் நஷித் கூறினார்.

ஆனால், மறுநாள் அவர் ஒரு சதியினால் இராஜிநாமா செய்ய நேரிட்டது என்று அறிவித்தார். என்னைச் சுற்றிலும் துப்பாக்கிகள் இருந்தன, நான் இராஜிநாமா செய்யாவிட்டால் அவற்றைப் பயன்படுத்தத் தயங்கமாட்டோம் என்று அவர்கள் கூறினர்.

நூற்றுக்கணக்கான நஷித் ஆதரவாளர்கள் தலைநகரான மாளேயில் நடத்திய ஆர்ப்பாட்டாத்தின்போது அவர் பேசினார். ஆனால் இது பொலிசாரால் கண்ணீர்ப்புகைக் குண்டு, தடியடித் தாக்குதல்களால் நசுக்கப்பட்டது. இதன்பின் மாளேயில் கலகம் வெடித்து, நஷித்தின் ஆதரவாளர்கள் பொலிசார்மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதுடன் அவருடைய ஆட்சியைப் பற்றிக் குறைகூறியிருந்த ஒரு தனியார் தொலைக்காட்சி நிலையத்தையும் தாக்கினர்.

2008ல் நஷித் நாட்டின் வரலாற்றில் முதல்தடவையாக பல கட்சிகள் பங்கு பெற்ற தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். முந்தைய ஜனாதிபதி மௌமூன் அப்துல் கயூமின் 30 ஆண்டுச் சர்வாதிகார ஆட்சியை அவரின் தேர்வு முடிவிற்குக் கொண்டுவந்தது. அந்த ஆட்சியில் நஷித் பலமுறை கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதுடன், பல ஆண்டுகள் வெளிநாட்டில் வசிக்குமாறும் கட்டாயப்படுத்தப்பட்டார்.

பெரும்பாலும் 330,000 சுன்னி முஸ்லிம்களைக் கொண்ட மாலைதீவு அப்பிராந்தியத்தில் வறிய நாடுகளுள் ஒன்றாகும். முக்கியமாகச் சுற்றுலா மற்றும் கருவாடு ஏற்றுமதியைத்தான் அது நம்பியுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான கிட்டத்தட்ட $1 பில்லியனில் சுற்றுலாத்துறை மூன்றில் இரு பங்கைத் தோற்றுவிக்கிறது. உணவு, உடைகள், எரிசக்தி உட்பட பல அன்றாட தேவைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

கயூமின் மாலைதீவு மக்கள் கட்சி (MPP), ஹாசன் சயீத்தின் முஸ்லிம் தீவிரவாத திவேஹி க்வாமீக் கட்சி (DQP) உட்பட எதிர்த்தரப்பினர் ஜனவரி 16ம் தேதி குற்றவியல் நீதிமன்றத் தலைமை நீதிபதி அப்துல்லா முகமத்தைக் கைது செய்யுமாறு இராணுவத்திற்கு உத்திரவிட்டபோது எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுத்தனர். நீதிபதி DQP துணைத் தலைவர் மஹமத் ஜமீல் அஹ்மத் விடுதலை செய்தார். அவரை அவதூறுக் குற்றச் சாட்டுக்களுக்காக நஷித் காவலில் வைக்க விரும்பியிருந்தார். நஷித் ஒரு பைத்தியக்காரர், ஒரு கிறிஸ்தவர், தீமைகளுக்கு ஆதரவு கொடுக்கிறார் என்று அஹ்மத் கூறியதாகத் தெரிகிறது.

பின்னர் பொலிசாரும் எதிர்ப்பாளர்களுடன் இணைந்து, சுடுவதற்கான அரசாங்க உத்தவுரகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். செவ்வாயன்று கிட்டத்தட்ட 200 பொலிசார் மாலைதீவு தொலைக்காட்சி நிலையத்தை கைப்பற்றி மக்களை தெருக்களுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இராணுவத்தின் சில பிரிவுகள் நஷித் எதிர்ப்புக்காரர்களின் தரப்பில் சேர்ந்துகொண்டனர்.

