WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
ஆர்மீனிய
இனப்படுகொலை
மறுப்பைத்
தடைக்கு
உட்படுத்தும்
பிரெஞ்சு
சட்டம்
அரசியலமைப்புக்
குழுவிற்கு
அனுப்பப்படுகிறது
By Antoine
Lerougetel
9 February 2012
use
this version to print | Send
feedback
ஜனவரி 31ம்
திகதி ஆர்மீனிய இனப்படுகொலையை மறுப்பது தண்டனைக்கு உரியதாகும் என்னும் சட்டம் ஒன்று
பிரான்சின்
அரசியலமைப்புக் குழுவிற்கு 77 செனட் உறுப்பினர்கள் மற்றும் 65 பிரதிநிதிகளால்
அனுப்பிவைக்கப்பட்டது; இவர்கள் இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்று
அறிவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் உடையவர்கள் ஆவார்கள்.
பிரெஞ்சு
சட்டமன்றத்தின் இரு பிரிவுகளிலும் இயற்றப்பட்ட சட்டம் அறிவிக்கப்படுவதை இது
தடுக்கும். இச்சட்டம் ஆர்மீனிய இனப்படுகொலையை மறுத்தலுக்கு
45,000
யூரோக்கள் அபராதமும் ஓராண்டு சிறைத்தண்டனையையும் கொடுக்கிறது, இது
ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் வலுவான ஆதரவைக் கொண்டுள்ளது.
97 ஆளும்
UMP
பாராளுமன்ற உறுப்பினர்கள்
மற்றும் 39 முதலாளித்துவ
“இடது”
(சோசலிட் கட்சி (PS),
கம்யூனிஸ்ட் கட்சி (PCF)
மற்றும் பசுமைவாதிகள்) செனட் உறுப்பினர்கள், பிரதிநிதிகள் ஆகியோர்
அரசியலமைப்புக் குழுவிற்கு சட்டம் அனுப்பப்படுவதற்கு ஆதரவைக் கொடுத்துள்ளனர். அந்த
அமைப்பு ஒரு மாதக் காலத்திற்குள் தீர்ப்பளிக்க வேண்டும்.
இச்சட்டம்
அரசானது மக்களுடைய ஜனநாயக உரிமைகள் மற்றும் வரலாற்று ஆய்வு பற்றிய சுதந்திரம்
ஆகியவற்றிற்கு எதிரான ஒரு பிற்போக்குத்தனத் தலையீடு ஆகும்; அப்பட்டமான அரசியல்
கணக்கீட்டில் தளத்தைக் கொண்டுள்ளது. ஆனால், சட்டத்திற்கு சவால் விடும்
உறுப்பினர்களின் உந்துதல்கள் அதே அடிப்படைத் தன்மையைத்தான் கொண்டிருக்கின்றன.
சட்டம்
இயற்றுபவர்களுக்கு உந்துதல் கொடுக்கும் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் முக்கிய அக்கறை
துருக்கிய அரசு 1915 முதல் 1918 வரை 600,000 முதல் 1.5 மில்லியன் ஆர்மீனியர்களைக்
கொன்றதல்ல. மாறாக, ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் விரும்பமான ஏப்ரல்-மே
மாதங்களில் நடக்க இருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களில் தான் மீண்டும்
தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்கு இச்சட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதும், பிரெஞ்சு
ஏகாதிபத்திய புவியியல்சார் அரசியல் நலன்களில் சட்டத்தின் பாதிப்பை ஒட்டியும்தான்
உள்ளன.
அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளது பிரான்ஸ்-துருக்கி உறவுகளில்
இச்சட்டம் ஏற்படுத்தக்கூடிய தீமையைப் பற்றிய பிரெஞ்சு முதலாளித்துவத்தின் சில
பிரிவுகளிலுள்ள கணிசமான பதட்டத்தின் அடையாளம் ஆகும். ஆர்மீனியப் படுகொலைகளைப்
பற்றிய குறிப்புக்களை சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவித்துள்ள துருக்கியே
சிரியாவில் நேட்டோ சக்திகள் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை அகற்றி தங்கள்
நலன்களுக்கு இன்னும் வளைந்து கொடுக்கும் ஒரு ஆட்சியைச் சுமத்துவதற்கான ஆயுதமேந்திய
தலையீடுடைய அதிகத் தயாரிப்பிலுள்ள திட்டங்களில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.
