World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Mass protests bring down Romanian government

பாரிய ஆர்ப்பாட்டங்கள் ருமேனிய அரசாங்கத்தை வீழ்த்துகின்றன

By Peter Schwarz
7 February 2012
Back to screen version

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து கடந்த மூன்று வாரங்களாக வெகுஜன எதிர்ப்புக்கள் வந்துள்ள நிலையில், திங்கட்கிழமை அன்று ருமேனிய அரசாங்கம் இராஜிநாமா செய்தது.

ஒரு தொலைக்காட்சி மந்திரிசபை கூட்டத்தில் பிரதம மந்திரி எமில் போக் தன்னுடைய செல்வாக்கற்ற சிக்கன நடவடிக்களை சமரசத்திற்கு உட்படுத்தாமல் சமூக அழுத்தங்களை தான் குறைக்க விரும்புவதாகவும், தன் இராஜிநாமா பற்றி அவர் விளக்கினார். நாட்டின் அரசியல் மற்றும் சமூக அழுத்தங்களை அகற்றுவதற்காக நான் இந்த முடிவை எடுத்தேன். அத்துடன் ருமேனியா வெற்றிபெற்று அடைந்துள்ளதை இழக்காமல் இருப்பதின் பொருட்டும் இம்முடிவை எடுத்தேன்.

ஜனாதிபதி டிரையன் பசேஸ்கு உடனடியாக முன்னாள் நீதித்துறை மந்திரி கடாலின் பிரிடௌவை இடைக்காலப் பிரதம மந்திரியாக நியமித்தார். 43 வயதான பிரிடௌ எக்கட்சியிலும் இல்லாத ஓர் அரசியல்வாதி. இவர் 2008ல் PNL எனப்படும் தேசிய தாராளவாதக் கட்சியின் உறுப்பினர் என்னும் முறையில் பதவிக்கு வந்தார். டிசம்பர் 2008ல், PDL எனப்படும் லிபரல் தாராளவாதக் கட்சியின் எமில் போக் தேர்ந்தெடுக்கப்பட்டபின், ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது, தேசிய தாராளவாதிகள் எதிர்த்தரப்பிற்குச் சென்றனர். பிரிடௌ நீதிமந்திரியாக தொடர்ந்து பதவியில் இருந்து தன் கட்சியில் இருந்தும் இராஜிநாமா செய்தார். 2007ல் ருமேனிய சேர்ந்த ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளில் அவர் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

பிரிடௌ நவம்பர் மாதம் நடக்க இருக்கும் பொதுத் தேர்தல்கள் வரை அரசாங்கத்திற்கு தலைவராக இருப்பாரா அல்லது தேர்தல்கள் முன்கூட்டியே நடத்தப்படுமா என்பது பற்றித் தெளிவாக தெரியவில்லை. ஏற்கனவே கிரேக்கத்திலும் இத்தாலியிலும் நிறுவப்பட்டுள்ள தொழில்நுட்பவாதி ஆட்சி அமைப்பது குறித்து இங்கு விவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் மூன்றரை ஆண்டு பதவிக்காலத்தில், போக் அரசாங்கம் ஐரோப்பா முழுவதும் காணப்படாத அளவிற்கு மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது. ருமேனியாவில் சராசரி ஊதியம் மாதம் ஒன்றிற்கு 350 தான் என்றாலும், அரசாங்கம் பொதுத்துறை ஊதியங்களை 25% குறைத்து, மதிப்புக் கூட்டு வரியை 19ல் இருந்து 24% உயர்த்தியது. 2009ல் இருந்து 200,00க்கும் மேற்பட்ட பொதுத்துறை ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.

