WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
வங்கிகள் ஆழ்ந்த ஊதிய சமூநல வெட்டுக்களைக்
கோருகையில்
கிரேக்க
கட்சிகள்
பேச்சுக்களை
நடத்துகின்றன
By Alex Lantier
9 February 2012
use
this version to print | Send
feedback
கிரேக்கத்தின் கூட்டணி அரசாங்கத்தின் மூன்று அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையே
நடந்த பேச்சுக்கள் நேற்று உடன்பாடு ஏற்படாமல் முறிந்துபோயின; இதற்குக் காரணம் பிரதம
மந்திரி லூக்காஸ் பாப்படெமோஸ் ஐரோப்பிய நிதிய அதிகாரிகள் கோரிய ஆழ்ந்த சமூகநல
செலவினக் குறைப்புக்களான திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்ய முற்பட்டதுதான்.
“முக்கூட்டு”
எனப்படும் சர்வதேச
நாணய நிதியம், ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி
(IMF, EC, ECB)
கிரேக்க தொழிலாள
வர்க்கத்தின் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்குவதற்கு அழுத்தம் கொடுத்தற்கு இடையே
பேச்சுக்கள் நடைபெற்றன. ஐரோப்பிய அதிகாரிகள் 130 பில்லியன் யூரோக்கள் பிணை எடுப்பு
என ஒப்புக்கொள்ளப்பட்டதில் 89 பில்லியன் யூரோக்கள் தவணை பற்றிய உறுதிமொழியை
செயல்படுத்தாதுதான். கிரேக்கம் தொடக்கத் தவணைக்கான தேவையைக் கொண்டுள்ளது—இது
30 பில்லியன் யூரோக்கள் தான்—மார்ச்
20ம் திகதி 14 பில்லியன் யூரோக்கள் கடன்தொகையைத் திருப்பிக் கொடுக்காமல் போவதைத்
தவிர்ப்பதற்கு இது முக்கியமானது ஆகும்.
வலதுசாரி
புதிய ஜனநாயகக் கட்சியின் (ND)
அன்டோனிஸ் சமரஸ்,
LAOS
கட்சியின் ஜோர்ஜியோஸ்
கரட்ஜபெரிஸ், சமூக ஜனநாயகக் கட்சியின் (PASOK)
முன்னாள் பிரதம
மந்திரி ஜோர்ஜியோஸ் பாப்பாண்ட்ரூ ஆகியோர் கிரேக்க பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ
இல்லத்திற்கு பிற்பகல் 5 மணிக்கு வந்தனர். பேச்சுக்கள் இரவு வரை நீடித்தன. இன்று
பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய நிதி மந்திரிகள் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு
லக்சம்பர்க்கின் பிரதம மந்திரி
Jean Claude Juncker
உடன் தொலைபேசியில் பேசுவதற்காக கூட்டத்தை சிறிது நேரம் பாப்படெமோஸ் ஒத்திவைத்தார்.
நிதியச்
செய்தி ஊடகம் இத்தொலைபேசி,
உடன்பாடு ஏற்படும்
வாய்ப்பை அடையாளம் காட்டுகிறது என்று முதலில் தகவல் கொடுத்தது. ஆனால் விரைவில் எந்த
உடன்பாடும் அடையப்படவில்லை,
ND,
LAOS
ஆகியவற்றின் எதிர்ப்புத்தான் இதற்குக் காரணம் என்று பின்னர்
தெளிவாயிற்று.
2012ல்
அரசாங்கச் செலவினங்களில் 3.2 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களைத் தவிர கோரிக்கைகளில்
கீழ்க்கண்டவை அடங்கியுள்ளன: நாட்டின் குறைந்தப்பட்ச மாதாந்திர ஊதியமான 750
யூரோக்களில் 20 சதவிகித வெட்டுக்கள்,
“துணை”
ஓய்வூதியங்களில் 15
முதல் 35 சதவிகித வெட்டுக்கள்—இதைக்
கொண்டு கிரேக்கர்கள் தங்கள் வருமானங்களுக்கு துணை செய்யும் வகையில் அடிப்படை
கிரேக்க அரசாங்க ஓய்வூதியத்தைப் பெறமுடியும், ஆனால் இது வரிமூலம் கிடைக்கும்
வருமானங்களில் சரிவு ஏற்பட்டால் பாதிப்பிற்கு உட்படும்—மற்றும்
15,000 பொதுத்துறை வேலைகள் தகர்க்கப்படும்.
