WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Robert Service wins support from
the extreme right in Germany
ஜேர்மனியில் தீவிர வலதில் இருந்து ரொபேர்ட்
சேர்விஸ் ஆதரவைப் பெறுகிறார்
By Wolfgang Weber
7 February 2012
வாராந்திர செய்தித்தாளான
Junge Freiheit,
ரொபேர்ட் சேர்விசின் ஜேர்மனியப் பதிப்பான லியோன் ட்ரொஸ்கி வாழ்க்கை
நூல் பற்றிய விவாதத்தில் தலையிட்டுள்ளது. ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும்
ஸ்விட்சர்லாந்தில் இருந்து 14 வரலாற்றாசிரியர்கள் மற்றும் அரசியல் விஞ்ஞானிகளுக்கு
எதிராக அது சேர்விஸின் நிலைப்பாட்டிற்காக முழுமனத்துடன் வாதிடுகிறது. அவர்கள் கடந்த
கோடையில் சுஹ்ர்காம்ப் பதிப்பகம் நூலைப் பதிப்பிக்க திட்டமிட்டுள்ளதற்கு எதிராக
கடிதம் எழுதியிருந்தனர்.
Junge Freiheit
என்பது ஜேர்மனியில் உள்ள ஜேர்மனிய தேசியக் கட்சி
NPD,
ஜேர்மனிய மக்கள் ஒன்றியம்
DVU
ஆகியவற்றின் ஆதரவான தீவிர வலதுசாரி போக்குகளின்
“புத்திஜீவி”
குரல் ஆகும். இக்கட்சிகளின் இழிந்த
பிதற்றல்களுக்கு மாறாக, இச்செய்தித்தாள் ஒரு முக்கியமான ஒன்றாகவும் இனவாத, தேசியவாத
பிரச்சாரத்தைப் பரப்புவதற்கு கையாளும்போது உயர்கல்விக்கூடப்பிரிவினரின் குரலை
வெளிப்படுத்துவதாகவும் காட்டிக் கொள்ளும்.
“ட்ரொட்ஸ்கியும்
ஜேர்மனிய ஒருமித்த உணர்வும்”
என்ற தலைப்பில் இக்கட்டுரை வாழ்க்கை நூலை எழுதுவதற்கு அவர்
கொண்டிருந்த சேர்விசின் இலக்கைப் பாராட்டித் துவங்குகிறது. அதாவது ஒரு புரட்சிகர
அரசியல் வாதி மற்றும் ஒரு தனிநபர் என்னும் முறையில் லியோன் ட்ரொட்ஸ்கியின் புகழை
அழித்துவிட வேண்டும் என்பதே அந்த இலக்காக இருந்தது. ட்ரொட்ஸ்கியை இன்னும் உயரந்த
மதிப்பில் கொள்ளும் மக்களும் போக்குகளும் இருக்கின்றன என்று குறிக்கும் கட்டுரை
ரொபேர்ட் சேர்விஸ்
“இப்போக்குகளைப்
பற்றி அறிந்துள்ளார், முழு உணர்வுடன் அவற்றை எதிர்கொள்ள விரும்புகிறார்”
என்று குறிப்பிடுகிறது. அது தொடர்கிறது:
“ட்ரொட்ஸ்கியின் பெயரில் இன்னும் உயிர்ப்பு உள்ளது என்று 2009ல்
மூல ஆங்கிலப்பதிப்பு வெளியிடப்படும்போது சேர்விஸ்
“1940ல்
ஸ்ராலினின் கையாளான ராமோன் மெர்க்கடர் ஐஸ் கோடாரியை பயன்படுத்தி அவரைக் கொன்ற செயல்
முழுமையாக முற்றுப்பெறவில்லை, என்னுடைய நூல் அதைச் செய்யும் என்று நம்புகிறேன்.”
என்றார்.
இக்கட்டுரையின் ஆசிரியர் ஸ்ரெபான் ஷைல் சேர்விஸ் எழுதிய நூலை
வரவேற்பதற்குக் காரணம் அது நாஜிசத்தை மீண்டும் புனருத்தானம் செய்யும் வகையில்
திட்டமான 20ம் நூற்றாண்டின் முழு வரலாறையும் மீண்டும் எழுதுவது என்பதுடன் அவருடைய
அரசியல் நன்கு பொருந்தியுள்ளது என்பதினால்தான். சேர்விஸ் மற்றும் அவருடைய
ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை நூல் பற்றிய ஜேர்மனியப்பதிப்பு ஒன்றும் இறுதியாக
“போருக்குப் பிந்தைய காலத்தில் பேசக்கூடாத விடயமான”,
ஜேர்மனிய ஒருமித்த தன்மையை”
சிதைத்துவிடும் என்று அவர் நம்புகிறார்.
