WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
எகிப்து
இராணுவ ஆட்சிக்குழு சார்பான கால்பந்து மைதான கலவரத்திற்கு எதிராக எகிப்தில்
பாரிய ஆர்ப்பாட்டம்
By Alex Lantier
3 February 2012
use
this version to print | Send
feedback
புதன்கிழமையன்று போர்ட் சையத்தில் கெய்ரோவின் அஹ்லி குழுவிற்கும்
(Ahly club)
போர்ட் சையத்தின் அல்-மஸ்ரி
(Al-Masry)
குழுவிற்கும் இடையே நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் ஏற்பட்ட
கலகத்தினால் பெருகிய சீற்றத்தை அடுத்து ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் நேற்று
கெய்ரோவில் எகிப்தின் உள்துறை அமைச்சரகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.
கால்பந்துப் போட்டி முடிந்த உடன், தெருச்சண்டையர்கள்
மைதானத்திற்குள் நுழைந்து அஹ்லி விளையாட்டு வீரர்களையும், அவர்களுடைய ரசிகர்களையும்
கத்திகள், பாட்டில்கள், தடிகள், சரவெடிகள் ஆகியவற்றால் தாக்கினர். குறைந்தப்பட்சம்
73 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 1,000 பேர் காயமுற்றனர்; அவர்களில் 200 பேரின்
நிலைமை மோசமாக உள்ளது. விளையாட்டு மைதானத்தில் இருந்த பாதுகாப்புப் படைகள்
இத்தாக்குதலைத் தடுத்து நிறுத்த ஏதும் செய்யவில்லை.
கெய்ரோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த ஆண்டு ஜனாதிபதி ஹொஸ்னி
முபாரக்கை வீழ்த்திய தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் புரட்சிகர பெருமிதச் சின்ன
மையமாக இருந்த தஹ்ரிர் சதுக்கத்தின் வழியே அணிவகுத்துச் சென்றனர். இதன்பின்,
அவர்கள் உள்துறை அமைச்சரகத்திற்கு அணிவகுத்துச் சென்று, பீல்ட் மார்ஷல் மகம்மத்
ஹுசைன் தந்தவியின் தலைமையிலுள்ள அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவ சர்வாதிகாரத்திற்கு
எதிராக
“வீழ்க, இராணுவம் வீழ்க”,
“நாளை நாங்கள் பீல்ட்
மார்சல் முகத்தில்
மிதிப்போம்”
என்று கோஷமிட்டனர்.
நேற்று இரவு உள்துறை அமைச்சரகத்திற்கு வெளியே வன்முறையிலான மோதல்கள்
10,000 எதிர்ப்பாளர்களுக்கு எதிராகப் பாதுகாப்புப் படைகள் செயல்பட்ட போது
நிகழ்ந்தன. கடந்த நவம்பர் எதிர்ப்புக்களில் இருந்து அமைச்சரகத்தின் அலுவலகங்களைப்
பாதுகாப்பாக வைத்திருந்த கம்பி வேலிகளை வெட்டி, சிமென்ட் தடைகளையும் தகர்த்த
நிலையில் மிக அதிகமாக பொலிசார் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசினர்.
டயர்களை எரித்த எதிர்ப்பாளர்கள், காயமுற்ற எதிர்ப்பாளர்களை
மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் குழுக்களையும்
ஒழுங்குற அமைத்தனர். கிட்டத்தட்ட 100 எதிர்ப்பாளர்கள் கண்ணீர்ப்புகைக் குண்டின்
கூடுதல் தாக்கத்தால் மயக்கம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது.
