சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek parliament votes for sweeping cuts

பாரிய வெட்டுக்களுக்குக் கிரேக்கப் பாராளுமன்றம் வாக்களிக்கிறது

By Nick Beams 
13 February 2012

use this version to print | Send feedback

நாட்டை இன்னும் ஆழ்ந்த மந்தநிலையில் தள்ளும், இன்னும் அதிக சமூக இழிநிலையை ஏற்படுத்தும் தொலைதூர விளைவுடைய சிக்கன நடவடிக்கைள் பொதிக்கு கிரேக்கப் பாராளுமன்றம் ஒப்புதல் கொடுத்து வாக்களித்துள்ளது. பாராளுமன்றத்தை சுற்றி 4,000 பொலிசார் நிற்கையில், 80,000 மக்கள் வெளியே எதிர்ப்புக்களை நடத்துகையில், ஞாயிறன்று நள்ளிரவில் முடிந்த ஒரு சிறப்பு 10 மணி நேரக் கூட்டத் தொடரில் வாக்களிப்பு நடைபெற்றது.

பொலிஸ் கலகப்படைப்பிரிவினருக்கும் இளைஞர்களுக்கும் நடக்கும் மோதல்களுக்கு இடையே, தேர்ந்தெடுக்கப்படாத பிரதம மந்திரி லூக்காஸ் பாப்படெமோஸ், ஒரு ஜனநாயகத்தில் காலித்தனம், வன்முறை, அழித்தல் ஆகியவற்றிற்கு இடமில்லை, அவைகள் பொறுத்தக் கொள்ளப்படமாட்டாது என்று அறிவித்தார்.

உண்மையில் சிக்கனத் திட்டத்தின் இதயத்தானத்தில்தான் இந்த சமூகத் தீமைகள் உள்ளனஅவைகள் கிட்டத்தட்ட 3.3 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள செலவுக் குறைப்புக்களில் தளத்தைக் கொண்டுள்ளன; இதுதான் இப்பொழுது கிரேக்கப் பாராளுமன்றத்தால் நிதிய அமைப்புமுறை பிணை எடுப்பதற்குப் பெறப்படும் 130 பில்லியன் யூரோக்களுக்கு ஈடாகப் பாராளுமன்றத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சிறப்புக் கூட்டம் ஐரோப்பிய நிதிமந்திரிகள் கடந்த வாரம் கொடுக்கப்பட்ட உறுதிகளால் திருப்தி அடையவில்லை என்று கிரேக்க அரசாங்கப் பிரதிநிதிகளை இன்னும் கூடுதல் செயற்பாடுகளுக்கா திருப்பி அனுப்பி வைத்தபின் கூட்டப்பட்டது; அதாவது கூடுதலான 325 மில்லியன் யூரோக்கள் வெட்டுக்களில்.

பாராளுமன்ற வாக்கு முக்கூட்டு எனப்படும் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் (EC, ECB, IMF)  ஆகியவற்றின் ஆணைகளை ஏற்பதைத்தவிர வேறு மாற்றீடு இல்லை என்று தொடர்ந்த பெருகிய பிரச்சாரமுறையிலான எச்சரிக்கையை அடுத்து வந்துள்ளது. பொருளாதாரச் சரிவு மற்றும் சமூகப் பெரும் குழப்பம் ஏற்படும் என்று பாப்படெமோஸ் அச்சுறுத்தி, கிரேக்கத்தின் கடன்கள் திருப்பிக்கொடுப்பதில் தவறு ஏற்பட்டால், அது நாட்டை ஒரு பேரழிவுத் துயரத்தில் தள்ளிவிடும் என்றார்.

