World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Report of Arab League mission to Syria contradicts Western propaganda

சிரியா தொடர்பாக அரபு லீக் அவதானிகள் குழுவின் அறிக்கை மேற்குலகின் பிரச்சாரத்துடன் முரண்படுகின்றது

By Chris Marsden
9 February 2012
Back to screen version

லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்கான எட்டு மாதக்காலப் போரில் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவிலுள்ள அதன் நேட்டோ நட்பு நாடுகளும் ஈடுபட்டதில் இருந்ததைப் போலவே, சிரியாவில் இப்பொழுது தலையீட்டிற்காக நடக்கும் தயாரிப்பில் அரபு லீக்கின் வேண்டுகோளின் பேரில் அவை நடக்க இருப்பதாகக் கூறியுள்ளன.

ஐ.நா.பாதுகாப்புச் சபையில் ரஷ்யா மற்றும் சீனாவால் சிரியா பற்றிய தீர்மானம் தடுப்பாதிகாரத்திற்கு உட்பட்டது அரபு லீக்கினால் முன்வைக்கப்பட்டது; அதில் எதிர்த்தரப்பிற்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்னும் கோரிக்கைகளை பஷிர் அல்-அசாத் ஆட்சி ஏற்கவில்லை என்ற காரணம் கூறப்பட்டு இருந்தது.

இத்தடுப்பதிகாரத்தைத் தொடர்ந்து மேற்கின் உத்தியோகபூர்வ வெறித்தனக் கண்டனங்களும், செய்தி ஊடகம் சிரியாவில் நடப்பவற்றை முற்றிலும் ஒருதலைப்பட்சமாக சித்தரித்தல், பொறுப்பற்ற படுகொலைகள் அசாத் ஆட்சியால் தன்மக்கள் மீதே நடத்தப்படுவதாக சித்தரித்தல் என்றவகையில்தான்  பிரச்சாரம் நடக்கிறது.

ஐ.நா. தீர்மானமானது அரபு லீக் சிரியாவிற்குள் அனுப்பிய அவதானிகள் குழுவின் பற்றிய சுருக்கமான குறிப்பையும் கொண்டுள்ளது; அதன் முயற்சிகள் பாராட்டப்படுவதாகக் கூறப்படுவதுடன் அதன் பணியை அங்கு நடக்கும் வன்முறை தொடரவியலாமல் செய்துவிட்டதாகவும் தெரிவிக்கிறது.

ஆனால், உண்மையோ சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவைத் திரட்டும் வகையில் தற்பொழுது கட்டாரின் தலைமையில் இருக்கும் லீக், அமெரிக்கவுடன் நட்புக் கொண்ட வளைகுடா முடியரசுகளின் அரசியல் மேலாதிக்கத்தில் இருப்பது, தன்னுடைய சொந்த அவதானிகள் குழுவின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், அதன் அறிக்கையை சிதைத்தல் என்பதாகத்தான் உள்ளது.

166 உறுப்பினர் கொண்ட அவதானிகள் பணிக்குழுவானது சிரியாவில் வன்முறை குறைந்து கொண்டிருக்கிறது, சிரிய அரசாங்கம் அரபு லீக்கின் தேவைகள் பெரும்பாலானவற்றைச் செயல்படுத்தியுள்ளது, ஆளும் பாத்திஸ்ட்டுக்கள் ஆயுதமேந்திய எழுச்சியை எதிர்கொண்டுள்ளனர் என்று கண்டறிந்ததால் அதன் தேவையை  நசுக்கப்பட வேண்டியதாயிற்று. சௌதி அரேபியாவுடன் சேர்ந்து கட்டாரும் அறிக்கையை புதைப்பதில் முக்கிய பங்கைக்கொண்டது; அவதானிகள் பணிக்குழு முடிவிற்கு வந்தது; ஏனெனில் இவ்விரு நாடுகளும் எதிர்தரப்புப் படைகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்தும், அசாத்தை அகற்றுவதற்கு நேரடி இராணுவத் தலையீட்டிற்கும் வாதிட்டிருந்ததால்.

முழு அறிக்கையும், Global Research என்பதில் வெளியிடப்பட்டது. அதன் கண்டுபிடிப்புக்கள் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகியவற்றின் முயற்சிகள் குறித்த பேரழிவு தரும் குற்றச்சாட்டு ஆகும். அவை வளைகுடா நாடுகளுடனும் துருக்கியுடனும் கூட்டாகச் செயல்பட்டு உள்நாட்டுப் போர் ஒன்றிற்கு எரியூட்டி, ஈரானுக்கு விரோதப் போக்குடைய, மேற்கத்தைய சார்பு சுன்னி அரசாங்கம் நிறுவப்படுவதற்கு வழி தயாரிக்கின்றன.