நாட்டின் துன்பத்திலுள்ள மக்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரங்கள், சமூக நிலைமைகள் ஆகியவற்றில் எவ்வித முன்னேற்றத்தையும் கொண்டுவர நஷித் தவறிவிட்டார். 20008 தேர்தலில் வாக்காளர்களில் 54% அவரை ஆதரித்த நிலையில் தேர்ந்தெடுத்தபோது, உயரும் பணவீக்கமும் சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்ட சிக்கன நடவடிக்கைகள் அவருடைய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டதும் அவருடைய ஆட்சிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை அதிகரித்தன. முஸ்லிம் அடிப்படைவாதிகள் உட்பட வலதுசாரிச் சக்திகள் நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி இராணுவம் மற்றும் பொலிசின் உதவியுடன் அவரை அகற்றியுள்ளன.

இந்தியப் பெருங்கடலில் மூலோபாய வகையில் முக்கியமான இடத்தில் மாலைதீவு உள்ளது. முக்கியக் கடல்வழிப் பாதைகள் இங்கு உண்டு. உலக, பிராந்தியச் சக்திகள், குறிப்பாக அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகியவை இந்த 1,190 தீவுகள் அடங்கிய தீவுக்குழுமத்தின் மீது கவனத்தைக் கொண்டுள்ளன. மாலைதீவுகளைத் தன் செல்வாக்கு மண்டலத்திற்கு உட்பட்டதாக இந்தியா கருதுகிறது. இந்நிலையில், இந்தியாவும் அமெரிக்காவும் ஆட்சி சதியானால் புதிதாகப் பதவியில் இருத்தப்பட்ட மாலைதீவு ஜனாதிபதியை விரைவில் அங்கீகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மாலைதீவு  (ஆதாரம் விக்கிமீடியா காமன்ஸ்)

அமெரிக்க வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நியூலாந்த் செய்தி ஊடகத்திடம், மாலைத்தீவின் பாதுகாப்பு நிலைமை இப்பொழுது கட்டுப்பாட்டிற்குள் உள்ளது, பொதுவாக அமைதியாக உள்ளது என்று புதிய ஜனாதிபதி தெரிவித்தார் என்றார். தெற்கு, மத்திய ஆசியாவிற்கு அமெரிக்க உதவி செயலாளரான ரோபர்ட் பிளேக் நாளை மாலைதீவுக்குச் செல்ல இருக்கிறார்.

நியூலாந்த் நஷித்திற்கு எதிரான ஆட்சிசதி குறித்த கவலைகளை ஒதுக்கித் தள்ளினார். ஜனாதிபதி நஷித்திடம் இருந்து வந்த அறிக்கையை நாம் பார்த்துள்ளோம் என்பது வெளிப்படை. நேற்று நான் கூறியதுபோல், உதவி செயலாளர் பிளேக் ஜனாதிபதி வகித் [மனிக்குடன்] உடன் தொடர்பு கொண்டார். நிகழ்வுகளைப் பற்றிய அவரின் பார்வை தெளிவாக மாறுபட்டதாக உள்ளது. என்றார்.

எதிர்ப்புக்களை அடக்குவதற்குப் புதுடெல்லியில் இருந்து நஷித் உதவி கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. நஷித் ஆட்சியின்கீழ் தன் செல்வாக்கை உயர்த்த முயன்றபின், புதுடெல்லி ஆட்சிசதி மூலம் இருத்தப்பட்டுள்ள ஒரு புதிய அரசாங்கத்தை வரவேற்றுள்ளது. தன் பூகோள -அரசியல் நலன்களைப் புதிய ஆட்சியுடன் ஓர் உடன்பாட்டின் மூலம் தொடரலாம் என்று அது நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் புதிய ஜனாதிபதிக்கு மாலைதீவின் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொண்டதற்கு உளமார்ந்த பாராட்டுக்களை அனுப்பியுள்ளார்.