கடக்கப்பட வேண்டிய இந்த ஒருமித்த உணர்வு என்பது நாஜிசத்தைக் கண்டித்தல், சோவியத்
ஒன்றியத்தின் மீது நாஜிஸத் தாக்குதலைக் கண்டித்தல் என்பவை.
சுஹ்ர்காம்ப் பதிப்பகத்திற்கு
எழுதப்பட்ட கடிதத்தை
எழுதியவர்கள், கையெழுத்திட்டவர்களையும் ஷைல் பெயரைக் கூறி இலக்கு கொள்ளுகிறார்:
“அவர்களுள்
பீட்டர் ஸ்ரைன்பாக் மற்றும் ஹேர்மன் வேபர் என்று மன்ஹிம் பல்கலைக்கழகத்தின் இரு
பேராசிரியர்கள் உள்ளனர். இவர்கள் எதிர்ப்பு மற்றும் கம்யூனிசம் பற்றி ஆய்வாளர்கள்
என்ற முறையில் தற்பொழுதைய ஒருமித்த கருத்தை உருவாக்கியுள்ளனர். ஆனால் பாசல் நகரில்
இருக்கும் பேராசிரியர் ஹைகோ ஹௌமான் மற்றும் போட்ஸ்டாமில் உள்ள பேராசிரியர் மாரியோ
கெஸ்லரும் இதில் சேர்ந்துள்ளனர்.
ஷைல
Junge Freiheit
ல் பத்து ஆண்டுகளாக அடிக்கடி எழுதுபவராகவும், வாடிக்கையான
கட்டுரையாளராக 2009ல் இருந்தும் உள்ளார். ஏராளமான புத்தகங்களை
“வரலாற்றுத்
திருத்தவாதம்”
என்ற நிலைப்பாட்டில் வெளியிட்டுள்ளார். இப்போக்கு வரலாற்றில் அறிவியல் சார்ந்த
அணுகுமுறையைத் தவிர்த்து, வலதுசாரி முகாமில் நிலைகொண்டுள்ளது. 20ம் நூற்றாண்டின்
அறிவியல்தன்மையில் ஏற்கப்பட்டுள்ள வரலாறு திருத்தப்பட வேண்டும் என்று வாதிடுகிறது.
ஹிட்லரின் ஜேர்மனி ஜேர்மனிய முதலாளித்துவத்திற்கு
“கிழக்கே உயிர்வாழ்வதற்கான இடத்தை விரிவாக்குவதற்காக”
சோவியத் ஒன்றியத்தின் மீது ஆத்திரமூட்டப்படாத தாக்குதல் நடத்தப்படவில்லை. மாறாக
அது தன்னை சோவியத் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தவிர்க்க முடியாத போரைத்
தொடங்கும் கட்டயாத்திற்கு உட்படுத்தப்பட்டது.
“ஜேர்மனியின்
போர்க்குற்றம் பற்றிய நூரெம்பேர்க் நீதிமன்றத் தீர்ப்பு
‘திரிக்கப்பட்டது’“
என கூறுகின்றது.
பத்து ஆண்டுகளுக்கு பகிரங்கமாக ஷைல் வேர்மாக்ட் (நாஜி சகாப்த
இராணுவம்) குறித்த பொருட்காட்சியின் மீது தாக்குதல்களை நடத்தினார். அதில் இரண்டாம்
உலகப் போரின்போது அந்த இராணுவம் செய்திருந்த குற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன.
“வேர்மாக்ட் தூய்மையானது”
நாஜிக் கோட்பாட்டுடனோ, சோவியத் ஒன்றியத்தைத் தகர்ப்பதற்கான போரிலோ
ஈடுபடவில்லை, எக்குற்றங்களையும் செய்யவில்லை என்னும் கோட்பாட்டைத்தான் அவர்
ஆதரிக்கிறார்.
Junge Freiheit
இத்தகைய திருத்தவாத வரலாற்று ஆய்வுக்கட்டுரைகளின் பிரதிநிதிகளுக்கு
அரங்கு அமைத்தும் கொடுக்கிறது. அதே நேரத்தில் ஒரு கௌரவத் போலித்தோற்றத்தை
தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக உள்ளது. எனவே அது உயர்கல்விக்கூடப் பின்னணி உடைய
ஸ்ரெபான் ஷைல் போன்றவர்கள் அதில் எழுதுவதற்கு இடமளிக்க விருப்பம் காட்டுகிறது.