அரசியல் கட்சிகள் மற்றும் இளைஞர் குழுக்களின் கூட்டணி ஒன்று இன்று
பரந்த ஆர்ப்பாட்டம் ஒன்றை எகிப்திய பாராளுமன்றத்திற்கு வெளியே நடத்துவதற்கு அழைப்பு
விடுத்துள்ளது. முதலாளித்துவ
“இடது”
கட்சிகளின் கூட்டு—வப்ட்
கட்சி, முகம்மது எல்பரடேயின் மாற்றத்திற்கான தேசிய சங்கம், மற்றும் கரமா கட்சி
ஆகியவை உட்பட—பொதுக்
கூட்டம் ஒன்றை நடத்தி பிரதம மந்திரி கமல் எல்-கன்ஜௌரியின் அமைச்சரவைக்கு எதிராக ஒரு
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாராளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு
விடுத்தது.
வலதுசாரி முஸ்லிம் பிரதர்ஹுட்டும் வன்முறையைக் குறைகூறியது;
சட்டமன்ற உறுப்பினர் எசம் எல் எரியன் இது,
“இராணுவம்
மற்றும் பொலிஸ் வேண்டுமென்றே தயக்கம் காட்டுவதின் விளைவு”
என்று கூறினார்.
இந்நிகழ்விற்கு அரசியல் கட்சிகளுடைய விடையிறுப்பிற்கும் மக்கள்
எதிர்கொள்ளும் முறைக்கும் இடையே ஒரு வர்க்கப் பிளவு காணப்பட்டது; பொதுமக்கள்
நிகழ்வை எதிர்கொள்வதற்கு பல பாராளுமன்ற இராணுவ ஆட்சியின் பெயரளவுத் தலைவர்களை அகற்ற
வேண்டும் என்று கூறவில்லை, அமெரிக்க ஆதரவுடைய இராணுவ ஆட்சியையே அகற்றத்தான்
கோரினர்.
ரசிகர்கள் அல்லது அஹ்லி குழுவின்
(Ahly club)
அதிதீவிரப்
பிரிவினர் இராணுவ ஆட்சியைக் கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டனர்:
“அவர்கள்,
அடக்குமுறைக்கு எதிரான புரட்சியில் நாங்கள் பங்கு பெற்றதற்காக எங்களைத் தண்டித்து,
தூக்கிலிட விரும்புகின்றனர்.”
ரசிகர்கள்
“புரட்சியைப்
பாதுகாக்க ஒரு புதிய போர் தேவை”
என்ற அழைப்பையும் விடுத்தனர்.
நேற்றைய மோதல்கள்
“ஒட்டகங்களின்
போர்”
என்று புகழ்பெற்றதின் ஓராண்டு நிறைவைக் குறித்தது; அப்பொழுது
முபாரக் புரட்சியைத் தோற்கடிக்க பொலிஸ் குண்டர்களை ஒட்டகங்கள் மீது இராணுவச்
சிப்பாய்கள் வரிசையின் ஊடே அனுப்பி, தஹ்ரிர் சதுக்கத்திலிருந்து எதிர்ப்பாளர்களை
அகற்ற முயன்றார். ஆனால் எதிர்ப்பாளர்கள் குண்டர்களை தெருப் பூசலில் தோற்கடித்தனர்;
ஒன்பது நாட்களுக்குப் பின் முபராக் பதவியிலிருந்து இறங்கும் கட்டாயத்திற்கு
உள்ளானார்.
அல்-மஸ்ரி கலகம் பொலிசாரின் உடந்தையுடன் அஹ்லி ரசிகர்கள் மீது
நடத்தப்பட்ட அரசியல் தாக்குதல் என்றுதான் தகவல்கள் தெரிவிக்கின்றன; பிந்தையவர்கள்
ஆட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். அருகே உள்ள
போட்டி கால்பந்துக் குழுவான ஜாமலெக் ஒயிட் நைட்ஸுடன் சேர்ந்து, அவர்கள் கெய்ரோவில்
முதலில் முபாரக் ஆட்சிக்கு எதிராகவும், பின்னர் அவருக்குப் பதிலாக பதவிக்கு வந்த
இராணுவத் தன்னல ஆட்சிக் குழுவிற்கு எதிராகவும் தெரு மோதல்களில் பங்கு பெற்றன.
