சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France’s New Anti-capitalist Party echoes NATO propaganda against Syria

சிரியாவிற்கு எதிரான நேட்டோ பிரச்சாரத்தை பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி எதிரொலிக்கிறது 

By Anthony Torres 
10 February 2012

use this version to print | Send feedback

ஜனவரி மாதம் சிரியா பற்றி தொடர்ச்சியான கட்டுரைகளை வெளியிட்டு, அந்நாட்டிற்கு எதிராக போரை தொடக்கும் அச்சுறுத்தலைக் கொடுத்துள்ள ஏகாதிபத்திய சக்திகளின் பிரச்சாரத்துடன் நேரடியாக புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) இணைந்து நின்கின்றது.

Gayath Naïssé இனால் எழுதப்பட்டுள்ள NPA கட்டுரைகள் பொய்களையும், அரை உண்மைகளையும் குவியலாகக் கொடுத்துள்ளது NPA முழுமையாக பிரெஞ்சு ஏகாதிபத்திய சக்திகளுடன் இணைந்து நின்றுவிட்டுள்ளதைத்தான் காட்டுகிறது. (See, “French petty-bourgeois “left” plots military intervention in Syria”.)

சிரியப் புரட்சியின் பத்து மாதங்கள் என்னும் தன் கட்டுரையில் நைசே எழுதுகிறார்: அமைதியான எதிர்ப்புக்களை சர்வாதிகாரி கடுமையாக அடக்கும் முறையிலும், மிருகத்தனமான முறையில் கைதிகளையும் நகரத்தில் வசிப்பவர்களையும் நடத்தும் முறை புரட்சிகர இயக்கத்தை நசுக்கும் நோக்கத்தை மட்டும் கொண்டிராமல், எதிர்த்தரப்பை ஆயுதமேந்திப் பழிவாங்கவும் தூண்டுகிறது.

உண்மையில், காயத் நைசே இப்பொழுது சிரியாவிற்குள் அசாத்திற்கு எதிராக நடக்கும் மிக முக்கியமான இயக்கம் அமைதியானதும் அல்ல, புரட்சிகரமானதும் அல்ல என்பதை நன்கு அறிவார்; அவை ஏகாதிபத்தியத்தின் ஆதரவைக் கொண்ட ஆயுதக்குழுக்களின் நடவடிக்கை என்பதையும் அறிவார். சிரிய தேசியக் குழு (SNC), துருக்கியைத் தளமாகக் கொண்டு பல சிரிய நகரங்களிலும் அசாத்தின் உறுதியைக் குலைக்கச் செயல்படும் சுதந்திர சிரிய இராணுவம் (FSA)  ஆகியவற்றை நேட்டோ ஆதரிக்கிறது.

அரபு முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிரான அதன் போராட்டத்தில், சிரியத் தொழிலாள வர்க்கம் இப்பொழுது அசாத் ஆட்சியை மட்டும் எதிர்கொள்ள வேண்டும் என இல்லாமல், நேட்டோவின் ஆயுதங்களைப் பெற்று NPA யினால் பாதுகாக்கப்படும் ஓர் எதிர்த்தரப்பையும் எதிர்கொள்ள வேண்டும்.

சிரிய எதிர்த்தரப்பின் பிரச்சாரத்திற்கு உதவ வேண்டும் என்னும் அதன் விருப்பத்தில் NPA ஆனது வெட்கம் கெட்டத்தனமாக வலதுசாரிச் செய்தி ஊடகம் மற்றும் Quai d”Orsay யிலுள்ள பிரெஞ்சு வெளியுறவு அலுவலகத்தின் தந்திரங்களைத்தான் மீண்டும் மீண்டும் கூறுகிறது. ஜனவரி 22ம் திகதி சிரியா: அவதானிப்பாளர்கள் எதிரேயே படுகொலை தொடர்கிறது என்னும் தலைப்பில் நைசே வெளியிட்ட மற்றொரு கட்டுரை முதலாளித்துவ செய்தி ஊடகம் சிரிய ஆட்சியைக் கண்டித்துள்ளவற்றை எதிரொலித்து, சிரியாவில் ஜனவரி 11ம் திகதி யாரெனத் தெரியாதவரின் தாக்குதலால் ஒரு பிரெஞ்சு செய்தியாளர் கொல்லப்பட்ட விவகாரத்தையும் மேற்கோளிட்டுள்ளார்.

உண்மையில் ஏற்கனவே ஜனவரி 20ம் திகதி மாலை Le Figaro  நிருபர் ஜனவரி 11 அன்று சிரிய எதிர்த்தரப்பினரின் குண்டுத் தாக்குதலால் ஹோம்ஸில் Gilles Jacquier கொல்லப்பட்டார் என்று வெளிப்படுத்தியுள்ளது. (See, “The French political establishment and Gilles Jacquier’s death in Syria”.)