வரலாறு மற்றும் அரசியல் பற்றிய விளக்கங்களில் காட்டப்படும்
உயர்கல்விக்கூடத் தீவிரம், அரசியலின் ஆழ்ந்த தன்மை ஆகியவை போன்றவை இதன் உண்மை
நிலைப்பாடான பொய்யை மறைக்கத்தான் உதவுகின்றன. திருத்தவாத வரலாற்றுக் கோட்பாடுகளின்
அடித்தளத்தில் இருக்கும் வழிவகை வரலாற்றைத் தவறாகக் கூறுவது ஆகும். வரலாற்று
உண்மைகளை வளைத்து, ஆவணங்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது ஆகும்.
ஆவணங்கள் தவறாக மேற்கோளிடப்படுகின்றன, திரிக்கப்படுகின்றன அல்லது வேண்டுமென்றே
புறக்கணிக்கப்படுகின்றன. ஒரு சொல்லில், இவை அனைத்தும் ரொபேர்ட் சேர்விஸின் நூலில்
கையாளப்படும் வழிவகைகள் ஆகும்.
வரலாற்றாசிரியர்கள்
சுஹ்ர்காம்ப் பதிப்பகத்திற்கு
எழுதிய கடிதம் பற்றிய
Junge Freiheit
கட்டுரையில்
உண்மைக்கு கவனம் செலுத்தப்படவில்லை. கடிதத்தை எழுதியவர்கள் மற்றும் அதில்
கையெழுத்திட்டவர்கள் நூலைக் குறித்து எழுப்பியுள்ள எதிர்க்கருத்துக்கள்
“...சில எதிர்க்கத்தக்க பத்திகளைப் பற்றி அல்ல, மொத்தப் போக்கு
பற்றியே ஆகும். எனவே அவர்கள் தங்கள் எதிர்ப்புக்களுக்கு எந்தக் குறிப்பான
தளத்தையும் அளிக்கவில்லை.”
உண்மையில் வரலாற்றாளர்கள்
சுஹ்ர்காம்ப் இந்நூலை வெளியிடக்கூடாது என்னும் தங்கள்
கருத்திற்குப் பலமுக்கிய தளங்களை அளித்துள்ளனர்.
முதலில், அவர்கள் லியோன் டிரொஸ்கியை பாதுகார் என்னும்
நூலில் டேவிட் நோர்த் மிக விரிவான திறனாய்வு கொடுத்திருப்பதை வெளிப்படையாக
ஆதரித்துள்ளனர். அந்நூலிற்குச் சிறிதும் தயக்கமற்ற ஒப்புதலை அமெரிக்க வரலாற்றாளர்
பெர்ட்ராண்ட் படெநௌட் பெரும் கௌரவம் நிறைந்த இதழான
The American Historical Review
வில் கொடுத்துள்ளார். நோர்த் மிக விரிவாக பல உண்மைகளைப்பற்றிய பிழைகளைச் சுட்டிக்
காட்டியிருப்பதோடு—தவறான
பெயர்கள், தவறான தனிப்பட்ட தகவல்களை முக்கிய நபர்கள் பற்றிக் கொடுத்திருப்பது,
போன்றவை—தவறான
மேற்கோள் குறிப்புக்கள் மற்றும் ஆதாரங்களைத் தவறுபடுத்தியிருப்பது ஆகியவை பற்றியும்
எழுதியுள்ளார். நோர்த் மற்றும் பெடநௌடைப் போல்,
சுஹ்ர்காம்ப்பிற்கு
எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள வரலாற்றாசிரியர்களும் சேர்விஸ் வரலாற்று
அறிவியல் நெறிகளின் மிக அடிப்படைத் தரங்களைக்கூடப் பூர்த்தி செய்யவில்லை என்றுதான்
வாதிட்டுள்ளனர்.
நூலின்
“பொதுப்
போக்கு”
வரலாற்றாளர்களால் எதிர்க்கப்படுவது என்று ஷைல் எழுதியுள்ளது உண்மையே ஆகும்.