பாரிசில்
அரசியல்துறை ஆய்வுக்கூடத்திலுள்ள எகிப்திய வல்லுனரான சோபி போம்மியரை
Le Monde
மேற்கோளிட்டுள்ளது:
“புரட்சியின்போது அவர்கள்
பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தெருமோதல்களுக்கு தங்கள் அனுபவத்தைக் காட்டிய
வகையில் ஆதரவு கொடுத்து முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். இது புரட்சியாளர்களை
தஹ்ரிர் சதுக்கத்தைப் பிடியில் வைத்திருக்க அனுமதித்தது. முபாரக்கின்
வீழ்ச்சிக்குப் பின் அவர்கள் பொலிசுடனும் ஆட்சிக்குழுவுடனும் தொடர்ந்து மோதி
வந்தனர். அவர்களுடைய பார்வையில் இவை இரண்டுமே அதிகாரத்தை திருடியவர்கள் என உள்ளது.
மற்ற விவகாரங்களிலும் அவர்கள் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர்; இதில் இஸ்ரேலிய
தூதரகத்தின் மீதான தாக்குதல், உள்துறை அமைச்சரகத்தின் மீதான தாக்குதல் ஆகியவையும்
அடங்கும்.
போர்ட் சையத் போட்டிக்கு இரு நாட்கள் முன்புதான் அவர்கள் மீண்டும்
ஆட்சிக் குழுவின் கவனத்தை ஒரு போட்டி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டபோது
புரட்சியின் தியாகிகளின் படங்களை உயர்த்திய வகையிலும்,
“இராணுவ
ஆட்சி வீழ்க!”
என்று கோஷமிட்ட வகையிலும், ஈர்த்தனர்.
போர்ட் சையத் துறைமுகத்திலுள்ள பொலிசார் புதனன்று சாதாரண
பாதுகாப்புச் செயல்முறைகளை செயல்படுத்துவதில் கூட முழுத் தோல்வி என்ற வகையில் இதை
எதிர்கொண்டனர். போர்ட் சையத்தின் ஆளுனரும் உள்ளூர்ப் பாதுகாப்புப் பிரிவுத்
தலைவரும் எதிர்பாரா வகையில் கலந்து கொள்ளவில்லை; அதே நேரத்தில் அல்-மஸ்ரி ரசிகர்கள்
தந்தவிக்கும் இராணுவ ஆட்சிக்கும் ஆதரவாக கோஷங்களை எழுப்பி கற்களையும் பிற
பொருட்களையும் அஹ்லி ரசிகர்கள் மீது எறிந்தனர். இரண்டு குழுக்களின் ரசிகர்களையும்
மோதாமல் பிரிப்பதற்கு எகிப்திய பொலிஸ் முயற்சி எதையும் எடுக்கவில்லை. அல் மஸ்ரி
ரசிகர்கள் மைதானத்தில் சூறாவளியென நுழைந்து அஹ்லி ரசிகர்களின் பகுதிகளில் நுழைந்து
தாக்கத் தொடங்கினர்.
ஒரு அல் மஸ்ரி ரசிகர், கார்டியனிடம் கூறினார்:
“ஒரு பொலிஸ் அதிகாரி ஆதரவாளர்களை மைதானத்திற்குள் வருமாறு கூறினார்;
களத்தின் கதவுகள் வேண்டுமென்றே விளையாட்டு தொடங்குமுன் எவராலோ திறக்கப்பட்டன.
ஆட்டம் முடிந்தவுடன், ஆதாரவாளர்கள் களத்திற்குள்ளே விரைந்து நுழைந்தனர்; அதன் பின்
விளக்குகள் அணைந்தன. யார் யாருடன் மோதுகின்றனர் என்று மக்களுக்குத் தெரியவில்லை.
அதன்பின் நான் மக்கள் சிலர் அல்-அஹ்லியின் ஆதரவாளர்களை இருப்பிடங்களில் இருந்து
தள்ளுவதைப் பார்த்தேன். வேண்டுமென்ற அப்பொழுது வெளியே செல்லும் கதவும் மூடப்பட்டது.”