கிரேக்க
அரசாங்கம் வங்கிகளுக்கு அது கொடுக்க வேண்டிய கடன்களில் தாமதம் ஏற்படுத்தாது,
என்னும் உறுதிமொழியையும் அடக்கியுள்ளது—சர்வதேச
நிதிய அதிகாரிகள் ஏதென்ஸில் தாங்கள் செய்த உடன்பாடுகளைத் தகர்த்துவிட்டாலும் கூட.
இத்தகைய திட்டங்கள் கிரேக்கம் அதன் இறைமையை உதறுதல், அது ஐரோப்பிய ஒன்றியத்தை
நம்பியிருக்கும் ஒரு காலனித்துவத்தன்மையை கொண்டிருக்கும் என்பதைத்தான்
குறிக்கின்றன.
கரட்ஜெபெரிஸ்,
கூட்டத்திலிருந்து
வெளியே வரும்போது ஒரு பேட்டி கொடுத்தார்: அதில் விவாதத்தின் பெரும்பகுதி துணை
ஓய்வூதியங்கள் பிரச்சினையை மையமாகக் கொண்டிருந்தன என்றும் அவை 15 சதவிகிதம்
வெட்டிற்கு உட்படும் என்றும் கூறினார்.
“ஆரம்பத்தில்
இருந்தே என் நிலைப்பாடுகளை நான் தெளிவாக்கிவிட்டேன்.... ஓய்வூதியங்களை பொறுத்தவரை
நான் திரு சமரஸிற்கு ஆதரவைக் கொடுக்க விரும்புகிறேன்.”
முதல் நாள்
பேச்சுக்கள் தோல்வியுற்றது, நிதியச் சந்தைகள் மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளிடம்
இருந்து கூடுதலான வெட்டுக்கள் பற்றிய கோரிக்கைக்கு வகை செய்யும்; கிரேக்க மக்கள்
மீது பொருளாதார நெருக்கடியின் சுமையைச் சுமத்த எப்படித் திறம்பட செயல்புரியலாம்
என்பது குறித்து கிரேக்க முதலாளித்துவத்திற்குள் ஆழ்ந்த பிளவுகளுக்கு இடையே இந்நிலை
வந்துள்ளது. மூன்று-கட்சிப்பேச்சுக்களின் தோல்வி, மக்கள் எதிர்ப்பு
பெருகியிருப்பதன் அடையாளங்களுக்கு இடையே வந்துள்ளது; அவற்றுள் செவ்வாயன்று நடைபெற்ற
ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தமும் அடங்கும்; அதேபோல் கிரேக்கத்தின் மரபார்ந்த
கட்சிகள் அரசாங்கத்திற்கு கொடுத்துவரும் ஆதரவின் சரிவும் அடங்கும்.
Kathemerini-Saki
நடத்திய
தொலைக்காட்சிக் கருத்துக் கணிப்பு நேற்று, தற்பொழுதைய அரசாங்கக் கூட்டணியில்
முக்கிய கட்சியான
PASOK
விற்கு ஆதரவு 8
சதவிகிதம்தான் எனக் குறைந்துவிட்டதைக் காட்டுகிறது.
ND
31 சதவிகிதம் ஆதரவைப் பெற்றுள்ளது; ஆனால்
PASOK
உடைய ஆதரவுச் சரிவு அதிகமாக
குட்டி முதலாளித்துவ
“இடது”
கட்சிகளுக்குத்தான் ஆதாயத்தைக் கொடுத்துள்ளது.
ஸ்ராலினிச
கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12.5 சதவிகித ஆதரவு கிடைத்தது;
SYRIZA
விற்கு 12 சதவிகித
ஆதரவு கிடைத்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜனநாயக இடது, 2010ல்
SYRIZA
வில் இருந்து பிளவுற்ற
Renewal Wing
இடமிருந்து
வெளிப்பட்டது 18 சதவிகித வாக்குகளைப் பெற்றது.
. (See: “Greece:
What is behind the right wing-split from SYRIZA?”)
இது
இக்கட்சிகளுக்கு மொத்தத் தேர்தல் ஆதரவு கிட்டத்தட்ட 43 சதவிகித என உள்ளது என்பதைக்
காட்டுகிறது.
இந்த
அமைப்புக்கள் கிரேக்க மக்களுடைய ஆழ்ந்த சீற்றத்தை ஒட்டி தகுதியற்ற முறையில் நன்மை
பெறுபவை என்பது வெளிப்படை; இச்சீற்றமோ
PASOK
மற்றும் அதன் சமூகநலக்
குறைப்புக்களுக்கு ஒரு மாற்றீட்டை இடதில் காண முற்படுகிறது. தொழிலாள வர்க்கம்
ஜனநாயக இடது,
KKE, SYRIZA
ஆகியவற்றில் ஒரு மாற்றீட்டைக் காணமுடியாது. ஏனெனில் பல ஆண்டுகளாக
இவைகள் பாப்பாண்ட்ரூ மற்றும் அவர் கிரேக்கத் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் நடத்திய
பேச்சுக்களுக்கு ஆதரவைக் கொடுத்துள்ளன; இவைகள் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்களை
நெரித்துத் துண்டாடும் நோக்கத்தைத்தான் கொண்டவை ஆகும்.