அமைச்சரவையில் பாப்படெமோஸ் கூறினார்: கட்டுப்பாடற்ற பொருளாதாரப் பெரும் குழப்பத்திற்கான நிலைமைகளை அது தோற்றுவிக்கும். அரசாங்கத்தினால் ஊதியங்கள், ஓய்வூதியங்கள் ஆகியவற்றைக் கொடுக்க முடியாது என்பதுடன் அடிப்படைச் செயற்பாட்டுச் செலவுகளான மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவற்றையும் சமாளிக்க முடியாது.

அடிப்படைப் பொருட்களை, மருந்துகள், எரிபொருட்கள் உட்பட, இறக்குமதி செய்தல் சிக்கலை ஏற்படுத்தும், வணிகங்கள் மூடப்படும் என்று பாப்படெமோஸ் அறிவித்தார். கிரேக்க மக்களின் வாழ்க்கைத்தரங்கள் சரிந்துவிடும், நாடு மந்தநிலை, உறுதியற்றதன்மை, வேலையின்மை, இழிநிலை ஆகியவற்றில் வீழ்ச்சியுறும் என்றார் அவர்.

வார இறுதியில் நாட்டிற்குத் தொலைக்காட்சி மூலம் கொடுத்த உரையில் பாப்படெமோஸ் சிக்கன நடவடிக்கைகள் நிதிய உறுதித் தன்மையையும், பொருளாதாரத்தின் உலகப் போட்டித்தன்மையையும் மீட்கும்அவைகள் வளர்ச்சிக்குத் திரும்பும், ஒருவேளை 2013ன் இரண்டாம் பாதியில் என்று கூறினார். இது ஒரு அப்பட்டமான பொய். உண்மையில் இந்த நடவடிக்கைகள் கிரேக்கத்தை இன்னும் குறைந்த வளர்ச்சி, வேலையின்மை, குறைந்த செலவினம், காலவரையற்ற மந்தநிலை என்னும் சரிவில்தான் தள்ளும்.

ஐந்து ஆண்டுக் கால மந்தநிலைக்குப்பின், கிரேக்கத்தில் உற்பத்தி டிசம்பர் மாதம் முந்தைய ஆண்டைவிட 15.5 சதவிகிதம் குறைந்தது. தொழில்துறை உற்பத்தி 11.3 சதவிகிதம் வீழ்ச்சியுற்றது, வேலையின்மை 20.9 என உயர்ந்த்தது. இப்படித்தான் ஒரு மரணச் சரிவுப்பாதை இருக்கும் என்று லண்டனைத் தளமாகக் கொண்ட டெலிகிராப்பின் பொருளாதார நிருபர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தின் இரு முக்கியக்கட்சித் தலைவர்களும் வேறு மாற்றீடு இல்லை என்றுதான் கூறுகின்றனர்.

 “இன்று தைரியத்துடன் செயல்படவில்லை என்றால், நாம் பேரழிவில்தான் வாழ்வோம் என்று சோசலிஸ்ட் கட்சியின் (PASOK) தலைவரும் முன்னாள் பிரதம மந்திரியுமான ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ கூறினார். இதை உட்கொள்ள வேண்டியது சரியா தப்பா என்பது அல்ல, அது ஒன்றுதான் கிடைக்கிறது.

PASOK ன் தலைவர் பெருகிய முறையில் எவருக்காகவும் இல்லாமல், வங்கிகள் மற்றும் நிதிய நலன்களுக்குத்தான் பேசுகிறார். கடந்த தேர்தல்களில் 44 சதவிகிதம் வாக்குகளைப் பெற்ற அவருடைய கட்சி, சமீபத்திய கருத்துக்கணிப்புக்களின்படி 8 சதவிகித ஆதரவை மட்டுமே கொண்டுள்ளது.

புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரான அன்டோனிஸ் சமரஸ் இதே போன்ற கருத்துக்களைத்தான் கூறினார். நடவடிக்கைகள் ஏற்பது என்பது கடன் கொடுப்பதில் தவறு ஏற்பட்டால் அதைத்தொடரும் திவால், கொள்ளையடித்தல் மற்றும் பெருங்குழப்பம் ஆகியவற்றில் இருந்து நம்மை ஒதுக்கி வைக்கும் என்றார்.