2009ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடனும் சர்வதேச நாணய நிதியத்துடனும் தேவையான வெட்டுக்களைச் சுமத்துவதற்கு நெருக்கமாக உழைத்தார். சர்வதேச நிதிய நெருக்கடியைச் சமாளிப்பதற்கு நாட்டிற்குத் தேவைப்பட்ட 20 பில்லியன் கடனைக் கொடுப்பதற்கு அந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

சர்வதேச நாணய நிதியத்தின் போக்கின் சிக்கனத் திட்டம் அவர் இராஜிநாமா செய்த பின்னரும் தொடரும் என்ற நம்பிக்கையில் உள்ளது. புக்காரஸ்ட்டில் இருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி, ஜேப்ரி பிராங்ஸ் ராய்ட்டர்ஸிடம் அரசாங்க மாற்றத்தினால் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடு பாதிக்கப்படும் எனத் தான் எதிர்பார்க்கவில்லை என்றார்.

உதவி குறித்த உடன்பாட்டில் இதுபற்றிய விளைவு ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை என்றார் பிராங்க்ஸ். உடன்பாடு தொடரும் என்பது குறித்து அனைத்து எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கிறோம்.

பிராங்கின் உறுதிப்பாட்டிற்கு முக்கியமாக இருப்பது நாட்டின் எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் கொள்கையளவில் சர்வதேச நாணய நிதியத்துடன் கொண்டுள்ள உடன்பாட்டிற்கு ஆதரவைக் கொடுக்கின்றன. கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு நீண்டகாலமாக இருக்கும் மக்களின் சீற்றத்தைக்கூட வெளிப்படுத்த முடியாத காரணமும் இதுதான். தொழிற்சங்கங்கள் சமீபத்திய ஆண்டுகளில் ஒவ்வொரு தொழிலாளர் மோதலையும் காட்டிக் கொடுத்துவிட்டன. எப்பொழுதாவது சீற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் பயனற்ற எதிர்ப்புக்களை மட்டுமே காட்டி வந்துள்ளன.

ஜனவரி மாதம், துணைச் சுகாதார மந்திரி ரீட் அரபாத் இராஜிநாமா செய்தபின் நிலைமை மாறியது. ஜனாதிபதி பசேஸ்கு அரபாத்தை ஒரு பொய்யர், தனியார் சுகாதாரப் பாதுகாப்பின் விரோதி என்று கூறினார்; ஏனெனில் அரபாத் தனியார்மயமாக்கப்படுதலை எதிர்த்ததுடன் சுகாதார முறை பரந்த முறையில் தகர்க்கப்படுவதற்கும் எதிர்ப்புக் காட்டினார்.

அரபாத்தை ஆதரித்து ஒற்றுமை நிறைந்த ஆர்ப்பாட்டங்கள் விரைவில் முழுச் சிக்கன நடவடிக்கை திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆயின. இந்த எதிர்ப்புக்கள் பெரும்பாலும் எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே நடந்ததுடன், நாடெங்கிலும் பரவின. ஆர்ப்பாட்டக்காரர்களை மிருகத்தனமான பொலிஸ் நடவடிக்கைகள், கண்ணீர்ப்புகைக் குண்டு தாக்குதல், கைதுகள், அபராதங்கள் விதிப்பது போன்ற அரசாங்கத்தின் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் விளைவு எதையும் தரவில்லை. அரபாத்தை மீண்டும் பதவிக்கு இருத்தியது, ஆர்ப்பாட்டக்காரர்களை வன்முறையான, நயமற்ற கும்பல் என்று கூறிய வெளியுறவு மந்திரி தியோடர் பேகன்ஷிம்மைப் பதவி நீக்கம் செய்ததும் அழுத்தங்களைக் குறைப்பதில் தோல்வியுற்றன.

போக்கின் இராஜிநாமா மீண்டும் எதிர்க்கட்சிகள்மீது கவனத்தை மாற்றுகிறது. குறிப்பாக PNL உடைய தலைவர் கிரின் அன்டோனிஸ்கூ மீது. இவர் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், 1989ல் முன்னாள் ஸ்ராலினிச ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர்,  போக் அரசாங்கம் மிகுந்த ஊழல் கொண்டது, திறமையற்றது, பொய் கூறுவது என்று குற்றம் சாட்டினார்.