இரு நாடுகளின் பொது நலன்களைப் பற்றிக் குறிப்பிட்ட சிங், உங்களுடனும் மாலைதீவு அரசாங்கத்துடனும் நம் நெருக்கமான, இருதரப்பு ஒற்றுமையை இருதரப்பு நலன்களை பெருக்கவும், நம் இருநாடுகளின் தொடர்ந்த பாதுகாப்பு, முன்னேற்றம், வளமை ஆகியவற்றிற்காக உழைக்கவும் இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று சிங் குறிப்பிட்டுள்ளார். தகவல்களின்படி, புதிய மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இந்தியாவிற்கு வருகை புரியவுள்ளார்.

மாலைதீவில் இந்திய நலன்களை அடிக்கோடிடும் வகையில், முன்னாள் கடற்படைத் துணைத் தலைவரான வைஸ் அட்மைரல் ராமன் பி.சுதன் பின்வருமாறு கூறினார்: மாலைதீவு கிட்டத்தட்ட இந்தியாவின் புறச்சாவடி போல் உள்ளது. இந்தியக் கடற்படை மாலைதீவுப் படைகளுக்கு உதவும் வகையில் உள்கட்டுமான ஆதரவான ரோந்துப் படகுகள், ராடர் நிலையங்கள் ஆகியவற்றை அளித்துள்ளது. எனவே அங்கு நிகழ்பவற்றை நாம் கவனிக்க வேண்டும்.

சீனா மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் அங்கு ஒரு தளத்தை கட்டிமைக்கும் அக்கறையைக் கொண்டுள்ளன. நமக்கு முன்னே  முத்துச்சரம் உள்ளது. சீனாவின் முத்துச்சரம் என்னும் மூலோபாயமான இந்தியப் பெருங்கடலில் துறைமுகங்கள் மற்றும் தளங்களைக் கட்டமைப்பது குறித்து அவர் குறிப்பிட்டார். அவை அனைத்தும் பாரசீக வளைகுடா மற்றும் ஆபிரிக்காவில் இருந்து சீனாவிற்கு கடல்பாதைகள் மூலம் வரும் எரிசக்தி விநியோகங்களுக்கு நெருக்கமாக உள்ளன. புது டெல்லி மாலைதீவில் முக்கிய மூலோபாய நலன்களைக் கொண்டுள்ளது. அது இந்தியாவின் தென்மேற்குக் கடலோரப் பகுதியில் ஸ்ரீலங்காவிற்கு அருகேயும், இந்தியப் பெருங்கலுக்கு அப்பால் செல்லும் கடற்பாதைகளுக்கு அருகே உள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்துப்படி, இந்தியாவின் 97% மொத்த சர்வதேச வணிகத்தில், 75% ஆனவை இந்தியப் பெருங்கடல் மூலம்தான் நடக்கின்றன.

இத்தீவுக்கூட்டத்தில் தன் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும் சீனா பாடுபடுகிறது. புது டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே போட்டிக்கான முனைப்புள்ளியாக மாலைதீவு ஆக்கியுள்ளது. மாலைதீவின் வெளியுறவு அமைச்சரகத்தின் கட்டிடத்தையும் தேசிய அருங்காட்சியகத்தையும் சீனா கட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் 2010ல் $64 மில்லியனுக்கு உயர்ந்துள்ளது. இது 2009ல் இருந்ததைவிட 56% அதிகம் ஆகும். சீனாவிற்கும் மாலைதீவுக்கும் இடையே பல ஒத்துழைப்பு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இந்த தீவுக்கூட்டத்தில் ஒருமிகப் பெரிய தீவான மாரோவில் தன் கடற்படைத்தளத்தை கட்டுவதற்கு கயூமின் ஆட்சியில் மாலைதீவுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்தியது என்ற தகவல்கள் உள்ளன. இத்தகவல்களின்படி, இந்த உடன்பாடு இரு ஆண்டுகள் பேச்சுக்களுக்குப் பின்னர் இறுதி வடிவம் பெற்றது. சீனப் பிரதமர் ஜு ரோங்ஜி மே 2001ல் மாலேக்கு வருகை புரிந்தார். ஆனால் கயூம் இந்தத் தகவல்களை, அவை வதந்திகள்தான் என்று கூறி மறுத்துள்ளார்.