ஆனால், பெருங்குழப்பம் ஏற்கனவே வந்துவிட்டது. கார்டியனின்  நிருபரான ஹெலினா ஸ்மித், 20 ஆண்டுகளாக கிரேக்கத்தைப் பற்றி எழுதுபவர், நாட்டின் வரவு-செலவுத் திட்ட ஓட்டைகளை நிரப்புவதற்கு முற்றிலும் மாறாக கடுமையான சிக்கன நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார, சமூகச் சரிவைத்தான் ஏற்படுத்தியுள்ளன.

 “இடைவிடாத ஊதிய, ஓய்வுதிய வெட்டுக்கள், வரிவிதிப்பு உயர்வுகள், செலவைக் குறைக்கும் சீர்திருத்தங்கள் ஆகியவை நாட்டை அதன் முந்தைய நிழலுக்கு ஒப்பாகச் செய்துவிட்டன. மந்தநிலை ஐந்தாம் ஆண்டு தொடர்ந்து இருக்கையில், கிரேக்கம் முன்பு இருந்த நிலைமையின் ஒரு வெற்றுப் பதிப்பாகத்தான் உள்ளது; ஒவ்வொரு நாளும் அதன் பிடிப்புக்கள் தளர்ந்துவருகின்றன. ஆண்களும் பெண்களும் இரவில் குப்பைத் தொட்டிகளில் ஏதேனும் கிடைக்குமா எனத் தேடுகின்றனர். பலரும் தெருக்களுக்கு உறங்க வந்துவிட்டனர்.

நாட்டில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேலானவர்கள் உத்தியோகபூர்வமாக வறுமையில் வாழ்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை இப்பொழுது ஒரு மில்லியனுக்கும் மேல் என்று அதிகரித்துவிட்டது கிட்டத்தட்ட இது வேலையின்மை விகிதம் 21 சதவிதத்திற்கும் மேல் என்றாகும். இளைஞரிடையே வேலையின்மை என்பது கிட்டத்தட்ட 50 சதவிதத்தை நெருங்கிவிட்டது.

உலகப் பொருளாதார நெருக்கடி 2008ல் தொடங்கியதில் இருந்து, குறைந்தப்பட்சம் 20,000 மக்கள் வீடிழந்து விட்டனர். மக்கள் நடைபாதைகளிலும், பூங்கா வாங்குகளிலும், இரயில்வே நிலையங்களிலும், வணிக வளாகங்களிலும் கதவுப்புறங்களிலும் படுக்கின்றனர். கிரேக்க மரபார்ந்த திருச்சபை அது நாள் ஒன்றிற்கு 250,000 மக்களுக்கு உணவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் பிற தொழிலாள வர்க்கம் கிரேக்கத்தில் கட்டவிழ்த்துவிடப்படும் எதிர்ப்புரட்சியை புறக்கணிப்பது அதன் அழிவிற்குத்தான் வழிகோலும். கண்டம் முழுவதும் நடக்கத் திட்டமிட்டுள்ளதற்கு இதுதான் பரிசோதனைக்கூடம் போல் உள்ளது. ஏற்கனவே இலக்கு வைக்கப்பட்டுள்ள நாடுகள் நன்கு தெரிகின்றன. போர்த்துக்கல் கடன் வட்டி விகிதம் வரலாறு காணாத உயர் அளவுகளில் உள்ளது; கடந்த வாரம் கடன் தர நிர்ணயம் செய்யும் Standard & Poors 34 இத்தாலிய வங்கிகள் பற்றிய அதன் மதிப்பீட்டைக் குறைத்துள்ளது; இதில் நாட்டின் மிகப் பெரிய யூனிகிரெடிட்டும் அடங்கும்.