டிசம்பர் 19ம் திகதி அவதானிகள் பணிக்குழுவின் கருத்துக்களுக்கு உடன்பட்ட நெறி ஒன்றில் சிரியா கையெழுத்திட்டிருந்தது. இதற்கு சுடானின் தளபதி முகம்மத் அஹ்மத் முஸ்தபா அல்-டாபி தலைமை தாங்கினார், அதில் 166 கண்காணிப்பாளர்கள் 13 அரபு நாடுகளில் இருந்து ஆறு அரபு அமைப்புக்களில் இருந்தும் அடங்கியிருந்தனர்.

டிசம்பர் 22ம் திகதி, சிரிய அரசாங்கம் பணிக்குழுவிற்கு உதவத் தான் எந்த வகையிலும் தயாராக இருப்பதாகவும், அதற்கு சுதந்திரமான, பாதுகாப்பான முறையில் சிரியா முழுவதும் அனைத்து அவதானிகளும் செல்லும் முறையில் அனுமதி உண்டு என்றும் யாரைக் காணவேண்டும் என்றாலும் சுதந்திரமாக நடத்தப்படும் பேச்சுக்களை மேற்கொள்ளலாம் என்றும் உறுதிபடுத்தியது.

இந்த அறிக்கை மொத்தத்தில் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டது என்றுதான் கண்டது.

டிசம்பர் 27ம் திகதி, ஹோம்ஸ் நகரத்திற்கு ஒரு வருகை இருந்தது; அந்நகரம் அழுத்தங்களின் மையத்தானங்களில் ஒன்றாகும். நகரத்தின் ஆளுனர் ஆயுதமேந்திய குழுக்களினால் வன்முறையில் விரிவாக்கம் ஏற்பட்டது என்று விளக்கினார்...அவற்றில் கிட்டத்தட்ட 3,000 நபர்கள் உள்ளனர் என்றும் நம்பினார்.

இந்த அவதானிகள் குழு பல மாவட்டங்களுக்குச் சென்று பல எதிர்த்தரப்புக் குடிமக்களையும் சந்தித்து, இராணுவத்திற்கும் எதிர்த்தரப்பிற்கும் பாபா அமிரிலப் நடைபெற்ற தீவிரத் துப்பாக்கிச் சண்டையையும் கண்டது. இராணுவ வாகனங்கள் திரும்பப் பெறுவதற்காக அது பேச்சுவார்த்தைகள் நடத்துவதிலும், வன்முறைச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும், உணவு, எரிபொருள் முற்றுகையை அகற்றுவதிலும், கைதிகள், சடலங்கள் பரிமாற்றம் நடத்தப்படுவதிலும் அது வெற்றி கண்டது.

இதைத் தொடர்ந்து அவதானிகள் பணிக்குழு நாடு முழுவதும் முழுமையாக, எளிதாக நிலைப்பாடு கொண்டு 15 பகுதிகளையும் 20 நகரங்களையும் மாவட்டங்களையும் சுற்றியது; அவற்றில் விசுவாசமான சக்திகள் மற்றும் எதிர்த்தரப்பு ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளும் இருந்தன; டமாஸ்கஸ், ஹோம்ஸ், ரிப் ஹோம்ஸ், இட்லிப், டேரா, ஹமா, அலெப்போ, டீர் அல் ஜோர், லடகியா, காமிஷ்லி, ஹாசாகா, சுவைடா, பு கமல், பல்மைரா (தட்மூர்), சுக்னா, பன்யஸ் மற்றும் டார்டௌஸ்  என.

குழுத் தலைவர்கள், அரசாங்கப் படைகள் நடத்திய வன்முறைச் செயல்களையும் ஹோம்ஸிலும் ஹமாவிலும் ஆயுதமேந்திய கூறுபாடுகளுடன் துப்பாக்கிச் சண்டைகளையும் கண்டது, ஆனால் நிலைமை கணிசமாக அமைதியானதையும் சாதித்தது. ஹோம்ஸ் மற்றும் டேராவில் அவர்கள் ஆயுதக்குழுக்கள் அரசாங்கப் படைகளுக்கு எதிரான வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதைக் கண்டன, அவற்றினால் இறப்பும், காயங்களும் ஏற்பட்டன. அரசாங்கப் படைகள் சக்தியைப் பயன்படுத்தி பதிலடி கொடுத்தன....சில ஆயுதமேந்திய குழுக்கள் எறிகுண்டுகளையும் கவசங்களைப் பிளக்கும் எறிகணைகளையும் பயன்படுத்தின.