நேட்டோ ஆதரவுடைய முக்கிய ஆயுதமேந்திய குழுவான
SFA
எனப்படும் சிரிய சுதந்திர
இராணுவம் துருக்கியில் தளத்தைக் கொண்டுள்ளது. மேலும்
France24
கொடுத்துள்ள தகவலின்படி, “ஐரோப்பிய
ஒன்றியத்திற்கு வெளியே, இன்று துருக்கி பிரான்ஸுடன் மூன்றாம் பெரிய வணிகப்
பங்காளியாக, அமெரிக்கா, சீனாவிற்குப் பின், ஆனால் ஜப்பானுக்கு முன்பு என்ற நிலையில்
உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் 2011ல் 12 பில்லியன் யூரோக்கள் என்று
இருந்தது என Quai d Orsay
தெரிவிக்கிறது.
இனப்படுகொலை பற்றிய சட்டம் குறித்த விவாதத்திற்கு முன் பிரான்ஸ் இத்தொகை 15
பில்லியன் யூரோக்களை 2015க்குள் எட்டும் என்று நம்பியது.”
இப்பொழுது
கருத்துக் கணிப்புக்களில் சார்க்கோசிக்கு ஆதரவு 30 சதவிகிதம் என்றுதான் உள்ளது;
வாக்கெடுப்பு பற்றிய கருத்துக் கணிப்புக்கள் அவரை
PS
வேட்பாளரான
பிரான்சுவா ஹோலண்ட், அவரைத் தொடர்ந்து நவ பாசிச தேசிய முன்னணியின் மரின் லு பென்
ஆகியோருக்குப் பின்தான் உள்ளார் என்பதைக் காட்டுகின்றன.
இச்சட்டத்தை
சட்டத்தொகுப்பில் கொண்டுவந்துவிட வேணடும் என்னும் அவருடைய உறுதி பிரான்ஸிலுள்ள
600,000 பேர் நிறைந்த ஆர்மீனிய சமூகத்தில் வாக்களார்களின் ஆதரவைப் பெறுவதற்காக
ஏற்படுத்தப்பட்டுள்ளது; அவர்கள் அத்தகைய சட்டத்திற்குப் பெரும் ஆதரவைக்
கொடுக்கின்றனர்; மேலும் நவ பாசிசத் தேசிய முன்னணியின் தீவிர வலது இஸ்லாமியவாத
அடிப்படைவாதிகளும் ஆதரவைக் கொடுக்கின்றனர். இத்தகைய பரிசீலனைகள் சார்க்கோசி
ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி சேர்வதற்கு தொடர்ச்சியான எதிர்ப்பை அளிப்பதில்
முக்கிய பங்கைக் கொண்டுள்ளன.
ஆர்மீனிய
படுகொலை மறுக்கப்படுவது சட்டம் என்பது முதலில் தேசிய சட்டமன்றத்தால் டிசம்பர் 22ம்
திகதி இயற்றப்பட்டது. இதற்கு
UMP,
PS,
PCF ஆகியவற்றின்
சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு, அவையில் 577 உறுப்பினர்களில் 50 பேர்
வந்திருந்தபோது கிடைத்தது. ஆறு பேர் எதிராக வாக்களித்தனர். துருக்கிய
அரசாங்கத்திற்கு எதிரான இத்தூண்டுதல் ஏற்படுத்தியுள்ள ராஜதந்திர நெருக்கடி ஆளும்
UMP
க்குள் கடுமையான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கிய
பிரதம மந்திரி ரெசப் தயிப் எர்டோகன், தேசிய சட்டமன்றத்தின் வாக்கிற்கு
முகங்கொடுக்கும் வகையில், பிரான்ஸிற்கும் துருக்கிக்கும் இடையே இருதரப்பு வருகைகளை
தற்காலிகமாக நிறுத்திவைத்தல், துருக்கிய தூதரைத் திரும்பப் பெறல் என்னும்
நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டதின் மூலம் செயல்பட்டுள்ளார்.