இதேபோன்ற அறிக்கைகள் PSD எனப்படும் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் விக்டர் பொன்டாவிடமிருந்தும் வந்துள்ளன; அவர் PNL மற்றும் பழைமைவாத கட்சிகள் -PC- உடன் சேர்ந்து சமூக தாராளவாத ஒன்றியம் USL என்ற பெயரில் எதிர்த்தரப்புக் கூட்டை அமைத்துள்ளார். USL இப்பொழுது பொறுப்பான தீர்வுகளைச் செயல்படுத்தும், முன்கூட்டிய தேர்தல்களுக்கு பின்வரும் அரசாங்கம் சமீபத்திய ஆண்டுகளில் இருந்தவற்றைவிட மாறுபட்டு இருக்கும் என்று பொன்டா அறிவித்தார்.

சமூக ஜனநாயகவாதிகளும் தேசிய தாராளவாதிகளும் முதலாளித்துவக்கட்சிகள் ஆகும். இவை ஏற்கனவே அரசாங்கத்தை நீண்ட காலம் நடத்தியுள்ளன. அவற்றின் கொள்கைகள் கிட்டத்தட்ட லிபரல் ஜனநாயகவாதிகளுடன் ஒன்றாகத்தான் உள்ளன. அவர்களுடன் இவர்கள் சில காலத்திற்குக் கூட்டணி அமைத்திருந்தனர்.

ருமேனியக் கட்சிகள் பெரிதும் ஒன்றோடொன்று மாற்றிக்கொள்ளக்கூடியவை. அவை பல நேரமும் பிளவடைகின்றன, பின் சீர்திருத்திக்கொண்டு பல பெயர்களில் மீண்டும் சேருகின்றன. இவை, கடந்த இருபது ஆண்டுகளாக முன்னாள் அரசாங்க சொத்துக்கள் தனியார்மயமாக்கப்பட்டதில் கிடைந்த ஆதாயங்களைப் பிரித்து எடுத்துக் கொண்டவை. ஐரோப்பிய ஒன்றிய நிதியங்களில் இருந்து இவை பயன்பெற்றுள்ளன; அதே நேரத்தில் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியங்கள் மற்றும் ஊதியங்கள் மீதான செலவுகளை வெட்டியுள்ளன.

சமீப வாரங்களில் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தவர்கள் பலருக்கும் இது தெளிவாகும். இந்த எதிர்ப்புக்கள் முழு அரசியல் வர்க்த்திற்கும், நடைமுறையிலுள்ள அமைப்புமுறைக்கும் எதிராக இயக்கப்படுகிறது என்று ஆஸ்திரிய ஒளிபரப்பு நிலையத்திடம் பொக் ஒப்புக் கொண்டுள்ளார். அரசியல் நம்பகத்தன்மை குறித்த நெருக்கடியின் ஆழம் எல்லா அரசியல்வாதிகளின் செல்வாக்குத் தரங்களும் வியத்தகு அளவில் குறைந்துவிட்டதைக் காட்டுவதின் மூலம் நிரூபணம் ஆகிறது. எவருக்கும் 25%க்கு மேல் செல்வாக்குத்தரம் இல்லை. வல்லுனர்கள் ருமேனிய அரசு இந்த நெருக்கடியில் இருந்து மீளுமா என்று வியக்கின்றனர்.

ஆனால், நடைமுறைக் கட்சிகள்மீது உள்ள இந்தப் பொது நம்பிக்கையற்ற தன்மைக்கு எந்தத் தெளிவான முன்னோக்கும் இல்லை. ருமேனியத் தொழிலாளர்கள் தங்கள் நலன்களை ஐரோப்பா முழுவதும் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கும் தொழிலாளர்களுடன் ஒன்றுபட்டால்தான் பாதுகாக்கப்படும். அத்தகைய ஒற்றுமை வங்கிகள் மற்றும் செல்வந்தர்களின் இலாப நலன்களைவிட சமூகத் தேவைகள் உயர்ந்தவை என்னும் சோசலிச வேலைத்திட்டத்தின் தளத்தில் இருக்க வேண்டும்.