முழு
கிரேக்க ஆளும் உயரடுக்குடன், இவைகள் பொது மக்களுடைய கருத்துக்கள் நகர்தல் என்பது
தொழிலாள வர்க்கத்தை அரசாங்கத்திற்கு எதிராக, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின்
கட்டுப்பாட்டிற்கு வெளியே ஓர் அரசியல் போராட்டம் நடத்த உந்துதலைக் கொடுக்கலாம் என்ற
வாய்ப்பினால் பீதியுற்றுள்ளன.
ஆனால்
PASOK
மூன்று
ஆண்டு காலமாக தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் முக்கிய பங்கை, வங்கிகள் கோரிய
சமூகநலச் செலவுக் குறைப்புக்களை சுமத்தி, கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தை பெரும்
குருதி கொட்ட வைத்த செயற்பாடுகள் நடத்தியதிலேயே, ஒரு எழுச்சிக்கான பொதுநிலைச்
சூழல்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன.
வேலையின்மை
மே 2008ல் இருந்த 6.6 சதவிகிதத்திலிருந்து கடந்த மாதம் 18.8 சதவிகிதம் என
உயர்ந்துவிட்டது. இளைஞர் வேலையின்மை என்பது இப்பொழுது 40 சதவிகிதத்திற்கும் மேல்
உள்ளது. பொதுத்துறை ஊழியர்கள் 40 சதவிகித ஊதிய வெட்டுக்களை ஏற்றுள்ளனர், விற்பனை
வரிகளோ 23 சதவிகிதம் உயர்ந்துவிட்டன.
கிரேக்கத்தில் சமூக நிலைமைகள் கொடூரமான இழிசரிவில் உள்ளன. வீடுகள் அற்றதன்மை, இரு
பெரிய நகரங்களான ஏதென்ஸ் மற்றும் தெசலோனிகியிலை மையம் கொண்டது, குறைந்தப்பட்சம் 25
சதவிகிதம் நெருக்கடி ஆரம்பத்திலிருந்து அதிகரித்துவிட்டது. கிரேக்க வீட்டு
உரிமையாளர்களில் பாதிப்பேர் இப்பொழுது புதிய, உயர்த்தப்பட்ட தங்கள் வீடுகள் மீதான
சொத்து வரிகளைக் கொடுக்க இயலாத நிலையில் உள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது;
அதேபோல் மக்கள் மின்சாரம் இன்னும் பிற அடிப்படைப் பயன்பாடுகளுக்கும் கட்டணம்
கொடுக்கும் நிலையில் இல்லை.
சுகாதார
பாதுகாப்புப் பிரிவின் பாதிப்பு பெரும் அவதிக்குக் குறிப்பிடத்தக்க வகையில்
ஏற்பட்டுவிட்டது. மருத்துவமனை நுழைவுகள் 25 சதவிகிதம் உயர்ந்துவிட்டன; ஆனால்
மருத்துவமனைகளுக்கான வரவு-செலவுத் திட்டங்கள் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டு,
புண்களுக்குக் கட்டுப்போடும் பொருட்கள், ஊசிகள் ஆகியவற்றில் தட்டுப்பாடுகளை
ஏற்படுத்தியுள்ளது. இப்பொழுது கிரேக்கர்கள் தெருக்களில் இருக்கும் மருத்துவமனைகள்,
முன்பு முக்கியமாகக் குடியேறிய தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளித்தலைப்
பயன்படுத்துவதின் சதவிகிதம் 3 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதம் அதிகமாகிவிட்டதாகத்
தெரிகிறது; ஏனெனில் மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கான செலவுகளைக் கொடுக்க
இயலவில்லை.
HIV
தொற்று விகிதங்கள் 50 சதவிகிதம் உயர்ந்துவிட்டன; இவை நரம்புமூலம்
செலுத்தப்படும் போதைப்பொருள் பயன்பாடு, விபச்சாரம் ஆகியவற்றினால் பரவிவிட்டன.