“பிரான்ஸுடன்
கூட்டு இராணுவப் பயிற்சிகள், அந்நாட்டுடன் இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் இரத்து
செய்யப்பட்டன”
என்றும் அவர் அறிவித்தார். துருக்கிய வான்வெளியை இராணுவப்
பயணங்களுக்காக மேற்கொள்ளுவதற்கான பிரெஞ்சுக் கோரிக்கைகள் அந்தந்த நேரத் தளப்படி
பரிசீலிக்கப்படும் என்றும் துருக்கியத் துறைமுகங்களுக்கு பிரெஞ்சுப் போர்க்
கப்பல்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
வெளியுறவு
மந்திரி அலன் யூப்பே தனிப்பட்ட முறையில் இச்சட்டத்தைக் கண்டித்து துருக்கியுடனான
உறவுகளைத் திருத்த முயன்றார்.
“பிரான்ஸிற்கு
துருக்கி ஒரு மூலோபாய நட்பு நாடு, பங்காளி”
என்று அவர்
கூறினார். “உரையாடல்,
ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான வாய்ப்புக்கள் திறந்து வைக்கப்பட வேண்டும்”
என்றும் கூறினார்.
செனட்டில்
ஜனவரி 30ம் திகதி 127-86 என்று ஒப்புதல் இச்சட்டத்திற்கு அளிக்கப்பட்டது.
பிரெஞ்சுப் பாராளுமன்ற உறுப்பினர்களை புதிய சட்டத்தை அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு
எடுத்துச் செல்ல வேண்டும் என்று செயல்பட்ட துருக்கி செல்வாக்குக் குழுவினர் இவ்வாறு
நீதிமன்றக் கருத்து கேட்கப்படுவது குறித்து திருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக அல்ஜீரியப் போரில் பிரெஞ்சு
ஏகாதிபத்தியம் அல்ஜீரிய மக்களுக்கு எதிராக நடத்திய படுகொலைகளை மறுத்திருப்பது
குறித்த தடை குறித்த சட்டம் தேவை என்றும் சில துருக்கிய அரசியல்வாதிகள்
அச்சுறுத்தியுள்ளனர்.
பிரெஞ்சுச்
சட்டம் துருக்கியின் கலையுலக, அறிவுஜீவிகள் சமூகத்தில் இருந்தும் குறைகூறலை
முகங்கொடுக்கிறது. புகழ்பெற்ற துருக்கிய எழுத்தாளரான ஓர்ஹன் பமுக், துருக்கிய
அரசாங்கத்திடம் இருந்து படுகொலைகளை உறுதி செய்ததற்காக மரண அச்சுறுத்தல்கள்,
மிரட்டல்கள் ஆகியவற்றை எதிர்கொண்டவர், இச்சட்டத்தை ஜனநாயகமற்றது எனக்
கண்டித்துள்ளார்.
இத்தகைய
சட்டம் முன்பு 2006ல் இயற்றப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, துருக்கிய
ஆர்மீனிய செய்தியாளர் ஹ்ரன்ட் டிங், இனப்படுகொலை உறுதி செய்ததற்காகத் துருக்கியில்
சிறையில் அடைக்கப்பட்டவர், இது இயற்றப்பட்டால் தானே சட்டத்தை மீறும் வகையில்
பிரான்ஸிற்கு வந்து போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்திருந்தார். அப்பொழுது அவர்
கூறியது:
“வருங்காலத்தில்
இனப்படுகொலை பற்றி பேசுவதைத் தடுக்கும் சட்டங்களுக்கு எதிராக நாம் எப்படி வாதிட
முடியும்? இப்பொழுது அதையே தன் பங்கிற்குப் பிரான்ஸ் செய்யும் நிலையில்?”
என்றார். ஜனவரி 2007ல் டிங், ஒரு துருக்கியப் பாசிஸ்ட்டால் கொலை
செய்யப்பட்டார். |