டிவிட்டர் தகவல்களின்படி பல அஹ்லி ரசிகர்கள் அரங்கிற்கு வெளியே
தப்பியோட அவர்கள் முயலும்போது வெளிக்கதவுகள் பூட்டப்பட்டதால் கொல்லப்பட்டனர் அல்லது
காயமுற்றனர் எனத் தெரிகிறது. மூடப்பட்ட கதவுகளால் தடுக்கப்பட்டு குறுகிய
தாழ்வாரங்களுக்குள் அகப்பட்ட நிலையில் அவர்கள் ஆயுதமேந்திய அல் மஸ்ரி ரசிகர்
குண்டர்கள் குழுக்களால் நசுக்கப்பட்டனர்.
உலகப் புகழ் பெற்ற எகிப்திய கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள்,
அஹ்லி குழுவில் இருப்பவர்கள், தங்கள் ஓய்விடத்தினுள்ளே பூட்டிக் கொண்டனர்; நடக்கும்
படுகொலை பற்றி தொலைபேசியில் அழைத்து உதவியை நாடினர். மகம்மத் அபு டிரிகா,
“பாதுகாப்புப் படைகள் எங்களை விட்டு நீங்கின, அவர்கள் எங்களை
பாதுகாக்கவில்லை. எனக்கு முன்னே எங்கள் உடைமாற்றும் அறையில் ஒரு ரசிகர் இறந்து
போனார்”
என்று கூறினார்.
அல்-மஸ்ரியின் பாதுகாப்புப் பிரிவு மேற்பார்வையாளர் மகம்மத் சலே
விளையாட்டின்போது கூட்டத்தில்
“புதிய
நபர்களை”
கவனித்ததாக தெரிவித்தார்.
“விளையாட்டின்போது
மூன்று கதவுகளில் பூட்டுக்களும் உடைக்கப்பட்டன; யார் செய்தனர் என்று எனக்குத்
தெரியவில்லை....நேற்று வரை நான் சதித்திட்டங்களை நம்பியதில்லை. இனி கால்பந்துப்
பிரிவில் வேலை செய்வதில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டேன்.”
இராணுவ மற்றும் பொலிஸ் பிரிவுகள் தலையிட்டபின், காயமுற்ற அஹ்லி
ஆதரவாளர்கள் விமானத்திலோ இரயிலிலோ கெய்ரோவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஆயிரக்கணக்கானவர்கள் ரம்செஸ் இரயில் நிலையத்தில் இரயிலை வரவேற்கக் கூடினர்.
உறுதியாக இறந்தவர்கள் எனத் தெரிந்தவர்களின் பெயர்கள் தந்தவி தூக்கிலிடப்பட
வேண்டும், ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று எழும்பிய கோஷங்களுக்கு நடுவே
படிக்கப்பட்டன.
மோதல்களில் ஒரு நண்பரை இழந்த மக்முத் ஹனி,
“இந்த மோதல் ஏற்பாடு செய்யப்பட்டது, பாதுகாப்புப் படைகள் இதில் பங்கு
பெற்றனர் என்பது தெளிவு; இது புரட்சியில் இருந்து கவனத்தைத் திருப்பும் முயற்சி.
அரசாங்கம் மக்கள் வேறு ஏதேனும்மீது குவிப்புக் காட்ட வேண்டும் என்று விரும்புகிறது”
என்றார்.
மற்றொரு அஹ்லி ரசிகர் கூறினார்:
“இராணுவம்
பழைய ஆட்சிக்காகத்ததான் செயல்படுகிறது. இந்த ஆட்சி எந்த மாறுதலையும்
கொண்டிருக்கவில்லை; ஹொஸ்னி முபாரக்தான் இல்லை. இராணுவம் புரட்சி மீது பழிதீர்த்து
நாட்டை ஊழல் மிகுந்ததாகவே வைக்கத்தான் விரும்புகிறது.”
|