Gilles Jacquier, இறந்த நாட்களைத் தொடர்ந்து Quai d’Orsay தூதர்கள் செய்தி ஊடகத்திடம் சில நாட்களுக்கு Gilles Jacquier, ஒருவேளை எதிர்த்தரப்பின் தாக்குதலில் இறந்திருக்கலாம் என்ற கருத்து குறித்துக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என ஏற்பாடு செய்திருந்தனர்; இது உட்குறிப்பாக அசாத்தைக் குற்றம்சாட்டும் தன்மையைக் கொண்டது. ஆனால் நைசேயின் கட்டுரை வெளியிடப்படுவதற்கு இரண்டு நாட்களிற்கு முன்பே, Gilles Jacquier இறப்பில் எதிர்த்தரப்பின் பொறுப்பு உறுதிபடுத்தப்பட்டது.

ஆயினும்கூட Gilles Jacquier மீதான தாக்குதலின் தோற்றத்தை தெரியாத நபரால் என்று நைசே விளக்குகையில், தன்னுடைய வாசகர்களுக்கு தவறான தகவலைக் கொடுக்க, அதையொட்டி அவர்கள் சிரிய ஆட்சியின் மீது குருட்டுத்தனமான கோபத்தை அடையத் தூண்டுவதற்குத் தயங்கவில்லை என்பது தெளிவு. நைசே தவறாக எழுதியிருப்பதின் நோக்கம் வாசகரை அரசியல் அளவில் முதலாளித்துவ செய்தி ஊடகத்தின் தயவில் விட்டுவிடுவதாகும்; அதுவோ மக்கள் கருத்தை சிரியாவில் ஒரு ஏகாதிபத்தியத் தலையீட்டிற்காகத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தற்பொழுது NPA தான் ஒரு இராணுவத் தலையீட்டிற்கு எதிரானது என்று கூறி, சிரிய எதிர்த்தரப்பு இது பற்றி அழைப்புவிடாவிட்டாலும்கூட, தன்னுடைய வாசகர்களை அது சிரிய ஆட்சியின் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் நம்பிக்கை கொள்ள வைக்க முயல்கிறது. எதிர்த்தரப்பினருக்குப் பின்னே உள்ள நேட்டோவின் தந்திர நோக்கங்கள் அசாத்தை வீழ்த்துவதில் உள்ளன. நேட்டோ அசாத்தை அகற்றினால் NPA ஐயத்திற்கு இடமின்றி களிப்படையும்; அப்படித்தான் அது ஆகஸ்ட் 22ம்திகதி லிபிய ஆட்சியாளர் முயம்மர் கடாபி வீழ்ச்சி அடைந்தபோதும் களிப்படைந்தது; கடாபி அகற்றப்பட்டார், மக்கள் இப்பொழுது முடிவெடுப்பர் என்று NPA அறிவித்தது.

இது ஒரு பிற்போக்குத்தனமான பொய் ஆகும். உண்மையில் லிபியாவும் அதன் எண்ணெய் வளங்களும் இப்பொழுது நேட்டோ, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களின் கையிலும் ஒரு கைப்பாவை இஸ்லாமியவாத ஆட்சியிடமும் உள்ளன.

லிபியாவைப் போன்றே, NPA இப்பொழுது வலதுசாரிச் சக்திகளை மூடி மறைக்க ஒரு போலிப் புரட்சிப் பூச்சை கொடுக்கிறது. புரட்சிகரமான பொதுமக்கள், பொது வேலைநிறுத்தம் என்று நேட்டோவின் பினாமி சக்திகள் இப்போர்களில் ஈடுபட்டுள்ள நடவடிக்கைகளை விளக்குகையில் கூறுகிறது; ஆனால் உண்மையில் இந்தப் பினாமிகள்தான் தாக்குதல்களையும் குண்டு வீச்சுக்களையும் நடத்தும் ஆயுதமேந்திய குழுக்கள் ஆகும்.

நேட்டோ குண்டுவீச்சின் கீழ் லிபியாவில் கடாபி வீழ்ச்சி அடைந்ததை அடுத்து, NPA அறிவித்தது: லிபிய மக்களுக்கு ஒரு புதுவாழ்வு திறக்கப்படுகிறது, சுதந்திரம், ஜனநாயக உரிமைகள், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இயற்கை ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் செல்வத்தை பெற்றக்கொள்வது ஆகியவை இப்பொழுது அன்றாட நடவடிக்கைகளாகி விட்டன. உண்மையில் ஆதாரங்கள் லிபிய மக்களுக்குச் செல்லும் என்று கூறுகையில் NPA பொய்யைத்தான் கூறியது.