 வெளி நிதிய இடர்கள் குறித்து இத்தாலியின் தொற்றுத்தன்மை அதன் மிக உயர்ந்த வெளிப் பொதுக்கடனால் அதிகரித்துவிட்டது; இதன் விளைவு இத்தாலிய வங்கிகள் கணிசமாக அவற்றின் முழுக்கடனையும் சமாளிக்கும் திறமை குறைந்துவிட்டதாகும் என்று தரம் நிர்ணயிக்கும் அமைப்பு கூறியுள்ளது.

இத்தகைய கட்டுக்கதை கிரேக்கத்தின் கடன் திருப்பிக் கொடுத்தலில் ஏற்படும் தவறு என்பது ஐரோப்பிய மத்திய வங்கி நிலைமையை உறுதி செய்வதற்காக பெரும் நீர்மை நிதியை உட்செலுத்தியிருப்பதால் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற பிரச்சாரத்திற்காகக் கூறப்படுகிறது. உண்மையில், ECB யின் செயற்பாடுகள் இன்னும் ஆழ்ந்த நிதிய நெருக்கடிக்கான சூழலைத்தான் ஏற்படுத்தியுள்ளன. நிதியச் சந்தைகளில் ரொக்கம் திரட்ட இயலாத வங்கிகளுக்குக் கடன் கொடுத்திருப்பதற்கு ஈடாக ECB அதன் புத்தகங்களில் சந்தேகத்தன்மை உடைய கடன் தொகுப்புக்களைத்தான் அதிகரித்துள்ளது. ECB உடைய நடவடிக்கைகள் நிதியச் சந்தைகளுக்கு ஏற்றம் கொடுத்திருக்கையில், சில நுட்பமான நோக்கர்கள் முந்தைய வரலாற்று அனுபவங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த வாரம் பைனான்சியல் எக்ஸ்பிரஸ்ஸில்  எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் பார்க்ளேஸ் வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாகியான மார்ட்டின் டேலர் குறிப்பிட்டார்: போருக்கு இடைப்பட்ட காலத்துடனான ஒற்றுமைகள் அப்பொழுது பல போலி உதய காலங்கள் இருந்தனதீய அளவில் பெருகிவந்துள்ளன. 1930களின் ஆரம்ப ஆண்டுகளில் இருந்ததைப்போல், பெரும் சரிவின் அதிர்ச்சி அலைகள் முதலில் நிதியச் சந்தைகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தவற்றுடன் மட்டுமே நின்றிருந்தன; இவைகள் வேதனைதரும் வகையில் ஏராளமான மக்களுடைய வாழ்க்கையைத் தொடும்.

1930களின் பொருளாதார முறிவு ஐரோப்பிய கண்டத்தில் அனைத்துவகையான ஜனநாயக அரசாங்கங்களும் அகற்றப்படுவதையும் இராணுவ, பாசிச சர்வாதிகாரங்கள் சுமத்தப்படுவதையும் கண்டது. இந்த நிகழ்ச்சிப்போக்குத்தான் மீண்டும் இப்பொழுது வந்துள்ளது. கிரேக்கமும் இத்தாலியும் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கங்களால் ஆளப்படுகின்றன; ஐரோப்பா முழுவதும் நிதியத் தன்னலக்குழுவின் சர்வாதிகாரம் இன்னும் வெளிப்படையாக வந்து கொண்டிருக்கிறது. பாராளுமன்ற முறை என்கின்ற கூடு இருந்தபோதிலும், அதற்குப் பின்புலத்தில் சர்வாதிகார ஆட்சி வகைகளைச் சுமத்துவதற்கான தயாரிப்புக்கள் நடைபெறுகின்றன. இவைகள் நிதிய மூலதனம் கோரும் சமூக எதிர்ப்புரட்சியை செயல்படுத்தும். கிரேக்கத்தில் நடக்கும் சம்பவங்கள் மிகவும் ஆரம்பம்தான்.