ஹோம்ஸ், இட்லிப் மற்றும் ஹமாவில் நோக்கர் குழு எதிர்த்தரப்பின் வன்முறைச் செயல்கள் அரசாங்கப் படைகள், குடிமக்களுக்கு எதிராக நடத்தப்பட்டது, அதையொட்டி பல இறப்புக்களும் காயங்களும் ஏற்பட்டன. அவற்றுள் குடிமக்கள் பேருந்துக்கள் மீது குண்டுபோடுதல், எட்டுப் பேர் கொல்லப்பட்டது, பலர் காயமுற்றது, பெண்களும் குழந்தைகளும் இவற்றில் அடங்கியது ஆகியவை இருந்தன.

அறிக்கை மேலும் கூறுகிறது: சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் இருதரப்பிருக்கும் இடையே இடைவெளி மற்றும் கசப்புத்தன்மையை அதிகரிக்கக் கூடும். இந்நிகழ்வுகள் தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், உயிருக்கும் சொத்துக்களுக்கும் இழப்பு ஏற்படுத்தக்கூடும். இத்தகைய நிகழ்வுகளில் கட்டிடங்கள், எரிபொருள் எடுத்துச் செல்லும் ரயில்கள், டீசல் எண்ணெய் எடுத்துச் செல்லும் வண்டிகள் ஆகியவற்றின் மீது குண்டு வீசப்படல், மற்றும் போலிசாரை இலக்கு வைக்கும் வெடிகள், செய்தி ஊடக உறுப்பினர்கள் மீது இலக்கு கொள்ளுதல், எரிபொருள் குழாய்களை இலக்கு கொள்ளுதல் ஆகியவைகளும் இருந்தன. இத்தாக்குதல்களின் சில சுதந்திர சிரிய இராணுவத்தாலும் சில ஆயுதமேந்திய எதிர்த்தரப்புக் குழுக்களாலும் நடத்தப்பட்டன.

ஒவ்வொரு நாளும் செய்தி ஊடகம் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கைகள் மற்றும் கொடூரங்கள் பற்றிய அறிக்கைகளைக் கூறுகிறது; இவைகள் பொதுவாக லண்டனைத் தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிலிருந்து கிடைக்கும் தகவல்கள்இது எதிர்தரப்புச்சார்புடைய ஒரு குழு, கட்டார் மற்றும் சௌதி அரேபியாவில் இருந்து நிதியைப் பெறுகிறது.

பல தரப்பினரும் வன்முறை வெடிப்புக்கள் பல இடங்களில் நடந்ததாகத் தவறாகத் தெரிவிக்கின்றன. அவதானிகள் இந்த இடங்களுக்குச் சென்று பார்த்தபோது, அவர்கள் இந்த அறிக்கைகள் ஆதாரமற்றவை என்று கண்டறிந்தனர். பணிக்குழு களத்திலுள்ள அதன் குழுப் பிரிவுகள் மூலம், செய்தி ஊடகம் நிகழ்வுகளின் தன்மை நிகழ்வுகளில் இறந்தோர் எண்ணிக்கை மற்றும் எதிர்ப்புக்கள் பற்றி மிகைப்படுத்திக் கூறுகிறது,  சில நகரங்களில் அவ்வளவு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது என்று பணி அறிக்கை குறிப்பிடுகிறது.

அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்த்தரப்பின் ஆதரவாளர்களுடைய அமைதியான ஆர்ப்பாட்டங்கள் தடைக்கு உட்படுத்தப்படவில்லை, ஒரு சில சிறு மோதல்கள்தான் இருந்தன.

ஜனவரி 15ம் திகதி அசாத் உடன்பட்ட பொதுமன்னிப்பின் படி, காவலில் இருப்பவர்கள் விடுதலை பற்றி சிரியாவிற்கு வெளியே இருக்கும் கட்சிகள் தகவல்படி எண்ணிக்கை 16,237 அல்லது 12,505 என்னும் எண்ணிக்கை நம்பகத்தன்மை உடையது அல்ல: பட்டியலில் முரண்பாடுகள் உள்ளன....தகவல்கள் விடுபட்டு உள்ளன, துல்லியமாக இல்லை... பல பெயர்கள் மீண்டும் கூறப்படுகின்றன.

அசாத் ஆட்சி மொத்தம் 7,604 கைது செய்யப்பட்டவர்களை பொதுமன்னிப்பிற்கு முன்னும் பின்னும் விடுதலை செய்துள்ளதாகத் தெரிவித்தது. பணிக்குழு இவற்றில் 5,152 பேரைப் பற்றிய தகவல்களைச் சரிபார்த்தது.