ட்ரொட்ஸ்கியை
“முற்றிலும்
அழிக்க வேண்டும்”
என்று சேர்விஸ் தன் விருப்பத்தையே உறுதியாகக் கூறும்
ஒருதலைப்பட்டப் போக்கை அவர்கள் எதிர்க்கின்றனர். நூலின் இறுதியில் சேர்விஸ்
“அடிக்கடி
ஸ்ராலினிசப் பிரச்சாரத்துடன் தொடர்புடைய சூத்திரங்களைக் கையாள்கிறார்”
என்று வரலாற்றாசரியர்கள் எழுதியுள்ளனர். கடிதத்தில் சுருக்கமாகவும் உண்மைத்தளத்தைக்
கொண்டும் எழுதப்பட்ட இந்த வாதங்கள் அனைத்தையும் ஷைல் விட்டுள்ளார். இதற்கு காரணம்
வரலாற்றாசிரியர்கள் நூல் வெளியீட்டை எதிர்ப்பதற்கு
“குறிப்பான காரணங்களை”
முன்வைக்கவில்லை என்றும் பொய்யை உறுதிப்படுத்துவதற்குத்தான்.
சேர்விஸ் யூத எதிர்ப்பு ஒருதலைப்பட்டக் கருத்துக்களுக்கு குரல்
கொடுக்கிறார் என்னும் வரலாற்றாசிரியர்களின் குற்றச்சாட்டுக்கள் ஏற்கத்தக்கதே என்று
கூறும் வகையில் ஷைலும் பொய் மற்றும் மோசடியைப் பயன்படுத்துகிறார். அவர்
எழுதுகிறார்:
“அவர்கள்
யூத எதிர்ப்பு என்னும் குற்றச்சாட்டைச் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் அதை
வெளிப்படையாக முன்வைக்கவில்லை. இறுதிப்பகுப்பாய்வில், ஒரு ட்ரொட்ஸ்கியைப் பற்றிய
வாழ்க்கை நூல் ட்ரொட்ஸ்கியின் சமகாலத்தியவர்கள் அவருடைய யூதப் பின்னணியைப் பற்றி
விரோதத் தாக்குதல்கள் நடத்தியதை ஒரு கருத்தாகக் கூறாமல் வாதிடுவது இயலாது.”
முழு ஆவணம் ஒருபுறம் இருக்க, உரிய ஆலோசனையை ஒட்டித்தான், கடிதத்தில்
இருந்து ஒரு சொற்றொடரைக்கூட ஷைல் மேற்கோளிடவில்லை. இல்லாவிடின் வரலாற்றாளர்களின்
கடிதம் யூதஎதிர்ப்புப் பிரச்சனை குறித்து வெளிப்படையாக வாதத்தை முன்வைக்கவில்லை
என்ற பொய்யைக் கூறியிருக்கமாட்டார்.
சுஹ்ர்காம்ப்பிற்கு எழுதப்பட்ட கடிதம் அரைப்பக்கத்திற்கு மேலாக சேர்விஸின்
புத்தகத்தில் உள்ள யூதஎதிர்ப்புப் பத்திகளைக் கொண்டுள்ளது. இப்பத்திகள் சேர்விஸ்
ஒன்றும், ஷைல் கூறுவதுபோல்,
“அவருடைய சமகாலத்தவர்கள் ட்ரொட்ஸ்கியின் யூதப் பின்னணி பற்றி
விரோதத் தாக்குதல்கள்”
நடத்தியதைப் பற்றி அல்ல. மாறாக ஷைலின் சமகாலத்தியவர்களின்
யூதஎதிர்ப்புக் கருத்துக்களைப் பயன்படுத்தியிருப்பதுதான். கடிதத்தில்
மேற்கோளிடப்பட்டுள்ள சேர்விஸின் நூலில் உள்ள இன எதிர்ப்புக் கருத்துக்கள் பல
ட்ரொட்ஸ்கியின் காலத்திற்கே செல்லுகின்றன என்று ஷைல் வலியுறுத்துகிறார். அத்தகைய
கருத்துக்கள்
“பரந்திருந்தன”,
“செல்வாக்குப்
பெற்றவை”
அல்லது அவை ட்ரொட்ஸ்கியின் விரோதிகளான
பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் பேச்சுக்களுக்கு வந்திருந்த ஜேர்மனியப் பிரதிநிதிகளின்
நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பவை. அவர் பல விடயங்களைக் கற்பனை செய்வதால் சான்று என
ஆதாரங்கள் எவற்றையும் குறிப்பிடவில்லை, குறிப்பிடவும் முடியாது.