உலக
மருத்துவர்கள் அறக்கட்டளையில் இருக்கும் நிகிடாஸ் கனேக்கிஸ்
MSNBC
இடம், “ஏதென்ஸில்
ஒரு மனிதாபிமான பேரழிவு ஏற்படக்கூடும்”
எனத் தான்
அஞ்சுவதாகக் கூறியுள்ளார்.
“மூன்றாம்
உலகில் பெரிய நகரங்களிலுள்ள கூறுபாடுகள் அனைத்தையும் இங்கு காண்கிறோம்: உறைவிடம்
இல்லாத மக்கள், பட்டினியில் வாடும் மக்கள், மருத்துவர்களையும் மருந்துகளையும் நாடி
அலையும் மக்கள் என்று”
என அவர் சேர்த்துக் கொண்டார்.
ஆயினும்கூட
ஐரோப்பிய ஒன்றியமும் வங்கிகளும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான புதிய
தாக்குல்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. கிரேக்கப் பொருளாதாரத்தின் சரிவைத்தான்
தற்போதைய நடவடிக்கைகள் விரைவுபடுத்தும்; அதே நேரத்தில் கிரேக்கத்தின் கடன் சுமையை
முந்தைய சுற்றுச் சிக்கன நடவடிக்கைகள் அகற்றியதை விட அதிகம் ஏதும் செய்துவிடாது.
கடந்த ஆண்டு
5 சதவிகிதச் சுருக்கம் கண்டபின், கிரேக்கப் பொருளாதாரம் மீண்டும் இந்த ஆண்டு 4
முதல் 5 சதவிகிதம் சுருங்கும் என்று முக்கூட்டு எதிர்பார்க்கிறது. கிரேக்க அரச
சொத்துக்களை—பயன்பாட்டு
நிறுவனங்கள், துறைமுகங்கள், விமான நிலைய ஆதரவுகள் என—விற்று
நிதியைத் திரட்டுதல் என்பது இதுவரை 1.8 பில்லியன் யூரோக்களைத்தான் எதிர்பார்த்த 50
பில்லியன் யூரோக்களுக்குப் பதிலாக திரட்டியுள்ளது.
இன்று
ஏதென்ஸ் மற்றும் அதன் தனிக்கடன் கொடுத்தோருக்கும் இடையே பேச்சுக்கள் பாரிசில்
தொடங்க உள்ளன; தனிக்கடன் கொடுத்தோர் ஏதென்ஸுடன் கிரேக்கத்தின் கடன்களில் எவ்வளவு
இழப்பை ஏற்பது என்பது குறித்துப் பேச்சுக்கள் நடத்துவர். அவர்கள் சராசரியாக 3.6
வட்டிவிகிதத்தை இப்பொழுது வெளிவரும் 30 ஆண்டு கிரேக்கப் பத்திரங்களில் ஏற்கலாம்
என்று தகவல்கள் குறிக்கின்றன. ஆனால் நிதியத்தர நிர்ணய_அமைப்பான ஸ்டாண்டர்ட் &
பூர்ஸ் நேற்று கிரேக்கத்தின் கடன்களில் 70 சதவிகிதம் குறைந்தாலும் நாடு அப்படியும்
அதன் கடப்பாடுகளைத் தீர்க்க இயலாது என்று எச்சரித்துள்ளது.
கிரேக்க
பங்கு பத்திரங்களை வைத்திருப்பதால் ஒரு கடன் குறைப்பினை செய்ய உடன்படவேண்டும் என்ற
ஐரோப்பிய மத்திய வங்கிக்கு,
குறிப்பாக
ஜேர்மனியிடமிருந்து இன்னும் எதிர்ப்பு உள்ளது.
தான் வைத்திருக்கும்
கிரேக்க கடன்களின் பெறுமதியின் அளவிற்கு ஒரு கடன் வெட்டினை ஐரோப்பிய மத்திய வங்கி
ஏற்றுக்கொள்ளாமல் ஒரு ஒப்பேறக்கூடிய உடன்பாடு சாத்தியமில்லை என நிதிய ஆய்வாளர்கள்
கூறுகின்றனர்.
S&P
பகுப்பாய்வாளர்
பிராங்க் கில்லை ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்டுள்ளது:
“முதலீட்டாளர்களில்
மிகச்சிறிய துணைப்பிரிவினர்தான் உண்மையில் கடன் வெட்டினை ஏற்றுக் கொண்டுள்ளனர்,
உத்தியோகபூர்வப் பிரிவு ஏற்கவில்லை; அப்படி ஏற்றிருந்தால் பகுதியளவுதான்
ஏற்றுள்ளது; குறைப்பு என்பது ஒருவேளை போதுமானதாக இல்லை”
எனக் கூறியதாக.
|