ஆனால் NPA ஆனது இதே அனுபவத்தை சிரியாவில் மீண்டும் கூறப்படுவதை எதிர்க்கவில்லை; ஆனால் இன்னும் ஒரு போருக்கான தயாரிப்பிற்கு ஆதரவு கொடுத்தல் என்பது சிரிய, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குப் பேரழிவுதரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

சிரியாவில் பத்துமாத காலப் புரட்சி என்னும் கட்டுரையின் முடிவில் நைசே சிரியாவிலுள்ள அரசியல் நெருக்கடிக்கு ஒருவேளை தீர்வு காணும் மூன்று முறைகளைப்பற்றிக் கூறுகிறார்: ஆட்சிக்குள் மாற்றம் ஏற்பட்டபின் அசாத்தின் இராஜிநாமா, ஓர் உள்நாட்டுப் போர், மற்றும் கடைசியாக இராணுவத் தலையீடு. சிரிய மக்களே வெற்றி பெறுவர், சர்வாதிகாரி சரிவார் என்பதில் தன்னுடைய நம்பிக்கையான உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதை நாம் நம்புகிறோம், இந்த இலக்கின் வெற்றிக்காக நம் வலிமை அனைத்தையும் திரட்டுகிறோம் என்றும் கூறியுள்ளார்.

அசாத் மற்றும் ஏகாதிபத்தியம் இரண்டிற்குமே எதிரான ஒரு தொழிலாள வர்க்கப் புரட்சிக்கான வாய்ப்பு குறித்து நைசே சாத்தியம் இல்லை என்பது முக்கியமானது என்பது குறிப்பிடப்பட வேண்டும். சிரிய நெருக்கடிக்கான மூன்று தீர்வுகள்தான் இருக்கலாம் என்று ஏகாதிபத்திய தூதர்கள் கூறுவதை மட்டுமே நைசே பார்க்க முடியும் என்றால், சிரிய மக்களின் வெற்றி பற்றி நம்பிக்கையான உறுதியைத் தான் உணர்வதாக அவர் ஏன் வலியுறுத்த வேண்டும். நேட்டோவின் வெற்றி சிரியாவுடனான ஆயுதமேந்திய மோதலில் நம்பிக்கையான உறுதிப்பாடு என்று அவர் கூறுவதுதான் இன்னும் சரியாக இருக்கும்.

உண்மையில் தன் வலிமை அனைத்தையும் இந்த இலக்கில் வெற்றியைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஏகாதிபத்திய சார்பு பிரச்சாரத்தை நடத்துகிறார்.

ஓர் உண்மையான புரட்சிகர கட்சியினால் வழிநடத்தப்படும் சிரியத் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன தலையீட்டின் மூலம்தான் அசாத் ஆட்சியின் வீழ்ச்சி முற்போக்கானதாக இருக்கும். மற்ற நாடுகளில் இராணுவத் தலையீடுகளுக்காக ஏகாதிபத்தியம் அளிக்கும் மனிதாபிமான நியாயப்படுத்தப்படுதல்கள் வெறும் பொய்கள்தாம்; இவற்றைத்தான் NPA மீண்டும் எடுத்துரைத்து, அடிப்படை வர்க்கப் பிரச்சினைகள் அனைத்தையும் புறக்கணிக்கிறது. இவ்வகையில் NPA பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் முகவர் என்று அம்பலமாகி நிற்கிறது.

இவ்விதத்தில், நைசேயின் அரசியல் செயற்பாடுகள் பற்றிய சில விவரங்கள் சுட்டிக்காட்டப்பட வேண்டும். சிரியாவில் ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் ஆகியவற்றைக் காப்பதற்கான குழுக்கள் (CDF-the Committees for the Defense of Democracy, Freedom, and Human Rights in Syria) என்பதை அவர் வழிநடத்துகிறார்; இந்த அமைப்பு யூரோ-மத்தியதரைக் கடற்பகுதி மனித உரிமைகள் வலையமைப்பிற்கு சொந்தமானது; 1955ம் ஆண்டு பார்சிலோனா வழிவகையினால் நிறுவப்பட்டது. இத்திட்டம்தான் தற்போதைய மத்தியதரைக்கடல் ஒன்றியம் என்பது பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தால் ஆதரவைக் கொண்டுள்ளது. அதன் வலைத் தளத்தின்படி EMHRN என்பது தனியார் அறக்கட்டளைகள் மற்றும் பல ஐரோப்பிய சக்திகளின் வெளியுறவுத்துறை அமைச்சரகங்களினால் நிதியுதவி அளிக்கப்படுகிறது. அவற்றுள் பிரான்ஸும் உள்ளது.

தன்னுடைய ஏகாதிபத்திய சார்பு கட்டுரைகளை NPA செய்தி ஊடகங்களுக்கு அளிப்பதின் மூலம் நைசே அரச இயந்திரத்தில் ஒரு நடுத்தரப் பகுதியாக இருக்கும் தன் அரசியல் போக்கில் இருந்து சற்றும் விலகிவிடவில்லை.