சேர்விஸின் நூலில், ட்ரொட்ஸ்கியின் காலத்தில் இருந்து வந்த இனவழி
வசைச்சொல் சேர்விஸின் சொந்தக் கண்டுப்படிப்புத்தான்—ட்ரொட்ஸ்கியைப்
பற்றிய யூதஎதிர்ப்பு கேலிவரைப்படம்தான் அது. இதை சேர்விஸ் அப்படியே எந்த
வெளிப்படைக் காரமும் இல்லமால், பின்னணிக்குறிப்பும் இல்லாமல் கொடுத்துள்ளார்—மேலும்
இதன் ஆதாரத்தையும் அவர் மறைக்கிறார்—அதாவது நாஜியின் யூதர்களைச் சாடும் செய்தித்தாள்
“ரஷியாவின்
கல்லறை தோண்டுபவர்”
என்ற தலைப்பில் 1921ல் வெளியிடப்பட்டது, ஹிட்லரின் புரவலரும்
ஆசிரியருமான
Dietrich Eckart 1920களில் எழுதியது என்பதை. முதல் உலகப்போரில் தோல்வி
அடைந்தபிறகு, ஜேர்மனியில் சீற்றம் மிகுந்த யூதஎதிர்ப்புவாதம் தோன்றியது, ரஷியாவில்
அக்டோபர் புரட்சிக்குப் பின் தோன்றியது. ஆனால் அது என்றும்
“பொதுவாக இருந்தது”,
“தற்பொழுது
சமூகம் முழுவதும் உள்ளது”
என்ற முறையில் இருந்ததில்லை. மாறாக ஒரு
குறிப்பிட்ட பிரிவில்தான், அதாவது வலதுசாரித் தேசிய, பாசிச வட்டங்களில் மட்டும்
தான் இருந்தது.
ரொபேர்ட் சேர்விஸ் ஜேர்மனியில்
Junge Freiheit
யில் அறிவுசார்ந்த சக சிந்தனையாளர்களை கண்டறிந்துள்ளார்
என்னும் உண்மை, நூலின் இயல்பைப் பற்றி நிறையவே தெரிவிக்கிறது.
சுஹ்ர்காம்ப் பதிப்பகத்திற்கு
எழுதிய கடிதத்தில்
“சேர்விஸின்
நூல் உங்களுடைய மதிப்புமிக்க பதிப்பகத்தின் கையில் தவறாக வந்துள்ளது என்று நாங்கள்
கருதுகிறோம், உங்கள் விருப்பத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்”
என்று எழுதிய 14 ஆய்வாளர்களின் நிலைப்பாட்டை இது வலுவாக உறுதி
செய்கிறது.
அக்டோபர் 28, 2011 ல்
சுஹ்ர்காம்ப் பதிப்பகம்
நிர்வாகத்திற்கு இந்த வரிகளை எழுதியவர் எழுதியவற்றையும் இது
உறுதிபடுத்துகிறது:
“சேர்விஸ் ஒரு யூத எதிர்ப்பாளரா இல்லையா என்பது பற்றி இது
இல்லை. அவர் அவ்வாறு இல்லை என்றாலும், நூலில் பல பத்திகளை மிகத்தீவிர வலதுசாரித்தன,
யூத எதிர்ப்பு வட்டங்கள் ஜேர்மனியிலோ ரஷ்யாவிலோ உள்ளவற்றிடைய ஆர்வத்தைக்
கட்டவிழ்த்துவிடக்கூடியவற்றை அவர் எழுதியுள்ளார். ஒரு புகழ்பெற்ற அறிவியல் சார்ந்த
வகையில் நூல்கள் பதிப்பிக்கும் நிறுவனம்,
சுஹ்ர்காம்ப்
போன்ற வரலாற்றையும் செல்வாக்கையும் பெற்ற நிறுவனம், இத்தகைய இழிந்த, அதிகம் மறைப்பு
இல்லாத தந்திர உத்திக்கு ஒப்புதல் கொடுத்தால் அது துரதிருஷ்டவசம் ஆகும், உண்மையில்
பேராபத்தைக் கொடுக்கும். உங்கள் நிறுவனத்தின் மரபுகள் குறித்த மரியாதை, ஜேர்மனியில்
இது வெளியிடப்பட்டால் தோன்றக்கூடிய பிரச்சினைகளைக் குறித்த கவலைகள் 14 புகழ்பெற்ற
வரலாற்றாளர்கள் ரொபேர்ட் சேர்விஸ் எழுதியுள்ள நூலுக்கு காட்டும் எதிர்ப்புக்கள்
உங்கள் பதிப்பகத்தால் கவனமான பரிசீலனையைப் பெற வேண்டும்.” |