அனைத்து இராணுவ வாகனங்கள், டாங்குகள் மற்றும் கனரக ஆயுதங்கள் நகரங்களில் இருந்தும் அருகேயுள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்தும் விலக்கப்பட்டுவிட்டன என்றும் அது கூறுகிறது.

இந்த அறிக்கை எப்படி பணிக்குழு வேண்டுமென்ற மேற்கத்தையச் செய்தி ஊடகம் மற்றும் அதன் பிரதிநிதிகள் சிலராலேயே வேண்டுமென்றே சேதத்திற்கு உட்படுத்தப்பட்டது என்பது பற்றிய காரசாரமான குறிப்பை அளிக்கிறது.  தன் பணியைத் தொடங்கியதில் இருந்தே, பணிக்குழு செய்தி ஊடகத்தின் தீயப் பிரச்சாரத்தில் இலக்காக இருந்துள்ளது... சில செய்தி ஊடக அமைப்புக்கள் பணிக்குழுவையும் அதன் தலைவரையும் இழிவுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டன; இதையொட்டி பணிக்குழு தோல்வி அடைய வேண்டும் என்ற நோக்கம் இருந்தது.

“Some observers reneged on their duties and broke the oath they had taken,” it notes.

சில அவதானிகள் தங்கள் கடமைகளைச் செய்யாமல் தாங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியையும் முறித்தனர் என்று அது குறிப்பிடுகிறது.

அவர்கள் தங்கள் நாடுகளில் இருந்த அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிகழ்வுகளைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட தகவல்களைக் கொடுத்தனர். அந்த அதிகாரிகள் இதன் விளைவாக நிலைமை பற்றி இருண்ட, ஆதாரமற்ற சித்திரத்தைத்தான் கொண்டனர்.

பிரதிநிதிகள் மற்றும் அவர்களுடைய அரசாங்கங்களின் பெயர்கள் கூறப்படப்படவில்லை, ஆனால் அவை அநேகமாக ரியத்திலும் டோஹாவிலும் இருக்கலாம் என்று ஒருவர் ஊகிக்க முடியும்.

அறிக்கையின் கடைசி முக்கியக் கருத்தும் இதே அளவிற்கு சிரியாவிற்கு எதிராகப் போரை நியாயப்படுத்த முயலும் பிரச்சாரத்திற்கு ஊறு விளைவிக்கிறது. பணிக்குழு ஆயுதமுடைய பிரிவு ஒன்று [அரபு லீக்] நெறியில் குறிப்பிடப்படாதது செயல்படுகிறது என்று நிர்ணயத்துள்ளது. பின்னர் இது சுதந்திர சிரிய இராணுவம் மற்றும் வேறு சிலரால் பிற ஆயுதமேந்திய எதிர்த்தரப்புக் குழுக்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆயுதமேந்திய எதிர்ப்பு சிரிய அரசாங்கம் மிக அதிக ஆற்றலைப் பயன்படுத்தியது என்பதால்தான் என்று கூறியபின், சில பகுதிகளில் இந்த ஆயுதப் பிரிவு சிரியப் பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிமக்களைத் தாக்குவதின் மூலம் நிலைமையை எதிர்கொண்டது, இது அரசாங்கத்திற்கு இன்னும் கூடுதலான வன்முறையைப் பதிலாடியாகக் கொடுக்க வைத்தது.

தளபதி அல்-டாபி பணிக்குழுவின் செயல்களை நிறைவேற்ற இன்னும் அவகாசம் என்ற முறையீட்டுடன் அறிக்கையை முடிக்கிறது; 23 நாட்கள் மட்டுமே அதற்கு இருந்தன என்றும் குறிப்பிடுகிறது. சௌதி அரேபியா தன் ஆதரவை விலக்கிக் கொண்டது, இதைத் தொடர்ந்து கட்டாரும் விலகியது; இவ்வகையில் பணிக்குழு தோல்வி அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அரபு லீக்கின் பணம் கொடுப்பவர்களைப் பொறுத்தவரை, உண்மையான தோல்வி ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கவனத்திற்காக ஆட்சி மாற்றத்தை நியாயப்படுத்தும் வகையில் நடத்தப்படும் பிரச்சாரத்திற்கு எதிராக பணிக்குழுவின் கண்டுபிடிப்புக்கள் இருப்பதுதான். எல்லாவற்றிற்கும் மேலாக, சிரிய குடிமக்கள் நெருக்கடி அமைதியாக, அரபுத் தலையீட்டின் மூலம்தான், சர்வதேச தலையீடு இல்லாமல் தீர்க்கப்பட வேண்டும் என நம்புகின்றனர் என்பதை வலியுறுத்தியிருப்பதுதான்